Friday, May 13, 2011

அம்மா உங்களுக்கு பதிவுலகத்தின் சார்பில் வாழ்த்துகள்..!!

தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்டும் உங்களோடு ஐக்கியமாக வந்துவிட்டேன் ( சும்மா..ஒரு விளம்பரம்....)
மார்ச் 4 - ல் நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். மே-15 - ல் ஜெயலலிதா முதல்வர் பதவியேற்கிறார் என்பது தான் அது. இதோ அதன் லிங்க்

அ தி மு க வெற்றி பெற்றது முதல் ஒரே போன்கால்களாக வந்து கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு பெரிய முனிவர் ரேஞ்சிற்கு மாலை மரியாதைகள், தாரை தப்பட்டை முழங்க வாழ்த்து மழையில் திக்குமுக்காடி போய்விட்டேன். நன்றி அ தி மு க தொண்டர்கள். (இன்னைக்கு ஒன்னும் ஏப்ரல்-1 இல்லையே என்று நாட்காட்டியை பார்க்காதீர்கள்)

பா ம காவிற்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் சம்மட்டி அடி கொடுத்த அனைத்து வாக்களா உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. சாதியை சொல்லி வயிறு வளர்ப்பவர்களை ஒருக்காலும் மன்னிக்கவே முடியாது.

அம்மா உங்களுக்கு பதிவுலகத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். வெற்றி பெற்றதும் உங்கள் வாயிலிருந்து வந்த வார்த்தை. வீழ்ந்துபட்டு கிடக்கும் தமிழகத்தின், தமிழர்களின் பொருளாதார நிலையை மீடேடுப்பது தான் முதல்பணி என்றீர்கள். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும், அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றீர்கள். இதை எப்போதும் மறவாதிர்கள். உங்களை நம்புகிறோம்.

இத்தனை காலாமாக பதிவர்களின் கருத்து பொருளாய், காட்சிபொருளாய் இருந்த அனைத்து தி மு க கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவிப்போம். உங்களுக்கு நிறைய வேலைகள் இருப்பதால் கொஞ்ச நாளைக்கு விட்டுவிடுகிறோம். அடிச்ச பணத்தை மறைக்கணும், போலி கணக்குகள், ஆவணங்கள் தயார் செய்யணும், நல்ல வக்கீலை பார்த்து முன்ஜாமீன், பின்ஜாமீன் ஏற்பாடு செய்யணும்.. பாவம் சார் போங்க... போங்க...

Thursday, April 7, 2011

பொங்கி எழும் இந்தியா ஊழலுக்கெதிராக வெடிக்கும் அமைதி புரட்சி இளைஞர்களே அணி திரளுங்கள்

அக்கினி குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கோர்
காட்டிடை பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்தில்
குஞ்சென்றும் மூபென்றும் உண்டோ....?

பாரதியின் வீர வரிகள் உயிர்பெற்று வந்தது போல் இருக்கிறது. அன்னா ஹசரேவை பார்க்கும் போது. இந்த தழல் குஞ்சல்ல பழுத்த மூத்த அனல். 42 ஆண்டுகளாக சலிக்காமல் போராடும் இவரின் போராட்டம் இன்று வீதிக்கு வந்திருக்கிறது முதல் முறையாக. (வாழ்க ஊடகங்கள்). தென்னிந்திய ஊடகங்கள் முற்றிலுமாக குறிப்பாக தமிழகத்தில் இது குறித்து பெட்டிசெய்தி கூட காணோம். ஆனால் வடக்கில் கிழிகிறது கிழட்டு அரசியல் வாந்திகளின் முகத்திரை.



வந்து குவியும் இளைஞர் ஆதரவு அந்த முதியவரே எதிர்பாராதது. மத்திய கிழக்கு நாடுகளை மையம் கொண்ட ஊழலுக்கு அடக்குமுறை ஆட்சிகெதிரான புயல் முதல் முறையாக தெற்கத்திய நாடுகளில் மையம் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவும் இப்போது அன்னா ஹசரவை மற்றொரு மகாத்மாவாக பார்க்கிறது. 16 வயது பெண் டெல்லி இந்திய கேட்டிலிருந்து பேசுகிறார் " காந்தியை நாங்கள் பார்த்ததில்லை. அன்னாவை நான் காந்தியாகவே உணர்கிறேன்."

என் அன்பு இளைஞர்களே இதை விட்டால் இன்னொமொரு சந்தர்ப்பம் கிடைப்பதரிது. கைகோர்ப்போம் வாருங்கள். ஊழலுக்கு எதிராய் கிளர்திருக்கும் இந்த புரசியை நாம் தவறவிட்டால் வருங்கால சந்ததிக்கும் நாம் மிகபெரும் பாவம் இளைத்தவர்கள் ஆவோம். வாயிற்று பசிக்கு 10 ரூபாய் திருடியவனை ஆசனவாயில் குச்சியை சொருகும் அதிகாரம் கோடிகணக்கில் கொள்ளையடிபவனுக்கு சலாம் போடுகிறது. ஊழல் செய்தது உறுதிபடுத்தவே 20 வருடங்களாகும், தண்டனையோ மிக சொற்பம் தான். கொள்ளையடித்தை மிக விமரிசையாய் அனுபவித்து சந்தோசமாய் செத்து போவான். நாமோ தினம் தினம் சாகிறோம்.

ஊழலுக்கு எதிரான லோக் பில் கமிசனை அமுல் செய்ய 42 ஆண்டுகள் கிட்டத்தட்ட 10 அரசாங்கங்களிடம் தணியாம மல்லு கட்டிவரும் இவரை நாம் ஆதரிக்கவேண்டியது காலத்தின் கடமை. தவிர்க்க படகூடாத நமது உரிமை. இத்தனை வருடங்கள் கழிந்தும் வழக்கம் போல் ஒரு குழுவை அமைத்து லோக் பில் கமிசனை ஆய்வுக்கு உட்படுத்த முயற்சிகள் எடுத்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிரான இந்த சட்ட முன்வடிவை ஆய்வுக்கு உட்படுத்துவபர்கள் யார் தெரியுமா..? ஊழலின் மொத்த வடிவமான சரத்பவார் & கோ. மொத்த உறுப்பினர்களும் ஊழல் பெருச்சாளிகள்.

இதை எதிர்த்து தான் சாகும்வரை உண்ணாவிரத்தை தொடர்ந்தார் அன்னா. மொத்த உறுபினர்களின் 50 % பேர் மக்கள் பிரதிநிதிகளாகும், கண்ணியமான அரசு நிர்வாகிகளும் இடம் பெற வேண்டும் என்கிறார். ஊழல் செய்தவனுக்கு என்ன தண்டனை என்பதை ஊழல் செய்தவனே நிர்ணயிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் மத்திய அரசிற்கு இருக்கும் வரை இந்தியாவில் ஊழலை ஒழித்து விடுவோம், கருப்பு பணத்தை மீட்டு விடுவோம் என்பதெல்லாம் வீண் பேச்சு தான். இந்த சந்தர்பத்தில் நாம் கர்கொர்க்க தவறினால் வரலாறு நம்மை மன்னிக்காது மட்டுமல்ல இனி எந்த தெய்வம் வந்தாலும் இவர்களிடம் இருந்து நம்மை காக்க முடியாது.


இந்திய இளைஞர்கள் சோம்பேறிகள், குறிப்பாக தமிழக இளைஞர்கள் தொடைநடுங்கிகள் அவர்களுக்கு சினிமாவையும், கிரிகெட்டையும் விட்டால் வேறு எதுவும் தெரியாது என்றொரு அவப்பெயர் நமக்குண்டு. அதை களைய இதுதான் சரியான சந்தர்ப்பம். நடிகர் ஆமிர்கான் கூட அன்னா ஹசரேவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். உலககோப்பையின் இக்கட்டான தருணத்தில் இந்தியா வெற்றி பெற நாம் பிரார்த்தித்தோம், நமது ஆதரவை அவர்களுக்கு தெரிவித்தோம், இது அதைவிட முக்கியமான பிரச்னை. நாம் அன்னாவுடன் கைகோர்த்து போராடுவது மிக மிக அவசியம் என்று தனது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை மெரீனாவில் அன்னாவிற்கு ஆதரவு தரும் பொருட்டு உண்ணாவிரதம் கடைபிடிக்க படுகிறது. நீங்கள் உண்ணாவிரதம் இருக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒருமுறையாவது போய் உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.



கதறும் வரை கதறிவிட்டேன். அப்பறம் என்ன படிச்சிட்டு இவனுக்கு வேற வேலை இல்லைன்னு சொல்லிட்டு போங்க...அதைதானே காலம் காலமா பண்ணிட்டு இருக்கோம். கொஞ்சம் Times Now சேனலை பாருங்க சார். டெல்லியில் திரண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தை பார்த்த பிறகாவது நமக்கு உரைக்கட்டும்

Wednesday, April 6, 2011

அமைதி காக்கும் விஜய், அடங்கிப்போன சரத், ஆர்ப்பரிக்கும் விஜயகாந்த்

இன்றைய சூழ்நிலையில் மூன்று பேரும் தவிர்க்க முடியாத புள்ளிகள். சினிமா என்றாலும் சரி, அரசியல் என்றாலும் சரி. நடிகர் சங்க தலைவர், நாடார் இன மக்களின் முகவரி, திராவிட கட்சிகளுடனான தொடர்பு என சரத்திற்கு எப்போதும் செல்வாக்கு அதிகம். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளுடன் திருப்தி அடைந்துவிட்டாலும் முதல்வர் கனவு அவருக்கும் உண்டு. காமராசர் ஆட்சி எனும் கோசத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சி சாதி சங்கமாக சுருங்கிபோனதன் விளைவு தான் இரண்டு தொகுதி மட்டும் என திருப்தி பட வேண்டியதாகிவிட்டது. சினிமா அரசியல்வாதிகளில் கொஞ்சமாவது தெளிவாக பேசுவது தான் இவரது பலம். ஆனால் சபைக்கு வரவிடாமல் சாதி சங்க ஆட்கள் காலைவாரி விடுவது பலவீனம்.

தென்காசி தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. சத்தமே இல்லாமல் தொகுதியை வலம் வருகிறார்கள் சரத்தும், ராதிகாவும். தென்காசி பிரசாரத்தின் போது சரத்தின் பெயரை உச்சரிக்காமல் விட்டதில் எந்த உள்குத்தும் இல்லையாம். பெயர் விடுபட்டுவிட்டது யதார்த்தமாக நடந்தது தான். பின்பு மறக்காமல் சரத்தின் பெயரையும் சொல்லி ஒட்டு போடா சொன்னது சரத்திற்கு ஆறுதலாக இருந்திருக்கும். அதிகமாக எந்த தொகுதிக்கும் பிரசாரத்திற்கு செல்லாத சரத், ஸ்ரீரங்கம் மட்டும் செல்ல போகிறார்.
தாங்கள் போட்டியிடும் தொகுதியில் யாரையும் வந்து பிரச்சாரம் செய்யுமாறு சரத் அழைக்கவில்லை. காரணம் ராதிகாவை வந்து மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய கூப்பிடுவார்கள் என்பதை தவிர்க்கத்தான். என்னாதான் இன்று காட்சி மாறிவிட்டாலும் ராதிகாவிற்கு கலைஞர் மேல் பாசம் அதிகம், அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்ய யோசிக்கிறார்



தேர்தல் கூட்டணிக்கு முன்பே அம்மாவை துணிச்சலுடன் சந்தித்தவர் விஜய். ஏதோ நடக்கபோகிறது என்று நினைபதற்குள்ளாகவே விழுந்தது முதல் அடி. காவலன் படத்தை திரையிட விடாமல் சதி செய்தனர் ஆளுங்கட்சி புள்ளிகள். படாத பாடு பட்டுதான் படத்தை ரிலீசே செய்தார்கள். அப்படியும் சன், கலைஞர் விளம்பரம் செய்யாமல் இருட்டடிப்பு செய்ய படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. பயம் காட்டினால் படிந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் போயஸ் பக்கம் போனதும் உஷாரான தி மு க கோஷ்டி கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் விஜய் அ தி மு காவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய போகிறார் என்று தெரிந்ததும், ஆடிப்போன ஆளுங்கட்சி தரப்பு சாம தான பேத தண்டங்களை பிரயோகித்து தடுக்க முயற்சி செய்தது. வழக்கம் போல் விஜய் பின் வாங்க ஆரம்பித்தும் சூடான சந்திர சேகர் தனியாகவே களம் இறங்கிவிட்டார். சந்திர சேகர் சூடானதற்கு சட்டபடி குற்றம் என்ற அவரின் படத்திற்கும் பஞ்சாயத்து பண்ணவேண்டி வந்ததால் தான்.

கட்சியில் சேரபோகிறார், பிரச்சாரம் செய்யபோகிறார், என்றெல்லாம் கசிந்த நிலையில் இன்று வெறும் அறிக்கை மட்டும் விடுவார் என்கிறார்கள். அம்மா தரப்பு அறிக்கை மட்டும் போதாது ஜெய டிவியில் தோன்றி அ தி மு க கூட்டணிக்கு அதரவு என்று ஓபன் ஸ்டேட்மென்ட் விடவேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். ஆனால் அடக்கி வாசித்தால் பெறப்போகும் பல நன்மைகளை பட்டியலிட்டிருகிறது தி மு க தரப்பு. (இழந்த பெட்டிகளை திருப்பி தருவதாகவும் பேச்சு)



ஒட்டுமொத்த ஆளுங்கட்சி கூட்டணி தலைவர்களும் கேப்டனை குறிவைத்து தாக்குவதற்கு காரணம் ஒன்றே ஓன்று தான் அது இந்த தேர்தலில் தி மு க கூட்டணி தோல்வி அடைந்தால் காரணம் தே தி மு காவின் ஒட்டு வங்கி அ தி மு காவை சேர இருப்பது தான். தே மு தி க 41 தொகுதிகளில் போட்டியிட்டு 5 அல்லது 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் போகலாம். ஆனால் அ தி மு க போட்டியிடும் 160 தொகுதிகளிலும் தே மு தி காவின் ஓட்டுக்களால் ஆதாயம் அடைய போகிறது. கேப்டனின் இமேஜை காலி செய்ய என்ன என்ன சாக்கு கிடைத்தாலும் போட்டு தாக்கிறது. வடிவேலுவை கூட்டி வந்ததும் அதற்காக தான். ஆரம்பத்தில் கொஞ்சம் ஓவராகவே பேசிய வடிவேலு எதிர்கோஷ்டி சிங்கமுத்துவை இறக்கி விட்டதும் கொஞ்சம் சுருதி குறைந்து விட்டது. பாம்பின் கால் பாம்பறியும் என்பது தான். வடிவேலுவின் மொத்த குடுமியும் சிங்கமுத்துவிடம் இருக்கிறது.

புலி வாலை பிடித்த கதையாக போனது வடிவேலுவின் நிலைமை. பிரசாரத்தை கைவிட யோசித்த வடிவேலு அழகிரியின் ஒரே பார்வையில் அடங்கி போனதாக தெரிகிறது. வடிவேலு பேசும் இடங்களில் கூட்டம் சேர்வது உண்மை. ஆனால் அவரின் பேச்சில் தி மு காவை தூக்கி பிடிக்கும் அளவிற்கு வலுவில்லை. கொஞ்சம் உற்று நோக்கினால் மேடை தோறும் அவர் பாடும் பாடல்கள் எம் ஜி ஆர் பாடல்கள். கருணாநிதியின் உற்ற நண்பர் எம் ஜி ஆர் என்று வேறு சொல்லிகொள்கிறார். வெறும் ஒரு ரூபா அரிசி, இலவச மிகஷி, கிரைண்டர், அவசர உதவிக்கு 108 என்பதை தவிர வேறு ஒன்றையும் காணோம். ஏற்கனவே இந்த எல்லா திட்டங்களில் உள்ள ஓட்டையை பட்டி தொட்டியெல்லாம் பரவ செய்து விட்டார்கள் அம்மாவும், பாண்டியனும், சீமானும்.

விஜயகாந்தின் சினிமா இமேஜையும் காலி பண்ண முடியாமல், அரசியல் இமேஜையும் காலி பண்ண முடியாமல் கையை பிசைகிறது தி மு க அணி. என்ன வேணா சொல்லிக்கோ என்று தில்லாக தொகுதிகளை வலம் வருகிறார் கேப்டன். ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை கண்டு வயிறு எரிகிறது. கருப்பு எம் ஜி ஆர் என்று சொல்லிகொண்டாலும் பொறுமை, அமைதி, நிதானமாக திட்டமிட்டு காரியங்களை சாதிப்பது என்பதெல்லாம் கேப்டனிடம் இல்லை. இருக்கும் குறைகள் தெரிந்து அதை களைய வேண்டும். இல்லாமலல்லாம் சித்திக்காது முதல்வர் கனவு.


(ஒரே மேடையில் ஏறவில்லை என்ற ஏக்கம் தீர்ந்ததா..)

Tuesday, April 5, 2011

விஜயகாந்தால் டாஸ்மார்க் ஆண்டு வருமானம் 35 கோடி உயருகிறது..!!

ஆளுங்கட்சி மேடை தோறும் "ஆப்பை" பற்றி விஜயகாந்த் ஆப்படித்ததை முழங்குகிறார்கள். கலாசார சீர்கேடு என்று முழங்கும் இவர்கள் ஒரு விஷயத்தை சொன்னால் வாயை மூடிக்கொண்டு போய்விடுவார்கள். அது விஜயகாந்தால் டாஸ்மார்கிற்கு வரும் ஆண்டு வருமானம் பற்றிய கணக்கு. "ஆப்பை" பற்றி அவர் பேசியதன் மூலம் தெரிய வரும் உண்மை உங்கள் பார்வைக்கு.

ஒரு நாளைக்கு ஒரு "ஆப்பு" அடிப்பதாக வைத்து கொண்டால் அதன் விலை தோராயமாக ரூபாய் 150. வழக்கம் போல அல்லக்கைகள் இல்லாமல் தலைவர்கள் சரக்கை கையில் தொடுவதில்லை. அது நமது பண்பாடு ஆயிற்றே. அதனால் கூட ஒரு 5 பேர் வைத்து கொள்வோம். அவர்களுக்கும் சேர்த்து ரூபாய் 1000 சரக்கிற்கு மட்டும். ஊறுகாயில் இருந்து முந்திரி, ஓடறது, பறக்றது, பறக்றது போடறது என செலவு ஒரு 500 ஆக ஒரு நாளைக்கு சரக்கிற்கு 1000 , சைடு டிஷிற்கு 500

வருடத்திற்கு இரண்டும் சேர்த்து 547500. தலைவரே சொல்லிவிட்டார் என்று தே தி மு க தொண்டர்களும், கூட்டணி கட்சியில் உள்ளவர்களும் "ஆப்படிக்க, குவாட்டர் அடிக்க ஆரம்பித்தால் தோரயமாக அவர்களுக்கு இருக்கும் ஓட்டு வங்கியின் சதவிகித அடிப்படையில் (32 % + 8.5 %) இவர்களில் இருந்து ஒரு 10 % சதவிகிதத்தை எடுத்து கொண்டால் 3500000 பேர். சராசரியாக ஒரு நாளைக்கு ஒருவர் 100 செலவு செய்தால் கூட 35 கோடி வருகிறது. டாச்மார்கின் ஆண்டு வருமானம் 40 ஆயிரம் கோடியை நெருங்குகிறது என்று அறிகிறோம். கிட்டத்தட்ட 10 % ஆண்டு வருமானம் கேப்டனால் உயர போகிறது.



இலவசங்களை மாறி மாறி அறிவித்தால் போதுமா..? இதை என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தில் இருந்தா கொடுக்க போகிறீர்கள். டாஸ்மார்க் வருமானத்தை நம்பிதானே ஆட்டு புளுக்கையில் இருந்து அம்மிக்கல் வரை தரபோகிறீர்கள். எந்த வித மார்கெட்டிங் செலவும் இல்லமால் கேப்டனால் ஏற்பட்டிருக்கும் நன்மைகளை உணராமல் அவரை மேடை தோறும் வதைப்பது எந்த வகையில் நியாயம். போதாதற்கு எச்சி சோறு வடிவேலு வேறு, ஒரு நாளாவது வடிவேலு தன்னியடிகாமல் செட்டிற்கு வந்ததுண்டா...? என்ன தகுதி அய்யா இருக்கு புறமுதுகில் ஓடும் சாக்கடையை முதலில் கழுவுமையா... அப்பறம் வரலாம் சபைக்கு.

எனது வலைபதிவிற்கு வரும் நண்பர்களுக்கு நன்றி. கிடைக்கும் மிக குறுகிய நேரத்தில் என்னால் முடிந்ததை எழுதுகிறேன். பிற நண்பர்களின் பதிவுகளையும் மிக குறைந்த அளவே என்னால் படிக்க முடிகிறது. என்னை பின் தொடர்பவர்களுக்கு கூட என்னால் ஒரு நன்றியை சொல்ல முடிவதில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. விரைவில் எனக்கான நேரத்தை அதிகபடுத்தி கொள்ள முயற்சிக்கிறேன். உங்களின் அன்பிற்கு நன்றி.

Monday, April 4, 2011

காசு கொடுப்பவன் ஒன்றும் கக்கனோ, காமராசரோ அல்ல - தேர்தல் வியாபாரம்

தேர்தல் களம் கோடை வெயிலையும் தாண்டி சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. மானாவாரியாக போட்டு தாக்குகிறார்கள். ஒருவர் கூட கொள்கை விளக்க கூட்டமோ, தேர்தல் அறிக்கையின் சாராம்சம் குறித்தோ, அதன் எதிர்கால நலன்கள் குறித்தோ பேசுவதில்லை. இலவசங்கள் மட்டும் தான் தேர்தல் அறிக்கையா...? அது மட்டுமே ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் நலம் பயக்குமா...? பதில் சொல்லவும் ஆளில்லை, எதிர் கேள்வி கேட்கவும் இங்கு நாதியில்லை.

சாராயம் குடித்ததை பற்றியே பேசியும், தொலைகாட்சியில் ஒளிபரப்பியும் நேரத்தை விரயமாக்குகிறார்கள். சாராயம் விற்ற காசில்தானே நீ இலவசங்களை அள்ளி கொடுக்கிறாய் அப்பறம் என்ன "ம...த்துக்கு" அவன் தண்ணியை போட்டுட்டு ஒளரான்னு சொல்ற. தைரியம் இருந்தா இனி மதுக்கடைகளை திறக்க மாட்டோம் என்று சொல்லு...பிரச்சாராம் செய்வதில் எத்தனை பேர் தண்ணியடிகாமல் வருகிறார்கள் என்று எண்ணி பார்த்தால் கட்சிக்கு ரெண்டு பேர் கூட தேறமாட்டார்கள்.

அரசியல் நாகரீகம் கொஞ்சம் கூட இல்லாமல், கொத்தாவால் சாவடி மார்கெட்டில் பேசுவது போல் பேசிவிட்டு, தன் கட்சி காரர்களை பேசவிட்டு விட்டு, கலைஞர் அரசியல் நாகரீகம் செத்துவிட்டது என்று முதலை கண்ணீர் விடுவது அவரது வயதிற்கு ஏற்றதல்ல. சண் டிவியையும் உங்கள் தொலைக்காட்சியையும் கொஞ்சம் நீங்கள் பாருங்கள் அவர்களின் அத்துமீறல்கள் உங்களுக்கு புரியவில்லை என்றால் தயவு செய்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுங்கள். பொது மக்களிடம் இருந்தோ, எதிர்கட்சிகளிடம் இருந்தோ ஒரு புகார் கூட வராத நிலையில் தினம் தினம் தேர்தல் கமிசனை சாடுவதை மக்கள் பார்த்து சிரிக்கிறார்கள். பணம் பட்டுவாடா செய்து ஓட்டுகளை பெற்றுவிடலாம் என்ற கனவில் மண்ணை போட்ட தேர்தல் ஆணையத்தை எப்படியெல்லாம் கருவறுக்கலாம் என்று ஒரு கூட்டமே ஆலோசனை நடத்துகிறதாமே. அறுபதாண்டு கால அரசியல் ஒரு சாமானியனால் கேவலப்படும்படி ஆனதற்காய் வெட்கபடுங்கள் கலைஞரே.

சீமான் வேறு பணத்தை கொடுத்தால் வாங்கிகொள்ளுங்கள். அது அவர்கள் கொள்ளையடித்த உங்கள் பங்கு என்று விளக்க ஆரம்பித்துவிட்டார். அதுவும் சரிதான் கொடுக்கும் பணத்தை வாங்கி கொள்ளுங்கள். நீங்கள் வைத்துகொண்டாலும் சரி இல்லை உங்கள் அருகிலுள்ள ஏழைகளுக்கு கொடுத்துவிட்டாலும் சரி. கொடுத்ததை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். பணத்தை வாங்கிகொண்டு உங்களுக்கு நல்லவர் என்று தோன்றும் வேட்பாளர்களுக்கு ஒட்டு போடுங்கள். நியாயம், நேர்மை பார்க்க காசு கொடுப்பவன் ஒன்றும் கக்கனோ, காமராசரோ அல்ல.



எந்த தேர்தலிலும் கேவலபடாத அரசியல் கட்சிகள் இம்முறை தொடர்ந்து மாறி மாறி சேற்றை பூசிகொள்கின்றன. உபயம் ஊடக வளர்ச்சி. கலாநிதி மாறனின் வியாபார தந்திரம் உலகறிந்த விஷயம். வடிவேலுவை வைத்து இவர்கள் செய்யும் காமெடி மக்களுக்கு அதிர்ச்சி மட்டுமல்ல, சன் டிவிக்கு எதிராகவே அது திரும்புகிறது என்பதை இந்த வியாபார காந்தம் உணரவில்லை. ஒரு 500 பேருக்கு மத்தியில் பேசியதை 6 கோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது நாகரீகமான விஷயமாக இருந்தால் சரி. அவன் தண்ணி அடிச்ச என்ன, தொண்டனை அடிச்ச என்ன அதை நொடிக்கொரு தரம் போட்டு ஏன்யா உயிரை எடுக்கற..? அவ்வளவு அறிவு இருக்கறவன், கலாச்சாரத்தின் மீது மரியாதை வைக்கறவன் அய்யாவிடம் சொல்லி மதுவை ஒழிக்க வேண்டியது தானே..இது எந்த வகையில் சமூக அக்கறை என்று..? சாமான்யன் கேட்கிறான்.

சுபவீ , திருமாவளவன், ராமதாஸ் இவர்கலெலாம் 3 நிமிடம் 5 நிமிடம் பேசிவிட்டு செல்ல, 40 நிமிடம் பேசும் வடிவேலு தனி மனித தாக்குதலை தானே செய்கிறார். இதில் எங்கே உங்கள் கட்சியின் கவுரவம் காப்ற்ற படுகிறது. கூட்டணி தலைவர்களை, காலம் காலமாக கழகத்தின் பேச்சாளர்களாக இருப்பவர்களை அசிங்கபடுத்த இது போதாதாத..?

எவ்வளுதான் சேற்றை வாரி இறைத்தாலும், தன் பிரசாரத்தில் மட்டுமே முழு கவனமும் செலுத்திக்கொண்டு வலம் வரும் அம்மா அரசியல் நடுநிலையாளர்களை கவரவே செய்கிறார். தனது கூட்டணி கட்சி தலைவர்கள் பற்றி கூட சிந்திக்காமல் கிடைத்த இந்த வாய்ப்பை விட்டுவிட கூடாது என்பதில் தான் அவரது முழு கவனமும். 160 -ல் எப்படியும் 118 பெற்று விட வேண்டும் என்று ஒற்றை ஆளாய் கிளம்பிவிட்டார். தே தி மு காவின் கூட்டணி, தான் போட்டியிடும் இடங்களில் வெற்றி பெற உதவும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. பெரும்பான்மை பெற்று விட்டால் மற்ற கூட்டணி கட்சிகளின் நிலை கவலைக்கிடம் தான். இது அவர்களுக்கும் தெரியாமல் இல்லை. கட்சி சார்பாக எம் எல் ஏக்களை பெறுவது தான் அவர்களின் அதிகபட்ச ஆசை.


(இவங்க என்ன செய்ய காத்திருகாங்களோ..!!? அடுத்த ஸ்டாலினும் அழகிரியுமா...!!)

Tuesday, March 29, 2011

தொண்டனும் அண்ணனும் - இத படிங்க முதல்ல

கடந்த ஞாயிறு அன்று எங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வாக்கு பிரசாரத்திற்காக வந்திருந்தார். கூடவே ஒரு கும்பல் அல்லகைகள் என்ற பெயரில். எல்லோரும் கட்சியின் தொண்டர்கள், அதில் இருந்த சில தெரிந்த முகங்களிடம் ( டாஸ்மாக்கில் சந்தித்தவர்கள் ) விசாரித்தேன். தொண்டர்கள் என்பவர் யாவர் என்ற என் நீண்ட நாள் ஐயம் தீர்ந்தது.

எவ்வளவு தான் அரசியல் பன்னாடைகளை பற்றியே எழுதுவது, ஒரு மாறுதலுக்காக அவர்களின் அல்லக்கைகளை பற்றி எழுதலாமே. இதோ உங்களுக்காக அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்.

கவுன்சிலரில் இருந்து அமைச்சர் வரை ஆளாளுக்கு வசதிக்கேற்ப அல்லக்கைகள் உண்டு. பொதுவாக கட்சிகாரர்கள், தொண்டர்கள் என்று அழைக்கபட்டாலும் இவர்களில் பெரும்பாலும் அண்ணனின் சாதிகாரர்களாகவோ, அந்த தொகுதியை சேர்ந்தவர்களாகவோ, அண்ணனால் ஆதாயம் பெற்றவர்களாகவோ இருக்கிறார்கள். இவர்களுக்கு சம்பளம் என்று எதுவும் கிடையாது. அப்பபோ செலவுக்கு பணம், கறி விருந்து, மது, (சில சமயம் மாதுவும் உண்டாம்)

சாதரணமாக ஒரு 20 பேர் எப்போதும் அண்ணனின் கூடவே இருக்கிறார்கள். தேர்தல் நேரம், கட்சி மீட்டிங், மாநாடு என்னும் போது இவர்களின் எண்ணிக்கை கூடுகிறது. போஸ்டர் அடிப்பதில் இருந்து, எதிர்கட்சி காரனின் மண்டையை பிளப்பது வரை இவர்களுக்கு கொடுக்கும் அசைன்மேண்டுகேற்ப பண பட்டுவாடா உண்டு. பண பட்டுவாடவை கவனித்து கொள்வது அண்ணனின் PA சில சமயம் விதிவிலக்காக அணிகளும் இதில் தலையிடுவதுண்டாம். பொதுவாக PA மட்டும் கொஞ்சம் படித்தவராக இருக்க கூடும்.

படிக்காமல் ஊர் சுற்றிய நாதாரிகள், பள்ளி பருவத்திலேய கஞ்சாவிற்கு அடிமையானவர்கள், மதுவுக்கு அடிமையாகி வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள், வீட்டாரால் தண்ணி தெளித்து விடப்பட்டவர்கள், பிஞ்சிலேய பழுத்து விபசாரிகளுடன் தொடர்பு வைத்திருபவர்கள், விபசார புரோக்கர்கள் இவர்கள் எல்லாம் தான் அண்ணனுக்கு இடது கை வலது கை போன்றவர்கள். இவர்களின் கடின உழைப்பு தான் கட்சியை வளர்த்து கொண்டிருக்கிறது. தப்பி தவறி கூட படித்த நாகரீகம் தெரிந்தவர்களை இவர்கள் கூட சேர்ப்பது இல்லை. காரணம் பிரச்னை என்று வரும் போது காட்டி கொடுத்துவிடுவார்களாம்.

அண்ணனின் தொடர்பில் இருப்பவர்களில் இருவர் மிக முக்கியமானவர். ஒருவர் கணக்கு வழக்குகளை பார்க்கும் ஆடிட்டர், இன்னொருவர் குடும்ப அல்லது கட்சி வக்கீல். பொதுவாக ஒவ்வொரு அரசியல் வாதிக்கும் குடும்ப வக்கீல் உண்டு. இவர்களுக்கு தெரியாமல் எந்த காரியமும் நடப்பதில்லையாம். அடிதடி வழக்கில் இருந்து ஸ்பெக்ட்ரம் வழக்கு வரை இவர்கள் மூலம் தங்களை அப்டேட் செய்து கொளிகிறார்கலாம்.

தொண்டர்களில் 100 க்கு 95 பேருக்கு சரக்கு உள்ளே இறங்காமல் பேசதெரியாது. இது தான் அண்ணன்களின் பலம். பெசதேரிந்த ஒரு சிலர் மேல் எப்போதும் ஒரு கண்ணிருக்குமாம். அவர்களை வெளியே அனுப்பவும் முடியாது. ஏனெனில் தொகுதி நிலவரம் இவர்கள் மூலமாகவே அண்ணனின் காதுக்கு எட்டுகிறது. கூடவே இருக்கும் தொண்டர்கள் கூட்டத்தை தாண்டி கொஞ்சம் விலகி இருக்கும் ரவுடிகளும் இவர்களுக்கு முக்கியமானவர்கள். மண்டை உடைக்கறது, கூட்டத்தை கலைகறது எல்லாம் தொண்டர்கள் வேலை. காரியம் கொஞ்சம் பெரிசு என்றால் தான் இவர்களுக்கு அழைப்பு வரும். பேமேண்டும் பெரிசு தான். இன்னும் சொல்ல போனால் தொண்டர்கள் நிலையில் இருந்து புரோமோட் செய்ய பட்டவர்களே "தாதா" க்கள். வளர்த்த பாசம் இவர்களுக்கும் வளர்த்துவிட்ட பாசம் அண்ணனுக்கும் எப்போதும் உண்டு.

இது எல்லாமே அவர்களிடம் இருந்து பேசி கறந்தது தான். இடைசொருகல் எதுவும் இல்லை. அவர்களின் வார்த்தை பிரயோகம் மட்டுமே வேறு. அதை பதிவில் ஏற்ற முடியாததால் கொஞ்சம் முலாம் பூசியிருக்கிறேன். இந்த கூட்டுகளவாணி, மொள்ளைமாரிகளிடம் இருந்து எதையும் பெரிசாக எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம் தான். இப்போ சொல்லுங்க நாம ஒட்டு போட்டுதான் ஆகணுமா..?

Monday, March 28, 2011

கடமை கண்ணியம் தவறினால் தப்பில்லை - கலைஞர்

இன்று ஒரு உருக்கமான வேண்டுகோளை விட்டிருந்தார் கலைஞர். படித்துவிட்டு உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது. போட்டி வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் கழக கண்மணிகளுக்கு தான் வேண்டுகோள். கடமை, கண்ணியம் தவறினால் கட்சிக்குள் சிறு சலசலப்பு தான் ஏற்படும், ஆனால் கட்டுப்பாடு தவறினால் ஒட்டுமொத்த கட்சியே கலகலத்து விடும். எனவே போட்டி வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டு கட்சி அங்கீகரித்த வேட்பாளர்களுக்கு உங்கள் ஆதரவை தரவேண்டுமென்று உருக்கமுடன் வேண்டுகிறேன் என்கிறார்.

அதாவது ஊழல் செய்தாலும், பொது சொத்தை கொள்ளையடித்தாலும், பதவி ஏற்றுக்கொண்டு மக்கள் பனி செய்யாமல் சொந்த வணிகத்தை மேற்கொண்டாலும் சரி, வீட்டில் படித்து தூங்கினாலும் சரி கட்சிக்கு எந்த பாதகமும் இல்லை ஆனால் கட்சி கட்டுப்பாடு தான் முக்கியம். என்ன ஒரு கொடுமை அய்யா இது. 60 வருட அரசியல் பாரம்பரியம் உள்ள உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. ஊருக்கே பாடம் சொல்லும் வாத்தியார் , தன் பிள்ளையை முட்டாளாக, ஊதாரியாக வளர்த்தெடுப்பதை போலிருக்கிறது உங்களின் வார்த்தைகள்.

"இந்த தேர்தலில் ஓரிரு இடங்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், கழகத்தின் மீது சேற்றை வாரி இறைப்பதைப் போல் இத்தனை ஆண்டு காலமாக தன்னை வளர்த்து சமுதாயத்துக்கு அடையாளம் காட்டிய கழகத்தின் கழுத்தையே அறுப்பதைப்போல்; பதவிப் பொறுப்பு கிட்டவில்லை என்றதும் கழகக் கட்டுப்பாட்டை துச்சமெனக் கருதி சுயேச்சைகளாகவோ அல்லது விலகி நின்றோ தேர்தலில் போட்டியிடும் கழகத்தினர் சிலரின் போக்கு கண்டு கண்கலங்குகின்றேன்" என்கிறார், குடும்பத்தில் ஒருவருக்கு பதவி கிடைக்கவில்லை என்றதும் ஓடோடி டெல்லி சென்றதை நீங்கள் மறந்துவிட்டீர்களா...?
காங்கிரஸ் தொகுதி அதிகம் கேட்டதற்காக, ராஜினமா கடிதத்தை தூக்கி கொண்டு ஓடியதை மறந்துவிட்டீர்களா..? உங்களுக்கு விட்டு கொடுக்கவும் தெரியாது, பகுத்து கொடுக்கவும் தெரியாது என்பதை நிரூபித்து விட்டீர்கள். கட்சியில் உங்களுக்கு ஒரு நியாயம், தொண்டனுக்கு ஒரு நியாயமா பெரியவரே..?வயதால் மட்டுமே நீர் பெரியவர் மற்றபடி...?

என்வீட்டு பிள்ளைகள் சினமா தொழிலில் இருப்பது தவறா என்கிறார். அது தவறில்லை அய்யா உங்கள் வீட்டு பிள்ளைகள் மட்டும் தானே இருக்கிறார்கள் அது தான் தவறு. ஒட்டு மொத்த தியேடர்களையும் குத்தகைக்கு எடுத்துகொண்டு அடுத்தவன் எடுத்த படத்தை திரையிட விடாமல் செய்கிறார்களே அது தான் தவறு. உப்பை தின்றவன் தண்ணியை குடித்துதான் ஆகவேண்டும். உங்கள் குடும்பத்தின் ஒட்டு மொத்த அராஜகத்திற்கு பயனை அறுவடை செய்யும் நேரம் வந்துவிட்டது.

வேட்பாளர்களின் லட்சணம் கட்சி பாகுபாடு பாராமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு என ஊழல்களின் மொத்த உருவமாகத்தான் கட்சி தருகிறார்கள். எவனும் சொல்லிகொள்ளும்படி இல்லை. 10 முதல் 20 கோடி செலவு செய்பவனுக்கு தான் சீட்டே கொடுகிறார்கள். செலவு செய்துவிட்டு கையை நக்கிகொண்டா போவான்.
கிடைப்பதை சுருட்டத்தன் செய்வான். தலைவன் உருப்படியா இருந்தா தானே தொண்டனும் உருப்படியா இருப்பான்.

சாகும் தருவாயில் காமராசரின் கையிருப்பு வெறும் 63 ரூபாய்தானாம். தனது மாத சம்பளத்தில் தனது மனைவி 5 ரூபாய் மிச்சம் பிடித்துவிட்டார் என்பதற்காக ஓடோடி சென்று தனது சம்பளத்தில் உபரியான 5 ரூபாய் குறைக்க சொன்ன லால் பகதூர் சாஸ்திரி, விருந்தினர் வருகைக்காக 1 ரூபாய் அதிகம் செலவனாதற்காக ஆசிரம நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டு கிடைக்காமல் நண்பரிடம் கடன் வாங்கினார் காந்தி.

இதெல்லாம் கூட நடந்தது நம் நாட்டினில் தான் என்று சொன்னால் எதிர் வரும் சந்ததிகள் நம்புவார்களா..? கொள்கைக்காக முரண்பட்ட உத்தம தலைவர்கள் பொதுநலத்தில் ஒன்றுபட்டு நின்றார்கள். ஆனால் கொள்கை என்றால் கொள்ளையடிப்பது, பொதுநலம் என்றால் பெரிய வீடு, சின்ன வீடு பாகுபாடு பாராமல் அரசு சொத்தை கொள்ளையடிப்பது என்று மாறிப்போனது காலத்தின் கோலம். இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அரசியல் பன்னாடைகள் திருந்த போவதில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சி இங்கு ஏற்பட்டால் தான் உண்டு. அப்போதும் கூட தலைமை ஏற்க ஒரு நல்லவன் கிடைக்க போவதில்லை.

Tuesday, March 22, 2011

2011 தேர்தல் - சில புதிர்கள்

புதிர் 1
பரபரப்பு கொஞ்சம் ஓய்ந்தது போல் தெரிந்தாலும் சொல்லி வைத்தது போல் அடுத்து அடுத்து பரபரப்புக்குரிய செய்தி வந்து விடுகிறது. தி மு க, அ தி மு க, தே மு தி க அடுத்து இப்போது காங்கிரஸ் வட்டாரத்தில் வேட்பாளர் குளறுபடி ஆரம்பித்துவிட்டது. போன வாரம் கட்சிகளின் பிரச்னை இந்த வாரம் கட்சி கோஷ்டிகளின் பிரச்னையில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. எதைவேண்டுமானாலும் தீர்க்கமுடியும் காங்கிரஸ் கோஷ்டி பிரச்சனையை தீர்க்க முடியுமா..?

புதிர் 2
நேற்றைய வரை 35000 புகார்களுக்கு மேல் தேர்தல் நடைமுறைகளை மீறியதாக பல்வேறு கட்சிகளின் மீது பதிவு தேர்தல் ஆணையத்தால் செய்யபட்டிருகிறது. இதே வேகத்தில் போனால் எப்படியும் ஒரு 3 புகார்களும் ஒரு குறைந்தது 1 லட்சம் வழக்குகளாவது தொடரப்படும். இதனால் என்ன பயன்..? தேர்தல் வழக்கு பதிவு செய்வதால் மட்டும் கட்சிகளின் நடவடிக்கையில் மாற்றம் வரபோகிறதா..? இதன் விசாரணை, அதன் முடிவுகள் தேர்தல் முடிந்த பிறகு தானே வெளிவரும். அதனால் வெற்றி பெற்ற கட்சிகள் எதவகையிலும் பாதிக்கப்பட போவதில்லை. வெற்றி பெற்றபின் இந்த புகார்களுக்கும், விசாரணைகளுக்கும் என்ன மரியாதை இருக்கும்..?

புதிர் 3
வை கோ வெளியேற்றப்பட்டதற்கு எவ்வளவோ காரணங்கள் முன் வைக்கபடுகிறது. ராசியில்லாத கட்சி, அவர் கேட்பது போல் 22 தொகுதி கொடுத்தால் தனி பெரும்பான்மை கிடைப்பதில் அ தி மு காவிற்கு ஏற்படும் சிக்கல், விடுதலை புலிகள், ஈழ தமிழர் விவகாரத்தில் அவருக்கும், ஜெயாவிற்கும் இருக்கும் முரண்பாடு, விஜய் மல்லையாவின் வேண்டுகோள், ராஜ பக்செவின் விருப்பம் என பட்டியல் நீள்கிறது. இதில் எது உண்மை..? தினமலர் வை கோவை பற்றி தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் என வர்ணித்திருப்பது யாரை திருப்தி படுத்த...? தி மு க ஆதரவு ஊடகங்கள் வை கோவின் நிலை குறித்து முதலை கண்ணீர் வடிப்பது எதற்காக..? வை கோவின் தேர்தல் புறகணிப்பு ஒருக்காலும் ம தி மு காவிற்கு நன்மை தரபோவதில்லை. மாறாக அவர்களின் முதுகில் குத்திய ஜெயாவிற்கும், கலைஞருக்கும் தான் சாதகமாக மாறபோகிறது.

புதிர் 4
ஒட்டு மொத்த திரையுலகமும் குடும்ப ஆட்சியால் பாதிக்கபட்டிருகிறது என தகவல்கள் வருகிறது. தேர்தல் கூட்டணி உறுதியாகி பிரசாரத்திற்கும் வண்டி கிளம்பி விட்டது ஆனால் எதிர்பார்த்த பரபரப்பு கோடம்பாக்கத்தில் காணோமே..? என்ன சமாசாரம்..? மீண்டும் இவங்க ஆட்சியை பிடித்துவிட்டால் என்ன பண்ணி தொலைவது என்ற பயமா..? விஜய் இன்னும் பகிரங்கமாக வெளிவர தயங்குவது ஏன்..?

புதிர் 5
இலவசங்கள் குறித்து எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், இலவசங்களை காட்டி எப்படியும் ஆட்சியை பிடித்துவிட முடியும் என நினைக்கும் கலைஞரின் தைரியம், தமிழனின் அறியாமை தானே. பதிலுக்கு அ தி மு காவும், பா ஜா காவும் இலவச கோதாவில் இறங்காமல் நரேந்திர மோடியை போல் தைரியமாக இலவசங்கள் இல்லாத ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடுமா...? இலவசங்கள் ஒரு மோசடி திட்டம் என்பதையாவது மக்களிடம் கொண்டு சேர்க்குமா..?

புதிர்கள் இன்னும் இருக்கு..உங்களின் பங்கிற்கு நீங்களும் சொல்லுங்கள்

Monday, March 21, 2011

சோரம் போன வடிவேலு

இன்று காமெடி நடிகர் வடிவேலு அறிவாலயத்திற்கு சென்று மு க ஸ்டாலின், மு க அழகிரி சந்தித்து தான் தி மு க கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவித்து மாலை, பொன்னாடை போன்ற சம்ப்ரதாய மரியாதைகளை பெற்று கொண்டார். பெட்டியை பின்னர் வாங்கிகொள்வார் என்று நினைக்கிறேன். ஒருவேளை சிங்கமுத்து மீது தன்னை ஏமாற்றி விட்டாதாக கலைஞர் காலை பிடித்து கதறிய பொழுது ஆப் தி ரெகார்ட் ஆக கைமாறிய தொகைக்கு நன்றி விசுவாசமாக இப்போது பிரச்சாரம் செய்வதாகவும் இருக்கலாம்.

அதை விட முக்கியமான விஷயம் கேப்டனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு, தகராறு காரணமாகவும் இருக்கலாம். ஒருவேளை தி மு காவோடு கேப்டன் கை கோர்திருந்தால் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பாரா...இல்லை அம்மாவோடு இணைந்து தி மு க கூட்டணியை எதிர்த்து பிரச்சாரம் செய்திருப்பார தெரியவில்லை.

பெரியார், காமராசர், அண்ணா, எம் ஜி யாரின் மொத்த உருவமாக தலைவர் கலைஞரை பார்க்கிறாராம் வடிவேல். கருமம் கருமம் இதைவிட ஒரு பெரிய அவமானத்தை இந்த மாபெரும் தலைவர்களுக்கு தந்துவிட முடியாது. வந்தமா, வாயை மூடிட்டு மாலையை, பொன்னாடையை வாங்கிவிட்டு போகவேண்டியது தானே மூதேவி.

திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என ஒட்டுமொத்த திரையுலகம் இவர்களால் படும் பாடு சொல்ல முடியாத வேதனை. இந்த நிலையில் கர்ண பிரபு, மகராசன் என் சாமி என் கலைஞரை எப்படி இவரால் புகழ முடிகிறது என தெரியவில்லை.

பிரபலம்னு எவன் வந்தாலும் சரி, அவனுக்கு பட்டுக்குஞ்சம் வைத்து, அலங்கரித்து பிரசாரத்திற்கு அனுப்பிவிட வேண்டியது. அவனுக்கு கழக வரலாறு தெரியுமா..?, தமிழக வரலாறு தெரியுமா..? குறைந்தபட்சம் இன்று மக்களின் மனோ நிலை என்ன..? கடந்த ஆட்சியில் சாதனைகள் என்ற பெயரில் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன..? மனவேதனை என்ன..? எதுவும் தெரிந்திருக்க அவசியமில்லை.

Friday, March 18, 2011

17 வயது பெண்..! 13 இரவுகள்..! வில்லங்க பிரதமர்...!

தமிழக அரசியலில் கடந்த ஒரு வாரமாக சூடு கிளப்பும் காட்சிகள், கொதித்து போன வேட்பாளர்கள், வீறுகொண்டு எழுந்த தொண்டர்கள், செய்வதறியாது திகைத்து சுதாரித்த தலைவர்கள் என ஒரே போராட்ட களம். கொஞ்சம் ஆறுதாலாக இருக்கட்டுமே என்று தான் இந்த பதிவு. இதுவும் அரசியல் பதிவு தான் ஆனால் கொஞ்சம் வில்லங்கமான பதிவு. ஒரு ஆறுதல் இது நம்மவர்களை பற்றியது அல்ல.

இத்தாலியின் பிரதமர் சில்வியோ பெர்லூஸ்கோணி, பெரிசுக்கு வயது 72 ஆனால் ஆடிய ஆட்டமோ சிறிசுகளும் தாக்குபிடிக்க முடியாது. இந்த வயதிலும் சின்ன பெண்கள் பக்கத்தில் இல்லயென்றால் பெரிசுக்கு தூக்கம் வரதாம். கோடிகளில் புரளும் கிழட்டு சிங்கம் அந்தரங்க அழகிகளுக்கு பரிசு கொடுத்து அசத்துவதில் கில்லாடி. பிடித்த பெண்கள் படிந்து விட்டால் எதைக்கேட்டாலும் கொடுப்பாராம். பரிசுகளும் கோடியில் தான்.

ஆட்டம் போட்ட பெரிசு இப்போது ஒரு சிறிசு விஷயத்தில் மாட்டிகொண்டு முழி பிதுங்கிறது. இத்தாலி நாட்டு சட்டப்படி 18 வயதிற்கு குறைந்த பெண்ணுடன் உறவு வைத்துகொண்டால் கடுமையான தண்டனை உண்டு. ஒரு திருட்டு வழக்கில் மாட்டிய 17 வயது பெண்ணை போலீசார் விசாரிக்க போக மேலிடத்திலிருந்து விடுவிக்க சொல்லி உத்தரவு வந்திருகிறது. அவர்கள் தமிழ் நாடு போலிசை போல் இல்லை. நொண்டி நோங்கெடுத்ததில் பாப்பா, தாத்தாவின் லீலைகளை பட்டியல் போட்டிருக்கிறது.



17 வயது விபசார பெண்ணுடன் 13 முறை உறவு கொண்டது அம்பலமாகிவிட்டது. வழக்கம் போல் பிரதமர் சார்பில் மறுப்பு தெரிவிக்கபட்டிருகிறது. வரும் ஏப்ரல் மாதம் 6 -ம் தேதி வழக்கு விசாரணைக்கு பிரதமர் ஆஜராகிறார். ஏற்கனவே பல "கேஸ்களை" இது போல் சந்திதிருபதால் பெரிசுக்கு இது மேட்டரை இல்லை. இப்ப விஷயம் என்னன்னா...? மண் பொன் பெண் - இந்த மூன்றும் தான் மனிதனை சோரம் போகவைக்கும் சமாச்சாரங்கள். இதுவரை மண்ணையும், பொன்னையும் நம்மாளுக இஷ்டத்துக்கு சுருட்டி விட்டார்கள். அப்படின்னா..இந்தமுறை பெண்களின் வலையில் அரசியல் தலைகள் உருளபோகிறதா...!!?!! தமிழக அரசியலில் அப்படி மாட்ட போவது யாராக இருக்கும்...நீங்களே சொல்லுங்க..

Wednesday, March 16, 2011

ரஜினி ஆதரவுடன் மூன்றாம் அணி தமிழக அரசியலில் அதிரடி

மூன்றாம் அணிக்கு தமிழகத்தில் ஒரு போதும் வாய்ப்பில்லை என்ற நிலைதான் இருந்தது. பா ஜா க எவ்வளோவோ முயற்சி எடுத்தும் இதுவரை முடிந்ததில்லை. அடுத்து கேப்டனும் தன் பங்கிற்கு வலை விரித்து பார்த்தார். சிறிய கட்சிகள் கூட மடியவில்லை. ஆனால் இன்றைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மூன்றாம் அணிக்கு வாய்பிருப்பதாகவே தெரிகிறது. தேர்தல் தேதி அறிவித்ததில் தொடக்கி இன்று வரை பரபரப்புக்கு பஞ்சமில்லை. கூட்டணி அலைகழிப்புகள், தொகுதி பங்கீடு இழுபறி என தினம் தினம் அரசியல்வாதிகளின் இரத்த அழுத்தம் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது.

அடிமேல் அடியாக தி மு காவிற்கு சி பி ஐ நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் சாதிக் பாட்சாவின் மரணமும் பெருத்த சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கோடு தற்கொலை வழக்கும் சி பி ஐ கையிலெடுக்கும் பட்சத்தில் பரபரப்பான, கசப்பான உண்மைகள் வெளிவரக்கூடும். இங்கு விழும் ஒவ்வொரு அடியும் தனக்கு பெரும் ஆதாயத்தை தரக்கூடும் என்ற தலைகனத்தில் தான் அ தி மு க தலை விரித்து ஆடுகிறது.

போதாகுறைக்கு தேர்தல் கமிஷனின் கிடுக்கி பிடி வேறு அரசியல்வாதிகளின் வயிறில் புளியை கரைக்கிறது. போராடி வாதாடி தொகுதியை பெற்றாலும் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகம் பெரியகட்சிகளின் வேட்பாளர்களுக்கு தூக்கம் தொலைத்த இரவுகளாகி வருகிறது. இந்நிலையில் மூன்றாம் அணிக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்கள் அ தி மு காவினர்.

அ தி மு காவா என்று குழம்ப வேண்டாம். அ தி மு காவின் முதுகில் குத்தும் அரசியல் சூழ்ச்சியால் தான் மூன்றாம் அணி குறித்து சில கட்சிகள் யோசித்து வருகின்றன. எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம் என்று கடையை விரித்து காத்திருக்கும் பா ஜா கவிற்கு இது சரியான சந்தர்ப்பம்.

நாடாளும் மக்கள் கட்சி கார்த்திக் பொதுவாக எதை பேசினாலும் புரியாது, ஆனால் அ தி மு காவின் நம்பிக்கை துரோகத்தை மட்டும் சேனல் சேனலாக பொளந்து கட்டுகிறார். இன்றைய தினசரியிலும் இவரின் அனுதாப குரல் ஓங்கி ஒலித்தது. அதுமட்டுமல்ல தன்மானத்துடன் வெளியே வாருங்கள் நாம் சேர்ந்து அ தி மு காவிற்கு பாடம் புகட்டுவோம் என்று வை கோவிற்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். ஒருவகையில் காமெடியாக இருந்தாலும்
வை கோவிற்கு வேறு என்ன வழி.

1 . மானம் விட்டு கொடுப்பதை வாங்கிகொள்வதா, அப்படிஎன்றால் வெறும் 8 தொகுதி வைத்துகொண்டு 20 பேருக்கு எப்படி பங்கு வைப்பது..?
2 . முழுதாக ஐந்து வருடங்கள் கூட இருந்தும், அதிகாரத்தில் இல்லாத அம்மையார் இப்போதே இந்த பாடு படுத்தினால் அதிகாரத்திற்கு வந்த பின் நிலைமை என்ன ஆகும்..?
3 . 8 - ல் ஒரு இரண்டோ மூன்றோ வெற்றிபெற்றாலும் அதை வைத்து என்ன பெரிதாக சாதித்து விட முடியும். வெற்றி பெற்றவர்களுக்கு தான் என்ன மரியாதை கிடைத்துவிடும்..?
4 . மாநில கட்சியாக அங்கீகாரம் கிடைக்கவில்லைஎன்றால் ஒட்டு மொத்த எதிர்காலமும் கேள்விகுறியாகிவிடுமே..?
5 . பா ஜா காவுடன் கூட்டணி என்றால் உடனடி நன்மை என்ன..? அதிக தொகுதிகள் கிடைக்கும், இரண்டில் வெற்றி பெறுவது கடினமல்ல...அத்துடன் அங்கீகாரத்திற்கு தேவையான 6 % வாக்குகளையும் பெறமுடியும்.

மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொகுதி பங்கீடு விஷயத்தில் ஜெயலலிதாவின் தன்னிச்சையான முடிவால் விரக்தியில் தள்ளபட்டிருக்கிறது. அவர்களும் தே மு தி க தலைமையில் ஓன்று திரள காத்திருக்கிறார்கள்.

கொடுத்ததே இரண்டு தொகுதி தான் என்றாலும் மனநிறைவு கொண்ட புதிய தமிழகம் வெற்றிக்கான வாய்ப்பற்ற தொகுதியை ஒதுக்கியதில் ரொம்பவே அப்செட்.

மூன்றாம் அணி அமைந்தால் கடைசி நேர அதிர்ச்சியாக கேப்டனும் வந்தாலும் வரலாம். தே தி மு க வந்தவுடன் அம்மாவின் கணக்குகள் எப்படி மாறிவிட்டன என்பது விஜயகாந்த் அறியாததல்ல. ஒருவேளை வை கோ வெளியேறி 160 தொகுதிகளில் அ தி மு க போட்டியிட்டால் வெற்றி பெற தேவையான 118 எளிதாக பெறமுடியும். கொஞ்சம் குறைந்தாலும் குட்டி கட்சிகளை பெட்டிகளையோ, பதவிகளையோ காட்டி கட்டிவைத்திருக்க முடியும். அப்போது விஜயகாந்தின் நிலைமை. ஏற்கனவே ஆட்சில் பங்கில்லை என்று சொல்லிவிட்டார். வெறும் 20 அல்லது 30 M L A வைத்து விட்டுமட்டும் என்ன செய்யமுடியும். பதவியில் இல்லாத அரசியல்வாதி பல் பிடுங்கப்பட்ட பாம்பை போல் தண்டம் தான். தொகுதிக்கு குறைந்தது 5 அல்லது 10 கோடி செலவு செய்துவிட்டு புறங்கையை நக்கி கொண்டு போகவேண்டியது தான்.

இன்னும் ஓரிரு நாளில் மூன்றாம் அணி குறித்த அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகலாம். எந்த எந்த தொகுதி என்று தே மு தி காவிற்கு ஒதுக்கும் போது பூசல்கள் பெரிதாகி பிரிவுகள் வரலாம். தே மு தி க தலைமையில் நாடாளும் மக்கள் கட்சி, ம தி மு க, பா ஜ க இணைந்து புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்று நம்புவோம். ஏற்கனவே எந்த கட்சிக்கும் வாய்ஸ் இல்லை என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். ஆனால் மூன்றாம் அணியின் தார்மீக நியாயம், வை கோ, விஜயகாந்த் மற்றும் இல.கணேஷன் போன்றவர்கள் நல்ல நண்பர்கள் என்ற முறையில் இ(ற)ரங்கி வருவதற்கும் வாய்ப்பிருகிறது.

ஒருவேளை பா ஜ க தவிர்த்து தே மு தி க தலைமையில் புதிய தமிழகம், நாடாளும் மக்கள் கட்சி, ம தி மு க, மார்க்சிஸ்ட் ,கம்யூனிஸ்ட், சரத்தின் ச ம காவும் இணைந்து கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்த கூட்டணியின் ஒரே பிரச்னை வாக்காளர்களுக்கு இவர்களால் வாக்குறுதியை கொடுக்க முடியுமே தவிர, பொன்னோ, பொருளோ, பணமோ தேறாது. சொல்வதற்கில்லை அதற்கும் ஏதாவது வழி வைத்திருப்பார்கள்.



இம்முறையும் அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது தே மு தி க. விஜயகாந்தின் முடிவை ஆவலோடு எதிர்பார்த்திருகிறார்கள் அ தி மு காவின் தோழைமை கட்சிகள். துக்ளக்கின் 40 வது ஆண்டு விழாவில் அம்மாவிற்கு இருக்கும் அரசியல் ஆளுமை வேறு யாருக்கும் இல்லைஎன்றார் ஆசிரியர் சோ. ஆளுமை என்றால் இதுதானா..? தன்னை நம்பி வீட்டிற்கு வந்தவனுக்கு வயிறார பசியாற்றுபன் தமிழன். வந்தவன் முன்னால் கட்டு கட்டென்று கட்டி விட்டு சட்டியை கவிழ்ப்பது எந்த வகை நாகரீகம் என்பதை சோ சொல்லவேண்டும் .

ரஜினி ஆதரவுடன் மூன்றாம் அணி தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்

மூன்றாம் அணிக்கு தமிழகத்தில் ஒரு போதும் வாய்ப்பில்லை என்ற நிலைதான் இருந்தது. பா ஜா க எவ்வளோவோ முயற்சி எடுத்தும் இதுவரை முடிந்ததில்லை. அடுத்து கேப்டனும் தன் பங்கிற்கு வலை விரித்து பார்த்தார். சிறிய கட்சிகள் கூட மடியவில்லை. ஆனால் இன்றைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மூன்றாம் அணிக்கு வாய்பிருப்பதாகவே தெரிகிறது. தேர்தல் தேதி அறிவித்ததில் தொடக்கி இன்று வரை பரபரப்புக்கு பஞ்சமில்லை. கூட்டணி அலைகழிப்புகள், தொகுதி பங்கீடு இழுபறி என தினம் தினம் அரசியல்வாதிகளின் இரத்த அழுத்தம் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது.

அடிமேல் அடியாக தி மு காவிற்கு சி பி ஐ நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் சாதிக் பாட்சாவின் மரணமும் பெருத்த சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கோடு தற்கொலை வழக்கும் சி பி ஐ கையிலெடுக்கும் பட்சத்தில் பரபரப்பான, கசப்பான உண்மைகள் வெளிவரக்கூடும். இங்கு விழும் ஒவ்வொரு அடியும் தனக்கு பெரும் ஆதாயத்தை தரக்கூடும் என்ற தலைகனத்தில் தான் அ தி மு க தலை விரித்து ஆடுகிறது.

போதாகுறைக்கு தேர்தல் கமிஷனின் கிடுக்கி பிடி வேறு அரசியல்வாதிகளின் வயிறில் புளியை கரைக்கிறது. போராடி வாதாடி தொகுதியை பெற்றாலும் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகம் பெரியகட்சிகளின் வேட்பாளர்களுக்கு தூக்கம் தொலைத்த இரவுகளாகி வருகிறது. இந்நிலையில் மூன்றாம் அணிக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்கள் அ தி மு காவினர்.

அ தி மு காவா என்று குழம்ப வேண்டாம். அ தி மு காவின் முதுகில் குத்தும் அரசியல் சூழ்ச்சியால் தான் மூன்றாம் அணி குறித்து சில கட்சிகள் யோசித்து வருகின்றன. எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம் என்று கடையை விரித்து காத்திருக்கும் பா ஜா கவிற்கு இது சரியான சந்தர்ப்பம்.

நாடாளும் மக்கள் கட்சி கார்த்திக் பொதுவாக எதை பேசினாலும் புரியாது, ஆனால் அ தி மு காவின் நம்பிக்கை துரோகத்தை மட்டும் சேனல் சேனலாக பொளந்து கட்டுகிறார். இன்றைய தினசரியிலும் இவரின் அனுதாப குரல் ஓங்கி ஒலித்தது. அதுமட்டுமல்ல தன்மானத்துடன் வெளியே வாருங்கள் நாம் சேர்ந்து அ தி மு காவிற்கு பாடம் புகட்டுவோம் என்று வை கோவிற்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். ஒருவகையில் காமெடியாக இருந்தாலும்
வை கோவிற்கு வேறு என்ன வழி.

1 . மானம் விட்டு கொடுப்பதை வாங்கிகொள்வதா, அப்படிஎன்றால் வெறும் 8 தொகுதி வைத்துகொண்டு 20 பேருக்கு எப்படி பங்கு வைப்பது..?
2 . முழுதாக ஐந்து வருடங்கள் கூட இருந்தும், அதிகாரத்தில் இல்லாத அம்மையார் இப்போதே இந்த பாடு படுத்தினால் அதிகாரத்திற்கு வந்த பின் நிலைமை என்ன ஆகும்..?
3 . 8 - ல் ஒரு இரண்டோ மூன்றோ வெற்றிபெற்றாலும் அதை வைத்து என்ன பெரிதாக சாதித்து விட முடியும். வெற்றி பெற்றவர்களுக்கு தான் என்ன மரியாதை கிடைத்துவிடும்..?
4 . மாநில கட்சியாக அங்கீகாரம் கிடைக்கவில்லைஎன்றால் ஒட்டு மொத்த எதிர்காலமும் கேள்விகுறியாகிவிடுமே..?
5 . பா ஜா காவுடன் கூட்டணி என்றால் உடனடி நன்மை என்ன..? அதிக தொகுதிகள் கிடைக்கும், இரண்டில் வெற்றி பெறுவது கடினமல்ல...அத்துடன் அங்கீகாரத்திற்கு தேவையான 6 % வாக்குகளையும் பெறமுடியும்.

மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொகுதி பங்கீடு விஷயத்தில் ஜெயலலிதாவின் தன்னிச்சையான முடிவால் விரக்தியில் தள்ளபட்டிருக்கிறது. அவர்களும் தே மு தி க தலைமையில் ஓன்று திரள காத்திருக்கிறார்கள்.

கொடுத்ததே இரண்டு தொகுதி தான் என்றாலும் மனநிறைவு கொண்ட புதிய தமிழகம் வெற்றிக்கான வாய்ப்பற்ற தொகுதியை ஒதுக்கியதில் ரொம்பவே அப்செட்.

மூன்றாம் அணி அமைந்தால் கடைசி நேர அதிர்ச்சியாக கேப்டனும் வந்தாலும் வரலாம். தே தி மு க வந்தவுடன் அம்மாவின் கணக்குகள் எப்படி மாறிவிட்டன என்பது விஜயகாந்த் அறியாததல்ல. ஒருவேளை வை கோ வெளியேறி 160 தொகுதிகளில் அ தி மு க போட்டியிட்டால் வெற்றி பெற தேவையான 118 எளிதாக பெறமுடியும். கொஞ்சம் குறைந்தாலும் குட்டி கட்சிகளை பெட்டிகளையோ, பதவிகளையோ காட்டி கட்டிவைத்திருக்க முடியும். அப்போது விஜயகாந்தின் நிலைமை. ஏற்கனவே ஆட்சில் பங்கில்லை என்று சொல்லிவிட்டார். வெறும் 20 அல்லது 30 M L A வைத்து விட்டுமட்டும் என்ன செய்யமுடியும். பதவியில் இல்லாத அரசியல்வாதி பல் பிடுங்கப்பட்ட பாம்பை போல் தண்டம் தான். தொகுதிக்கு குறைந்தது 5 அல்லது 10 கோடி செலவு செய்துவிட்டு புறங்கையை நக்கி கொண்டு போகவேண்டியது தான்.

இன்னும் ஓரிரு நாளில் மூன்றாம் அணி குறித்த அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகலாம். எந்த எந்த தொகுதி என்று தே மு தி காவிற்கு ஒதுக்கும் போது பூசல்கள் பெரிதாகி பிரிவுகள் வரலாம். தே மு தி க தலைமையில் நாடாளும் மக்கள் கட்சி, ம தி மு க, பா ஜ க இணைந்து புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்று நம்புவோம். ஏற்கனவே எந்த கட்சிக்கும் வாய்ஸ் இல்லை என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். ஆனால் மூன்றாம் அணியின் தார்மீக நியாயம், வை கோ, விஜயகாந்த் மற்றும் இல.கணேஷன் போன்றவர்கள் நல்ல நண்பர்கள் என்ற முறையில் இ(ற)ரங்கி வருவதற்கும் வாய்ப்பிருகிறது.

ஒருவேளை பா ஜ க தவிர்த்து தே மு தி க தலைமையில் புதிய தமிழகம், நாடாளும் மக்கள் கட்சி, ம தி மு க, மார்க்சிஸ்ட் ,கம்யூனிஸ்ட், சரத்தின் ச ம காவும் இணைந்து கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்த கூட்டணியின் ஒரே பிரச்னை வாக்காளர்களுக்கு இவர்களால் வாக்குறுதியை கொடுக்க முடியுமே தவிர, பொன்னோ, பொருளோ, பணமோ தேறாது. சொல்வதற்கில்லை அதற்கும் ஏதாவது வழி வைத்திருப்பார்கள்.



இம்முறையும் அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது தே மு தி க. விஜயகாந்தின் முடிவை ஆவலோடு எதிர்பார்த்திருகிறார்கள் அ தி மு காவின் தோழைமை கட்சிகள். துக்ளக்கின் 40 வது ஆண்டு விழாவில் அம்மாவிற்கு இருக்கும் அரசியல் ஆளுமை வேறு யாருக்கும் இல்லைஎன்றார் ஆசிரியர் சோ. ஆளுமை என்றால் இதுதானா..? தன்னை நம்பி வீட்டிற்கு வந்தவனுக்கு வயிறார பசியாற்றுபன் தமிழன். வந்தவன் முன்னால் கட்டு கட்டென்று கட்டி விட்டு சட்டியை கவிழ்ப்பது எந்த வகை நாகரீகம் என்பதை சோ சொல்லவேண்டும் .

Tuesday, March 15, 2011

கமலின் புதிய ஜோடி, தட்டி பறித்த சூர்யா

செல்வராகவன் டைரக்சனில் கமல் அடுத்த படத்தில் நடிக்கிறார். இதுவும் பீரியட் படம் போல் தெரிகிறது இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தேடி பிடித்து செல்வராகவனால் அழைத்து வரப்பட்டவர் தான் சோனாக்சி. இவர் வேறு யாருமல்ல பா ஜா கா கட்சியில் அமைச்சராக பதவி வகித்த சத்ருகன் சின்ஹாவின் மகள். மாடலாக வந்து கலக்கிய இவர் சல்மானுக்கு ஜோடியாக டபாங் படத்தில் நடித்தார், படம் சக்கை போடு போட்டதில் அம்மணியின் மார்கெட் சிகரத்தில் நிற்கிறது. பாலிவுடில் இருந்து கோலிவுட் வரை காத்திருகிறார்கள் தயாரிப்பாளர்கள். கமலின் ஜோடி என்றதும் மறு பேச்சில்லாமல் சம்மதம் சொல்லியிருகிறார்.

கேள்விப்பட்ட சூர்யாவும் தனது அடுத்த படத்திற்கு இவரையே நாயகி ஆக்கிகொண்டார். பொதுவாக செல்வராகவன் படம் நீண்ட நாட்கள் படபிடிப்பில் இருக்கும் அதுவும் கமலுடன் என்பதால் எப்போது சூட்டிங் ஆரம்பித்து முடிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏழாம் அறிவு முடிந்தவுடன் சூர்யாவின் படம் தொடங்கிவிடும் என்பதால் சோனாக்சியை விரைவில் சூர்யாவுடன் பார்த்துவிடலாம்.

ஜெ ஜெ அ தி மு காவா ச்ச்சே ச்ச்சே அ தி மு காவா..!!

இந்த முறை அ தி மு க கூட்டணி வெற்றி பெற பெரிதாக எதுவும் செய்துவிட வேண்டாம், தி மு காவின் தோல்வியை அவர்களே உறுதி செய்து விட்டார்கள் என்ற நிலையில் கடந்த ஆட்சியின் அவலங்களை மேடை தோறும் பட்டியலிட்டாலே போதும் என்ற நிலை இருந்தது நேற்று வரை. ஆனால் அ தி மு காவின் அண்மைய செயல்பாடுகள் தோல்வி பாதையை நோக்கி செல்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

கம்யுனிஸ்டுகளின் தொகுதி பங்கீடு காலதாமத படுத்தியது, வை கோவுடன் இன்னுமும் தொகுதி பங்கீடு முடிவடையாதது, முதன் முதல் அ தி மு காவுடன் கூட்டணி என்று பகிரங்கமாக அறிவித்த கார்த்திக்கிற்கு இன்னுமும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்காதது, மிக தாமதாமான தொகுதி முடிவுகள் அ தி மு க தொண்டர்களை மட்டுமல்ல நடுநிலையாளர்கள் மத்தியிலும் வெறுப்பையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து, இத்தனை வருடங்களாக கூட்டணியில் இருக்கும் வை கோவை கழட்டி விடும் முடிவில் இருப்பதாக தெரிகிறது. பெரும் பாரம் என கட்சிகள் நினைக்கும் பா ம க கூட 30 தொகுதிகளை பெற்று விட்ட நிலையில் வை கோவிற்கு வெறும் 7 அல்லது 8 தொகுதிகளை தான் ஒதுக்க முடியும் என்பது முதுகில் குத்தும் செயல். ஈழ தமிழர்கள் விஷயத்திலும், பிரபாகரன் விஷயத்திலும் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் கூட்டணி தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவின் கருத்துகளை நாகரீமாக எதிர்க்காமல் இருந்தவர் வை கோ. அதே சமயத்தில் ஈழ ஆதரவு என்ற தன கொள்கையிலும் விட்டுதராமல் போராட்டங்களை நடத்தினார்.

ஜனவரி 19ம் தேதி கார்த்திக் தனது ஆதரவை அதிமுகவுக்கு தெரிவித்தும் இதுவரை பேச்சுவார்த்தைக்கோ, தொகுதி பங்கீடு குறித்து பேசவோ அழைக்கவில்லை. 3 தொகுதிகள் கேட்டோம். இரண்டு தொகுதிகளாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதற்குகூட அழைப்பு இல்லை. எனவே அக்கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். என கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.

கடந்த தேர்தல் வாக்கு விகிதாசாரப்படி தே தி மு க மட்டுமே போதும் என்ற நிலைப்பாடு ஒரு வகையில் சரிதான். குறைந்தது 150 தொகுதியில் போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களை (118 ) பிடித்து விட்டால் எல்லா கட்சிகளின் நிலையும் படு கேவலத்தை சந்திக்க வேண்டிவரும். ஏற்கனவே பா ம க மற்றும் பா ஜா க கட்சிகள் அம்மாவின் நம்பிக்கை துரோகத்திற்கு சாட்சியான வரலாறு இருக்கிறது. இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் கேப்டன் அவர்களே உஷார். எந்த நிமிடம் உங்கள் நிலையும் கறிவேப்பிலை ஆவது நிச்சயம்.

சினிமா உலகம் ஒட்டு மொத்தமாக தி மு காவின் மேல் மனகசப்பில் இருப்பது அவர்களுக்கு தெரியாமல் இல்லை. உடனடியாக மருந்து போடும் வேலை நடந்தாக வேண்டும். இல்லையெனில் தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொருவராக அ தி மு காவின் பக்கம் வரலாம். சினிமா கவர்ச்சி எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்திவிடும் என்பதை கலைஞர் அறியாதவரல்ல.

ஒரு முறை துக்ளக் ஆசிரியர் சோவிடம், தேர்தலில் நிற்பவர்கள் எல்லாம் ரவுடிகளாகவும், திருடர்களாகவும் இருந்தால் எப்படி நாம் நல்லவர்களை நம் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க முடியும் என்று கேட்கப்பட்ட போது அவர் சொன்னது போட்டி இடுவதிலேய மிக சின்ன ரவுடி, மிக சின்ன திருடனை தேர்ந்தெடுக்க வேண்டியது தான் வேறு வழியில்லை என்றார். நான் சொல்கிறேன் திருடனை கூட மன்னிக்கலாம் நம்பிக்கை துரோகியை மன்னிக்கவே கூடாது.

கோவை, மதுரை என அடுத்தடுத்து மாநாடுகளை நடத்தி தேர்தல் வலைகளை ஜரூராக ஆரம்பித்த அ தி மு க,
இப்போது அமைதியாக கைகளை நகர்த்துவது பதுங்கி பாய்வதற்கு என்று நினைத்தேன். ஆனால் அது எதிர்கட்சிகளின் மீதல்ல தோழமை கட்சிகளின் மீதே என்று இப்போது தான் தெரிகிறது.

Saturday, March 12, 2011

சாயம் வெளுத்த கொங்கு முன்னேற்ற பேரவை..!!

தி மு காவின் கண்டுகொள்ளாமை காரணமாகத்தான் கொங்கு மண்டலத்தில் வீறுகொண்டு எழுந்தார்கள் கவுண்டர் என்றளைக்கபடும் வேளாண் சமூகத்தார்கள். கொங்கு முன்னேற்ற பேரவை உதயமானது.

விவசாயிகளை புறகணித்தது,
சாயப்பட்டறை முதலாளிகளை கட்டுபடுத்த தவறியது,
பவானி ஆற்றை நாசகேடாகியத்தை கண்டு கொள்ளாதது,
கள்ளிறக்கும் தொழிலை அழிக்க முனைந்தது,
தொழில் நகராம் திருப்புருக்கு பெருகி வரும் மக்கள் தொகையின் அடிப்படையில் எந்த வித அடிப்படை கட்டமைப்பு விஷயத்தையும் மேற்கொள்ளாதது,
ஒகேனகல் குடிநீர்த்திட்டம்,
வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தபடுவதை முறைபடுத்துவது
அ தி மு காவின் கோட்டை என்பதால் முற்றாக மக்கள் நல திட்டங்களை புறகணித்தது,
தொடர் மின்வெட்டால் சிறு குறு விவசாயிகள், நூற்பாலை தொழில்களை முற்றிலுமாக அழித்தது என மக்கள் சக்தி பொங்கி எழுந்த போது கவுண்டர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த மக்களும் அவர்களை ஆதரித்தார்கள். சாதி வேறுபாடு காட்டாமல் பாராளுமன்ற தேர்தலில் ஒரு கவுரமான ஓட்டுகளை பெற்று அவர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்பதை நிரூபித்தார்கள். கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, என சேலம் வரை சுமார் 50 லட்சத்துக்கும் மேல் வசிக்கும் பெருங்கூட்டமாக தங்களின் பலத்தை அவர்களே அப்போது தான் உணர்ந்தார்கள். விட்டுவைக்குமா கட்சிகள்...!

கட்சியை விலை பேச, முற்றாக அழித்துவிட எத்தனையோ பேரங்கள், சதி திட்டங்கள்..இறுதியில் விழுந்தே விட்டது. எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, எந்த கட்சியை எதிர்க்க உருவாகபட்டதோ அந்த கட்சியிடமே தன் மானத்தை அடகு வைத்து விட்டார்கள். மக்கள் சக்தியாக திரண்ட இயக்கம் இரு பெரும் பணக்கார வர்க்க தலைவர்களிடம் சின்னபட்டு போய் நிற்கிறது.



நன்றாக ஞாபகம் இருக்கிறது. கவுண்டர் வீட்டு பெண்கள் எல்லாம் வீதியில் இறங்கி அன்று தேர்தல் வேலை செய்தார்கள். தனித்து போட்டியிட்டதால் அவர்களால் ஓட்டுகளை பிரிக்க முடிந்ததே தவிர பெரிதாக எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. நானும் கோயமுத்தூரை சேர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்..எங்கள் முதுகில் மட்டுமல்ல குத்தியது மட்டுமல்ல உங்கள் வீட்டு பெண்கள் முகத்திலும் காரி துப்பி விட்டீர்கள்.

எரிசாராய தொழிற்சாலை அனுமதி மற்றும் 100 கோடி பணத்திற்காக தி மு காவுடன் கூட்டு என்று பத்திரிகை செய்திகள் வருகின்றன. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் ஸ்பெக்ட்ரம் பூதகர ஊழல் எப்படியும் தங்களை அதல பாதாளத்திற்கு தள்ளி விடும் என்று தி மு கா தெரிந்தே கொங்கு மண்டலத்தில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் கொ மு பேரவையை விலை பேசியிருக்க கூடும். இல்லையென்றால் அ தி மு காவுடன் கூட்டணி என்ற நிலையில் திடீரென்று கட்சி மாறி கூட்டணி சேர வேண்டிய அவசரமென்னா...

தங்களை தனிமைபடுத்தி தோல்வியடைய செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்தார் என்கிறார்கள்...உங்களின் பொதுவான கோரிக்கைகளை அவர் ஏற்றுகொண்டாரா என்று பாருங்கள்...!! 10 வருடங்களாக புறக்கனிக்கப்பட்ட உங்கள் சமுதாய மக்களுக்கு, கொங்கு மண்டலத்திற்கு என்ன நல திட்டங்களை வைத்திருக்கிறார் என்று கேளுங்கள் அதைவிட்டு விட்டு சீட்டுககவோ, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதோ முக்கியமில்லை. கடந்த தேர்தலில் நீங்கள் பெற்ற ஒட்டு உங்கள் சமூகதார்து மட்டுமல்ல, இது நம்ம மண் என்று நினைத்து உங்களை ஆதரித்த கொங்கு மண்டலத்தார் அனைவரது ஓட்டும் உள்ளது. இம்முறை நீங்கள் மண்ணை கவ்வ போவது நிச்சயம் நடக்கும். மக்களை மதிக்காமல், கொண்ட கொள்கைகளையும் நினைத்து பார்க்காமல் விலை போனதற்கு இம்முறை தக்க பாடம் நம் மக்கள் கொடுப்பார்கள்.

அய்யா ஆட்சியாளர்களே, கள்ளோ, மதுவோ இரண்டுமே தடை செய்ய வேண்டிய விஷயம் தான் என்னை பொறுத்தவரை. ஆனால் மக்களை கொல்லும் மதுவை அரசின் கஜானாவை நிரப்புவதற்கும், அரசியல்வாதிகளின் மது தொழிற்சாலைகள் வருமானம் குவிப்பதற்கும் அனுமதிக்கும் போது ஒரு சாதாரண விவசாயின் கள்ளிறக்கும் கோரிக்கையை மறுதலிப்பது கண்டிக்கவேண்டிய விஷயம் தான். மதுவை முற்றிலுமாக ஒழியுங்கள் இல்லையென்றால் கள்ளிறக்குவதை முறைபடுத்தி விவசாயிகளையும் வாழ வையுங்கள்.

உலக கோப்பை இம்முறையும் கோவிந்தா தானா..?

268 / 2 என்ற நிலையில் ரொம்பவும் தெம்பாக விளையாடி கொண்டிருந்த நிலையில் பெரும் புயலென சாய்த்தார் ஸ்டெயின் இந்திய வீரர்களை. மீண்டும் ஒருமுறை 400 தொடும் என்ற நிலையில் 300 கூட தொடமுடியாது போனது வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தை காட்டுகிறது.

இன்னும் எத்தனை வீரர்கள் வந்தாலும் சச்சினை நம்பி தான் இந்திய இருக்கிறது. சச்சின் போனதும் வரிசையாக எல்லோரும் நடையை கட்டியது நாம் இன்னும் வளரவே இல்லையோ என்று தோன்றுகிறது. கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் அடியது போல் தெரிகிறது. அதுவும் விராத் கோலி மற்றும் யூசுப் பதான் அவுட்டனா விதம் மகா கேவலம்.

இன்னும் 3 ஓவர்களே மீதமுள்ள நிலையில் பந்தை தடவி கொடுத்துகொண்டிருந்த தோணி நிச்சயம் இம்முறை பாராட்டு குரியவரல்ல.

கடைசி நான்கு ஓவரில் 100 ரன்கள் எடுத்து விஸ்வரூபம் எடுத்த நீயூசிலாந்து எங்கே...?
கடைசி ஒன்பது விக்கெட்டுகளை வெறும் 26 ரன்களுக்கு இழந்த இந்திய எங்கே..

கவச்கரும், கங்குலியும் இந்திய அணியை யானை குதிரைன்னு புகழ்த்து தள்ளினாங்க. வடிவேல் சொன்ன மாதிரி நம்ம பில்டிங் ஸ்ட்ராங் ஆனால் பேஸ்மட்டம் வீக்...ஓவரா பில்ட் அப் கொடுக்கறதா விட்டுட்டு நிஜத்திற்கு வாங்க சாமி.

பார்ப்போம் ஜாகிர் கானும், பஜ்ஜியும் என்னசெய்ய போகிறார்கள் என்று

Friday, March 11, 2011

கெட்டபடமா..சிலுக்குவின் வாழ்க்கை

சிலுக்குவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. சிலுக்குவின் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய மர்ம புத்தகமாவே விரிகிறது.ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகனையும் தன் ஒரு கிறக்க பார்வையாலேய கவர்ந்திழுக்கும் சக்தி அந்த காந்த கண்களுக்கு மட்டுமே உண்டு. அதன் பிறகு எத்தனையோ பேர் வந்தார்கள் போகிறார்கள்..இவரளவு நின்றவர்கள் யாருமில்லை.

சிலுக்குவின் பெயருக்கு ஒரு Brand Maker அந்தஸ்து இருந்தது. திரையுலகில் வெகு சிலருக்கே வாய்க்கும் வரம் அது. நதியா, ரேவதி, ரஜினி போல் ஐவரும் ஒரு காலத்தில் அசைக்க முடியாத வியாபார சக்தியாகவும் இருந்தார். ரஜினியின் சில படங்கள் கூட சிலுக்கின் நடனத்திற்காக காந்திருந்த காலம் அது.

அவரின் உடலசைவும், கவர்ச்சியான கிறக்க பார்வையும் வலிந்து அவராக திரைபடதிற்காக ஏற்றுகொண்டவை. உடலின் குலுக்கல்கள், அவரின் நடன அசைவுகள் எல்லாம் சரோஜா மாஸ்டரின் திறமைக்கு கிடைத்த பரிசுகள் தான். சமீபத்திய பேட்டியில் கூட எங்கோ வீட்டு வேலை செய்துகொண்டிருந்த பெண்ணை, கொண்டு வந்து தங்க வைத்து, உணவு கொடுத்து, நடிக்க கற்று கொடுத்து பெரிய ஆளாகிவிட்டது நான் தான், என்னை ஒரு வார்த்தை கேட்காமல் எப்படி சிலுக்குவின் வாழ்க்கையை படமாக எடுக்கலாம் என்று பொரிந்து தள்ளியிருந்தார் வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் சிலுக்குவை அறிமுகபடுத்திய வினுசக்கரவர்த்தி.

சிலுக்குவின் வேடத்தில் நடிப்பதற்கு யாரையும் மனத்தால் டிக் செய்துவிட முடியாது. ஒரு புதுமுகத்தை கூட ஏற்று கொள்ள முடியும். ஏற்கனவே வேறு ஒரு இமேஜில் பார்த்து பழகி விட்ட யாரும் சிலுக்கின் இடத்தை நிரப்பி விட முடியாது. அதுவும் வித்யாபாலன் அந்த வேடத்திற்கு ரொம்ப நெருடலாகவே இருக்கிறது. கவர்ச்சியை யார் வேண்டுமானாலும் காட்ட முடியும், அதற்கு சிலுக்கிவின் சாயத்தை பூசமுடியாது என்பது தான் உண்மை. பார்ப்போம் எப்படி காட்ட sorry நடிக்க போகிறார் என்று.



யாரும் அறிந்திராத விஜிஎன்ற விஜியலசுமியை அவரை அறிந்திராதவர்களே இல்லை என்னும் அளவிற்கு வளர்த்து விட்டதில் வினுச்சகரவர்த்திக்கும் பங்குண்டு. இவருடன் நடித்த பலரும் வெளிப்படையாக இவரை பற்றி பேச தயாரில்லை என்றாலும் ஒருசிலர் அவளை போல ஒருத்தியை இனி பார்ப்பது கடினம் என்கிறார்கள். அவள் ஒரு நெருப்பு மாதிரி இருந்தாள், ஆரம்ப காலங்களில் அவள் பட்ட துயரம் கொஞ்சநஞ்சமல்ல...ஒரு கிராமத்தில் அடுத்த காட்சிக்காக உடை மாற்றும் போது மரத்தின் மீது ஏறி நின்று அந்த கிராமமே வேடிக்கை பார்த்ததை மனவேதனையோடு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அவரால் உதவி பெற்றவர்கள் பலர், கதாநாயகியை விட அதிகம் சம்பளம் பெற்றும் பெரிய அளவில் அவர் சொத்து சேர்க்கவில்லை என்பதில் இருந்தே இது தெரிகிறது. அதுமட்டுமல்ல நம்பிய பலரால் அவர் ஏமாற்றப்பட்டும் இருக்கிறார். இதனாலெலாம் வெறுத்து போய் தான் தன்னை சுற்றி ஒருவரையும் அவர் நெருங்க விடவில்லை. அதையும் மீறி அவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு என்ன நடந்தது என்பது ஆண்டவன் மட்டுமே அறிந்த ரகசியம்..

மனோரமா, வடிவுக்கரசி, வினுச்சரகவர்த்தி போன்ற ஒருசிலர் தான் அவரின் இறுதி ஊரவலத்தில் கூட கலந்துகொண்டார்கள். ஆனால் ஒரு காலத்தில் இரவு நேரங்களின் அவரின் வீட்டுகதவை தட்டாத கைகள் மிகவும் குறைவு.



இப்படி நடிக்க வந்தவரை...???



இப்படி மாற்றியது யார் குற்றம்..??

ஒரு கவர்ச்சி நடிகை என்பதையும் தாண்டி, அவருக்குள் ஒரு மனித நேய முகம் இருந்ததை அவரின் ஒரே பதில் உலகிற்கு சொல்லியது. ஆனால் அவரின் உடல் கவர்ச்சியை தாண்டி எதையும் சிந்திக்க அவரின் ரசிகர்கள் தயாரில்லை. "அது நடிக்க வராவிட்டால் நான் ஒரு நக்சல் ஆகியிருப்பேன் என்று ஒரு பேட்டியில் சொன்னது"
ஒருவேளை இந்த பதிலிற்கு பின்னிருந்த வேதனைகளையும் திரையுலகமும், ரசிகனும் புரிந்து கொண்டிருந்தால் அவர் ஒருவேளை இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்திருக்கலாம். ஒரு கௌரவமான மனுசியாக..!!

இப்போது சொல்லுங்கள் சிலுக்குவின் வாழ்வையொட்டி தயாராகும் படத்திற்கு கெட்டபடம் என்று பெயர் வைக்கலாமா..?!!இந்த சமூகத்தால் கெட்டு போனவளின் படம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்

Thursday, March 10, 2011

ஹர்பஜன் சிங்கும் மன்மோகன் சிங்கும்

என்னைய்யா இது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடறேன்னு பார்கறீங்களா...மேல படிங்க விஷயமிருக்கு. எவ்வளவோ பார்த்துட்டோம் இதையும் பார்த்திடுவோம்.

காரணம் ஓன்று - இவர்கள் இரண்டுபேருமே இன்றைய நிலையில் இருக்கும் இடத்திற்கு பாரமாகதான் தான் இருக்கிறார்கள். ஆனால் வெளியேறவும் விருப்பம் இல்லை.

காரணம் இரண்டு - ஒருவர் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர், ஒருவர் மகா மௌனம். தன் துறை சம்பத்தப்பட்ட தானாலும் சரி அடுத்தவர் துறைஎன்றாலும் சரி முடிவெடுக்க கூடியதில் ஆமை வேகம்.

காரணம் மூன்று - ஒருவர் தோனியின் தயவில் வாழ்பவர் மற்றொருவர் சோனியின் தயவில் சாரி சோனியாவின் தயவில்.



காரணம் நான்கு - ஆடிக்கொரு முறை விஸ்வரூபம் எடுப்பார் விளையாட்டுக்காரர். நீதிமன்றம் சவுக்கெடுத்தால் தான் உண்மையை போட்டுடைப்பார் அரசியல்காரர்

காரணம் ஐந்து - ஒருவர் சுழலுக்கு தலைமை வகிப்பவர் மற்றவர் ஊழலுக்கு தலைமை.

காரணம் ஆறு - சக வீரரை கன்னத்தில் அறைந்தவர். எல்லோருக்கும் கன்னத்தை மட்டுமல்ல முதுகையும் காட்டுபவர்.

காரணம் ஏழு - விமர்சனம் எழும்போதெல்லாம் வெகுண்டு எழுவார், அப்போது மட்டும் இவரின் பேட்டும் பேசும், கை விரல்களும் பேசும் பஜ்ஜிக்கு. என்னை விட்டாபோதும் நான் விளையாட்டுக்கு இல்லை என்பவர் இரண்டாமவர்.

காரணம் எட்டு - உலக கோப்பை பெற்று தருவோம் என்பது இவரின் கனவு. கருப்பு பணத்தை கொண்டுவருவோம் என்பது அவரின் கனவு.

ஒண்ணுமே இல்லைதா விஷயத்தை யோசிச்ச கூட லட்டு லட்டாய் எட்டு விஷயம் கிடைத்து விட்டது. நீங்களும் யோசிங்க ஏதாவது கிடைக்கும்

Tuesday, March 8, 2011

டெல்லியில் கிண்டப்பட்ட இருட்டுக்கடை அல்வா

அவசர அவசரமாக ராஜினாமா கடிதத்தை தூக்கிக்கொண்டு டெல்லி சென்ற மந்திரிகள் வெற்றி கொடி நாட்டிவிட்ட மகிழ்ச்சியில் வாய் நிறைய புன்னகையோடும் கைநிறைய அல்வாவோடும் வந்து கொண்டிருகிறார்கள். தமிழக மக்களுக்கும் குறிப்பாக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அல்வா பொட்டனங்கள் விரைந்து வந்து கொண்டிருக்கிறது.



வேண்டா விருந்தாளியாக இருக்க எங்களுக்கு விருப்பமில்லை, காங்கிரஸ் எங்கள் கூட்டணியை விரும்பவில்லை என்று தி மு காவும், விட்டது ஏழரை நாட்டு சனி என்று இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரசாரும் முகத்தை எங்கே கொண்டு வைப்பார்கள் என்று தெரியவில்லை. இதெல்லாம் ஒரு பொழப்பு என்று சத்தம் வர்ற பக்கமெல்லாம் சிரிக்கிறான் தமிழன். குலாம் நபி சாரின் கடைசி வார்த்தை தான் உலக மகா காமெடி...இந்த கூட்டணி 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுமாம்.

இந்த நாடகத்தை இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு, சவத்தை கூட விட்டு வைக்காமல் வன்புணர்ச்சி செய்த சிங்கலனையும், அவனுக்கு துணை போன மத்திய அரசையும் கண்டித்து நடத்தியிருந்தால் காங்கிரஸ் கூட்டணிக்காக கைகட்டி காத்திருக்க தேவை இல்லையே இன்று. தலை நிமிர்ந்து தனித்து நிற்கலாமே அய்யா. தமிழன் மானத்தோடு கைகோர்த்திருப்பன் உங்களோடு. மானம் விட்டு, ஆடிய ஆட்டத்திற்கெல்லாம் ஆடி 60 ஆண்டு கால அரசியல் வாழ்கையை இன்று அஸ்தமித்து போகும் நிலைக்கு ஆளாகிருக்கவேண்டாம்.

இருட்டடிப்பு செய்யப்பட்ட தயாநிதி மாறன், டெல்லி பக்கம் தலைவைத்து படுக்கவே அஞ்சும் அழகிரி போன்றோர் அடித்து பிடித்து கூட்டணியில் காங்கிரசை இடம் பெற செய்ய பேச்சு நடத்தபோகிறார்கள். எங்கே ஒரு 30 தொகுதி கூட வெற்றிபெறாமல் போய்விடுமோ என்றஞ்சி ஓடினார்கள் என்றா நினைக்கிறீர்கள் இல்லை ஒருவேளை கூட்டணி நிரந்தராமாக முறிந்தால் குடும்பமே திகாருக்கும் சென்னைக்கும் அலையவேண்டி வருமோ என்றஞ்சி ஓடுகிறார்கள். சி பி ஐ கொடுத்த 63 பேர் பட்டியலில் விசாரணைக்கு உட்படவேண்டியவர்கள் தி மு காவில் இன்னமும் இருக்கிறார்கள். அந்த பயம் தான். என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள் காங்கிரஸ் கேட்பதும் 63 , சி பி ஐ விசாரணைக்கு அனுமதி கேட்பதும் 63 .

அடுத்த ஜோக் நமது பிரதமர் வாயிலிருந்து பொன் எழுத்துகளாக உதிர்ந்திருக்கிறது. தாமஸ் மீதான ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பது அவருக்கு தெரியாதாம். அச்சாபீஸ் குமாஸ்தா ரேஞ்சிற்கு தவறு நடந்துவிட்டது, தவறுக்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன் என்கிறார். தாமசை அந்த பொறுப்பிற்கு நியமித்ததில் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை கண்டுகொள்ளாமல் செய்வதும் ஓன்று தான். ஆனால் அதற்குள் காட்சிகள் மாறிவிட்டன. அவரை நியமிப்பதற்கு முன்னாள் சுஷ்மா சுவராஜ் ஆட்சேபம் தெரிவிக்கும் போதெல்லாம் பிரதமர் எந்த உலகில் இருந்தார் என்று தெரியவில்லை. உச்ச நீதிமன்றம் கேள்வி கேக்கும் வரை மௌனம் காத்துவிட்டு இப்போது எனக்கு தெரியவில்லை என்பதெல்லாம் உங்கள் பதவிக்கு அழகில்லை. வேற என்னத்த சொல்றது..

Saturday, March 5, 2011

தி மு க - காங்கிரஸ் கூட்டணி முறிவு - கேப்டன் உஷார்..

திடுக்கிடும் திருப்பங்கள் தமிழக அரசியலில் அரங்கேறி வருகிறது. சற்று முந்தைய தகவலின் படி தி மு க மத்திய அரசில் இருந்து விலகி விட்டது. பிரச்சனைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு என்று தீர்மானம் போட்டிருகிறார்கள். அனேகமாக கூட்டணி முறிந்து விட்டதாகவே தெரிகிறது. இனிமேலும் காங்கிரஸ் இரங்கி வந்தால் அது அத்தனை ஆரோக்கியமானதாக காங்கிரசிற்கு இருக்காது. எனவே அ தி மு க கூட்டணியின் வெற்றி கிட்டதட்ட உறுதி படுத்தபட்டுவிட்டதாகவே தெரிகிறது.

அதிக தொகுதிகளை பெற வேண்டும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் சின்ன கட்சிகளை வளைத்து போட்டு ஆட்சியை பிடித்து விடாலாம் என்று குருட்டு கனவு வெறும் கனவாகவே களைந்து போய்விட்டது. என்ன செய்ய போகிறது காங்கிரஸ் தனித்து போட்டியா..பெரும்பாலான கட்சிகள் கூட்டணியை உறுதி செய்து விட்ட நிலையில் மூன்றாம் அணிக்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. கலைஞர் அவசர அவசரமாக பா ம காவிற்கு சீட்டு ஒதுக்கி தங்கள் கூட்டணியில் சேர்த்து கொண்டதன் காரணம் இப்போது புரிகிறது.

ஆட்சியில் பங்கு கேட்டவர்கள் உள்ளதும் போச்சுடா..நொள்ள கண்ணா நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். வாய்சொல் வீரர்கள் இனி என்ன செய்வார்கள். தங்களின் பலத்தை குறித்து தப்பு கணக்கு போட்டுவிட்ட இளைஞர் காங்கிரசார் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிப்பார்களா...இல்லை இருக்கவே இருக்கிறது தங்களின் பரம எதிரி பா ஜா க அதனோடு கூட்டு சேருவார்களா..அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..

இரண்டு நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது இன்று. ஓன்று அ தி மு காவின் வெற்றி உருதிபடுத்தபட்டிருக்கிறது. இரண்டு ஆ. ராசாவின் ஊழல் விசாரணை விஸ்வரூபமெடுக்க போகிறது. தாங்கள் தோற்றாலும் பரவாயில்லை இனி தி மு காவின் ஆட்சி தமிழகத்தில் இல்லை என்பது தான் இனி காங்கிரசார் எடுக்க போகும் நிலையாக இருக்கும். தேர்தல் முடிவுக்கு பிறகு அ தி மு க - தே மு தி காவில் உரசல் ஏற்பட்டால் கூட அ தி மு காவோடு காங்கிரஸ் கை கோர்க்கும் நிலை வரலாம். கேப்டன் உசாராக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

Friday, March 4, 2011

மே - 15 ல் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பார் - முக்கிய பிரமுகர் தகவல்

மே - 15 ல் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பார் என்று இன்று அதிகாலை கடற்கரையில் நடை பயிற்சியில் இருந்த ஒரு முக்கிய பிரமுகர் தெரிவித்தார். யார் அவர் என்பது பின்னால் சொல்கிறேன். அவர் சொன்ன இன்னும் சில தகவல்கள் உங்களுக்காக....

தற்போதைய சூழ்நிலையில் அ தி மு காவின் வெற்றி உறுதி படுத்தப்பட்டு விட்டாதகவே தெரிகிறது. 2006 - ல் பெற்ற ஓட்டு சதவிகிதம் படி இவர்களின் ஓங்கி இருப்பதாக தெரிகிறது. இருந்தாலும் இன்று இருக்கும் சமூக சூழ்நிலை, பொருளாதார நிலை, மலைக்க வைத்த ஊழல் புகார்கள், இலங்கை தமிழர்களின் கண்ணீர், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் நசுக்கபடுவது என இந்த கூட்டணி ஓட்டு சதவிகதங்களை இன்னும் கொஞ்சம் அதிகம் பெறுவதற்கும், மாபெரும் வெற்றி பெறுவதற்கும் கூட வாய்ப்பு இருக்கிறது.

அ தி மு க வெற்றி பெற எப்படி தே மு தி க காரணமாக போகிறதோ அதே போல் தி மு க தோல்விக்கு பா ம க காரணமாக போகிறது. அதெல்லாம் என்ன கட்சி என்று இவர்கள் கூட்டணியில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. பக்கா சுயநலவியாதி "ராமதாஸ் அய்யாவின்" அந்திம காலம் நெருங்கி விட்டதாகவே எனக்கு தெரிகிறது. வெட்டி பந்தாவிற்கு மதுக்கடை ஒழிப்போம், வீண் விளம்பரத்திற்கு ஏதோ ஒரு இளிச்சவாய நடிகையையோ, நடிகனையோ பயமுறுத்தி அழவைப்பது, ஆதாயம் பெருமிடம் கட்சியை அடகு வைப்பது என்று இவர்கள் கட்சி நடத்தும் விதம் தமிழக மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு, அவ்வளுவுதான். மற்றபடி தமிழகத்தை இவர்கள் தலை நிமிர வைக்கவேண்டாம், தலை குனிய வைக்காமல் இருந்தால் போதும். இவர்கள் வண்டாவலத்தை வெளியே கொண்டுவர அன்புமணி அமைச்சராக இருந்த காலத்தில் அனுமதி பெற்ற அணைத்து மருத்துவ கல்லூரிகளையும் நோண்டினால் போதும்.

புழுத்து போன ஒரு ரூபாய் அரிசி, உபயோக படவேண்டியவர்களுக்கு உபயோக படாத இலவச தொலைகாட்சி,
திண்ணை கட்ட கூட பத்தாத இலவச வீடு கட்ட உதவி என மக்கள் நல திட்டம் எல்லாவற்றிலும் சொதப்பல். ஆனால் அதே சமயம், செம்மொழி மாநாடு என்ற பெயரில் கொள்ளை, இலவச காப்பிடு என்ற பெயரில் பகல் கொள்ளை, மணல் கொள்ளை, ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் என மக்களை மிரள வைக்கிறது தி மு காவின் கடந்த கால சாதனைகள் . இவர்கள் எப்படி மக்கள் முன்னாள் ஓட்டு கேட்க செல்வார்கள் என தெரியவில்லை.

காங்கிரஸ், ராசாவை வைத்து இன்னுமும் தி மு காவை மிரட்டி கொண்டிருப்பது வெட்டி வேலை. தனித்து போட்டியிட மூத்த தலைவர்கள் கிட்டத்தட்ட முடிவு எடுத்துவிட்ட மாதிரி தான் தெரிகிறது. தனித்து விடபட்டால் தி மு க கூட ஒரு கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை பெற வாய்ப்பிருகிறது. ஆனால் காங்கிரசின் நிலைமை பீகாரையும் விட மோசமாகிவிடும். ஐவர குழுவுக்கு இது தெரியுமா...இளைஞர் காங்கிரசாற்கு முதலில் இதை உணர்த்தவேண்டும். ராகுல் என்ற கவர்ச்சி இங்கும் எடுபடாது. ஆமாம் அப்படி அவர் என்னதான்ய செய்துவிட்டார்..?
இந்தியாவின் தலைஎழுத்தை மற்ற கூடிய ஒரு சக்தி வாய்ந்தவரின் பிள்ளை.. எதிர்கால இந்தியாவின் பிரதமராக வாய்பிருக்க கூடிய ஒரு சில தலைவர்களில் அவரும் ஒருவர்...அப்படி இருந்தும் சும்மா குடிசையில போய் உட்கார்ந்திட்டு கஞ்சி குடிப்பதை விட்டுவிட்டு குடிசைகளே இல்லாத நாடாக்க வழியை யோசிக்க சொல்லுமையா...
எதை செய்தாலும் அப்பாவி மன்மோகன் சிங் போன்றவர்களை பலிகடா ஆக்காமல் தானே முன்னின்று செய்யட்டும்.
அப்பறம் யோசிக்கலாம் தனித்து போட்டியிடுவதை.

சாதிக்கட்சிகளின் பலம் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் சம அளவிலேயே இருக்கிறது. என்னை பொறுத்தவரை சாதி கட்சிகளை ஓன்று விடாமல் கலைத்துவிட வேண்டும் என்பது தான் விருப்பம். சாதியின் பெயரால் ஒதுக்கீடு என்பதே நம்மை நாம் இன்னும் நாகரீகம் பெற்றவர்கள் என்பதை ஒப்புகொள்ள மறுக்கிறது. எல்லோரும் சமம், எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எல்லாவற்றிலும். ஆனால் இந்த ஒழுங்கற்ற ஜனநாயக நாட்டில் இதை எல்லோரும் முன்னெடுத்து செல்ல பல நூற்றண்டுகள் ஆகலாம். அதுவரை இந்த அரசியல்வியாதிகளின் ஆட்டங்களை சகித்து தான் ஆகவேண்டும்.

எனகென்னவோ மே - 15 ல் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பார் என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். அந்த முக்கிய பிரமுகர் வேறு யாருமல்ல அடியேன் தான்.........(ஐயோ..அம்மா..என்னை கொல்றாங்களே...காப்பாத்துங்க...) என்ன நடுநிசியில் கைது ஞாபகம் வருதா....!!!

Wednesday, March 2, 2011

கலைஞரின் ஆச்சர்யமும், ஜெயலலிதாவின் ஆதங்கமும்..

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் திருவிழா குறித்த செய்திகள் வர ஆரம்பித்து சாமான்யனின் பொழுது போக்கிற்கு தினம் தினம் புது புது அறிக்கைகளை தரபோகிறது ஆளும் / எதிர் கட்சிகள். பெட்ரோல் விலை குறைப்பு என்று கலைஞர் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். பாவம் அவருக்கு ஆட்சி முடிவிலாவது மக்கள் படும் துயரங்கள் கண்ணில் பட்டதே என்று ஒருவகையில் நாம் ஆசுவாசபட்டுகொள்வோம்.

பா ம க - தி மு க கூட்டணி சந்தர்ப்பவாதத்தின் உச்சம் என்று ஒவ்வொரு தமிழனும் தெரிந்தே இருக்கிறான் என்பதை கலைஞர் மறந்து விட்டார். சு.சாமி கட்சி போல் இந்த தேர்தலுக்கு பிறகு பா ம கவும் தனி நபர் கட்சியானால் ஆச்சர்யபடுவதற்கொன்றுமில்லை. அவர்கள் தனிமை படுத்தப்பட வேண்டும், வெறும் வாய்சவடால் பேர்வழிகளால் மக்களுகென்று எதுவும் நடக்கபோவதில்லை. சுகாதாரதுறை அமைச்சராக இருந்தபோது மதுவை / சிகரெட்டை தடை செய்ய முயற்சி எடுக்காமல் இப்போது கூப்பாடு போடுவது இவர்களின் கையாலாகத்தனம் தான். சாதிவாரி கணக்கெடுப்பு எந்த வகையில் மக்களுக்கு உதவுமென்று தெரியவில்லை. இதுவே பெரிய சாதனையென்று மார்தட்டி கொள்கிறார்கள்.

அ தி மு க மேல் பெரிய எதிர்பார்ப்பு விழுந்திருக்கிறது. இம்முறை இவர்கள் வெல்ல நிறைய வாய்ப்புகள், காரணங்கள் இருக்கின்றன. அதை சரியான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்க்க முடிந்தாலே போதும். தே மு தி க கூட்டணி ஒருவகையில் இவர்களுக்கு பலம் தான். மக்கள் தீர்மானம் என்ன என்பது போக போக தான் தெரியும். கலைஞரின் தேர்தல் கால அறிக்கைகள் எப்போதுமே மிக கவர்ச்சியானவை. இந்திய அளவில் மிக பிரசித்தி பெற்றவை. இவர் என்ன சொல்ல / செய்ய போகிறார் என்பது தான் தற்போது அம்மாவை தூக்கம் தொலைக்க வைக்கிறது.

இவர்கள் சொல்லுவது இருக்கட்டும் நாம் என்ன நினைக்கிறோம், எதிர்பார்க்கிறோம் என்பது இவர்களுக்கு தெரியுமா..யாராவது இதுவரை இவர்களுக்கு நமது தேவைகளை சொல்லி இருக்கிறார்களா..? அதை தேர்தல் வாக்குறுதிகளாக பெற்றிருக்கிறோமா..? பெற்றதை இவர்கள் நிறைவேற்றி இருகிறார்களா..? நிறைவேறாத தேர்தல் அறிக்கைகளுக்காக, தேர்தல் ஆணையமோ, நீதிமன்றங்களோ நடவடிக்கை எடுக்க முடியுமா..? இந்த அமைப்புகள் அரசியல் வாதிகளின் சட்டையை பிடித்து கேள்வி கேட்க என்ன செய்ய வேண்டும்..? நிறைவேற்றபடாத தேர்தல் அறிக்கைகளுக்கு பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியுமா..? பதில் தெரியாத / கிடைக்காத எத்தனையோ கேள்விகள் தோன்றும் நேரம் இது தான். தேர்தல் முடிந்ததும் வழக்கம் போல மறந்து விடுவோம்.. யாருக்காவது விடை தெரிந்தால் சொல்லுங்க சார்...!! மச்சான் நீ கேளேன்..கதை தானா..?

இந்த லட்சணத்தில் தேர்தல் முடிவு வேறு ஒரு மாதம் தள்ளிதானாம். அப்பறம் எதுக்கு சாமி ஓட்டு இயந்திரம். பட்டனை தட்டினால் முடிவு தெரியும் என்கிறார்கள். பட்டனை தட்ட ஒரு மாதமா. நீ ஆணியே புடுங்க வேணாம் போ..!! இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கலைஞர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பது தான். தொட்டிலையும் ஆட்டிவிட்டு புள்ளையையும் கிள்றது இது தானா...எத்தனை கள்ளவோட்டோ...எத்தனை ஓட்டு இயந்திரங்கள் கொள்ளை போகுமோ..பெரியாருக்கே வெளிச்சம்.

13 - பேயை விரட்டும் நம்பராம். கேப்டன் சொல்கிறார். பேயை ஆட்சியை விட்டு விரட்டுங்க...தப்பில்லை ஆனால் அது உங்கள் மனசில இடம் தராம பார்த்துகங்க.

வரப்போகும் ஜூன் மாதம் மீண்டும் ஒரு நாள் நள்ளிரவில் "என்னை கொல்றங்கோ..காப்பாத்துங்கோ.."என்ற அலறல் எல்லா டிவி சேனல்களிலும் ஒளிபரப்பபட்டாலும் படும். கெடுவான் கேடு நினைப்பான்...!!

இரண்டு வருடங்களாக நடந்து வரும் ஒரு வழக்கில் முக்கிய ஆவணங்கள் தொலைந்து போய்விட்டதாக சி பி ஐ தெரிவித்திருப்பது மகா கேவலம். ராசா மிக விரைவில் வெளியே வந்து தேர்தல் பிரச்சாரம் செய்வதும் நடக்கும். கூட்டணி உறுதியாகிவிட்டால் போதும் காங்கிரஸ் பிடி தளர்ந்து விடும். சி பி ஐ என்பது என்ன..ஆளுங்கட்சியின் அல்லக்கை தானே..!! இந்த கலோபரங்களுகிடையில் ஆதர்ஷ் ஊழலை சுத்தமாக மறக்கடித்து விட்டது தான் காங்கிரசின் தந்திரம். நாம என்ன தான் தலைகீழ நின்னாலும் இந்த தொகையை மிஞ்ச முடியாதே... குழந்தையா குட்டியா..தஞ்சாவூர் வாரிசுகள் ஒன்னு சேர்ந்தாலும் கஷ்டம் தான் என்பது தான் அம்மாவின் எதிர்கால ஆதங்கம்.

அமாம் ஒரு சந்தேகம்...? ஏன் இந்த நாசமா போன அரசு கல்லூரி மாணவர்கள் மட்டும் பஸ் டே கொண்டாடுகிறார்கள். தனியார் கலை / பொறியியல் கலோரிகள் தங்கள் மாணவர்களுக்கென்று பிரத்தியோகமான பஸ்கள் வைத்திருந்தும் அவர்கள் எல்லாம் பஸ் டே கொண்டாடுவதில்லையே...!!? ஓஹோ...வடிவேல் கணக்கு போல...இது உங்கள் சொத்து...!!

அமைதிக்கும் குளுமைக்கும் பெயர் பெற்ற கோவை நகரம் வர வர காமகொடூரங்களின் கூடாரமாகிவிட்டது. 7 வயதே நிரம்பிய பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு கற்பழிக்கபட்டிருக்கிறாள். ஆள்பவர்களை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் சிறப்பாக தான் இருக்கிறது. எப்படி இந்த அம்மா ஆட்சியில் மட்டும் ரவுடியிசம் கட்டுபடுத்தபடுகிறது என்பது கலைஞரின் நிரந்தர ஆச்சர்யங்களுள் ஓன்று. அதுக்கு காவல் துறையை தன பொறுப்பில் வைத்திருந்தால் மட்டும் போதாது. அவர்களை கொஞ்சம் வேலை செய்ய விடவேண்டும் அய்யா. கடவுளே...உலகம் எப்போ அழியும்...!!?

Tuesday, February 15, 2011

தமிழ் இணையதள நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்..!

அண்மைய காலமாக வெளிவரும் பதிவுகளில் சில குறிப்பாக வாசகர் பரிந்துரையில் பதிவர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இடம்பெறும் பதிவுகள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள் தான். பல உதாரணங்களை என்னால் காட்ட முடியும். பரிந்துரைக்க வேண்டிய பதிவு என்பதற்கு நீங்கள் என்ன அளவுகோல் வைத்திருகிறீர்கள்.

1 . பயனுள்ள தகவல் என்றடிபடையிலா..?
2 . தெரிந்துகொள்ள வேண்டிய நாட்டு நடப்பு என்ற வகையிலா..?
3 . நகைசுவை பகுதி என்ற முறையிலா..?
4 . மனதை தொடும் உரைநடைக்ககவா..?

எந்த தகுதியும் இல்லாத பதிவுகள் முன்னே நிற்க, பல நல்ல விஷயங்கள் படிப்பதற்கு கிடைப்பதில்லை. நல்ல பதிவு என்பது பிரபல பதிவரிடம் இருந்து தான் வரவேண்டும் என்பதில்லை. உங்களின் உணர்வுகளை தொடும் எந்த பதிவும் நல்ல பதிவு தான். அவற்றை புதிய பதிவர்களாலும் தரமுடியும். முன்னுரிமை என்பது அன்றைய நிகழ்வுகளின் அடிப்படையில் அமைய வேண்டும். குறைந்தபட்சம் நடிகைகளின் அந்தரங்ககளை நோண்டும் பதிவுகளை தவிருங்கள்.

பிரபல பதிவர்களாகிவிட வேண்டும் என்ற ஆக்கமும் வேகமும் இருக்க வேண்டியது தான். அதற்காக பிரபல பதிவர்களை கலாய்ப்பது, அரசியல் தலைவர்களை குறைந்தபட்சம் மரியாதை கூட இல்லாமல் விமர்சனம் செய்வது, சம்பந்தமே இல்லாத தலைப்புகளை கொடுத்து ஒன்றுக்கும் உதவாத பதிவுகளை தருவது, பிரபல பதிவராவது எப்படி என்று குறுக்கு வழிகளை புதிய பதிவர்களுக்கும் அறிமுகபடுத்தி அவர்களின் எழுத்தார்வத்தை முளையிலேய அளித்து அவர்களையும் உப்புமா பதிவர்களக்கிவிடுவது போன்றவை தொடருமானால் விரைவில் தமிழ்மணம், Indi, தமிழ் பெஸ்ட் போன்ற இணையதளங்கள் வெறும் குப்பை தொட்டியாகதான் காட்சி தரும். வெறும் ஓட்டு போடுவதற்காக மட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள ப்ளாக்குகள் எத்தனை என்று கணகெடுத்து பாருங்கள். உண்மை புரியும்.

மிகபெரும் வரவேற்ப்பை பெரும் என்று மாங்கு மாங்கென்று எழுதிய பதிவிற்கு ஒரு பின்னூட்டம் கூட வருவதில்லை. நடிகைகளின் பெயரில் வரும் பதிவுகள் ஓட்டுகளை அள்ளுகின்றன. அவர்களின் உள்ளாடைகளை பற்றிய ஒரு பதிவை கூட வளைத்து வளைத்து ஓட்டை போட்டு பிரபலமாக்கிவிட்டார்கள் இந்த பதிவர்கள். கர்மம்.. கர்மம்.. என்ன கொடுமை சார்...இது..? தமிழ் இணையதளம் வெறும் குப்பை கூடமாக மாறிவிடக்கூடாது சார். இணையதளத்தை உபயோகபடுத்துபவர்களால் ஒரு நாட்டின் அரசாங்கமே மாறிகொண்டிருக்கும் நிலையில் வெறும் உப்புமா பதிவுகளுக்கு ஆதரவு கொடுத்து ஒரு சில நல்ல பதிவுகளை புறக்கணிக்காதிர்கள்.

ஓட்டுகளுக்காக மட்டும் ஒரு இரண்டு அல்லது மூன்று ப்ளாக்குகளை தயாரித்து கொள்ளுங்கள். உங்கள் பதிவிற்கு நீங்களே ஓட்டும், பின்னூட்டமும் இட்டு கொள்ளுங்கள் என்று ஒரு பிரபல பதிவர் எனக்கு ஆலோசனை சொன்னார். இப்படிதான் பெரும்பாலும் நடக்கிறது என்றும் ஒரு சில ஆதாரங்களை காட்டினார். வெட்ககேடு சார்..இதென்ன சாகித்ய அகடமி விருதுக்கான தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகளா என்ன...? எதற்கு இத்தனை பித்தலாட்டம்..?

வாசகர் பரிந்துரை என்பதை மாற்றி இனிமேல் நிர்வாகிகளின் பரிந்துரை என்று இருக்கவேண்டும். உங்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகள் தரமானதாக இருக்கும் என்று நம்புகிறோம். அதே போல் ஒரு சில பிரபல பதிவர்கள் தங்களுக்குள் ஒரு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு வெளிவர மறுக்கிறார்கள். நல்ல பதிவுகளை உங்களை போன்றவர்கள் பாரபட்சமில்லாமல் படித்து புதிய பதிவர்களை உற்சாகபடுத்தவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

Friday, February 11, 2011

காதலிகளுக்கும் காதலிகளை "பெற்றவர்களுக்கும்"

காதல் தினத்தன்று இந்த பதிவு வருவது மிக யதேச்சையானது தான். ஆனால் மிக பொருத்தமானதும் கூட. நீங்கள் ஒரு இளம்பெண்குழந்தைக்கு தந்தையா...? நீங்கள் ஒரு காதலரா..? மேற்கொண்டு படியுங்கள். நீங்கள் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

என் குடும்ப நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் இந்த பதிவை எழுத தூண்டியது. பெற்றோர்களே ஜாக்கிரதை என்றும், பெண்குழந்தைகளே உஷார் என்றும் காத்த தோன்றினாலும் என்ன செய்ய இது இங்கே தினம் தினம் அரங்கேறும் ஒரு சோகம். காலத்தின் மறுக்க முடியாத யதார்த்தம். நாகரீக மோகத்திற்கு நாம் கொடுத்துகொண்டிருக்கும் விலை.

18 வயது பெண் குழந்தை. பார்த்து பார்த்து பெற்றோராலும், உறவினர்களாலும் கொண்டடி வளர்க்கப்பட்ட குழந்தை இன்று ஒரு வாலிபனோடு ஓடி போய்விட்டாள். பெற்றவர்களை விட, உறவுகளை விட, படிப்பை விட அவளுக்கு காதல் பெரிதாகி போன காரணம் என்ன என்று புரியாமல் நடைபிணமாக போய்விட்டனர் பெற்றோர்கள். அவர்களுக்கு தெரியாது இத்தனைக்கும் காரணம் அவர்களின் வளர்ப்பும் தானென்று. எத்தனை சமாதானம் சொன்னாலும், காரண காரியங்களை அடுக்கினாலும் நடந்தது நடந்தது தான். அவள் திரும்பி வர போவததுமில்லை. வர விரும்பவுமில்லை. ஆனால் அவர்களின் இந்த அனுபவம் கோடான கோடி பெற்றோருக்கு தெரிய வேண்டும்...இளம்பெண்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காகவே இந்த பதிவு.

இந்த அப்பனுகளே இப்படித்தாண்ட..எப்ப பார்த்தாலும் நை நை நைன்னு...!!
பெரிசு தொல்லை தாங்கலை...!!
உனக்கென்ன தெரியும் இதைபத்தியெல்லாம்...

இது ஒவ்வொரு வீட்டிலும் தினம் தினம் கேட்கும் வார்தைகள் தான். கல்லூரி போகும் பெண்ணோ, பையனோ இருந்தால் கண்டிப்பாக ஏதோ ஒரு ரூபத்தில் இந்த வசனங்கள் கேட்கும். தேவையற்ற கட்டுப்படும் சரி வரம்பு மீறிய சுதந்திரமும் சரி தவறான வளர்ப்பு தான். அளவுக்கதிகமான செல்லம், கேட்கும் போதெல்லாம் செலவிற்கு பணம் இவையெல்லாம் உங்கள் மகனோ மகளோ தவறான வழிக்கு தள்ளபடுவதர்க்கு போதுமான சூழ்நிலைகளை நீங்களே ஏற்படுத்திகொடுப்பதற்க்கு சமம்.

அவள் பிறந்ததிலிருந்தே செல்லமாக வளர்க்கப்பட்டவள். பெற்றவர்கள் ஒன்றும் டாட்ட பிர்லா இல்லையென்றாலும் அவள் கேட்டதெல்லாம் கிடைத்தது. தங்களை வருத்தி கொண்டாவது பெற்றோர்கள் அவளின் ஆசையை பூர்த்தி செய்தார்கள். உறவினர்களும் அப்படியே. அவள் ஒரு தேவதையாக வளர்ந்தாள். கல்லூரியில் எத்தனையோ கனவுகளுடன் அடியெடுத்து வைத்த அன்றைய தினம் அவளின் தகப்பனுக்கு அப்படியொரு பூரிப்பு. ஆனால் ஒரு கேடுகெட்ட கிழம், அவளின் பாட்டியின் வார்த்தையில் வந்தது அவளுக்கான சனி.

அவளின் அழகும், பேச்சும் எல்லோருக்கும் பிடிக்கும், அவளை கொத்திக்கொண்டு போக எத்தனையோ சொந்தங்கள் தயாராக இருந்தன. தன் மகள் வயிற்று பேரனுக்கு தான் அவளை மணமுடித்து தரவேண்டும் என்று பாட்டி உறுதியுடன் இருந்தாள். கல்விகனவுகளோடு இருந்தவள் நெஞ்சில் காதல் கனவுகளை நஞ்சென விதைத்தால் பாட்டி. ஒரு வேலைக்கும் செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி கொண்டு எல்லா கெட்ட பழக்கங்களுக்கும் ஆளான அவனை இவளால் தான் திருத்த முடியும் என்று அந்த பிஞ்சு மனதில் வஞ்சகமாக வாளை சுழற்றினாள். தன்னால் தான் ஒரு இளைஞன் வாழ்வு வளம் பெறுமா...?

யோசித்தாள்...யோசித்தாள்...அவளது வயது அப்படி.
திரைப்படங்கள் அவளை நம்ப வைத்தன...அவள் காதலில் விழுந்தாள்.
நட்புகள் அவளை உசுபேற்றின..? அவள் கதாநயகியானாள்..
ஊருக்கு பொறுக்கியானவன் அவளுக்கு நண்பனான்..!! அவள் காதலியானாள்

தாயிற்கும் தகப்பனுக்கும் விஷயம் தெரிந்ததும் வானுக்கும் பூமிக்கும் குதித்தார்கள். தன் தாய் தான் எல்லாவற்றிக்கும் காரணம் என்றறிந்து பெற்றவளின் உறவை முறித்தான் தகப்பன். அது அவன் முதல் தவறு. கல்லூரிக்கு தானே கொண்டுபோய் விட்டு கூட்டி வர தொடங்கினான் அது இரண்டாவது தவறு. செலவிற்கு அஞ்சு பைசா கூட தரக்கூடாது என்று கட்டைளையிட்டான். மூன்றாவது தவறு. ஆசை ஆசையாய், பார்த்து பார்த்து மகள் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்றை செய்து விட்டாளே என்ற கவலையில் தண்ணி அடிக்க தொடங்கினான். அது அவனின் பெரும் தவறு.

எந்த மாதிரியான சூழ்நிலையில் பெற்றவர்களுக்கு மகளின் காதல் தெரியவந்தது என்பதை நான் விளக்க விரும்பவில்லை. காரணம் என் நண்பரின் மரியாதை கருதி தான். அவர் நல்லவர். நடுத்தர வர்க்கத்தின் கடினமான உழைப்பாளி, தன் குடும்பத்தின் மேல் உயிரையே வைத்திருந்த ஒரு சராசரி யதார்த்த மனிதர். அவரின் அறிவிற்கும், வளர்ப்பிற்கும் அவர் செய்தது சரி, அவரால் அவ்வளவு தான் சிந்திக்க முடியும். ஆனால் காலம் வேறொரு முடிவை எடுத்திருந்தது அவருக்கு தெரியாமலே போனது.

பெற்றவளின் உறவை முறித்ததால் அவள் வழி உறவுகள் எதிரியாயின. என்ன பொல்லாத தப்பு பண்ணிட்டாள், முறைபையன் தானே..வேற எவனுக்கு கட்டி கொடுத்தாரான்னு பார்த்தறேன். தகப்பனை வீழ்த்த சூழ்ச்சிகள் அரங்கேறின.. முதல் தவறின் பயன்.

காலையும் மாலையும் தந்தை உடன் வருவது திடீரென அவளுக்கு சுமையாயின. நான் இனி தவறு செய்யமாட்டேன் என்னை நம்புங்கள் என்று மகள் கதறியதை தகப்பன் பொருபடுத்தவில்லை. கல்லூரி முடித்து உன்னை நல்லவன் ஒருவனுக்கு மணமுடித்து கொடுப்பது எனது கடமை. இனி என்னோடு தான் நீ வரவேண்டும் என்று சொல்லிவிட்டான். தன் மேல் ஒரு துரும்பு பட்டால் கூட தங்க முடியாத அப்பா, தனக்காக எதையும் செய்யும் அப்பா இன்று தன் மேல் நம்பிக்கை இல்லாமல் கூடவே வருவது அவளுக்கு எதிர்ப்புணர்ச்சியை தூண்டியது. அப்பன் வில்லனாகி போனான். அவனின் இரண்டாவது தவறின் பயன்.

இன்றைய இளைஞர்களுக்கு குறிப்பாக காதலர்களுக்கு பெற்றவர்களை ஏமாற்றவது என்பது ஒன்றும் பெரிய விசயமில்லை. அதை வெகு விமரிசையாக சினிமாக்கள் சொல்லி தந்து விடுகின்றன. அதுவும் தொலைக்காட்சி வழி ஒரு பைசா செலவில்லாமல் வீட்டிற்குள்ளேய..அவள் பொய் சொல்லி கல்லூரி விட்டு வெளிய வந்தாள். காத்திருந்த காதலனுடன் ஊர் சுற்றினாள். தன்னை நம்பாத தகப்பனுக்கு அவளை பொறுத்தவரை இது ஒரு நல்ல பாடம். பாட்டியின் தயவில் அவனிடம் காசு புழங்கியது. அவள் அவனுக்காக செலவழித்தான். அவள் வாழ்க்கையையும். இது தகப்பன் செய்த மூன்றாம் தவறின் விளைவு.

இதுவரை தன் வாழ்வில் முன்மாதிரியான ஒரு தந்தை இன்று எதிரியானார். அவர் ஒன்றும் மது வாசனை அறிந்திராத நல்லவர் இல்லை. எப்போதாவது காதும் காதும் வைத்த மாதிரி குடித்துவிட்டு பிள்ளைகள் உறங்கிய பின் வீட்டிற்கு வருவார். அவர் மனைவிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அவர் மது அருந்துவது. இன்று எல்லாம் மாறிபோயவிட்டது. பகலில் கூட அவர் தண்ணி அடித்துவிட்டு வருவார். ஒரு பத்திரிகை செய்தியோ, தொலைக்கட்சியில் வரும் ஒரு காதல் வசனமோ கூட அவரை உணர்ச்சி வசப்பட வைத்தது. தன் மகள் தன்னை விட்டு பிரிந்து விடுவாளோ, அவளின் எதிர்காலம் இருண்டு என்னாகுமோ.. என்ற கவலையில் கிட்டத்தட்ட மன நோயாளியானர். இந்த மாதிரியான சமயங்களில் எல்லாம் மதுவே அவருக்கு பக்க துணையாக இருந்தது. தன்னை மறந்துவிட குடிப்பார். தன்னை நினைத்தும் குடிப்பார்.

அக்கம் பக்கம் இதுவே பேச்சாகி போக, அவர் எதன் பொருட்டு குடிக்கிறார் என்பது மறந்து அந்த 18 வயது பெண் குழந்தை அப்பனை வெறுக்க தொடங்கியது. அவள் காதலனும் ஒரு குடிகாரன் தான் ஆனால் அவனை மன்னித்து விட தயாரானாள். தன் பொருட்டு அவன் திருந்திவிடுவான் என்று நினைத்தாள். அவனை நம்பினாள். ஆனால் அப்பனை அவள் மன்னிக்க தயாரில்லை. இது மனித மனத்தின் வினோதம். வாழ்வின் சுவராசியமும் இது தான். பிடித்தமானவர்கள் எது செய்தாலும் இனிக்கும்.

ஒரு சாரயக்கடை திண்ணையில் தான் அந்த தேவைதையின் வாழ்க்கையில் புயலை கிளப்பிய செய்தியொன்று அவள் அப்பனின் காதுகளை வந்தடைந்தது. அது அவனோடு எங்கயோ வண்டியில் சென்றதை பார்த்தாய் ஒரு செய்தி. ஊரார் பேசும் அளவிற்கு அவளின் நடத்தை ஆகிவிட்டதே என்ற ஆத்திரத்துடன் தன்னிலை மறந்து குடித்தான். அவள் ரத்தத்தையும் குடித்து விடும் வெறியுடன் வீடு நோக்கி நடந்தான். அவனின் வேகம் கண்டு, கோபம் உணர்ந்து வீட்டிற்கு செய்தி பறந்தது. அவள் அசரவில்லை. தாயார் துடித்தாள். அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கணவனை தடுக்கவும் முடியவில்லை. அவன் அடித்து துவைத்தான். கொன்று விட துடித்தான். அக்கம்பக்கம் தடுத்தது. உறவுகள் அவனை ஆசுவாசபடுத்த வந்தது. வார்த்தைகள் இரைந்தன...நாற்றத்தில் உணவெடுக்கும் காகங்கள் கூட கதை பொத்திக்கொண்டு பறந்தன..வார்த்தைகள் நாறின. காட்சிகள் மாறின. கொல்லைபுறமாக கட்டிய துணியோடு அவள் அவன் வீடு நோக்கி பறந்தாள். அப்பனை காரி உமிழ்ந்தாள்.

போதை தெளிந்ததும் விஷயமறிந்து கதறி துடித்தான். எது நடக்க கூடாது என்று அல்லும் பகலும் தன்னை வருத்தினானோ அது நடந்துவிட்டது. அதுவும் தன்னாலேயே முடிந்து விட்டது தெரிந்து நடைபிணம் ஆனான்.

இது நடந்து ஒரு மாதத்திற்கு பின் தான் நான் அவரை சந்தித்து விஷயமறிந்தேன். இதை நாலு பேருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்க்க்காகதான் இந்த பதிவு. அது மட்டுமல்ல ஒரு தகப்பனாக அவர் மனநிலையை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. நான் ஒரு 3 வயது பெண் குழந்தையின் தகப்பன் என்ற முறையில் இன்னும் ஒரு சில விசயத்தை காதலர்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பம்.



சார் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது...உங்கள் மனைவி உங்களிடம் தான் முதலில் காட்ட சொன்னார் என்று அந்த வெள்ளுடை நர்ஸ் ஒரு ரோஜா குவியலாக கொண்டு வந்து காட்டியபொழுது மணி இரவு பதினொன்று இருபது... அந்த முதல் நிமிடம் என்னும் ஏற்படுத்திய பரவசம் எந்த வார்த்தைகளாலும் கொண்டு நிறைத்து விட முடியாது. வள்ளுவனும் வார்த்தையின்றி திணறும் இடம் அது.



முதல் சிரிப்பு, முதல் வார்த்தை, அந்த பால்மண வாசம், கோடி கொடுத்தாலும் கிடைத்துவிடாத அந்த எச்சிலின் சுவை, சொல்ல ஆயிரம் அனுபவங்கள். அந்த செல்ல குழந்தையின் மல ஜாலங்கள் கூட முகம் சுளிக்க வைத்ததில்லை. பார்த்து பார்த்து அந்த குழந்தையை நாங்கள் வளர்கிறோம். நான் மட்டுமல்ல எல்லா பெற்றோரும் தான். கல்லூரி படிக்கும் போது, ஏன் கல்யாணத்திற்கு முன்பு வரை கூட சில விஷயங்களில் என் பெற்றோரை நான் கடிந்திருக்கிறேன். ஆனால் என்றைக்கு நான் ஒரு தகப்பன் ஆனேனோ, எந்த குழந்தைக்காக என் உயிரை தியாகம் செய்யவும் தயங்க மாட்டேனோ...அப்படித்தானே என் தகப்பனும், தாயும் தன் உதிரம் கொட்டி என்னை வளர்த்திருப்பார்கள். நானாவது ஒரு கௌரவமான வேளையில், நல்ல சம்பளத்தில் இருக்கிறேன். என் தாயும் தகப்பனும் மழையிலும், வெயிலிலும் வியாபாரம் செய்தல்லவா என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தார்கள் என்று நினைத்த நாள் முதல் என் தகப்பன் எனக்கு தெய்வமாகி போனான். அவர்களை இன்று நினைக்காத நாளில்லை.

காதலிகளே..காதலர்களே.. காதலின் வெற்றி எது..? திருமணமா...? இல்லை. காதலின் வெற்றி என்பது கௌரமான வாழ்க்கை. அதுவும் பெற்றவர்களுடன், உறவுகளுடன், சமூகத்துடன் இணைந்த ஒரு இனிமையான அனுபவம். காதலின் வெற்றி வெறும் உடற்சேர்க்கை மட்டுமல்ல. உங்கள் காதலியை பெற்றவர்களுக்கும் கௌரவத்தை, ஒரு சமூக அந்தஸ்தை கொடுப்பது தான். அவர்களின் இருபது வருட கனவு அந்த பெண் குழந்தை, அதை தட்டி பறிக்கையில் ஏற்படும் பதட்டம் ஒரு சில வேண்டாத சம்பவங்களை ஏற்படுத்திவிடும். அவர்களை புரிந்து கொள்ளுங்கள். உங்களை பக்குவமாய் புரிய வையுங்கள். எல்லாம் சுபமாகும்.

அன்புடன்
எல்லா பெண் குழந்தைகளும் நலமுடன் வாழ மனாதர பிரார்த்திக்கும் ஒரு தகப்பன்.

சச்சினுக்காக உலக கோப்பை தவறு..

உலக கோப்பையை வென்று சச்சினுக்கு அற்பணிப்போம் என கேப்டன் தோணி முதல் ஹர்பஜன் வரை எல்லோரும் மாய்ந்து மாய்ந்து பேட்டி கொடுக்கிறார்கள். இது தவறு, ஒரு நாட்டிற்காக விளையாடும் போது தனி மனிதர் முக்கியமில்லை அது நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க பட வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவை பொறுத்தவரை மக்கள் வேறு சச்சின் வேறு அல்ல. சச்சின் கிரிகெட்டின் கடவளாகதான் வர்ணிக்கபடுகிறார். பார்க்கபடுகிறார். சச்சினுக்காக கோப்பையை வெல்வது என்பது இந்திய மக்களுக்காக வெல்வது போன்றது தான். கோப்பையை வென்று சச்சின் கையில் ஏந்துவதை பார்க்க இந்திய மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். அதை நினைவாக்கும் தகுதி தோனிக்கு உண்டு என்பதும் எங்கள் நம்பிக்கை.



நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

Tuesday, February 8, 2011

ராமதாசும் கங்குலியும்...!!

மீண்டும் ஒரு மக மெகா ஊழல் குறித்து செய்திகள் அடிபடுகிறது. ராசாவிற்கு இப்போது புது தெம்பு வந்திருக்கும். கல்மாடிக்கு வந்தது போல..

அரசியல் நாகரீகம் குறித்து பேச கலைஞருக்கு எந்த அருகதையும் இல்லை. முரசொலி கட்டுரைகளே அதற்க்கு சாட்சி. இப்போதெல்லாம் நிருபர்கள் மீது எரிந்து விழுவது போல் பேசுவது எந்த வகை நாகரீகம் என்று தெரியவில்லை. அம்மையாரை குறித்த விமர்சனங்கள் எல்லாம் எந்த மாதிரி நாகரீகம். இன்றைய தினசரியில் கூட அம்மையாரை "வெத்துவேட்டு" என்று செல்லமாகத்தான் அழைத்திருக்கிறார்

தலித்தியம் பேசுவது என்பது பிராமணர்களை எதிர்ப்பது மட்டும் தானா....? ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருக்கு..?

தாவுவதில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையும் ராமதாசிற்கு அத்துபடி போல...அ தி மு காவிற்கு கெட்ட நேரம் வந்தால் பா ம க கூட்டு சேருவதை தடுக்க முடியாது. கங்குலியும் நம்ம ராமதாஸ் ரேஞ்சிற்கு இறங்கி வந்துவிட்டார். யாரவது கவனிங்கப்பா.. இருந்த இருப்பென்ன...வாழ்ந்த வாழ்க்கையென்ன

சுப்பிரமணியம் சாமி மீது நடவடிக்கை என்பதெல்லாம் சும்மா பேத்தல்..சாமியிடம் இருக்கும் ஆதாரங்கள் அப்படி..

வெளியுறவு துறை அமைச்சராவது ரொம்ப எளிது போல...கண்டனம் தெரிவிக்கவும், வருத்தம் தெரிவிக்கவும் தெரிந்தால் போதும். கிருஷ்ண வேறு என்ன செய்கிறார்.

கூகிள் செய்திகள் - பொழுது போக்கு தலைப்பின் கீழ் வரும் செய்தி - ராசாவிற்க்கு மேலும் இரண்டு நாட்கள் காவல் நீட்டிப்பு - என்னடா கொடுமை சார் இது. கூகுளுக்கு கூட தெரிந்திருகிறது தமிழர்களின் ஒரே பொழுதுபோக்கு ஊழல் விசாரணைகள் தான் என்று.


யோகா என்பது - Its tool of reducing or increasing our body weight. ஒரு இளைஞர்கள் கூட்டத்தில் ஒட்டு கேட்டது. நல்லவேளை பதஞ்சலி இன்று உயிருடன் இல்லை.
யோகா பிறந்த தேசம் இது என்று "சொல்லிகொல்லவே" வெட்கபடுகிறேன்.

அவ்வளவு தான்..மறுபடியும் சந்திப்போமா..வந்தது வந்தீங்க எதாவது சொல்லிட்டு போங்க...

Wednesday, February 2, 2011

புரட்சிக்கு புதிய பெயர் நாம்..!! இணையதள குப்பைகளை உற்பத்தி செய்பவர்கள் மட்டுமல்ல..!

இன்னும் பலரின் கவனத்தை சென்றடைய வேண்டும் என்பதால் மறுபதிவு செய்கிறேன்

ஒரு அரசின் ஊழலை எதிர்த்து சாமானிய மக்கள் கிளர்ந்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் தான் இப்போது எகிப்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு வித்தியாசமான புரட்சி, ஆளுங்கட்சியின் அராஜகம், பொது சொத்தை கொள்ளையடித்தல், எகோபத்திய அதிகாரம், அதனால் விளையும் வன்முறைகள் என ஒரு காட்டாச்சி தான் நடந்து கொண்டிருந்தது எகிப்தில். கிட்டத்தட்ட நமக்கு இது எதுவும் புதியதல்ல. முனை மழுங்கி போன கோடாரியாய் நாமிருக்கிறோம், எகிப்து இளைஞர்கள் துணிந்து விட்டார்கள் எதிரிகளின் மீது கூர்தீட்டி கொள்ள. அவ்வளவு தான் வித்தியாசம்.
தலைவர்கள் இல்லை. உணர்ச்சி பொங்கும் வார்த்தை ஜாலங்கள் இல்லை. கட்சி இல்லை, கொடியும் இல்லை ஆனாலும் அங்கு வெடித்திருக்கும் புரட்சி நம் எல்லோருக்கும் பொதுவானது. என்ன புரியவில்லையா...நண்பர்களே ஆம் இது நமக்கான ஒரு முன்னுதாரணம்.

இலக்கியம் என்ற பெயரில் வெத்து குப்பைகளை உற்பத்தி செய்பவர்கள் என்று தான் பதிவர்களுக்கு இங்கு செல்ல பெயருண்டு. இதோ இப்போது எகிப்தில் கிளர்ந்திருக்கும் இந்த புரட்சிக்கு, எரியும் தீயில் எண்ணையாக இருப்பது எது தெரியுமா Facebook, Twitter மற்றும் இணையதள ப்ளாகுகள் தான். முகம் தெரியாத பலரின் உணர்சிகளுக்கு வடிகாலாக இருந்த இணையதளங்கள் இவர்களை ஒருங்கிணைத்து போராடவும் வைத்திருக்கிறது. வழக்கம் போல் முரட்டு அரசாங்கம் மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல், மக்கள் புரட்சியை, கலவரம் என்ற பெயரில் வன்முறையாலும் கொடூர அடக்கு முறையாலும் தண்டிக்க நினைக்கிறது. அவர்கள் முதலாவதாக செய்தது இணையதள சேவை மற்றும் தொலை தொடர்பு சேவைகளை முடக்கியது தான். மக்களை இணைக்கும் இவற்றை முடக்கிவிட்டால் புரட்சி செயலிழந்து போகும் என்று நினைத்தார்கள். ஆனால் அது காலம் கடந்து விட்ட செயல் என்று அவர்களுக்கு புரியவில்லை. இணையதளத்தால் இணைத்தவர்கள் இதயத்தாலும் இணைந்தவர்கள் என்று அரசு இப்போது தான் புரிந்துகொண்டிருக்கிறது.

முபாரக் ஆட்சியை விட்டு விலக சம்மதித்து விட்டதாக தகவல்கள் வருகிறது.

இதில் நமக்கான செய்தியும் இருக்கிறது நண்பர்களே...மாறி மாறி ஆட்சி கட்டிலில் ஏறியவர்கள் செய்யும் ஊழல்களை கண்டும் காணாமல் இருப்பதால் தான் எவர் வந்தாலும் அவர்களின் கொள்ளையடிக்கும் கொள்கைகள் மட்டும் மாறவில்லை. ஆட்சியாளர்களின் இவ்வளவு அட்டுழியங்களுக்கு மத்தியிலும் நாம் வளர்வதற்கு காரணம். இந்தியாவின் இயற்கை வளம், மக்கள் வளம், இவர்களை எதிர்த்து ஒவ்வொரு இந்தியனும் போரட்ட நினைத்தாலும் பயம் நம்மை தடுக்கிறது. ஒருவன் வீதியில் நின்றால் பயம் வரும் ஒர்ரயிரம் பேர் திரண்டு வந்தால்...??? வெள்ளையர்களின் தலைகளை பரங்கி காய்களாய் சீவியவன் நாம் தான் என்பது அவனக்கு புரிந்தால் இங்கும் ஒரு புரட்சி சாத்தியம் தான்.

இந்த புரட்சிக்கு எந்த தலைவனும் தேவை இல்லை. எந்த அரசியல் கட்சியும் தேவை இல்லை. நாம் யார், நம் சக்தி என்ன என்பதை புரிந்து கொண்டால் போதும். நண்பர்களே, நம் எல்லா நண்பர்களுக்கும் இப்பதிவு சென்றடைய வேண்டும்...உங்களின் ஓட்டையும் கருத்தையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...