Saturday, March 5, 2011

தி மு க - காங்கிரஸ் கூட்டணி முறிவு - கேப்டன் உஷார்..

திடுக்கிடும் திருப்பங்கள் தமிழக அரசியலில் அரங்கேறி வருகிறது. சற்று முந்தைய தகவலின் படி தி மு க மத்திய அரசில் இருந்து விலகி விட்டது. பிரச்சனைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு என்று தீர்மானம் போட்டிருகிறார்கள். அனேகமாக கூட்டணி முறிந்து விட்டதாகவே தெரிகிறது. இனிமேலும் காங்கிரஸ் இரங்கி வந்தால் அது அத்தனை ஆரோக்கியமானதாக காங்கிரசிற்கு இருக்காது. எனவே அ தி மு க கூட்டணியின் வெற்றி கிட்டதட்ட உறுதி படுத்தபட்டுவிட்டதாகவே தெரிகிறது.

அதிக தொகுதிகளை பெற வேண்டும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் சின்ன கட்சிகளை வளைத்து போட்டு ஆட்சியை பிடித்து விடாலாம் என்று குருட்டு கனவு வெறும் கனவாகவே களைந்து போய்விட்டது. என்ன செய்ய போகிறது காங்கிரஸ் தனித்து போட்டியா..பெரும்பாலான கட்சிகள் கூட்டணியை உறுதி செய்து விட்ட நிலையில் மூன்றாம் அணிக்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. கலைஞர் அவசர அவசரமாக பா ம காவிற்கு சீட்டு ஒதுக்கி தங்கள் கூட்டணியில் சேர்த்து கொண்டதன் காரணம் இப்போது புரிகிறது.

ஆட்சியில் பங்கு கேட்டவர்கள் உள்ளதும் போச்சுடா..நொள்ள கண்ணா நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். வாய்சொல் வீரர்கள் இனி என்ன செய்வார்கள். தங்களின் பலத்தை குறித்து தப்பு கணக்கு போட்டுவிட்ட இளைஞர் காங்கிரசார் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிப்பார்களா...இல்லை இருக்கவே இருக்கிறது தங்களின் பரம எதிரி பா ஜா க அதனோடு கூட்டு சேருவார்களா..அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..

இரண்டு நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது இன்று. ஓன்று அ தி மு காவின் வெற்றி உருதிபடுத்தபட்டிருக்கிறது. இரண்டு ஆ. ராசாவின் ஊழல் விசாரணை விஸ்வரூபமெடுக்க போகிறது. தாங்கள் தோற்றாலும் பரவாயில்லை இனி தி மு காவின் ஆட்சி தமிழகத்தில் இல்லை என்பது தான் இனி காங்கிரசார் எடுக்க போகும் நிலையாக இருக்கும். தேர்தல் முடிவுக்கு பிறகு அ தி மு க - தே மு தி காவில் உரசல் ஏற்பட்டால் கூட அ தி மு காவோடு காங்கிரஸ் கை கோர்க்கும் நிலை வரலாம். கேப்டன் உசாராக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

9 comments:

 1. சகோதரம் அரசியல் கதைக்கிற நம்ம வாயே இப்படி நாறினால்.. அவங்க... எப்படி.... சீ வேணாம்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

  ReplyDelete
 2. இன்னும் கொஞ்ச நேரத்துல ஒண்ணு சேர்ந்துடுவாங்க பாருங்க

  ReplyDelete
 3. காங்குரஸ் தி மு க கிட்ட சரண்டர் ஆகும்

  ReplyDelete
 4. காங்கிரஸ் : நான் தான் மாப்பிள்ளை. நடுவிரலிலே மோதிரம் போடு
  திமுக : நான் தான் மாப்பிள்ளை. நடுவிரலிலே மோதிரம் எனக்கே

  தேர்தல் : முஹூர்த்தம் நேரம் ஆச்சி ...ஏப்ரல் 13

  திக : மனமுள்ள தலைவா வெளியே வா முடிவு எடு ....
  திமுக தொண்டன் : இப்படி உசுப்பேத்தி விடுரனே ...இவனுக்கு என்ன இனி அந்தம்மா சேலையே புடிச்சிட்டு நக்கிட்டு போய்டுவன்
  திமுக : காங்கிரஸ்கரா இந்த நடுவிரலே உனக்குத்தான் ...

  திமுக தொண்டன் : இப்படி வப்பாட்டி குடும்பம் தலைவரி சீரழித்து விட்டதே ...இனி தலைவர் செருப்பா தேய்வேன் கட்டுமரமா இருப்பேன் டயலாக் ரெடி பண்ணவேணும்.

  மக்கள் : ரெண்டுபேரும் சேர்ந்து வந்தாலே நடுவிரல் தான் குடுப்போம் இப்போ ஈசிய வாயிலிலே கொடுத்துடலாம் ஹா ஹா ஹா

  ReplyDelete
 5. //இரண்டு நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது இன்று. ஓன்று அ தி மு காவின் வெற்றி உருதிபடுத்தபட்டிருக்கிறது. இரண்டு ஆ. ராசாவின் ஊழல் விசாரணை விஸ்வரூபமெடுக்க போகிறது. தாங்கள் தோற்றாலும் பரவாயில்லை இனி தி மு காவின் ஆட்சி தமிழகத்தில் இல்லை என்பது தான் இனி காங்கிரசார் எடுக்க போகும் நிலையாக இருக்கும். //

  படிப்பதற்கே எவ்வளவு நல்லா இருக்கு.

  ReplyDelete
 6. ராசாவின் ஊழல் விசாரணை விஸ்வரூபமெடுக்க போகிறது//
  பிரச்சனையே அதுதானே. உலக கோப்பையை விட ரொம்ப சுவாரஸ்யமாக செல்கிறது தமிழக அரசியல் காய் நகர்த்தல்கள். மக்கள் நிர்வாணமாக்குவார்கள் என்று பார்த்தால் அவர்களாகவே நிர்வாணமாக நின்றுவிட்டார்களே.

  ReplyDelete
 7. நன்றி ம தி சுதா
  பாமரர்களுக்கு உதவும் அளவிற்கு நான் வளர்ந்து விடவில்லை. வெறும் கையில் முளம் போடா நான் அரசியல் வாதியும் அல்ல.

  நன்றி ஆர் கே உங்கள் வருகைக்கு
  அது தெரிந்த விஷயம் தானே..முதுகெலும்பை முறித்துகொண்டுதானே அரசியல் பாலபாடம் ஆரம்பிக்கிறது

  ReplyDelete
 8. நன்றி விக்கி
  தி மு காவின் வியூகமே அது தான். தன்மானமிருந்தால் தனித்து நின்று காங்கிரஸ் தேர்தலை சந்திக்கட்டும்

  வாருங்கள் அஹோரி,
  ஆனால் இந்த யூகம் பலிக்கும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. நடந்தால் நன்றாக தான் இருக்கும்

  ReplyDelete
 9. நன்றி கே ஆர்,
  ஒருவேளை மக்கள் நிர்வாணமாக்க மறந்தாலும், நாமே நிர்வாணமாக நின்று விட்டால் அனுதாபமாவது மிஞ்சும் என்பதும் கலைஞரின் ராஜதந்திரங்களில் ஒன்றுதான். புரிகிறதா நண்பரே..

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...