காரணம் ஓன்று - இவர்கள் இரண்டுபேருமே இன்றைய நிலையில் இருக்கும் இடத்திற்கு பாரமாகதான் தான் இருக்கிறார்கள். ஆனால் வெளியேறவும் விருப்பம் இல்லை.
காரணம் இரண்டு - ஒருவர் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர், ஒருவர் மகா மௌனம். தன் துறை சம்பத்தப்பட்ட தானாலும் சரி அடுத்தவர் துறைஎன்றாலும் சரி முடிவெடுக்க கூடியதில் ஆமை வேகம்.
காரணம் மூன்று - ஒருவர் தோனியின் தயவில் வாழ்பவர் மற்றொருவர் சோனியின் தயவில் சாரி சோனியாவின் தயவில்.

காரணம் நான்கு - ஆடிக்கொரு முறை விஸ்வரூபம் எடுப்பார் விளையாட்டுக்காரர். நீதிமன்றம் சவுக்கெடுத்தால் தான் உண்மையை போட்டுடைப்பார் அரசியல்காரர்
காரணம் ஐந்து - ஒருவர் சுழலுக்கு தலைமை வகிப்பவர் மற்றவர் ஊழலுக்கு தலைமை.
காரணம் ஆறு - சக வீரரை கன்னத்தில் அறைந்தவர். எல்லோருக்கும் கன்னத்தை மட்டுமல்ல முதுகையும் காட்டுபவர்.
காரணம் ஏழு - விமர்சனம் எழும்போதெல்லாம் வெகுண்டு எழுவார், அப்போது மட்டும் இவரின் பேட்டும் பேசும், கை விரல்களும் பேசும் பஜ்ஜிக்கு. என்னை விட்டாபோதும் நான் விளையாட்டுக்கு இல்லை என்பவர் இரண்டாமவர்.
காரணம் எட்டு - உலக கோப்பை பெற்று தருவோம் என்பது இவரின் கனவு. கருப்பு பணத்தை கொண்டுவருவோம் என்பது அவரின் கனவு.
ஒண்ணுமே இல்லைதா விஷயத்தை யோசிச்ச கூட லட்டு லட்டாய் எட்டு விஷயம் கிடைத்து விட்டது. நீங்களும் யோசிங்க ஏதாவது கிடைக்கும்

நல்லாத்தான் யோசிச்சிருக்கிங்க,வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅழகா ஒரு பதிவை தேத்திட்டீங்க. கம்பேரிசன் நல்லாதான் இருக்கு.
ReplyDeleteஹ ஹா ஹா
ReplyDeleteநன்றி ருத்திரா
ReplyDeleteநன்றி கே ஆர் விஜயன்
டக்கல்டின்னா நன்றிங்கோ...
நன்று மிகவும் நன்று வாழ்த்துக்கள்
ReplyDeletehttp://kobikashok.blogspot.com/
நன்றி அசோக் மீண்டும் வருக
ReplyDelete