Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, February 18, 2010

பருத்தி பூக்கள்...!



அட...!! செடிகூட
முட்டையிட்டிருகிறதே...

எந்த நாகம் தீண்டியதோ..
நுரைதள்ளும் இச்செடியை

கதிரவன் தலை தூக்க
பனியெல்லாம் கரைகிறது.
கரையாத பனியாவென்று
கதிரவன் அனல் கக்க
வானம் பார்த்து பல்லிளிக்கும்
பருத்தி பூக்கள்...!

ஊருக்கே
உடையளிக்கும் இப்பூக்கள்
வெட்டவெளியில் அம்மணமாய்

Saturday, February 13, 2010

இலக்குகள் மிச்சமுண்டு இதயம் சிதறியபின்னும்..!!



நிகழ்வுகளின்
நெருக்குதல்களில்..
கைபிடித்த உறவும்
கைகொட்டி சிரித்தபின்
ஒளிந்துகொள்ள வழியின்றி..
தோல்வியை ஒப்புகொண்டாயிற்று

அம்மனமானபின்
கைகொண்டு எதைமூட...

சா(கு)ம் பிணங்கள்
சாவிற்கு அழும்,
பிணங்கள் அழுததுண்டா..!!

கல்வீசி சென்றவர்கள்
எல்லோருக்கும்
முகமோ முதுகோ
காட்டிவிட்டேன்.

நிராயுதபாணியின் தோல்வியில்
ஆதாயம் தேடிய முகங்களின்
கைகோர்த்து சிரித்த
பழையமுகவரிகள்
பத்திரமாகத்தான் இருக்கிறது

இலக்குகள் மிச்சமுண்டு
இதயம் சிதறியபின்னும்..!!

அம்மணத்தை தின்றவனின்
கைகொரு வைரகாப்பு
முதுகு பார்க்க
முப்பரிமான கண்ணாடி
கல்வீசிய சிநேகிதர்கெல்லாம்

என் செலவில் பரிசளிக்க
எனக்கான ஒரு நாளில்
நானே வருவேன்
மீண்டு(ம்)

பதிவர்களுக்கான மாத இதழ் வெள்ளிநிலாவில்
இக்கவிதை பிரசுரிக்கபட்டுள்ளதற்கு என் நன்றிகள்.

Friday, January 22, 2010

"பசை" இல்லை என்றால்

எத்தனை முறை கோர்த்தும்
வார்த்தைகள் சிதறியோடுகின்றன...
பதிவில் பதிவு செய்யமுடியாத
துரோகங்கள்
தினம் தினம் அரங்கேறுகிறது வாழ்வில்.

முகம் அறியாதவனோ...
எதிரியின் துரோகமோ... ஒரு பொருட்டில்லை.

வளையவரும் சுற்றம்,
உலகை காட்டிய தகப்பன்,
கட்டிய மனைவியின்
துரோகங்கள் மீளமுடியாதவை.

எண்ணிக்கையில் அடங்கும் சில
காகிதங்களே
எண்ணங்களை கொல்கிறது.
"பசை" இல்லை என்றால்
உறவு கோட்டைகள் உதிர்த்து போய்விடுகிறது.

Monday, January 18, 2010

நீயும் சிவமாவாய்....!!!

நூலிழை காற்று
நூறாயிரம் மைல் உள்ளோடி
ஆடுது பொம்மலாட்டம்...!

அது
உச்சந்தலை மயிர்க்கால் வழியோட...
பிறவி இனியில்லை - இனி
தெய்வம் வேறில்லை

உள்ளாடும் காற்றின் தாளலயம்
கைகொள்..
கைகொள் மகனே - நீயும் சிவமாவாய்...



ஆயிரம் மந்திரம் தின்று
தினம் தினம் துப்பி
அவதொன்றுமில்லை

கிழக்கென்ன மேற்கென்ன எண்திசை
சுழன்றாலும் கைலாயம் கண்டாலும்
மரணத்தின் வாசலுக்கு
ஒற்றை பயணம்

உள்ளாடும் காற்றின் தாளலயம்
கைகொள்..
கைகொள் மகனே - நீயும் சிவமாவாய்...

Wednesday, January 6, 2010

செவிசாய்க்க யாருமில்லை....

சில்க்கு சட்டை, மைனர் செயின்,
டை கட்டிய வெள்ளை சட்டை,
பட்டைபோட்ட காவி வேட்டி,
எல்லாம் நகர்கிறது...வேகவேகமாய்

சிவப்புக்கு நிதானித்து
வேகமாய் நகரும் வாகனங்கள்

உயிர் வலிக்க
மன்றாடிவிட்டேன்..
செவிசாய்க்க யாருமில்லை....
பசிக்கிறது
சோறு கிடைக்குமா....

Wednesday, December 30, 2009

மரணம் குறித்து..

ஏனோ மரணம் குறித்து ஒரு கவிதை எழுத தோன்றியது...பொதுவாக கவிதை படிப்பது எழுதுவது என்பது என்னை பொறுத்தவரை முடிந்து போன சமாச்சாரமாகவே இருந்தது. இங்கு பெரும்பாலோனோர் கவிஞர்கள் ஆவதே காதல் வயப்பட்ட பின்பு தான். என் காதல் என்னை விட்டு போன பின் கவிதையும் கூடவே போய்விட்டது.

பரண் மேலிருக்கும்
பழுப்பு பெட்டிக்குள்
கத்தை கத்தையாய்...
அவள்
பார்த்தது..
சிரித்தது...
பழகிய பதிவுகள் எல்லாம்
பத்திரமாகத்தான் இருக்கிறது
கல்லறைக்குள் தூங்கும்
பிரேதங்களாய்.....

மரணம் பற்றி எழுத நினைத்து மனம் எங்கெங்கோ அலைகிறது...ஒரு வேலை அவளை பிரிந்தது தான் என்னை பாதித்த முதல் மரணமாக கூட இருக்கலாம்.. மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..பிரிய நேர்வது....

எனக்கு மரணம் குறித்து பயம் இல்லையென்று நண்பர்கள் வட்டத்தில் சவடால் அடித்ததுண்டு... ஆனால் மரணத்தின் வாசல் வரை சென்று வந்த சில சம்பவங்கள் மரணத்தின் முன் எல்லோரும் கோழைகள் தான் என்பதை உணர்த்தியது... உண்மையிலேய தற்கொலைகள் கோழைதனமல்ல என்பது மரணத்தின் நெருக்கத்தை உணர்தவனுக்கு தான் தெரியும்.

மரணம்
மகா மௌனம்...

இழவு வீட்டு வாசலில்
ஒரு சில கண்ணீர்த்துளிகள் தான்
மரணித்தவனுக்கானவை...

இந்த கணக்கின் வகுத்தலில்
மட்டும்
மீதி வருவதே இல்லை.

Tuesday, December 29, 2009

பெருமழை பெய்த ஒரு நாளில்

பெருமழை பெய்த ஒரு நாளில்
ஒதுங்க இடம் தேடி தலை தூக்க
அதே நிலையில் நீயும்...

கண்கள் சந்தித்த அந்த நொடியில்
நீயும் நானும் ஓன்று தான்
நிலைமையில்....

சாலையோர டீக்கடையில்
பத்தோடு பதினொன்றாய் நானொதுங்க...
பேன்சி ஸ்டோர் வாசலில்
உனக்கு ஒரு இடம்...
உள்ளே வந்து நில்லம்மா...
கூடவே கரிசன வார்த்தைகள்..

சார்...சூடா..டீ வடை, போண்டா சார்..
அரை டிரவுசர் பையனின்
அன்பு தொல்லை...
தலை நரைத்த பெருசு
விட்ட பீடி புகை...
ஒதுங்கி நின்ற போதும்
பான்டை நனைத்த சாரல்...

இத்தனை கொடுமையிலும்
இனிமையாய் கழிந்தது பொழுது..
நொடிகொரு முறை
எனை நோக்கிய
உன் விழியின் சிரிப்பும்...
இதழின் சுழிப்பும்...

மழை நின்றது...
மின்னலென மறைந்தாய்..

மீண்டும் ஒரு
பெரு மழைக்காய் காத்திருக்கிறேன்....
உன் பெயர் கூட தெரியாது..

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...