
அதிக தொகுதிகளை பெற வேண்டும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் சின்ன கட்சிகளை வளைத்து போட்டு ஆட்சியை பிடித்து விடாலாம் என்று குருட்டு கனவு வெறும் கனவாகவே களைந்து போய்விட்டது. என்ன செய்ய போகிறது காங்கிரஸ் தனித்து போட்டியா..பெரும்பாலான கட்சிகள் கூட்டணியை உறுதி செய்து விட்ட நிலையில் மூன்றாம் அணிக்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. கலைஞர் அவசர அவசரமாக பா ம காவிற்கு சீட்டு ஒதுக்கி தங்கள் கூட்டணியில் சேர்த்து கொண்டதன் காரணம் இப்போது புரிகிறது.
ஆட்சியில் பங்கு கேட்டவர்கள் உள்ளதும் போச்சுடா..நொள்ள கண்ணா நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். வாய்சொல் வீரர்கள் இனி என்ன செய்வார்கள். தங்களின் பலத்தை குறித்து தப்பு கணக்கு போட்டுவிட்ட இளைஞர் காங்கிரசார் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிப்பார்களா...இல்லை இருக்கவே இருக்கிறது தங்களின் பரம எதிரி பா ஜா க அதனோடு கூட்டு சேருவார்களா..அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..
இரண்டு நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது இன்று. ஓன்று அ தி மு காவின் வெற்றி உருதிபடுத்தபட்டிருக்கிறது. இரண்டு ஆ. ராசாவின் ஊழல் விசாரணை விஸ்வரூபமெடுக்க போகிறது. தாங்கள் தோற்றாலும் பரவாயில்லை இனி தி மு காவின் ஆட்சி தமிழகத்தில் இல்லை என்பது தான் இனி காங்கிரசார் எடுக்க போகும் நிலையாக இருக்கும். தேர்தல் முடிவுக்கு பிறகு அ தி மு க - தே மு தி காவில் உரசல் ஏற்பட்டால் கூட அ தி மு காவோடு காங்கிரஸ் கை கோர்க்கும் நிலை வரலாம். கேப்டன் உசாராக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.