Showing posts with label பிரதமர். Show all posts
Showing posts with label பிரதமர். Show all posts

Monday, August 26, 2013

பிரதமர் வாய்ப்பை தவறவிடும் பி‌ஜெ‌பி

திரு பொன். ராதாகிருஷ்ணன் சொல்வது போல் நாடு முழுவதும் மோடி ஆதரவு அலை பெருகி இருப்பது  உண்மை தான். ஆனால் அயோத்தியில் யாத்திரை என்ற பெயரில் இவர்களே தங்கள் தலையில் மண் வாரி போட்டுக்கொள்வார்களோ என்று தோன்றுகிறது.

வெற்றி பெறுவது முக்கியம் அல்ல. திரு.மோடி அவர்கள் சொல்வது போல் பெரும்பான்மையோடு வெற்றி பெறுவது ரொம்ப முக்கியம். மைனாரிட்டி அரசாக காங்கிரஸ் படும் பாடு  எல்லோருக்கும் தெரிந்தது தானே.

பி‌ஜெ‌பி யின் வாக்குறுதிகள், மோடி வந்தால் வல்லரசாக்கிவிடுவோம் என்ற பிரசாரங்கள்  எல்லாம் பெரும்பான்மை இல்லாமல் போனால் கானல்  நீராய் போகும்.

சமூக தளங்களில் மோடிக்கான பிராசரம் வலுத்து வருகிறது. இளைஞர்கள் மோடியை ஆதர்ச புருஷனாக நினைக்க தொடங்கிவிட்டார்கள். ஒரு கோழையான திருடனிடம் அகப்பட்டுக்கிடப்பதை விட, ஒரு வீரனிடம் அடிமையாக கூட இருக்கலாம்.

பி‌ஜெ‌பி என்பது பெரும்பான்மை இந்துகளுக்கான கட்சியே தவிர, இவர்கள் ஓட்டு மொத்த இந்துக்களின் பிரநிதிகள் அல்ல. அயோத்தியில் கோவில் வேண்டுமா என்பதை மக்கள் வாக்கெடுப்பிற்கு விட இவர்கள் தயாரா.. அதனால் அயோத்தி விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது.

காங்கிரஸ் நினைப்பது போல உணவு பாதுகாப்பு மசோதா இவர்களின் சாதனையாக சொல்லிக்கொள்ளலாமே தவிர வோட்டாக மாறும் என்று சொல்ல முடியாது.  மாநில கட்சிகளின் அரசியலை,  இமஜை தாண்டி இவர்களால் இதை ஓட்டுக்களாக மாற்ற முடியாது. இலங்கை விஷயத்தில் இவர்களின் நிலைப்பாடு ஒன்று போதும் தமிழகத்தில் மண்ணை  கவ்வ. இரண்டு லட்சம் தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்சே அரசுக்கு விளக்கு பிடித்தவர்கள் என்ற கரை இனி எப்போதும் போகபோவதில்லை.

பி‌ஜெ‌பி வெற்றி பெற செய்ய வேண்டியதெல்லாம், மிக தெளிவான திட்டமிடல். நாட்டின் கடைசி குடிமகனுக்கும் சென்று சேர வேண்டிய பிரசாரம்.

1. ஊழல் மலிந்த காங்கிரஸ் அரசின் அவலங்களை பிராந்திய மொழிகளில், மாநிலத்தில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் அல்லது கலைஞர்கள் மூலமாக எடுத்து சொல்வது
2. இந்தியா எல்லைகளில் அந்நிய நாடுகளின் அச்சுறுத்தல் மற்றும் காங்கிரஸின் கையாலாகாதனதை பிரசங்கிப்பது
3. குடும்ப அரசியலும் அதனால் ஏற்பட்ட பொருளாதார தேக்கமும்.
4. ரூபாயின் மதிப்பு வீழிச்சி மற்றும் கட்டுபடுத்த முடியாத விலைவாசி
5. தோல்வியடைந்து விட்ட பொருளாதார கொள்கைகள்
6. செயலற்ற பிரதமர்
7. நிலம், நீர், ஆகாயம் என பரந்துபட்ட ஊழல் அமைச்சர்கள், அவர்களை அரவனைக்கும்  அரசு  என
மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய விஷயங்கள் ஏராளம்.



கோஷ்டி பூசலாலும், தேவையற்ற ஈகோ பிரச்சனையாளும் அருமையான வாய்ப்பை தவறவிடாமல் இருந்தால் சரி. 

Thursday, March 10, 2011

ஹர்பஜன் சிங்கும் மன்மோகன் சிங்கும்

என்னைய்யா இது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடறேன்னு பார்கறீங்களா...மேல படிங்க விஷயமிருக்கு. எவ்வளவோ பார்த்துட்டோம் இதையும் பார்த்திடுவோம்.

காரணம் ஓன்று - இவர்கள் இரண்டுபேருமே இன்றைய நிலையில் இருக்கும் இடத்திற்கு பாரமாகதான் தான் இருக்கிறார்கள். ஆனால் வெளியேறவும் விருப்பம் இல்லை.

காரணம் இரண்டு - ஒருவர் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர், ஒருவர் மகா மௌனம். தன் துறை சம்பத்தப்பட்ட தானாலும் சரி அடுத்தவர் துறைஎன்றாலும் சரி முடிவெடுக்க கூடியதில் ஆமை வேகம்.

காரணம் மூன்று - ஒருவர் தோனியின் தயவில் வாழ்பவர் மற்றொருவர் சோனியின் தயவில் சாரி சோனியாவின் தயவில்.



காரணம் நான்கு - ஆடிக்கொரு முறை விஸ்வரூபம் எடுப்பார் விளையாட்டுக்காரர். நீதிமன்றம் சவுக்கெடுத்தால் தான் உண்மையை போட்டுடைப்பார் அரசியல்காரர்

காரணம் ஐந்து - ஒருவர் சுழலுக்கு தலைமை வகிப்பவர் மற்றவர் ஊழலுக்கு தலைமை.

காரணம் ஆறு - சக வீரரை கன்னத்தில் அறைந்தவர். எல்லோருக்கும் கன்னத்தை மட்டுமல்ல முதுகையும் காட்டுபவர்.

காரணம் ஏழு - விமர்சனம் எழும்போதெல்லாம் வெகுண்டு எழுவார், அப்போது மட்டும் இவரின் பேட்டும் பேசும், கை விரல்களும் பேசும் பஜ்ஜிக்கு. என்னை விட்டாபோதும் நான் விளையாட்டுக்கு இல்லை என்பவர் இரண்டாமவர்.

காரணம் எட்டு - உலக கோப்பை பெற்று தருவோம் என்பது இவரின் கனவு. கருப்பு பணத்தை கொண்டுவருவோம் என்பது அவரின் கனவு.

ஒண்ணுமே இல்லைதா விஷயத்தை யோசிச்ச கூட லட்டு லட்டாய் எட்டு விஷயம் கிடைத்து விட்டது. நீங்களும் யோசிங்க ஏதாவது கிடைக்கும்

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...