அண்மைய காலமாக வெளிவரும் பதிவுகளில் சில குறிப்பாக வாசகர் பரிந்துரையில் பதிவர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இடம்பெறும் பதிவுகள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள் தான். பல உதாரணங்களை என்னால் காட்ட முடியும். பரிந்துரைக்க வேண்டிய பதிவு என்பதற்கு நீங்கள் என்ன அளவுகோல் வைத்திருகிறீர்கள்.
1 . பயனுள்ள தகவல் என்றடிபடையிலா..?
2 . தெரிந்துகொள்ள வேண்டிய நாட்டு நடப்பு என்ற வகையிலா..?
3 . நகைசுவை பகுதி என்ற முறையிலா..?
4 . மனதை தொடும் உரைநடைக்ககவா..?
எந்த தகுதியும் இல்லாத பதிவுகள் முன்னே நிற்க, பல நல்ல விஷயங்கள் படிப்பதற்கு கிடைப்பதில்லை. நல்ல பதிவு என்பது பிரபல பதிவரிடம் இருந்து தான் வரவேண்டும் என்பதில்லை. உங்களின் உணர்வுகளை தொடும் எந்த பதிவும் நல்ல பதிவு தான். அவற்றை புதிய பதிவர்களாலும் தரமுடியும். முன்னுரிமை என்பது அன்றைய நிகழ்வுகளின் அடிப்படையில் அமைய வேண்டும். குறைந்தபட்சம் நடிகைகளின் அந்தரங்ககளை நோண்டும் பதிவுகளை தவிருங்கள்.
பிரபல பதிவர்களாகிவிட வேண்டும் என்ற ஆக்கமும் வேகமும் இருக்க வேண்டியது தான். அதற்காக பிரபல பதிவர்களை கலாய்ப்பது, அரசியல் தலைவர்களை குறைந்தபட்சம் மரியாதை கூட இல்லாமல் விமர்சனம் செய்வது, சம்பந்தமே இல்லாத தலைப்புகளை கொடுத்து ஒன்றுக்கும் உதவாத பதிவுகளை தருவது, பிரபல பதிவராவது எப்படி என்று குறுக்கு வழிகளை புதிய பதிவர்களுக்கும் அறிமுகபடுத்தி அவர்களின் எழுத்தார்வத்தை முளையிலேய அளித்து அவர்களையும் உப்புமா பதிவர்களக்கிவிடுவது போன்றவை தொடருமானால் விரைவில் தமிழ்மணம், Indi, தமிழ் பெஸ்ட் போன்ற இணையதளங்கள் வெறும் குப்பை தொட்டியாகதான் காட்சி தரும். வெறும் ஓட்டு போடுவதற்காக மட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள ப்ளாக்குகள் எத்தனை என்று கணகெடுத்து பாருங்கள். உண்மை புரியும்.
மிகபெரும் வரவேற்ப்பை பெரும் என்று மாங்கு மாங்கென்று எழுதிய பதிவிற்கு ஒரு பின்னூட்டம் கூட வருவதில்லை. நடிகைகளின் பெயரில் வரும் பதிவுகள் ஓட்டுகளை அள்ளுகின்றன. அவர்களின் உள்ளாடைகளை பற்றிய ஒரு பதிவை கூட வளைத்து வளைத்து ஓட்டை போட்டு பிரபலமாக்கிவிட்டார்கள் இந்த பதிவர்கள். கர்மம்.. கர்மம்.. என்ன கொடுமை சார்...இது..? தமிழ் இணையதளம் வெறும் குப்பை கூடமாக மாறிவிடக்கூடாது சார். இணையதளத்தை உபயோகபடுத்துபவர்களால் ஒரு நாட்டின் அரசாங்கமே மாறிகொண்டிருக்கும் நிலையில் வெறும் உப்புமா பதிவுகளுக்கு ஆதரவு கொடுத்து ஒரு சில நல்ல பதிவுகளை புறக்கணிக்காதிர்கள்.
ஓட்டுகளுக்காக மட்டும் ஒரு இரண்டு அல்லது மூன்று ப்ளாக்குகளை தயாரித்து கொள்ளுங்கள். உங்கள் பதிவிற்கு நீங்களே ஓட்டும், பின்னூட்டமும் இட்டு கொள்ளுங்கள் என்று ஒரு பிரபல பதிவர் எனக்கு ஆலோசனை சொன்னார். இப்படிதான் பெரும்பாலும் நடக்கிறது என்றும் ஒரு சில ஆதாரங்களை காட்டினார். வெட்ககேடு சார்..இதென்ன சாகித்ய அகடமி விருதுக்கான தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகளா என்ன...? எதற்கு இத்தனை பித்தலாட்டம்..?
வாசகர் பரிந்துரை என்பதை மாற்றி இனிமேல் நிர்வாகிகளின் பரிந்துரை என்று இருக்கவேண்டும். உங்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகள் தரமானதாக இருக்கும் என்று நம்புகிறோம். அதே போல் ஒரு சில பிரபல பதிவர்கள் தங்களுக்குள் ஒரு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு வெளிவர மறுக்கிறார்கள். நல்ல பதிவுகளை உங்களை போன்றவர்கள் பாரபட்சமில்லாமல் படித்து புதிய பதிவர்களை உற்சாகபடுத்தவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
-
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் திருவிழா குறித்த செய்திகள் வர ஆரம்பித்து சாமான்யனின் பொழுது போக்கிற்கு தினம் தினம் புது புது அற...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
-
தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்ட...
இந்த சிக்கல் பலகாலம் திரட்டிகளில் இருப்பது தான். இது தமிழில் மட்டுமில்லை ஆங்கிலத்திலும் இதே பிரச்சனை இருக்கு.. டெக்னோராட்டி போன்ற திரட்டிகள் மானுவல் முறையில் சில நல்ல பதிவுகளை திரட்டி வெளியிடுகின்றனர். கூடவே தானியங்கியாக பதிவுகள் வெளிவருவன. இதனால் தான் அங்கிதா வர்மா தமிழில் manual திரட்டியின் தேவயை நமக்கு சொன்னார். ஆனால் வேலை வெட்டிகளை விட்டுவிட்டு நல்ல பதிவுகளை தேடி தேடி தொகுத்து கொடுப்பது அவ்வளவு எளிதான விசயம் இல்லை. buzzfeed போன்ற ஆங்கில தளங்கள் அவற்றை செய்கின்றனர். தமிழ்ச்சரத்திலும் சில நல்ல பதிவுகளை திரட்டுகிறார்கள். ஆனால் ஒரு நாளில் எழுத்தப்படும் ஆயிரக்கணக்கான பதிவுகளில்நல்ல பதிவுகளை சில வரன்முறை வைத்து தேட வேண்டுமானால் குறைந்தது 25 பேராவது 8 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். தனி நபர்கள் நடத்தும் திரட்டியால் அது ஆகாது. பொருளாதார சிக்கல் வரும்.
ReplyDelete25 பேர் 8 மணி நேரம் உழைக்க வேண்டுமாயின் குறைந்தது 5000 ரூபாய் சம்பளமாவது மாதம் கொடுக்க வேண்டும். ஒரு வேலை சிலர் சேர்ந்து நிறுவனமாக செய்யலாம். முதலீடு போட யாரு வருவார்கள்.
அப்படியே திரட்டிக் கொடுத்தாலும் வியாபார ரீதியாக அத்திரட்டி தாக்குப் பிடிக்காது. நல்ல பதிவுகள் எப்படி இருக்க வேண்டும் என்று 10 விதிமுறையாவது தாங்கள் எடுத்து வைத்தால். சில பேர் சேர்ந்து இம்முயற்சியை செய்யலாம்.
ஒத்தக் கருத்துடைய நண்பர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்....................
எனக்கும் பலமுறை இதே உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அவசியமான பதிவு.
ReplyDeleteஇது தேவையான ஒரு பகிர்வு தான் நண்பரே...
ReplyDeleteமிக்க நன்றி.. இனியாவது மாற்றம் வருமா என்று பார்ப்போம்
உங்களின் கருத்துக்கு நன்றி. சேவை அடிப்படையில் யாரும் பதிவுகளை திருட்டும் வேலைகளை செய்வதில்லை. எல்லோருக்கும் ஒரு வியாபார நோக்கம் இருக்கவே செய்கிறது. தகுதியான இணையதளங்கள் தான் நீடித்திருக்கும்.
ReplyDeleteநான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக எழுத வந்தபோது உள்ள இதே நிலைதான் இன்றும் உள்ளது. அதே ஆதங்கங்களையே இப்போது நீங்களும் வெளியிட்டுள்ளீர்கள். எதனைப்பற்றியும் எண்ணாமல் நல்ல பதிவினை மட்டுமே தரவேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறேன் . அதனால் நிலைத்து நிற்க முடிகிறது.ஒரே ஒரு வேறுபாடு. தற்போது நிறைய புதியவர்கள் நன்றாக எழுதுகிறவர்கள் வந்துள்ளனர். சண்டைகள் குறைந்துள்ளது.பழைய பதிவர்கள் என்ற பெயரில் பந்தாபன்னி கட்ட பஞ்சாயத்து நடத்தியவர்கள் பாதிபேர் காணாமல் போய்விட்டனர்.
ReplyDeleteஇருக்கும் சிலரும் ஏதோ எழுதுகின்றனர். இவர்களுக்கு இப்போது கூட்டங்கள் வருவதில்லை. புதியவர்களை வரவேற்று ஆதரித்தால் போதும். மேலும் புதியவர்களின் வராவால் மட்டுமே இந்நிலை மாறும்.இது போன்ற அவலங்கள் மாறிவிடும் நாளடைவில்.
நீங்கள் சொல்வது சரியே..
ReplyDeleteஎன் பதிவுகள் 20 ஓட்டுகள் பெற குறைந்தது 8-24 மணி நேரம் ஆனது.. ஆனால் சிலரது பதிவுகள் வெளியான சில நிமிடங்களில் ஒட்டுகள் பெற்றுவிடுகின்றன...
மிகவும் வேதனையான விஷயம்...
ஆக உங்களுக்கும் பிரபலமான இடுக்கை எப்படி எழுதவேண்டும் என்பது தெரிந்துவிட்டது..
ReplyDeleteநன்றி அம்பிகா,
ReplyDeleteநன்றி தமிழ் தோட்டம்
இரண்டு மூன்று ஆண்டுகளாக இதே நிலை என்றால் கொஞ்சம் கஷ்டம் தான். இங்கு தாக்கு பிடிக்க
ReplyDeleteஅசாத்திய பொறுமை தேவை. புதியவர்களை ஆதரித்தாலே பல கசப்புகள் குறையும் என்பது தான் உண்மை. சரியான பதிவிற்கு அங்கீகாரம் கிடைத்தால் குப்பைகள் தன்னால் விலகிவிடும்
>>>>
ReplyDeleteவாசகர் பரிந்துரை என்பதை மாற்றி இனிமேல் நிர்வாகிகளின் பரிந்துரை என்று இருக்கவேண்டும்.
நல்ல ஐடியா
>>>உங்கள் பதிவிற்கு நீங்களே ஓட்டும், பின்னூட்டமும் இட்டு கொள்ளுங்கள் என்று ஒரு பிரபல பதிவர் எனக்கு ஆலோசனை சொன்னார்
ReplyDeleteஹா ஹா அந்த பிரபலம் யாரோ?
>>
ReplyDeleteமிகபெரும் வரவேற்ப்பை பெரும் என்று மாங்கு மாங்கென்று எழுதிய பதிவிற்கு ஒரு பின்னூட்டம் கூட வருவதில்லை.
ம் வருந்தத்தக்க நிதர்சன உண்மை
நான் புத்தாணடில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள் என ஒரு உபயோகமான பதிவு போட்டேன். அட்டர்ஃபிளாப்.200 விசிட்டர்ஸ் மட்டுமே வந்தார்கள். ஒரு சினிமா போஸ்ட் போட்டேன் 2000 விசிட்டர்ஸ் வந்து சூப்பர் ஹிட் ஆச்சு அந்தப்பதிவு.
ReplyDeleteஎல்லோருக்கும் மிகவும் வேண்டியவர் தான். பெயர் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இப்படி நடப்பது உண்மைதான்
ReplyDeleteநன்றி செந்தில் இன்னும் நம்மவர்கள் நடிகைகளின் தொடைகளை தாண்டி எதையும் சிந்திப்பதில்லை என்பது கொஞ்சம் வருத்தமான உண்மைதான்
ReplyDeleteநன்றி விநாயகம்,
ReplyDeleteநன்றி சர்புதீன்
விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பது தான் எனது விருப்பம். நிர்வாகிகள் உணரவேண்டும்
இது போன்ற விசயங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீங்க. எப்படியோ தமிழிலில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் நுழைபவர்களை வரவேற்க்கத்தான் வேண்டும். அப்புறம் அவர்களுக்கே ஒரு சமயத்தில் சரக்கு இல்லாமல் சலிப்பு தட்டி விடும். பல பேர்கள் காணாமல் போய்க் கொண்டே இருக்காங்க. அணையை திறக்கும் போது வெளி வரும் குப்பைகளைத் தாண்டி தெளிந்த நீருக்கு சற்று காத்திருக்கத்தான் வேண்டும். இதில் திரட்டிகளை குற்றம் சொல்லி பிரயோஜனமில்லை. அந்தந்த நிர்வாகிகளுக்கு இந்த திரட்டிகளால் பத்து காசு லாபம் இருக்காது. அவர்களுக்கு ஒரு சேவை என்ற நோக்கில் தான் இதை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
ReplyDeleteஇக்பால் செல்வன் உங்களுக்கு நன்றி.
நன்றி ஜோதிஜி,
ReplyDeleteஆனால் திரட்டிகள் சேவை மனப்பான்மையோடு செயல்படுகின்றன என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்களின் எதிர்கால திட்டம் என்னவோ பணம் கொழிக்கும் இணையதளமாக மட்டற்ற வேண்டும் என்பது தான். இரண்டு வரடதிற்கு முன் இருந்த இணையதளம் வெறும் இப்போது இருப்பது வேறு. பல வணிக ரீதியான விளம்பரங்கள் தமிழ் மணத்தில் கூட பார்க்க முடிகிறது.
நன்றி அம்பிகா,
ReplyDeleteநன்றி தமிழ் தோட்டம் யுஜின்
நன்றி மாணிக்கம்
புதியவர்களை ஆதரிப்பது ஒன்று தான் குப்பை பதிவுகளை முடிவுக்கு கொண்டுவர ஒரே வழி
டோண்டுவின் வேடிக்கை ஆய்வு: பார்ப்பனர்கள் சோம்பேரிகளா?
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2011/02/blog-post.html
68 பதிவுகள் எழுதியிருக்கிறேன்.விவசாயிகள் தற்கொலை,பெண்கள் பிரச்சினை,இளைஞர் பிரச்சினை,போலி மருத்துவர்கள்,பாலியல் தொல்லைகள்,குழந்தை தொழிலாளர்கள் என்று இன்று மாணவிகள் தற்கொலை பற்றியபதிவும்,அதிகபட்சம்,நான்கு கமெண்ட்,நான்கு ஓட்டுக்களுக்கு மேல் இல்லை.நான் அதைப்பற்றி கவலைப்பட்டதில்லை.எனக்கு நேரம் இருந்தால் எழுதுகிறேன்.படிக்கிறேன்.இந்த நிலையிலும் நான் எதிர்பாராமல் இந்தவார தமிழ்மணத்தில் 15-வது இடம்.உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான்.எந்த நல்ல பேச்சாளரும் ஆயிரம் பேர் இருந்தால்தான் பேசுவேன் என்று சொல்வதில்லை.பத்து பேர் என்றாலும் நம்முடைய கருத்து தெளிவாக போய் சேரவேண்டும் அவ்வளவே.
ReplyDeleteபொதுவாக சூடான இடுகைகள்பற்றித்தான் இதுபோல் குற்றச்சாட்டுக்கள் வரும். அதனால் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக சூடான இடுகைகளை தூக்கிவிட்டார்கள்.
ReplyDeleteசூடான இடுகையை தூக்கிவிட்டு வாசகர் பரிந்துரைக்கு முக்கியம் கொடுத்தார்கள். இதிலும் நீங்கள் கூறுவதுபோல பல பிரச்சினைகள் வந்தன. பதிவர்கள் ஒருவருக்கொருவர் ஓட்டுப்போட்டு (தரத்தைப் பார்க்காமல், நட்பை மட்டும் முதன்மையாகக் கொண்டு) கொண்டார்கள் என்கிற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன! மறுபடியும் இன்னொரு தலைவலி!
இதுக்கு சூடான இடுகையே தேவலாம்போலனு மறுபடியும் சூடான இடுகையையும் கொண்டு வந்துவிட்டார்கள்!
இது பெரிய பிரச்சினைங்க. கடவுளே வந்தாலும் இதற்கு "நல்லதொரு" தீர்வு கொண்டு வருவது கடினம் என்பது தமிழ்மணம் நிர்வாகிகள் கற்ற பாடம் னு நான் நம்புறேன்.
நீங்க சொல்கிற ஆலோசனை மிகவும் வம்பானது. பிரச்சினையானது. எல்லோரும் தமிழ்மண நிர்வாகிகளை "நடுநிலைமை" இல்லை என்று சொல்ல ஆரம்பித்து விடுவாங்க! உங்களைப்போல் எல்லோரும் நிர்வாகிகள் முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டாங்க. மேலும் நிர்வாகிகள் இந்த வேலை செய்ய இஷ்டப்பட மாட்டாங்க. அவங்களுக்கு இதைவிட முக்கிய அலுவல்கள் இருக்கும்> :)
அதனால் அப்படியே ஃப்ரீயா விட்டுடுங்க!
இரண்டு வருஷமா தமிழ்மணத்தில் குப்பை கொட்டியும் இப்பத்தான் வேண்டுகோள் விடறீங்களா?
ReplyDeleteநானெல்லாம் பின்னாடி வர்ற ஆளுக என்னை சீக்கிரம் கீழே பிடிச்சு தள்ளிடறாங்கன்னு தமிழ்மணத்துகிட்ட சீன் போட்டவனாக்கும்:)
நீங்கள் சொல்வது சரிதான்.. ஆனாலும் நீங்கள் சொல்வது போல் சினிமா பற்றி நடிகைகள் பற்றி எழுதும் பதிவுகள்தான் அதிகம் பேரால் நோக்கப்படுகிறதென்பது உண்மை,
ReplyDelete//உங்களின் கருத்துக்கு நன்றி. சேவை அடிப்படையில் யாரும் பதிவுகளை திருட்டும் வேலைகளை செய்வதில்லை. எல்லோருக்கும் ஒரு வியாபார நோக்கம் இருக்கவே செய்கிறது. தகுதியான இணையதளங்கள் தான் நீடித்திருக்கும். //
ReplyDeleteneengal aen oru thiratti aarambiththu nandraaga sambaathiththu saevai seiya koodaathu?
நண்பர் சண்முகவேலின் வருகைக்கு நன்றி. நானும் இரண்டு வருடங்கள் என் வேலையை பற்றி மட்டும் தான் நினைத்து கொண்டிருந்தேன். ஆனாலும் பொருத்தமில்லாத பதிவுகளுக்கு கிடைக்கும் ஆரவாரம் கொண்டு பொறுக்க முடியாமல் தான் இந்த பதிவை எழுதினேன்.
ReplyDeleteவருண் நீங்கள் சொல்வதும் உண்மை தான். ஆனால் இதற்க்கு என்ன தான் தீர்வு. குப்பைகளை அனுசரித்து போவது தான் ஒரேவழியா..?
//விரைவில் தமிழ்மணம், Indi, தமிழ் பெஸ்ட் போன்ற இணையதளங்கள் வெறும் குப்பை தொட்டியாகதான் காட்சி தரும். // ஏற்கனவே குப்பைத் தொட்டியைப் போலத்தான் இருக்குது. ஒரு சில நல்ல பதிவுகளை இந்த குப்பைகளை விலக்கித்தான் கண்டுபிடிக்கவேண்டும்.
ReplyDeleteஉங்கள் அளவிற்கு எனக்கு வேகம் போதவில்லை. இப்போது தான் நான் விழித்துக்கொண்டேன் என்று வைத்து கொல்லேங்களேன் ராஜ நடராஜன்
ReplyDeleteநன்றி ரியாஸ் உங்கள் வருகைக்கு
திரட்டிகள் மூலமாகத் தான் நல்லப் பதிவுகள் வெளிவரும் என்பதில்லை. பொதுவாக நான் வலைப்பதிவுகளைப் படிப்பது திரட்டிகள் ஊடாக இல்லை மாறாக கூகிள் ப்ளாக் சேர்ஜ் மூலமாவே !!! அதே போல நல்ல தரமான எழுத்துக்ளைத் தொடர்ந்து எழுதும் போதும், ஒத்தக் கருத்துடைய தோழர்களோடு மனம் புலுங்காமல் நட்பைப் பேணும் போதும் நல்ல எழுத்துக்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அங்கீகாரம் என்றதும் இன்ட்லியில் வோட்டும், தமிழ்மண நட்ச்சத்திரமும் இல்லை. தாங்கள் எழுதும் விசயம் சமுதாயத்தில் இம்மி அளவேனும் மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தால் அதுவே ஒரு பதிவருக்கான அங்கீகாரம். தமிழ்ச்சர இணைய நிர்வாகத்திடம் இதுகாறு பேசினேன். நல்ல எழுத்துக்களை இன்னும் கூடுதலாக தேடி மீள்பதிவு செய்வதாக கூறினார்கள். இதனால் பல பதிவர்களை அறிமுகம் செய்து வைக்கலாம் அல்லவா?
ReplyDeleteதிரட்டிகள் யாவுக்கும் பணம் பண்ணும் ஆசை இருப்பினும், திரட்டிகளால் பெரும் பணம் சம்பாதிப்பது கடினம். தமிழ்மணம் கொஞ்சம் பணம் பண்ணுகிறது ஆனால் அதுவும் திரட்டி நடத்துவதற்கே போதாது !!!
நன்றி ராபின்,
ReplyDeleteஒரு முகம் தெரியாத நபர் அவ்வளவு அக்கறை இருந்தால் நீங்கள் ஒரு இணைய திரட்டியை ஆரம்பித்து சேவை செய்யலாமே என்று இருக்கிறார்.
நம்புகிறேன் அவர் எந்தொரு இணையதளத்தையும் நிர்வாகியும் இல்லை என்று. விரைவில் முயற்சிக்கிறேன் நண்பரே
உங்களின் தொடர்ந்த பதிலுக்கும் அன்பிற்கும் நன்றி இக்பால் செல்வன்
ReplyDelete" ஒத்தக் கருத்துடைய தோழர்களோடு மனம் புலுங்காமல் நட்பைப் பேணும் போதும் நல்ல எழுத்துக்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அங்கீகாரம் என்றதும் இன்ட்லியில் வோட்டும், தமிழ்மண நட்ச்சத்திரமும் இல்லை. தாங்கள் எழுதும் விசயம் சமுதாயத்தில் இம்மி அளவேனும் மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தால் அதுவே ஒரு பதிவருக்கான அங்கீகாரம்."
ஒத்த கருத்துடைய நண்பர்களுக்ககதான், அவர்களை இனம் கண்டுகொள்ளத்தான் இந்த பதிவை எழுதினேன். இதுகுறித்து தமிழ்மணம் நிர்வாகிகளுடன் கலந்துரயாடியதற்கு என் நன்றி. யாரையும் நோகவைப்பது என் எண்ணமில்லை. நல்ல எழுத்துகள் நிறைய பேரை சென்றடைய வேண்டும் என்பது தான் என்போன்றோரின் அவா.
இப்பதிவிற்கு வந்த பின்னூட்டமும், மெயில் தகவல்களும் என்னை உற்சாகபடுதுகின்றன. அனைவருக்கும் என் நன்றி. விரைவில் நல்ல மாற்றம் வரும் என்று நம்புகிறேன்
இது தேவையான ஒரு பகிர்வு தான் நண்பரே...
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி,
ReplyDeleteஉங்களை எப்படி பெயரிட்டு அழைப்பது
//புதியவர்களை ஆதரித்தாலே பல கசப்புகள் குறையும் என்பது தான் உண்மை. சரியான பதிவிற்கு அங்கீகாரம் கிடைத்தால் குப்பைகள் தன்னால் விலகிவிடும்//
ReplyDeleteநன்றி பாரதி,
ReplyDeleteபெரும்பாலோரின் கருதும் அது தான்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அதை நூறு சதவிகிதம் வழிமொழிகிறேன். ஓட்டு மற்றும் மறுமொழிகளைப் பற்றி கவலைப்படாமல், மனதிற்கு சரியென்று பட்ட கருத்துக்களை ஆபாச வார்த்தைகள் இல்லாமல், தனிநபர் அநாகரீக தாக்குதல் இல்லாமல் இரண்டு மாதமாக எழுதுகிறேன். மனம் நிறைவாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் எதிர்பார்ப்பில்லை. ஓட்டுக்கள், மறுமொழிகள் குறைவாக இருந்தாலும், வாசகர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, ஒரு பதிவிட்டால் சராசரியாக 600 பேர் படிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. அதனால் பொருமை மட்டுமே அவசியம் என எண்ணுகிறேன். குப்பைகள் தானாகவே அகன்றுவிடும்.
ReplyDeleteநண்பரே, உங்களது ஆதங்கங்கள் மிக நியாயமானவை. பிரபலமாகிற இடுகைகள் வாசிப்பவர்களின் ரசனையின் அளவுகோல்கள் அல்ல என்பது உண்மையே! பல சமயங்களில் பரிச்சயமான பதிவரின் இடுகைக்கு வாக்கு அளிப்பது ஒரு வாடிக்கையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ReplyDeleteகக்கு மாணிக்கம் எழுதியிருப்பது மிக சரி. நான் எனது இடுகைகளுக்கு வாக்களிப்பதை விடவும், அதிக பின்னூட்டங்களையே விரும்புகிறேன். அதை எனதுவலைப்பூ முகப்பில் வேண்டுகோளாகவும் இட்டிருக்கிறேன். இப்படி என்னைப் போல பல பதிவர்கள் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல், 'என் கடன் எழுதிக் கிடப்பதே,' என்று இருக்கிறார்கள்.
நன்றி கொக்கரக்கோ,
ReplyDeleteநானும் பொறுமை காக்கிறேன்..அதை எல்லை மீறாமல் இருந்தால் சரி. ஒருவகையில் பதிவுகள் அடுத்தவர்களை சென்று சேரவேண்டும் என்று நினைப்பது கூட ஒருவகையில் பேராசையாக தான் தெரிகிறது. எழுதுவது என் வேலை படித்தால் படி, படிக்காட்டி போ என்றிருக்க முடியவில்லை. முயற்சிக்கவேண்டும்
நன்றி சேட்டைக்காரன்,
ReplyDeleteவாக்குகள் எப்படி விழுகிறது என்று தெரிந்தபின் வாக்குகள் பெறவேண்டும் என்ற ஆசை எனக்கும் இல்லை. நல்ல பின்னூட்டங்களையே நானும் விரும்புகிறேன். சூப்பர், நல்லாஇருக்கு என்ற பின்னூட்டங்கள் ஒருவகையில் எரிச்சல் தான்.
டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2011/02/blog-post_25.html
.200 விசிட்டர்ஸ் மட்டுமே வந்தார்கள். ஒரு சினிமா போஸ்ட் போட்டேன் 2000 விசிட்டர்ஸ் வந்து சூப்பர் ஹிட் ஆச்சு அந்தப்பதிவு//
ReplyDeleteஉங்களைதாய்யா திட்டுறாரு..நீங்கதானே நமீதா பதிவர்?ம்..அண்ணே...சரியா சொன்னீங்க...இப்படித்தான் நாங்களும் ஹிட்டடிச்சோம்.
விரைவில் நானும் ஒரு பெரிய ஹிட் கொடுக்க போகிறேன்
ReplyDeleteதலைப்பு ரெடி