தலைவர்கள் இல்லை. உணர்ச்சி பொங்கும் வார்த்தை ஜாலங்கள் இல்லை. கட்சி இல்லை, கொடியும் இல்லை ஆனாலும் அங்கு வெடித்திருக்கும் புரட்சி நம் எல்லோருக்கும் பொதுவானது. என்ன புரியவில்லையா...நண்பர்களே ஆம் இது நமக்கான ஒரு முன்னுதாரணம்.
இலக்கியம் என்ற பெயரில் வெத்து குப்பைகளை உற்பத்தி செய்பவர்கள் என்று தான் பதிவர்களுக்கு இங்கு செல்ல பெயருண்டு. இதோ இப்போது எகிப்தில் கிளர்ந்திருக்கும் இந்த புரட்சிக்கு, எரியும் தீயில் எண்ணையாக இருப்பது எது தெரியுமா Facebook, Twitter மற்றும் இணையதள ப்ளாகுகள் தான். முகம் தெரியாத பலரின் உணர்சிகளுக்கு வடிகாலாக இருந்த இணையதளங்கள் இவர்களை ஒருங்கிணைத்து போராடவும் வைத்திருக்கிறது. வழக்கம் போல் முரட்டு அரசாங்கம் மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல், மக்கள் புரட்சியை, கலவரம் என்ற பெயரில் வன்முறையாலும் கொடூர அடக்கு முறையாலும் தண்டிக்க நினைக்கிறது. அவர்கள் முதலாவதாக செய்தது இணையதள சேவை மற்றும் தொலை தொடர்பு சேவைகளை முடக்கியது தான்.
மக்களை இணைக்கும் இவற்றை முடக்கிவிட்டால் புரட்சி செயலிழந்து போகும் என்று நினைத்தார்கள். ஆனால் அது காலம் கடந்து விட்ட செயல் என்று அவர்களுக்கு புரியவில்லை. இணையதளத்தால் இணைத்தவர்கள் இதயத்தாலும் இணைந்தவர்கள் என்று அரசு இப்போது தான் புரிந்துகொண்டிருக்கிறது.
முபாரக் ஆட்சியை விட்டு விலக சம்மதித்து விட்டதாக தகவல்கள் வருகிறது.
இதில் நமக்கான செய்தியும் இருக்கிறது நண்பர்களே...மாறி மாறி ஆட்சி கட்டிலில் ஏறியவர்கள் செய்யும் ஊழல்களை கண்டும் காணாமல் இருப்பதால் தான்
எவர் வந்தாலும் அவர்களின் கொள்ளையடிக்கும் கொள்கைகள் மட்டும் மாறவில்லை. ஆட்சியாளர்களின் இவ்வளவு அட்டுழியங்களுக்கு மத்தியிலும் நாம் வளர்வதற்கு காரணம். இந்தியாவின் இயற்கை வளம், மக்கள் வளம், இவர்களை எதிர்த்து ஒவ்வொரு இந்தியனும் போரட்ட நினைத்தாலும் பயம் நம்மை தடுக்கிறது. ஒருவன் வீதியில் நின்றால் பயம் வரும் ஒர்ரயிரம் பேர் திரண்டு வந்தால்...??? வெள்ளையர்களின் தலைகளை பரங்கி காய்களாய் சீவியவன் நாம் தான் என்பது அவனக்கு புரிந்தால் இங்கும் ஒரு புரட்சி சாத்தியம் தான்.

இந்த புரட்சிக்கு எந்த தலைவனும் தேவை இல்லை. எந்த அரசியல் கட்சியும் தேவை இல்லை. நாம் யார், நம் சக்தி என்ன என்பதை புரிந்து கொண்டால் போதும். நண்பர்களே, நம் எல்லா நண்பர்களுக்கும் இப்பதிவு சென்றடைய வேண்டும்...உங்களின் ஓட்டையும் கருத்தையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்
:)
ReplyDeleteentry
இது போன்று இன்னும் நிறைய பதிவுகள் வந்து நிரைக்க வேண்டுமே! அதற்கு போக வேண்டிய தொலைவு வெகு தூரம். இருந்தாலும் தொடர்ந்து தட்டுவோம்...
ReplyDeleteதூங்குவது போல் நடிப்பது தமிழனின் குணம் மனம் திடம்.
ReplyDeleteநன்றி சர்புதீன்
ReplyDeleteநன்றி தெகா
ReplyDeleteநன்றி ஜோதிஜி
உண்மையிலேய நாம் இன்னும் ரொம்ப தூரம் தான் போகவேண்டி இருக்கு போல...
ReplyDelete