Showing posts with label நிர்வாகி. Show all posts
Showing posts with label நிர்வாகி. Show all posts

Tuesday, February 15, 2011

தமிழ் இணையதள நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்..!

அண்மைய காலமாக வெளிவரும் பதிவுகளில் சில குறிப்பாக வாசகர் பரிந்துரையில் பதிவர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இடம்பெறும் பதிவுகள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள் தான். பல உதாரணங்களை என்னால் காட்ட முடியும். பரிந்துரைக்க வேண்டிய பதிவு என்பதற்கு நீங்கள் என்ன அளவுகோல் வைத்திருகிறீர்கள்.

1 . பயனுள்ள தகவல் என்றடிபடையிலா..?
2 . தெரிந்துகொள்ள வேண்டிய நாட்டு நடப்பு என்ற வகையிலா..?
3 . நகைசுவை பகுதி என்ற முறையிலா..?
4 . மனதை தொடும் உரைநடைக்ககவா..?

எந்த தகுதியும் இல்லாத பதிவுகள் முன்னே நிற்க, பல நல்ல விஷயங்கள் படிப்பதற்கு கிடைப்பதில்லை. நல்ல பதிவு என்பது பிரபல பதிவரிடம் இருந்து தான் வரவேண்டும் என்பதில்லை. உங்களின் உணர்வுகளை தொடும் எந்த பதிவும் நல்ல பதிவு தான். அவற்றை புதிய பதிவர்களாலும் தரமுடியும். முன்னுரிமை என்பது அன்றைய நிகழ்வுகளின் அடிப்படையில் அமைய வேண்டும். குறைந்தபட்சம் நடிகைகளின் அந்தரங்ககளை நோண்டும் பதிவுகளை தவிருங்கள்.

பிரபல பதிவர்களாகிவிட வேண்டும் என்ற ஆக்கமும் வேகமும் இருக்க வேண்டியது தான். அதற்காக பிரபல பதிவர்களை கலாய்ப்பது, அரசியல் தலைவர்களை குறைந்தபட்சம் மரியாதை கூட இல்லாமல் விமர்சனம் செய்வது, சம்பந்தமே இல்லாத தலைப்புகளை கொடுத்து ஒன்றுக்கும் உதவாத பதிவுகளை தருவது, பிரபல பதிவராவது எப்படி என்று குறுக்கு வழிகளை புதிய பதிவர்களுக்கும் அறிமுகபடுத்தி அவர்களின் எழுத்தார்வத்தை முளையிலேய அளித்து அவர்களையும் உப்புமா பதிவர்களக்கிவிடுவது போன்றவை தொடருமானால் விரைவில் தமிழ்மணம், Indi, தமிழ் பெஸ்ட் போன்ற இணையதளங்கள் வெறும் குப்பை தொட்டியாகதான் காட்சி தரும். வெறும் ஓட்டு போடுவதற்காக மட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள ப்ளாக்குகள் எத்தனை என்று கணகெடுத்து பாருங்கள். உண்மை புரியும்.

மிகபெரும் வரவேற்ப்பை பெரும் என்று மாங்கு மாங்கென்று எழுதிய பதிவிற்கு ஒரு பின்னூட்டம் கூட வருவதில்லை. நடிகைகளின் பெயரில் வரும் பதிவுகள் ஓட்டுகளை அள்ளுகின்றன. அவர்களின் உள்ளாடைகளை பற்றிய ஒரு பதிவை கூட வளைத்து வளைத்து ஓட்டை போட்டு பிரபலமாக்கிவிட்டார்கள் இந்த பதிவர்கள். கர்மம்.. கர்மம்.. என்ன கொடுமை சார்...இது..? தமிழ் இணையதளம் வெறும் குப்பை கூடமாக மாறிவிடக்கூடாது சார். இணையதளத்தை உபயோகபடுத்துபவர்களால் ஒரு நாட்டின் அரசாங்கமே மாறிகொண்டிருக்கும் நிலையில் வெறும் உப்புமா பதிவுகளுக்கு ஆதரவு கொடுத்து ஒரு சில நல்ல பதிவுகளை புறக்கணிக்காதிர்கள்.

ஓட்டுகளுக்காக மட்டும் ஒரு இரண்டு அல்லது மூன்று ப்ளாக்குகளை தயாரித்து கொள்ளுங்கள். உங்கள் பதிவிற்கு நீங்களே ஓட்டும், பின்னூட்டமும் இட்டு கொள்ளுங்கள் என்று ஒரு பிரபல பதிவர் எனக்கு ஆலோசனை சொன்னார். இப்படிதான் பெரும்பாலும் நடக்கிறது என்றும் ஒரு சில ஆதாரங்களை காட்டினார். வெட்ககேடு சார்..இதென்ன சாகித்ய அகடமி விருதுக்கான தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகளா என்ன...? எதற்கு இத்தனை பித்தலாட்டம்..?

வாசகர் பரிந்துரை என்பதை மாற்றி இனிமேல் நிர்வாகிகளின் பரிந்துரை என்று இருக்கவேண்டும். உங்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகள் தரமானதாக இருக்கும் என்று நம்புகிறோம். அதே போல் ஒரு சில பிரபல பதிவர்கள் தங்களுக்குள் ஒரு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு வெளிவர மறுக்கிறார்கள். நல்ல பதிவுகளை உங்களை போன்றவர்கள் பாரபட்சமில்லாமல் படித்து புதிய பதிவர்களை உற்சாகபடுத்தவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...