Wednesday, March 31, 2010

விளம்பர கம்பனியில் மார்கெட்டிங் வேலைவாய்ப்பு

கோவை நகரில் இயங்கிவரும் EX MEDIA என்ற விளம்பர நிறுவனத்திற்கு Marketing Executives தேவை.

Job Designation : Marketing Executives
Qualification : Any Degree / டிப்ளோம
Experience : 1 to 3 years (Freshers can also apply)

Salary : 7500 to 25000 (Depends upon the experience )
Contact No : + 91 9790850298
Mail to : exmediaa @gmail.com

உடன் தொடர்பு கொள்ளவும். உங்கள் நண்பர்கள் யாரவது வேலைக்கு முயற்சித்து கொண்டிருந்தால் உதவலாம்.

Saturday, March 13, 2010

பதிவர் மாத இதழ் வெள்ளிநிலா Vs பதிவர்கள் - ஒரு விமர்சனம்


நமது பதிவர் மாத இதழ் வெள்ளிநிலா குறித்து ஒவ்வொரு மாதமும் பத்திரிகை வெளிவந்தவுடன், விமர்சனம் அதாவது அந்த மாத இதழின் நிறை குறைகளை பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது. இது பத்திரிக்கை மெருகேருவதர்க்கும் உதவியாக இருக்கும் மேலும் படைப்பாளிகளை ஊக்கபடுத்துவதாகவும் இருக்கும் என்பது என் எண்ணம்.

இந்த மாத விமர்சனத்தை நான் தொடக்கி வைக்கிறேன். அடுத்து அடுத்து பிரபல பதிவர்கள் வெள்ளிநிலாவை நோக்கி விமர்சன கணைகளால் துளைப்பார்கள் என்று நம்புகிறேன். வெள்ளிநிலா சர்புதீன் ஜாக்கிரதை.

முதலில் இதழின் அமைப்பு குறித்து சில வார்த்தைகள்.

1. பத்திரிக்கை முழுவதும் ஒரே வகையான எழுத்துரு (Font ) உபயோகபடுத்தினால் நன்றாக இருக்கும். (விளம்பரங்களை தவிர)

2. ஒவ்வொரு பதிவிலும் எழுத்து பிழைகள் இருக்கிறது. சர்புதீன் சாருக்கு இன்னும் கொஞ்சம் விளக்கெண்ணை தேவைபடுகிறது. கண்ணில ஊற்றி தேடத்தான்....இதை கொஞ்சம் கவனித்தால் தேவலை...

3. பல இடங்களில் படைப்பிற்கும், புகைப்படங்களுக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது. மொக்கைசாமி பேசுவதற்கு வெள்ளைக்காரன் படம் எதற்கு சார்....? பதிவு பற்றாகுறையால் படங்களை சில இடங்களின் பெரிதுபடுத்தி மெகா சைசில் போட்டிருகிறீர்கள் என நினைக்கிறேன்.

4. இசுலாமிய பத்திரிக்கை இல்லை என்று சர்புதீன் கதறினாலும் ஆங்கங்கே தலை நீட்டி விடுகிறது. விளம்பர நிறுவன பெயர்கள், ஈரானிய திரைப்பட விமர்சனம், காயல்பட்டின கல்லூரி விழா செய்திகள், FORM IV தகவல்கள் என...இசுலாமிய வாடை. வணிக ரீதியாக இதை எல்லாம் தவிர்க்க முடியாது தான். (விளம்பரம் தரணுமே..) பதிவர்கள் எல்லோரும் மனது வைத்து சந்தா செலுத்தினால் இதை வரும் காலங்களில் தவிர்க்கலாம்.

5. மாதம் ஒரு பரிசு திட்டத்தை வைத்து, புதிய, பழைய பதிவர்களை ஊக்கபடுதலாம். பரிசு கனமா இருக்கணும். சும்மா ஒரு சீப்பு, 100 கிராம் நல்லெண்ணெய் பரிசென்றால் யாரும் வர மாட்டார்கள். பரிசு பெற்றவர் விபரத்தை நாங்கள் செக் பண்ணுவோம்....உஷாரு..!

இனி படைப்புகளை பார்ப்போம்...

இந்த வாரமும் தலையங்கம் போல் அமைந்திருந்தது ஈரோடு கதிரின் "சினிமாவும் மூச்சுதினறலும்" என்ற ஆக்கம். கொஞ்சம் பழைய மேட்டர் என்றாலும் தமிழுலகை பொறுத்தவரை இது சாக வரம் பெற்ற மேட்டர் என்பதால் எக்காலத்திற்கும் பொருந்தும்.

\\தினம் தினம் நாற்றம் பிடித்த நம் வீதிகளில் முகம் சுழிக்காமல் சாக்கடை அள்ளியெடுக்கும் துப்புரவு தொழிலாளி...இரசாயனம் கலந்து மலடான பொட்டல் காட்டின் மத்தியில், குடிக்க சொட்டுத் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் சாமானியன்... " என்று இவர் பட்டியலிடும் நமது பாட்டாளி வர்க்கம் ஒரு சினிமா நடிகன் போலவோ, அல்லது நடிகை போலவோ தங்கள் குறையைச் சொல்ல முதல்வரை இப்படிச் சந்தித்திட முடியுமா?\\ என்ற நியாயமான கேள்விக்கு எப்போதுமே பதில் கிடைக்காது என்பது அவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அவரின் மன ஆதங்கத்தை இறக்கி வைத்ததோடு வேலை முடிந்துவிட்டது. வேறு என்ன செய்ய...?

"எண்பது-தொன்னூறு வயதாகியும் வெறும் எலும்புக் கூடாய் உழைக்கும் கிழவனுக்கொ, கிழவிக்கோ வாழ்நாள் உழைப்பாளி என்று விருது கொடுக்கவோ இங்கு ஒரு நாதியும் இல்லை". ஆளும் வர்க்கத்தை நச்சென்று கொட்டியிருக்கிறார். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி. இந்த வரிகளுக்கு ஆட்டோவோ, அரிவாளோ வந்தாலும் வரும். பார்த்து கதிர் சார்..

கோவை எம். தங்கவேலின் (தனக்கு நேர்ந்த) அனுபவத்தை படிக்கையில் வேதனையாக இருந்தது. யதார்த்தம் இது தான். என்ன சொல்வது ..நாமாவது எங்காவது இறக்கி வைக்கிறோம். பலபேர் வெளியே சொல்லகூட அஞ்சி மனதுள் மருகிகொண்டிருகிறார்கள். Survival of Fittest எனும் தியரிபடி வரும்காலத்தில் ஆளும் வர்க்கத்தை எதிர்க்க திராணி இல்லாமல் நாம் அழியவேண்டியது தான்.

வார்த்தைகளின் அவசியம் குறித்த சுரேகாவின் பதிவு நன்றாக இருந்தது.

சிரிப்பு போலிசு காமெடியின் உச்சம். IPL டிக்கெட் இல்லாம வண்டி ஒட்டின பைனா...? இது நாலாயிருக்கே.. ஏற்கனவே நம்ம போலிசுக்கு காரணம் சொல்ல தெரியாது. ஷாஜஹான் போட்டுகொடுதிட்டார்.

ஆதிமூலகிருஷ்ணாவின் நினைவுகளின் ஆழத்தில் உறைந்திருக்கும் சொல்லப்படாத சில நன்றிகள் எல்லோரையும் ஒரு கணம் யோசிக்க வைத்திருக்கும். யார் யாருக்கு நன்றி சொல்ல மறந்தோமோ வாழ்வில். இதை ஒரு தொடர் பதிவாக போட்டிருந்தால் ஒரு வாரம் ஓடியிருக்கும்.

பதிவர்கள் புத்தக திருவிழா மீண்டும் ஒருமுறை பார்க்க நேர்ந்தது. சந்தோசம். அப்படியே ஒரு சந்தேகமும். கடைசி வரிகளில் \\கேபிள், பரிசல் எழுத்தாளர் உருவம் எடுத்திருப்பதை எல்லா பதிவுலக நண்பர்கள் சார்பில் வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறோம்\\ என்றிருந்தது. புத்தகம் வெளியிட்டாதான் எழுத்தாளர்களா...பதிவுலகில் எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் கிடையாதா..என்னா போங்கு சார் இது...

ஜவகர்லாளின் உப்புமாவும் சிக்குமாவும் படிக்க நன்றாக இருந்தது. நல்ல நடை சார்... ஆனால் அரைப்பக்கத்தில் முடிக்க வேண்டிய கதையை ஏன் ஒரு பக்கத்திற்கு இழுத்தார்கள் என தெரியவில்லை.

பட்டபெயர் குறித்த உழவனின் ஆக்கம் நன்றாக இருந்தது. எனக்கு ஏதும் பேர் போட்ட்ராதிங்கோ சார். .ஜீவன் சிவமே இருக்கட்டும்.

இந்த இதழின் திருஷ்டி பரிகாரமாக இருந்தது சண்டிகார் குறித்த கட்டுரை. ஏனோ இந்த இதழுக்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லாமல் இருந்தது போலிருந்தது. படங்கள் வேறு பெரிது பெரிதாக. பதிவரை தப்பு சொல்லவில்லை சார்...அதுவேற பிரச்னையாகிட போகுது..

சஞ்சயின் பிரபல பதிவாரவது எப்படி...கொஞ்சம் உபயோகமான விஷயம் தான். ஆனால் இன்னும் உள்குத்து விஷயங்கள் நிறைய இருக்கு சார்...அதையும் சொல்லியிருந்தா கொஞ்சம் நேர்மையான பதிவா இருந்திருக்கும். பதிவர் மதாருக்கு இப்ப பிரபல பதிவர் ஆவது எப்படி என்று புரிந்திருக்கும்..என நினைக்கிறேன்.

தேனீர் கதையம்சம் நன்றாக இருந்தது..ஆனால் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்க முடியும் என நினைக்கிறேன்.

கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாக எனும் தலைப்பிட்டு விட்டு, குழந்தை வளர்ப்பு பற்றி தகவல் இருந்தது. சறுக்கியது யார் பதிவரா...ஆசிரியரா...

சஹானா பதில்கள் நன்றாக இருந்தது. இன்னும் கொஞ்சம் சேர்த்து கொடுங்க சார்...அடுத்த மதன் உருவாக்கிட்டு இருக்கார்.

பட்டர்பிளை சூர்யா சார் கொஞ்சம் ரஷ்ய, பிரெஞ்சு படங்களை பற்றியும் தகவல்களை தாங்க சார்...நன்றாக இருக்கும்.

இவன் என்ன பெரிய புடுங்கியா எல்லோரையும் பற்றி விமர்சனம் பண்ணுவதற்கு என்று யாரும் கொதித்துபோய் என்னை தேட வேண்டாம். அடுத்த மாதம் உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போ சும்மா கிழி கிழின்னு கிழிங்க... அப்ப இந்த வார மார்க் போட்ரலாம....

இப்ப தான் மூன்றாம் பிறை விரைவில் முழு நிலவாக வாழ்த்துகள்

35/100 JUST PASS…. இன்னும் வளரனும் சார்...

ஆமாம்...ஊரே அல்லோல கல்லோல பட்ட, பதிவுலகமே வெகுண்டெழுந்த நித்தி, சாரு மேட்டர் பத்தியெல்லாம் ஒண்ணுமே வரலையே....ஒரு பெட்டி செய்தியாவது போட்டிருக்கலாமே....(கொலைவெறியோட சர்புதீன் என்னை தேடுவார்னு நினைக்கிறேன்.)

Thursday, March 4, 2010

யார் ஞானி...? தொடர் பதிவு

ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்டால் ஆன்மிகம் செத்துபோயவிடும். மனித அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடக்கும் பொழுது இங்கே ஏதோ ஒன்னு இருக்கு என்ற சம்சயம் எல்லோருக்கும் வருவதுண்டு. கடவுளை குறித்த தேடலுக்கு சரியான வழிகாட்டி அமைவது மிக முக்கியம். இல்லையென்றால் நித்ய போன்ற போலிகளிடம் நம்பி ஏமாறவேண்டியது தான்.

உண்மையான ஒரு சித்தனோ, ஞானியோ, சந்யாசியோ, சாதுவோ எப்படி இருப்பார்கள் என்பது குறித்து ஒரு தொடர் பதிவு போட்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அது மட்டுமல்ல தாசியிடம் படுத்தவனின் தரசான்றிதழ் குறித்து மூன்று நாட்களாக படித்து படித்து மண்டையெல்லாம் படுக்கையறை காட்சிகளும், சரியான நேரத்தில் விளக்கை அனைத்து விட்டாளே சண்டாளி என்று கொந்தளித்த பல நண்பர்களுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய இந்த தொடர்பதிவு.

உங்கள் அனுபவத்தில் ஏதாவது ஒரு உண்மையான சாதுவை கண்டிருகிறீர்களா... அவர்களின் குணாதிசயம் என்ன...ஒரு ஞானி எப்படி இருப்பார் என்பது குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன..?

இதோ என் எண்ணங்கள்..யார் ஞானி...?

1 . உண்மையான ஒரு ஞானி தன் நிலை குறித்தோ, தான் இருப்பு குறித்தோ எப்போதும் கவலைபடுபவனல்ல.
2 . தன்னை தேடி யாரும் வருவதையோ, தன்னை சுற்றி கூட்டம் சேருவதையோ எப்போதும் இவர்கள் விரும்புவதில்லை.
3 . லௌகீக சுகங்களில் நாட்டம் கொண்டவர்கள் ஒருக்காலும் சுத்த சன்யாசிகளாக இருக்க முடியாது. லௌகீகத்தில் உள்ளவர்களை தன்னருகில் வைத்துகொள்வதை கூட எந்த ஞானியும் விரும்பமாட்டார்.
4 . எல்லாம் வல்ல இறையை முன்னிலை படுத்தாமல், தானே இறைவன் அவதாரம் என்பவனை தைரியமாக செருப்பால் அடியுங்கள். அவன் நிச்சயம் பொம்பள பொறுக்கியாகவோ, கொலைக்கு அஞ்சாத படுபாதகனாகவோ தானிருப்பான். திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார் அவர்கள் தன்னை கடைசிவரை ஒரு பிச்சைகாரன் என்று தான் சொல்வார். அந்த பிரமாண்டமான ஆசிரமம் எல்லாம் அவர் விரும்பியதல்ல. அப்படியே ரமணரும். மிக மிக எளியவர்களாக கடைசி வரை வாழ்ந்து காட்டியவர்கள்.
5 . பொன்னோ, பொருளோ, ஆசிரம நிதியோ எதுவும் அவனக்கு தேவையில்லை. அவன் வாய் திறந்து கேட்கவும் மாட்டான். நீங்கள் அன்பு மிகுதியால் கொடுக்க கூடியதை கூட கை நீட்டி வாங்க வெட்கபடுவார். வேண்டாம் என்று சொன்னால் எங்கே உங்கள் மனது வேதனை படுமோ என்று அவர் துடிப்பார். அவனே உண்மையான ஞானி.
6 . இப்போது சொல்கிறேன் யோகம், தியானம் எல்லாம் உண்மையான தேடுதலோடு இருப்பவர்களுக்கு தானாகவே அமையும். அத்தகையோரை தேடி குருக்கள் வருவார்கள். அவர்களை மேல்நிலைக்கு கொண்டு செல்ல.
7 . ஒரு சன்யாசியை சுற்றி இருப்பவர்களில் 99 % பேர் ஏமாற்றுகாரர்கள் தான். எந்த விருப்பு வெறுப்பில்லாமல் வாழும் ஞானிகளை புகழ்ந்து, துதிபாடி
அவர்களை ஒரு வியாபார பொருளாக மாற்றும் வல்லமை இவர்களுக்கு உண்டு.
8 . தியானம் கற்றுகொடுக்க காசு வாங்குபன் நல்ல கதியை அடைவதில்லை.
9 . பூசை புனஸ்காரங்களிலும், ஹோம மந்திரங்களிலும் இறைவனை அடையவே முடியாது. சத்தியமான மனதில் உதிக்கும் எண்ணங்கள் பலிக்கும். 10 . மூன்று வேலை நெய்யும் பாலும், பழுமுமாக தின்று கொழுத்து, ஓரடி உயர பஞ்சு மெத்தையில், சுகமான ஏசியில் படுத்துறங்கி பாருங்கள். உங்கள் முகத்திலும் ஒரு தேஜஸ் தெரியும். ஆனால் ஒரு உண்மையான ஞானி வருகையில் வீசும் திருநீறு வாசம் கண்டிப்பாக உங்களிடம் இருக்காது.

தொடர்பதிவுக்கு அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து உங்கள் எண்ணங்களை இங்கு பதிவு செய்யுங்கள். உண்மையான தேடல் உள்ளவர்களுக்கு ஒருவேளை இந்த பதிவு பயன்படலாம்.

ரிஷபன்
சைவகொத்துபரோட்டா
SUREஷ்
பலாபட்டரை சங்கர்
மங்குனி அமைச்சர்
பிரியமுடன் வசந்த்
வெள்ளிநில சர்புதீன்
வேலன் அண்ணாச்சி
யுவகிருஷ்ணா
பித்தனின் வாக்கு
ஜோதிஜி
பழமைபேசி
ஐயா ஜெயராஜன்
தோழி பவி
பெயர் விடுபட்ட எல்லா நண்பர்களுக்கும்.

கதவை திறவுங்கள்.... நித்யா நாற்றம் போகட்டும்

சிக்கிகொண்ட ஒரு கருப்பு ஆட்டின் இரத்தத்தை எல்லா நரிகளும் குடித்து கும்மாளமிட்டு கொண்டிருக்கையில் நானும் ஒரு பதிவு எழுத வேண்டுமா என்று தான் யோசித்தேன். சந்தர்ப்பம் கிடைக்கும் வரை எல்லா நரிகளும் இங்கு உத்தமர் வேஷம் பூண்டிருப்பதை சௌகர்யமாக நாம் மறந்து விடுகிறோம். ஏற்கனவே இவர்கள் சாமியார்கள் அல்ல என்னும் தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தேன். வழக்கம் போல அது உண்மையை பேசியதால் சொல்லிகொள்ளும்படி பின்னூட்டத்தையோ, ஓட்டுகளையோ பெறமுடியாது ஒரே நாளில் இணையத்தில் முடங்கிவிட்டது. அதன் கோபத்தில் நான் எழுதிய ரம்பாவுக்கு கல்யாணம் என்னும் பதிவு தமிலிஷில் பிரபலம் ஆகி ஓட்டுகளையும், பின்னூட்டத்தையும் வாரி குவித்தது வேறு கதை.

அதனால் வெகுஜன ரசிப்புதன்மை என்பது எது என்பது எனக்கு ஓரளவு புரிந்தது. மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்ட தொழில் போட்டியை சமாளித்தாக வேண்டிய கட்டத்தில் இன்றைய எல்லா ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டன. பல சமயங்களில் அதன் தரத்திலும் பல படிகள் இறங்கி வந்து போட்டியை சமாளிதாகவேண்டிய கட்டாயம்.

மிக எளிதில் மக்களை ஆட்கொள்ளும் விஷயங்கள் இரண்டு. அவ்வபோது சினிமா, எப்போதும் ஆன்மிகம்.

நடிகைக்கு மிகவும் பிடித்த உள்ளாடையின் நிறம் என்ன என்பதிலிருந்து, எல்லாவிதமான பேட்டிகளும், நடிகன் "குசு" விட்டால் கூட ஆளும்கட்சிக்கு எதிராக கொடிபிடிப்பவன் என கட்டம் கட்டி பரபரப்பு கூட்டி, கல்லா கட்டும் வியாபார உத்திகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. கூடிய விரைவில் அம்பானிகளை பின்னுக்கு தள்ளும் திறமை நம்மாட்களுக்கு உண்டு என்பது உலகிற்கு தெரியவரும். மிகவும் பிரபலமான ஒரு குடும்ப கட்சியிலிருந்தே அத்தகைய தொழிலதிபர் வரக்கூடும்.

அடுத்து ஆன்மிகம். ஒவ்வொரு சேனலும் கலந்து கட்டி அடிக்கும் கூத்து. பல நூறு வருடங்களாக பின்பற்றி வரும் நம்பிக்கைகள் நடந்தது என்ன...நிஜம் என்ற பெயரிலெல்லாம் களங்கபடுத்தப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க முடியாது. எதையாவது புதிது புதிதாக செய்தாக வேண்டும் என்ற வாழ்வாதார பிரச்சனைக்கு முன்னால் பாரம்பர்யம், சாதரனர்களின் நம்பிக்கைக்களுக்கு எல்லாம் மதிப்பு கொண்டுத்துகொண்டிருக்க யாரும் தயாரில்லை. ஊடகங்களுக்கு பின்னால் இருக்கும் அரசியல் செல்வாக்கு சாதரனர்களின் வாயை அடைத்துவிடுகிறது.

அபரிமிதமான தொழில் வளர்ச்சி, வெளிநாடுகளுக்கு இணையான இந்திய கல்வி முறையின் வளர்ச்சி எல்லாம் இருந்தும் நம் சமயத்தின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை, அதன் தத்துவார்த்த உண்மைகள் நம் இரத்தத்தில் கலந்து விட்டிருப்பதையே உணர்த்துகிறது. கருப்பர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை எப்படி வெள்ளையர்கள் உலகம் முழுவதுமே ஏற்படுத்தினார்களோ அதை போல. எந்த ஒரு இந்தியருக்குள்ளும் ஏன் பிற மதத்தவராக இருந்தாலும் அவரிடம் இந்து மத நம்பிக்கைகள் உள்ளோடியிருப்பதை காணமுடியும். தன மகள் திருமணதிற்கு ஜாதகத்தை தூக்கி அலையும் எத்தனையோ இஸ்லாமிய / கிறிஸ்தவ பெரியவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த நம்பிக்கைகளையும், சாதரனர்களின் தேடல்களையும் தான் நித்தியானந்தன் போன்றவர்களை கபடதாரிகளாக்குகிறது. ஒரு சாதாரண அன்றாடங்காய்ச்சிகளுக்கே பெண் சுகம் தேவைப்படும்பொழுது, கோடிகளில் புரளக்கூடிய, ஏசி, லேப்டாப் வசதிகளுடன் சகல மரியாதைகளுடனும் திரியும் இவனை போன்றவர்களுக்கு "அரிப்பு" ஏற்படாது என்று நம்புவர்கள் தான் முட்டாள்கள். அது சாருவாக இருந்தாலும் சரி,சாதரனர்களாக
இருந்தாலும் சரி. "எல்லோரையும் போல் நானும் நம்பினேன். அதற்காக நான் தற்கொலையா செய்துகொள்ள முடியும்" என்று ஒரு அப்பாவியாய் கேள்வி கேட்டு ஒரு சமூக பொறுப்புள்ள எழுத்தாளன் தப்பித்து கொள்ள முடியாது. மாங்கு மாங்கென்று உருகி உருகி பதிவில் எழுதியதெல்லாம் ஒரு delit option - ல் இல்லையென்று ஆகிவிடாது.கொலைவழக்குகளில் அடிபட்ட ஜெயந்திரன், கருவறையின் புனிதத்தை கேவலபடுத்திய தேவநாதன், தாசிகளை தழுவி மோட்சம் தேடும் நித்யனந்தர்களையும் உருவாக்குவது இன்றைய சமூக சூழல்தான். பேராசை, சுயநலம், காமவெறி கொண்டலைபவர்களுக்கு ஆன்மிகம் இறுதி அடைக்கலம் என்ற நிலைமை மாற வேண்டும். உண்மையான ஆன்மீகத்தையும், போலி சாமியார்களையும் பிரித்தறியும் வழிவகைகளை அறிவது மிக முக்கியம். நானொரு சாமியார் அல்ல. ஆனால் ஆன்மிகம் குறித்த தேடல் உள்ளவன். அந்த தேடலின் விளைவாக பல சன்யாசிகளையும், ஆன்மீக புத்தகங்களையும் வாசித்தரிந்தவன். என் பார்வையில் ஒரு ஞானியோ, சித்தனோ இப்படிதான் என்று உறுதியாக சொல்லிவிடமுடியாது. ஆனால் அவர்களுகென்று சில குண ஒற்றுமைகள் உண்டு. அது..

1 . உண்மையான ஒரு ஞானி தன் நிலை குறித்தோ, தான் இருப்பு குறித்தோ எப்போதும் கவலைபடுபவனல்ல.
2 . தன்னை தேடி யாரும் வருவதையோ, தன்னை சுற்றி கூட்டம் சேருவதையோ எப்போதும் இவர்கள் விரும்புவதில்லை.
3 . லௌகீக சுகங்களில் நாட்டம் கொண்டவர்கள் ஒருக்காலும் சுத்த சன்யாசிகளாக இருக்க முடியாது. லௌகீகத்தில் உள்ளவர்களை தன்னருகில் வைத்துகொள்வதை கூட எந்த ஞானியும் விரும்பமாட்டார்.
4 . எல்லாம் வல்ல இறையை முன்னிலை படுத்தாமல், தானே இறைவன் அவதாரம் என்பவனை தைரியமாக செருப்பால் அடியுங்கள். அவன் நிச்சயம் பொம்பள பொறுக்கியாகவோ, கொலைக்கு அஞ்சாத படுபாதகனாகவோ தானிருப்பான். திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார் அவர்கள் தன்னை கடைசிவரை ஒரு பிச்சைகாரன் என்று தான் சொல்வார். அந்த பிரமாண்டமான ஆசிரமம் எல்லாம் அவர் விரும்பியதல்ல. அப்படியே ரமணரும். மிக மிக எளியவர்களாக கடைசி வரை வாழ்ந்து காட்டியவர்கள்.
5 . பொன்னோ, பொருளோ, ஆசிரம நிதியோ எதுவும் அவனக்கு தேவையில்லை. அவன் வாய் திறந்து கேட்கவும் மாட்டான். நீங்கள் அன்பு மிகுதியால் கொடுக்க கூடியதை கூட கை நீட்டி வாங்க வெட்கபடுவார். வேண்டாம் என்று சொன்னால் எங்கே உங்கள் மனது வேதனை படுமோ என்று அவர் துடிப்பார். அவனே உண்மையான ஞானி.
6 . இப்போது சொல்கிறேன் யோகம், தியானம் எல்லாம் உண்மையான தேடுதலோடு இருப்பவர்களுக்கு தானாகவே அமையும். அத்தகையோரை தேடி குருக்கள் வருவார்கள். அவர்களை மேல்நிலைக்கு கொண்டு செல்ல.
7 . ஒரு சன்யாசியை சுற்றி இருப்பவர்களில் 99 % பேர் ஏமாற்றுகாரர்கள் தான். எந்த விருப்பு வெறுப்பில்லாமல் வாழும் ஞானிகளை புகழ்ந்து, துதிபாடி
அவர்களை ஒரு வியாபார பொருளாக மாற்றும் வல்லமை இவர்களுக்கு உண்டு.
8 . தியானம் கற்றுகொடுக்க காசு வாங்குபன் நல்ல கதியை அடைவதில்லை.
9 . பூசை புனஸ்காரங்களிலும், ஹோம மந்திரங்களிலும் இறைவனை அடையவே முடியாது. சத்தியமான மனதில் உதிக்கும் எண்ணங்கள் பலிக்கும். இன்னும் சில காரணிகளை வைத்து நாம் ஞானிகளை கண்டறிய முடியும்.
10 . மூன்று வேலை நெய்யும் பாலும், பழுமுமாக தின்று கொழுத்து, ஓரடி உயர பஞ்சு மெத்தையில், சுகமான ஏசியில் படுத்துறங்கி பாருங்கள். உங்கள் முகத்திலும் ஒரு தேஜஸ் தெரியும். ஆனால் ஒரு உண்மையான ஞானி வருகையில் வீசும் திருநீறு வாசம் கண்டிப்பாக உங்களிடம் இருக்காது.

இந்த பதிவு ஒரு கோபத்தில் எழுதினாலும் முடிக்கையில் வெறுமையும் வேதனையுமே மிஞ்சுகிறது. உண்மையை ஏற்றுக்கொள்ளவோ, நல்லதை நாலு பேருக்கு சொல்லவோ யாருக்கும் நேரமும் இல்லை. மனமும் இல்லை. பணமே இங்கு பிரதானமாகிவிட்டதில் நாம் இழந்தது நிறைய. அமைதியான ஆன்மீகமான வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு, பெண்களின் குண்டியை நக்கி கொண்டிருப்பவனைஎல்லாம் (நன்றி சாரு) கடவுள் என்று நம்பி மோசம் போய்கொண்டிருக்கிறோம்.

Monday, March 1, 2010

உங்கள் வாரிசுகள் ஜாக்கிரதை...!!

சமீபத்திய ஒரு ஆஸ்திரேலிய மருத்துவர்களின் ஆராய்ச்சி குறிப்பு " உடற்பருமனான குழந்தைகள் தங்களது பெற்றோருக்கு முன்னரே இறக்க கூடும் " என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது. பொதுவாகவே நம் இந்திய தாய்மார்கள் தங்கள் குழந்தையை கொழு கொழு என்று வைத்திருப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். குழந்தையின் வயதிற்கு மீறிய, அவசியத்திற்கும் மேற்பட்ட அதிகமான சத்து நிறைந்த உணவு வகைகளை கொடுப்பதால் அவர்களின் எதிர்கால ஆரோக்கியம் முற்றிலும் கேள்விக்குறியாகிறது.

தவறான உணவு பழக்க வழக்கங்களுக்கு குழந்தைகள் அடிமையாக பல சந்தர்பங்களில் அவர்களின் பெற்றோரே காரணமாக இருக்கின்றனர். குழந்தைகளின் வாயை கட்டுவதை விட கடுமையான காரியம் பெற்றோர்களின் வாயை கட்டுவது என்ற நிலையில் Child Obesity தவிர்க்க முடியாததாகிறது.

எல்லாவற்றிலும் வேகம் வேகம் என்று ஓடிகொண்டிருக்கிறோம். வெந்ததை வேகாததை தின்றுவிட்டு கணினி முன் மணிகணக்கில் கழிகிறது வாழ்க்கை. பொறுமையாக ஆற அமர உண்பதோ, ஒரு நாளைக்கு அரைமணி நேரமாவது உடற்பயிற்சி என்பதோ சாத்தியமில்லாத வாழ்க்கைமுறையாக மாறிகொண்டிருக்கிறது.குறைந்தபட்சம் உங்களின் வாரிசுகளையாவது கொஞ்சம் கன்ட்ரோல் செய்வது அவசர அவசியம். எப்படின்னா..

1 . சமச்சீர் உணவு அதாவது உங்கள் குழந்தையின் வயது, எடை, மற்றும் அதன் செயல்பாடுகளை (Physical Activities) பொறுத்து உணவுகளை தேர்ந்தெடுக்க உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

2 . ஆரோக்கியமான உணவு எவை என்பது குறித்து, (பாட்டி சொன்னது) அவ்வப்போது உங்கள் ஜூனியர் காதில் போட்டு வையுங்கள்.

3 . அதிக எடையுள்ள குழந்தைகள் பெரும்பாலும் தாழ்வுமனப்பன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. எனவே எக்காரணம் கொண்டும் அவர்களை இளைக்க வைக்கிறேன் பேர்வழி என்று எதையும் வலுக்கட்டாயமாக திணிக்காதிர்கள்.

4 . குழந்தைகள் சாப்பாடு விஷயத்தில் அவர்களின் பிடிவாதத்திற்கு வளைந்து கொடுக்காமல், அவர்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுங்கள்.

5 . ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம், அவர்கள் பள்ளிகளுக்கு அருகாமையில் அல்லது வெளியிடங்களின் விற்கும் தரம் குறைந்த உணவுகளை சாப்பிட்டு பழகாமல் பார்த்து கொள்வது பெற்றோர்களின் தலையாய கடமை.

ஏதோ ஊதாரசங்கை ஊதிட்டேன். மற்றபடி ராசா உன் சமத்து.

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...