Saturday, March 13, 2010

பதிவர் மாத இதழ் வெள்ளிநிலா Vs பதிவர்கள் - ஒரு விமர்சனம்


நமது பதிவர் மாத இதழ் வெள்ளிநிலா குறித்து ஒவ்வொரு மாதமும் பத்திரிகை வெளிவந்தவுடன், விமர்சனம் அதாவது அந்த மாத இதழின் நிறை குறைகளை பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது. இது பத்திரிக்கை மெருகேருவதர்க்கும் உதவியாக இருக்கும் மேலும் படைப்பாளிகளை ஊக்கபடுத்துவதாகவும் இருக்கும் என்பது என் எண்ணம்.

இந்த மாத விமர்சனத்தை நான் தொடக்கி வைக்கிறேன். அடுத்து அடுத்து பிரபல பதிவர்கள் வெள்ளிநிலாவை நோக்கி விமர்சன கணைகளால் துளைப்பார்கள் என்று நம்புகிறேன். வெள்ளிநிலா சர்புதீன் ஜாக்கிரதை.

முதலில் இதழின் அமைப்பு குறித்து சில வார்த்தைகள்.

1. பத்திரிக்கை முழுவதும் ஒரே வகையான எழுத்துரு (Font ) உபயோகபடுத்தினால் நன்றாக இருக்கும். (விளம்பரங்களை தவிர)

2. ஒவ்வொரு பதிவிலும் எழுத்து பிழைகள் இருக்கிறது. சர்புதீன் சாருக்கு இன்னும் கொஞ்சம் விளக்கெண்ணை தேவைபடுகிறது. கண்ணில ஊற்றி தேடத்தான்....இதை கொஞ்சம் கவனித்தால் தேவலை...

3. பல இடங்களில் படைப்பிற்கும், புகைப்படங்களுக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது. மொக்கைசாமி பேசுவதற்கு வெள்ளைக்காரன் படம் எதற்கு சார்....? பதிவு பற்றாகுறையால் படங்களை சில இடங்களின் பெரிதுபடுத்தி மெகா சைசில் போட்டிருகிறீர்கள் என நினைக்கிறேன்.

4. இசுலாமிய பத்திரிக்கை இல்லை என்று சர்புதீன் கதறினாலும் ஆங்கங்கே தலை நீட்டி விடுகிறது. விளம்பர நிறுவன பெயர்கள், ஈரானிய திரைப்பட விமர்சனம், காயல்பட்டின கல்லூரி விழா செய்திகள், FORM IV தகவல்கள் என...இசுலாமிய வாடை. வணிக ரீதியாக இதை எல்லாம் தவிர்க்க முடியாது தான். (விளம்பரம் தரணுமே..) பதிவர்கள் எல்லோரும் மனது வைத்து சந்தா செலுத்தினால் இதை வரும் காலங்களில் தவிர்க்கலாம்.

5. மாதம் ஒரு பரிசு திட்டத்தை வைத்து, புதிய, பழைய பதிவர்களை ஊக்கபடுதலாம். பரிசு கனமா இருக்கணும். சும்மா ஒரு சீப்பு, 100 கிராம் நல்லெண்ணெய் பரிசென்றால் யாரும் வர மாட்டார்கள். பரிசு பெற்றவர் விபரத்தை நாங்கள் செக் பண்ணுவோம்....உஷாரு..!

இனி படைப்புகளை பார்ப்போம்...

இந்த வாரமும் தலையங்கம் போல் அமைந்திருந்தது ஈரோடு கதிரின் "சினிமாவும் மூச்சுதினறலும்" என்ற ஆக்கம். கொஞ்சம் பழைய மேட்டர் என்றாலும் தமிழுலகை பொறுத்தவரை இது சாக வரம் பெற்ற மேட்டர் என்பதால் எக்காலத்திற்கும் பொருந்தும்.

\\தினம் தினம் நாற்றம் பிடித்த நம் வீதிகளில் முகம் சுழிக்காமல் சாக்கடை அள்ளியெடுக்கும் துப்புரவு தொழிலாளி...இரசாயனம் கலந்து மலடான பொட்டல் காட்டின் மத்தியில், குடிக்க சொட்டுத் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் சாமானியன்... " என்று இவர் பட்டியலிடும் நமது பாட்டாளி வர்க்கம் ஒரு சினிமா நடிகன் போலவோ, அல்லது நடிகை போலவோ தங்கள் குறையைச் சொல்ல முதல்வரை இப்படிச் சந்தித்திட முடியுமா?\\ என்ற நியாயமான கேள்விக்கு எப்போதுமே பதில் கிடைக்காது என்பது அவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அவரின் மன ஆதங்கத்தை இறக்கி வைத்ததோடு வேலை முடிந்துவிட்டது. வேறு என்ன செய்ய...?

"எண்பது-தொன்னூறு வயதாகியும் வெறும் எலும்புக் கூடாய் உழைக்கும் கிழவனுக்கொ, கிழவிக்கோ வாழ்நாள் உழைப்பாளி என்று விருது கொடுக்கவோ இங்கு ஒரு நாதியும் இல்லை". ஆளும் வர்க்கத்தை நச்சென்று கொட்டியிருக்கிறார். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி. இந்த வரிகளுக்கு ஆட்டோவோ, அரிவாளோ வந்தாலும் வரும். பார்த்து கதிர் சார்..

கோவை எம். தங்கவேலின் (தனக்கு நேர்ந்த) அனுபவத்தை படிக்கையில் வேதனையாக இருந்தது. யதார்த்தம் இது தான். என்ன சொல்வது ..நாமாவது எங்காவது இறக்கி வைக்கிறோம். பலபேர் வெளியே சொல்லகூட அஞ்சி மனதுள் மருகிகொண்டிருகிறார்கள். Survival of Fittest எனும் தியரிபடி வரும்காலத்தில் ஆளும் வர்க்கத்தை எதிர்க்க திராணி இல்லாமல் நாம் அழியவேண்டியது தான்.

வார்த்தைகளின் அவசியம் குறித்த சுரேகாவின் பதிவு நன்றாக இருந்தது.

சிரிப்பு போலிசு காமெடியின் உச்சம். IPL டிக்கெட் இல்லாம வண்டி ஒட்டின பைனா...? இது நாலாயிருக்கே.. ஏற்கனவே நம்ம போலிசுக்கு காரணம் சொல்ல தெரியாது. ஷாஜஹான் போட்டுகொடுதிட்டார்.

ஆதிமூலகிருஷ்ணாவின் நினைவுகளின் ஆழத்தில் உறைந்திருக்கும் சொல்லப்படாத சில நன்றிகள் எல்லோரையும் ஒரு கணம் யோசிக்க வைத்திருக்கும். யார் யாருக்கு நன்றி சொல்ல மறந்தோமோ வாழ்வில். இதை ஒரு தொடர் பதிவாக போட்டிருந்தால் ஒரு வாரம் ஓடியிருக்கும்.

பதிவர்கள் புத்தக திருவிழா மீண்டும் ஒருமுறை பார்க்க நேர்ந்தது. சந்தோசம். அப்படியே ஒரு சந்தேகமும். கடைசி வரிகளில் \\கேபிள், பரிசல் எழுத்தாளர் உருவம் எடுத்திருப்பதை எல்லா பதிவுலக நண்பர்கள் சார்பில் வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறோம்\\ என்றிருந்தது. புத்தகம் வெளியிட்டாதான் எழுத்தாளர்களா...பதிவுலகில் எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் கிடையாதா..என்னா போங்கு சார் இது...

ஜவகர்லாளின் உப்புமாவும் சிக்குமாவும் படிக்க நன்றாக இருந்தது. நல்ல நடை சார்... ஆனால் அரைப்பக்கத்தில் முடிக்க வேண்டிய கதையை ஏன் ஒரு பக்கத்திற்கு இழுத்தார்கள் என தெரியவில்லை.

பட்டபெயர் குறித்த உழவனின் ஆக்கம் நன்றாக இருந்தது. எனக்கு ஏதும் பேர் போட்ட்ராதிங்கோ சார். .ஜீவன் சிவமே இருக்கட்டும்.

இந்த இதழின் திருஷ்டி பரிகாரமாக இருந்தது சண்டிகார் குறித்த கட்டுரை. ஏனோ இந்த இதழுக்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லாமல் இருந்தது போலிருந்தது. படங்கள் வேறு பெரிது பெரிதாக. பதிவரை தப்பு சொல்லவில்லை சார்...அதுவேற பிரச்னையாகிட போகுது..

சஞ்சயின் பிரபல பதிவாரவது எப்படி...கொஞ்சம் உபயோகமான விஷயம் தான். ஆனால் இன்னும் உள்குத்து விஷயங்கள் நிறைய இருக்கு சார்...அதையும் சொல்லியிருந்தா கொஞ்சம் நேர்மையான பதிவா இருந்திருக்கும். பதிவர் மதாருக்கு இப்ப பிரபல பதிவர் ஆவது எப்படி என்று புரிந்திருக்கும்..என நினைக்கிறேன்.

தேனீர் கதையம்சம் நன்றாக இருந்தது..ஆனால் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்க முடியும் என நினைக்கிறேன்.

கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாக எனும் தலைப்பிட்டு விட்டு, குழந்தை வளர்ப்பு பற்றி தகவல் இருந்தது. சறுக்கியது யார் பதிவரா...ஆசிரியரா...

சஹானா பதில்கள் நன்றாக இருந்தது. இன்னும் கொஞ்சம் சேர்த்து கொடுங்க சார்...அடுத்த மதன் உருவாக்கிட்டு இருக்கார்.

பட்டர்பிளை சூர்யா சார் கொஞ்சம் ரஷ்ய, பிரெஞ்சு படங்களை பற்றியும் தகவல்களை தாங்க சார்...நன்றாக இருக்கும்.

இவன் என்ன பெரிய புடுங்கியா எல்லோரையும் பற்றி விமர்சனம் பண்ணுவதற்கு என்று யாரும் கொதித்துபோய் என்னை தேட வேண்டாம். அடுத்த மாதம் உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போ சும்மா கிழி கிழின்னு கிழிங்க... அப்ப இந்த வார மார்க் போட்ரலாம....

இப்ப தான் மூன்றாம் பிறை விரைவில் முழு நிலவாக வாழ்த்துகள்

35/100 JUST PASS…. இன்னும் வளரனும் சார்...

ஆமாம்...ஊரே அல்லோல கல்லோல பட்ட, பதிவுலகமே வெகுண்டெழுந்த நித்தி, சாரு மேட்டர் பத்தியெல்லாம் ஒண்ணுமே வரலையே....ஒரு பெட்டி செய்தியாவது போட்டிருக்கலாமே....(கொலைவெறியோட சர்புதீன் என்னை தேடுவார்னு நினைக்கிறேன்.)

17 comments:

 1. மிக நன்றாகவே அலசி உள்ளீர்கள்..ஈரோட் கதிரின் கட்டுரைகள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்று கூறி இருப்பது இந்தக்கால அரசியலை நன்றாக புரிந்து வைத்துள்ளீர்கள் என தெரிகிறது.

  ReplyDelete
 2. இதழை நான் இன்னும் படிக்கவில்லை எனவே நோ கமெண்ட்ஸ் :))

  ReplyDelete
 3. //சிரிப்பு போலிசு காமெடியின் உச்சம். IPL டிக்கெட் இல்லாம வண்டி ஒட்டின பைனா...? இது நாலாயிருக்கே.. ஏற்கனவே நம்ம போலிசுக்கு காரணம் சொல்ல தெரியாது. ஷாஜஹான் போட்டுகொடுதிட்டார். //

  விமசனத்திர்க்கு ரொம்ப நன்றி சார்

  ReplyDelete
 4. நன்றி மர்மயோகி...
  அடி வாங்கறது நமக்கு புதுசா...வாங்கோ வாங்கோ..

  ReplyDelete
 5. நன்றி அமைச்சரே...
  க..க..போ..!!

  நன்றி சைகொப
  படித்து விட்டு ஒரு முறை வந்து போங்கள்

  ReplyDelete
 6. விமர்சனம் பளிச்!

  ReplyDelete
 7. நன்றி ரிஷிபன்

  நன்றி வெள்ளிநிலா...
  அவ்வளவு தானா...கொலைவெறியோட பின்னூட்டம் வரும்னு பார்த்தேன்...

  ReplyDelete
 8. அன்பின் மகேஷ்

  அவ்விதழில் அப்துல் கலாம் மற்றும் மகாத்மா காந்தி படம் போட்டு ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதனைப் பற்றி ஒரு கருத்தும் கூற வில்லையே ! ஏன ?

  ReplyDelete
 9. நல்ல விமர்சனப்பார்வை

  ReplyDelete
 10. நன்றி சீனா...
  என் தவறு தான்...எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை. ஒரு வேளை அதை நான் வாசித்த பொழுது அதில் விமர்சனம் செய்ய எதுவும் இல்லை என தோன்றியிருக்கலாம். அதில் சொல்லப்பட்ட விஷயம் அப்படி..

  நன்றி ஜோதிஜி
  எதோ எனக்கு தெரிந்ததை மட்டும் சுட்டினேன்...

  ReplyDelete
 11. //என்ற நியாயமான கேள்விக்கு எப்போதுமே பதில் கிடைக்காது என்பது அவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அவரின் மன ஆதங்கத்தை இறக்கி வைத்ததோடு வேலை முடிந்துவிட்டது. வேறு என்ன செய்ய...?//

  மிகச் சரி

  ReplyDelete
 12. //இது பத்திரிக்கை மெருகேருவதர்க்கும் உதவியாக இருக்கும் மேலும் படைப்பாளிகளை ஊக்கபடுத்துவதாகவும் இருக்கும் என்பது என் எண்ணம். //
  நல்ல எண்ணம்..நல்ல விமர்சனம்..தொடருங்கள்..

  ReplyDelete
 13. எப்படி இணைய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள். நானும் இணைந்து விடுகின்றேன். மிக நல்ல கட்டுரை. நன்றி.

  ReplyDelete
 14. வாங்க கதிர் சார்....பெரியவங்க முதல் முதலா இந்த ஏழையின் குடிசைக்கு வந்ததற்கு நன்றி

  நன்றி நாடோடி...
  இதுவும் தொடர் பதிவு மாதிரி தான்..அடுத்த வாரம் யார் கைலெடுக்க போகிறார்கள் என தெரியவில்லை...

  நன்றி பித்தன்
  வெள்ளிநிலா சர்புதீன் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார் என நினைக்கிறேன்

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...