Thursday, March 4, 2010

கதவை திறவுங்கள்.... நித்யா நாற்றம் போகட்டும்

சிக்கிகொண்ட ஒரு கருப்பு ஆட்டின் இரத்தத்தை எல்லா நரிகளும் குடித்து கும்மாளமிட்டு கொண்டிருக்கையில் நானும் ஒரு பதிவு எழுத வேண்டுமா என்று தான் யோசித்தேன். சந்தர்ப்பம் கிடைக்கும் வரை எல்லா நரிகளும் இங்கு உத்தமர் வேஷம் பூண்டிருப்பதை சௌகர்யமாக நாம் மறந்து விடுகிறோம். ஏற்கனவே இவர்கள் சாமியார்கள் அல்ல என்னும் தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தேன். வழக்கம் போல அது உண்மையை பேசியதால் சொல்லிகொள்ளும்படி பின்னூட்டத்தையோ, ஓட்டுகளையோ பெறமுடியாது ஒரே நாளில் இணையத்தில் முடங்கிவிட்டது. அதன் கோபத்தில் நான் எழுதிய ரம்பாவுக்கு கல்யாணம் என்னும் பதிவு தமிலிஷில் பிரபலம் ஆகி ஓட்டுகளையும், பின்னூட்டத்தையும் வாரி குவித்தது வேறு கதை.

அதனால் வெகுஜன ரசிப்புதன்மை என்பது எது என்பது எனக்கு ஓரளவு புரிந்தது. மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்ட தொழில் போட்டியை சமாளித்தாக வேண்டிய கட்டத்தில் இன்றைய எல்லா ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டன. பல சமயங்களில் அதன் தரத்திலும் பல படிகள் இறங்கி வந்து போட்டியை சமாளிதாகவேண்டிய கட்டாயம்.

மிக எளிதில் மக்களை ஆட்கொள்ளும் விஷயங்கள் இரண்டு. அவ்வபோது சினிமா, எப்போதும் ஆன்மிகம்.

நடிகைக்கு மிகவும் பிடித்த உள்ளாடையின் நிறம் என்ன என்பதிலிருந்து, எல்லாவிதமான பேட்டிகளும், நடிகன் "குசு" விட்டால் கூட ஆளும்கட்சிக்கு எதிராக கொடிபிடிப்பவன் என கட்டம் கட்டி பரபரப்பு கூட்டி, கல்லா கட்டும் வியாபார உத்திகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. கூடிய விரைவில் அம்பானிகளை பின்னுக்கு தள்ளும் திறமை நம்மாட்களுக்கு உண்டு என்பது உலகிற்கு தெரியவரும். மிகவும் பிரபலமான ஒரு குடும்ப கட்சியிலிருந்தே அத்தகைய தொழிலதிபர் வரக்கூடும்.

அடுத்து ஆன்மிகம். ஒவ்வொரு சேனலும் கலந்து கட்டி அடிக்கும் கூத்து. பல நூறு வருடங்களாக பின்பற்றி வரும் நம்பிக்கைகள் நடந்தது என்ன...நிஜம் என்ற பெயரிலெல்லாம் களங்கபடுத்தப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க முடியாது. எதையாவது புதிது புதிதாக செய்தாக வேண்டும் என்ற வாழ்வாதார பிரச்சனைக்கு முன்னால் பாரம்பர்யம், சாதரனர்களின் நம்பிக்கைக்களுக்கு எல்லாம் மதிப்பு கொண்டுத்துகொண்டிருக்க யாரும் தயாரில்லை. ஊடகங்களுக்கு பின்னால் இருக்கும் அரசியல் செல்வாக்கு சாதரனர்களின் வாயை அடைத்துவிடுகிறது.

அபரிமிதமான தொழில் வளர்ச்சி, வெளிநாடுகளுக்கு இணையான இந்திய கல்வி முறையின் வளர்ச்சி எல்லாம் இருந்தும் நம் சமயத்தின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை, அதன் தத்துவார்த்த உண்மைகள் நம் இரத்தத்தில் கலந்து விட்டிருப்பதையே உணர்த்துகிறது. கருப்பர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை எப்படி வெள்ளையர்கள் உலகம் முழுவதுமே ஏற்படுத்தினார்களோ அதை போல. எந்த ஒரு இந்தியருக்குள்ளும் ஏன் பிற மதத்தவராக இருந்தாலும் அவரிடம் இந்து மத நம்பிக்கைகள் உள்ளோடியிருப்பதை காணமுடியும். தன மகள் திருமணதிற்கு ஜாதகத்தை தூக்கி அலையும் எத்தனையோ இஸ்லாமிய / கிறிஸ்தவ பெரியவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த நம்பிக்கைகளையும், சாதரனர்களின் தேடல்களையும் தான் நித்தியானந்தன் போன்றவர்களை கபடதாரிகளாக்குகிறது. ஒரு சாதாரண அன்றாடங்காய்ச்சிகளுக்கே பெண் சுகம் தேவைப்படும்பொழுது, கோடிகளில் புரளக்கூடிய, ஏசி, லேப்டாப் வசதிகளுடன் சகல மரியாதைகளுடனும் திரியும் இவனை போன்றவர்களுக்கு "அரிப்பு" ஏற்படாது என்று நம்புவர்கள் தான் முட்டாள்கள். அது சாருவாக இருந்தாலும் சரி,சாதரனர்களாக
இருந்தாலும் சரி. "எல்லோரையும் போல் நானும் நம்பினேன். அதற்காக நான் தற்கொலையா செய்துகொள்ள முடியும்" என்று ஒரு அப்பாவியாய் கேள்வி கேட்டு ஒரு சமூக பொறுப்புள்ள எழுத்தாளன் தப்பித்து கொள்ள முடியாது. மாங்கு மாங்கென்று உருகி உருகி பதிவில் எழுதியதெல்லாம் ஒரு delit option - ல் இல்லையென்று ஆகிவிடாது.கொலைவழக்குகளில் அடிபட்ட ஜெயந்திரன், கருவறையின் புனிதத்தை கேவலபடுத்திய தேவநாதன், தாசிகளை தழுவி மோட்சம் தேடும் நித்யனந்தர்களையும் உருவாக்குவது இன்றைய சமூக சூழல்தான். பேராசை, சுயநலம், காமவெறி கொண்டலைபவர்களுக்கு ஆன்மிகம் இறுதி அடைக்கலம் என்ற நிலைமை மாற வேண்டும். உண்மையான ஆன்மீகத்தையும், போலி சாமியார்களையும் பிரித்தறியும் வழிவகைகளை அறிவது மிக முக்கியம். நானொரு சாமியார் அல்ல. ஆனால் ஆன்மிகம் குறித்த தேடல் உள்ளவன். அந்த தேடலின் விளைவாக பல சன்யாசிகளையும், ஆன்மீக புத்தகங்களையும் வாசித்தரிந்தவன். என் பார்வையில் ஒரு ஞானியோ, சித்தனோ இப்படிதான் என்று உறுதியாக சொல்லிவிடமுடியாது. ஆனால் அவர்களுகென்று சில குண ஒற்றுமைகள் உண்டு. அது..

1 . உண்மையான ஒரு ஞானி தன் நிலை குறித்தோ, தான் இருப்பு குறித்தோ எப்போதும் கவலைபடுபவனல்ல.
2 . தன்னை தேடி யாரும் வருவதையோ, தன்னை சுற்றி கூட்டம் சேருவதையோ எப்போதும் இவர்கள் விரும்புவதில்லை.
3 . லௌகீக சுகங்களில் நாட்டம் கொண்டவர்கள் ஒருக்காலும் சுத்த சன்யாசிகளாக இருக்க முடியாது. லௌகீகத்தில் உள்ளவர்களை தன்னருகில் வைத்துகொள்வதை கூட எந்த ஞானியும் விரும்பமாட்டார்.
4 . எல்லாம் வல்ல இறையை முன்னிலை படுத்தாமல், தானே இறைவன் அவதாரம் என்பவனை தைரியமாக செருப்பால் அடியுங்கள். அவன் நிச்சயம் பொம்பள பொறுக்கியாகவோ, கொலைக்கு அஞ்சாத படுபாதகனாகவோ தானிருப்பான். திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார் அவர்கள் தன்னை கடைசிவரை ஒரு பிச்சைகாரன் என்று தான் சொல்வார். அந்த பிரமாண்டமான ஆசிரமம் எல்லாம் அவர் விரும்பியதல்ல. அப்படியே ரமணரும். மிக மிக எளியவர்களாக கடைசி வரை வாழ்ந்து காட்டியவர்கள்.
5 . பொன்னோ, பொருளோ, ஆசிரம நிதியோ எதுவும் அவனக்கு தேவையில்லை. அவன் வாய் திறந்து கேட்கவும் மாட்டான். நீங்கள் அன்பு மிகுதியால் கொடுக்க கூடியதை கூட கை நீட்டி வாங்க வெட்கபடுவார். வேண்டாம் என்று சொன்னால் எங்கே உங்கள் மனது வேதனை படுமோ என்று அவர் துடிப்பார். அவனே உண்மையான ஞானி.
6 . இப்போது சொல்கிறேன் யோகம், தியானம் எல்லாம் உண்மையான தேடுதலோடு இருப்பவர்களுக்கு தானாகவே அமையும். அத்தகையோரை தேடி குருக்கள் வருவார்கள். அவர்களை மேல்நிலைக்கு கொண்டு செல்ல.
7 . ஒரு சன்யாசியை சுற்றி இருப்பவர்களில் 99 % பேர் ஏமாற்றுகாரர்கள் தான். எந்த விருப்பு வெறுப்பில்லாமல் வாழும் ஞானிகளை புகழ்ந்து, துதிபாடி
அவர்களை ஒரு வியாபார பொருளாக மாற்றும் வல்லமை இவர்களுக்கு உண்டு.
8 . தியானம் கற்றுகொடுக்க காசு வாங்குபன் நல்ல கதியை அடைவதில்லை.
9 . பூசை புனஸ்காரங்களிலும், ஹோம மந்திரங்களிலும் இறைவனை அடையவே முடியாது. சத்தியமான மனதில் உதிக்கும் எண்ணங்கள் பலிக்கும். இன்னும் சில காரணிகளை வைத்து நாம் ஞானிகளை கண்டறிய முடியும்.
10 . மூன்று வேலை நெய்யும் பாலும், பழுமுமாக தின்று கொழுத்து, ஓரடி உயர பஞ்சு மெத்தையில், சுகமான ஏசியில் படுத்துறங்கி பாருங்கள். உங்கள் முகத்திலும் ஒரு தேஜஸ் தெரியும். ஆனால் ஒரு உண்மையான ஞானி வருகையில் வீசும் திருநீறு வாசம் கண்டிப்பாக உங்களிடம் இருக்காது.

இந்த பதிவு ஒரு கோபத்தில் எழுதினாலும் முடிக்கையில் வெறுமையும் வேதனையுமே மிஞ்சுகிறது. உண்மையை ஏற்றுக்கொள்ளவோ, நல்லதை நாலு பேருக்கு சொல்லவோ யாருக்கும் நேரமும் இல்லை. மனமும் இல்லை. பணமே இங்கு பிரதானமாகிவிட்டதில் நாம் இழந்தது நிறைய. அமைதியான ஆன்மீகமான வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு, பெண்களின் குண்டியை நக்கி கொண்டிருப்பவனைஎல்லாம் (நன்றி சாரு) கடவுள் என்று நம்பி மோசம் போய்கொண்டிருக்கிறோம்.

17 comments:

 1. மக்களோ , சாமியாரோ திருந்த வேண்டியது அவசியமில்லை., ஒரு வேலை நான் சொல்வது சரியில்லை எனில், இந்த விசயத்தில் நாம் என்ன செய்தோம் (கற்றோம்) என்று பார்போம்.!

  கும்பகோணம் பள்ளிகூட தீ விபத்து.,

  ஸ்ரீரங்கம் திருமண மண்டபம் விபத்து.,

  சுனாமி போன்ற விபத்துகளில் நாம்.,

  மாணவிகள் பஸ்ஸில் எரித்த வழக்கு.,

  பிரேமானந்தா.,

  கோயம்புத்தூர் மத கலவரங்கள் \விநாயக ஊர்வல கலவரங்கள்.,

  காசு கொடுத்தால் உடனடி கற்பக தரிசனம்.,

  இன்னும் பல.,

  தயவு செய்து திருந்திவிடாதீர்கள் ., லஜ்ஜை இல்லாமல் வாழ்வது நமது பிறப்புரிமை !

  ( அண்ணன் ஈரோடு கதிர் வாழ்க! )

  ReplyDelete
 2. Nitthi atleast (atlast) helped us to open our mind

  ReplyDelete
 3. சக மனிதனிடம், பாசத்துடன் பழகாவிட்டால் கூட பரவாயில்லை, வெறுப்பு காட்டமால்
  இருந்தாலே போதும், நம்மிடமும் தேஜசும், மன நிம்மதியும் கிடைக்கும். உள்ளே வைத்து கொண்டு
  வெளியே தேடினால் இந்த மாதிரி ஆ"சாமிகள்" இன்னும் ஆயிரம் பேர் முளைப்பார்கள்.
  நல்ல பதிவு நண்பரே.

  ReplyDelete
 4. திருந்துங்கள் என்று சொன்னால் மட்டும் திருந்திவிடவா போகிறார்கள். மன ஆதங்கத்தை இறக்கி வைத்தாகி விட்டது.
  நன்றி சர்புத்தின்

  ReplyDelete
 5. நன்றி ராம்ஜி,
  நன்றி சை கொ பு
  நன்றி உலவு

  ReplyDelete
 6. nalla pathivu(kizippu)!

  ReplyDelete
 7. இன்னும் ரெண்டுநாள்ல எல்லாத்தையும் மறந்திடுவோம், நம்ம சூப்பர் ஸ்டார் படம் வரபோகுதில்ல
  அது தான் நெக்ஸ்டு

  ReplyDelete
 8. //சிக்கிகொண்ட ஒரு கருப்பு ஆட்டின் இரத்தத்தை எல்லா நரிகளும் குடித்து கும்மாளமிட்டு கொண்டிருக்கையில் நானும் ஒரு பதிவு எழுத வேண்டுமா என்று தான் யோசித்தேன். சந்தர்ப்பம் கிடைக்கும் வரை எல்லா நரிகளும் இங்கு உத்தமர் வேஷம் பூண்டிருப்பதை சௌகர்யமாக நாம் மறந்து விடுகிறோம்.//i totally dis agree with these lines.And your over all article having many contradictions..you are confusing ANMIHAM/RELIGION/DISBELIEF EVERYTHING.PLEASE DONT MINGLE ALL ---VIMALAVIDYA@GMAIL.COM

  ReplyDelete
 9. நன்றி SUREஷ்
  நன்றி அமைச்சரே

  ReplyDelete
 10. நன்றி விமலவித்யா

  ReplyDelete
 11. நல்ல பதிவு.
  நல்ல ஞானியை நல்ல மனதும் நோக்கமும் உடையவர்கள் எளிதாகக் கண்டு விடக் கூடும்..

  ReplyDelete
 12. சமுக சூழலை திர்மானிப்பது நாமாக இருப்பதால் நாம் தான் மாற வேண்டும்

  ReplyDelete
 13. எல்லாம் வல்ல இறையை முன்னிலை படுத்தாமல், தானே இறைவன் அவதாரம் என்பவனை தைரியமாக செருப்பால் அடியுங்கள், உங்கள் கருத்து.

  இதனை என்னால் மறுக்க முடியவில்லை,ஏற்றுக்கொள்கிறேன்


  அன்புடன்

  ReplyDelete
 14. அருமை
  இது போன்ற பதிவுகளை அதிகம் படிக்கிறேன்
  மக்கள் திருந்த ஆரம்பித்துவிட்டார்கள் என்றே எண்ணுகிறேன்

  ReplyDelete
 15. நம் சமயத்தின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை, அதன் தத்துவார்த்த உண்மைகள் நம் இரத்தத்தில் கலந்து விட்டிருப்பதையே உணர்த்துகிறது.//
  சிறப்பான கருத்துக்குப் பராட்டுக்கள்.

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...