Showing posts with label தமிழக. Show all posts
Showing posts with label தமிழக. Show all posts

Sunday, January 23, 2011

தமிழக மீனவர்களை கொல்லும் சிக்னல் எது..?

தமிழக மீனவர்கள் ஜாக்கிரதையென்று நேற்று தான் "கோழி கிளறிய குப்பை" என்னும் தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன். அதற்குள் நேற்று மாலையே மீண்டும் ஒரு தமிழக ஊனமுற்ற மீனவர் கொடூரமான முறையில் சிங்கள படையினாரால் கொல்லப்பட்ட செய்தியை பார்க்க நேர்ந்தது. இதற்கும் வழக்கம் போல் எல்லா தலைவர்களும் ஒருபாட்டம் அழுது தீர்க்க போகிறார்கள். கண்டனம், நடவடிக்கை உறுதி என்பதோடு களைந்து போக போகிறார்கள். அந்த நாட்டில் செத்தவனை தான் மீட்க வழியை காண்டோமில்லை. சொந்த நாட்டு சகோதரனை மீட்கவுமா ஜோதிடம் பார்க்க போகிறோம். என்ன கொடுமை அய்யா இது...!!

இவர்கள் எப்போதெல்லாம் தமிழக மீனவர்களை கொல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இலங்கை அரசுக்கு கடுமையான கண்டனம் என்கிறார்களோ..அப்போதெல்லாம் உடனே தமிழன் தாக்கபடுவது ஒரு வரலாறாகவே போய்விட்டது. ஒருவேளை இவர்கள் இங்கு இவ்வாறு செய்தி வெளிவிடும் போதெல்லாம் தமிழன் தாக்கப்பட வேண்டும் என்பது சிங்களனுக்கு இவர்கள் கொடுத்திருக்கும் சிக்னலோ என எண்ண தோன்றுகிறது. எத்தனை முறை...எத்தனை முறை.... இன்னமுமா கெஞ்சி கொண்டே இருக்க போகிறோம்..

அய்யா நல்லவர்களே விரைந்து நடவடிக்கை எடுங்களையா...!!!

தமிழினம் மீட்க கட்சி ஆரம்பித்தவர்களே...தமிழனை கொள்ளையடித்து கட்சி வளர்த்து வயிற்றை வளர்தோரே இன்னமும் தயக்கமா...? எல்லோரும் ஒன்றிணைந்து படையெடுத்து செல்ல வேண்டாம். நடவடிக்கை எடுக்கும் வரை, சிங்களனை ஒடுக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் என்று உட்காருங்களைய்யா...எல்லா தமிழனும் உங்கள் பின்னல் நிற்பான். ஐயோ பாவம்...!! ஒரு மணி நேர உண்ணாவிரதம் தான் உங்களுக்கு வசதியோ..



நம் தயவில் தானே மத்தியில் ஆட்சி நடக்கிறது. சிங்களனை கண்டிக்கும் வரை ஏன் நீங்கள் மீண்டுமொரு ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பிக்க கூடாது. தமிழன் வாழ்வை மீட்டெடுக்கும் வரை நாங்கள மத்தியரசிற்கு எந்த வகையிலும் ஒத்துழையோம் என்ற இயக்கம் ஆரம்பித்தால் என்ன..? அரசியல் வல்லுனர்கள் தான் இது சரியா என்று சொல்லவேண்டும்.

யாரவது தாக்கல் செய்தல் தான், தமிழன் தினம் தினம் சாவதை பொது நல வழக்காக எடுக்க முடியுமா..? உயர் நீதிமன்றமோ, உச்சநீதி மன்றமோ தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து அரசை கேள்வி கேட்க கூடாதா..? மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் நீதிமன்றங்கள் பொறுப்பில்லையா..

தனி மரம் தோப்பாகாது..தமிழர்களே ஒன்றிணைந்து குரல் கொடுங்கள் நல்ல வழி பிறக்கும். எல்லோருக்கும் இதை கொண்டு செல்லுங்கள், இப்பதிவிற்கு ஓட்டளிப்பதன் மூலம்.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...