சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Monday, February 22, 2010
ரஜினி தலைமையில் அஜித் புதிய கட்சி துவக்கம்..!
போற போக்க பார்த்த வெகுவிரைவில் இது நடக்கும் போல தெரியுது...ரஜினியின் அமைதி யாரின் சிக்னலுக்காகவோ வெய்ட் பன்ற மாதிரி தெரியுது. சிக்னல் கிடைச்சிட்ட அப்பறம் அடி தூள் தான். ரஜினியின் ஆன்மிகம் மற்றும் அனுபவம் + அஜித்தின் இளமை கூட்டணி ஆட்சி கட்டிலை பிடித்தாலும் பிடிக்கும்.
அஜித் சொன்னது எந்த விதத்திலும் தவறில்லை. சொன்ன இடம் குறித்து நெருடல் ஏற்படத்தான் செய்கிறது. அதே சமயம் அந்த இடத்தை தவிர வேறு எந்த இடத்தில சொல்லியிருந்தாலும் இவ்வளவு பெரிய வரவேற்போ, விமர்சனமோ எழுந்திருக்காது. நேரிடையாக வீட்டில் சந்தித்து விளக்கமும் கொடுத்தாயிற்று..திரும்ப திரும்ப ஒரு நடிகரின் திருப்திக்காக இதை பெரிதுபடுத்தி, ரஜினி அஜித்க்கு ரெட் கார்ட் என்பதெல்லாம்
ஆளுங்கட்சிக்கே பிரச்சனையை கொடுத்தாலும் கொடுக்கும்.
ஊடகங்களின் வளர்ச்சி மக்களுக்கு எல்லா விஷயத்தையும் வெட்டவெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. எந்த விஷயத்தால் ஒரு சாதாரண வாக்காளன் உணர்ச்சி வசப்படகூடும் என்பது புரியாத புதிர். ஒருவேளை ரஜினியை அரசியல் கட்சிகள் கட்டம்கட்ட ஆரம்பித்தால் ரசிகர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் பொங்கிவிடுவார்கள். ரஜினியின் இமேஜ் அப்படி.
இதே மாதிரியான ஒரு கூட்டத்தில் தான் கலைஞருக்கும், எம்ஜியாருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக வரலாறு உண்டு. ஒருவேளை வரலாறு திரும்புதோ...
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
-
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் திருவிழா குறித்த செய்திகள் வர ஆரம்பித்து சாமான்யனின் பொழுது போக்கிற்கு தினம் தினம் புது புது அற...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
-
தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்ட...
தலைப்பை பார்த்துட்டு, கட்சி உதயம் ஆயிருச்சோன்னு நினைச்சிட்டேன் :))
ReplyDeleteபதிவு அருமை தோழா...
ReplyDeleteநன்றி சைவ கொத்துபுரோட்டா
ReplyDeleteவிரைவில் உதயமானாலும் ஆகும்
கட்சிக்கு என்ன கொடி? என்ன பேர்? என்றும் ஒன்ன சொல்லவில்லையே சார்.
ReplyDeleteகணிப்பு நல்லாத்தான் இருக்கு..,
ReplyDeleteசூழல் ஓ.கே..,
ஆனால் நம்ம ஊரு அரசியல்ல காம்பினேஷன் பெரும்பாலும் வெற்றி அடைவதில்லை..,
மீண்டும் கண்கள் பனித்து, தயாநிதி போல இருவரையும் டம்மி ஆக்கப் போகிறார் பாருங்கள்.
ReplyDeleteநன்றி சுரேஷ்
ReplyDeleteமீண்டும் வாங்க
சார் சங்க ஊதிடிங்க என்னா நடக்குதுன்னு பாப்போம் (ரெண்டு பேருமே குழப்ப வாதிகளே சார் strong ஆ முடிவு எடுக்க மாட்டாங்களே )
ReplyDeleteநன்றி அமைச்சரே..
ReplyDeleteஎதோ நம்மால் முடிஞ்சது...
"இதே மாதிரியான ஒரு கூட்டத்தில் தான் கலைஞருக்கும், எம்ஜியாருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக வரலாறு உண்டு. ஒருவேளை வரலாறு திரும்புதோ"
ReplyDeleteஐயா அது MGR , இது ரஜினி. அரசியல் நடத்த ரசிகர்கள் மட்டும் போதாது சற்று துணிவும் வேண்டும். அது எல்லாம் ரஜினியிடம் இருபது மாதிரி தெரியவில்லை. இன்று ஒரு பேச்சு நாளை ஒரு பேச்சு இது தான் ரஜினி. சும்மா வீர வசனம் பேசி ரஜினியை ரணகளம் ஆகிவிடாதீர்கள். மனிஷன் இந்த வயசிலும் 20 வயது குட்டிகளுடன் டூயட் பாடி சந்தோசமா இருக்கிறது உங்களுக்கு ப்டிகவிலையா?
"இதே மாதிரியான ஒரு கூட்டத்தில் தான் கலைஞருக்கும், எம்ஜியாருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக வரலாறு உண்டு. ஒருவேளை வரலாறு திரும்புதோ"
ReplyDeleteஐயா அது MGR , இது ரஜினி. அரசியல் நடத்த ரசிகர்கள் மட்டும் போதாது சற்று துணிவும் வேண்டும். அது எல்லாம் ரஜினியிடம் இருபது மாதிரி தெரியவில்லை. இன்று ஒரு பேச்சு நாளை ஒரு பேச்சு இது தான் ரஜினி. சும்மா வீர வசனம் பேசி ரஜினியை ரணகளம் ஆகிவிடாதீர்கள். மனிஷன் இந்த வயசிலும் 20 வயது குட்டிகளுடன் டூயட் பாடி சந்தோசமா இருக்கிறது உங்களுக்கு ப்டிகவிலையா?
இங்கு எதுவேண்டுமானாலும் நடக்கலாம் நண்பரே...!! எம்ஜியாருக்கு இருந்த அதே துணிச்சல், விவேகம் ரஜினியிடமும் உண்டு.
ReplyDeleteஆனால், வெளிபடுத்த கூடிய காலம் அது அவர் கையில் இல்லை. சூழ்நிலைகள் உருவாகும் போது யார் வேண்டுமானாலும் தலைவர்கள் ஆகலாம்
நடந்தா நல்லாத்தான் இருக்கும்/////என்ன ஒரு விஷயத்தை ஊதிஊதி பெருசாக்குவது இந்த பத்திரிக்கைதானே பார்ப்போம்.....
ReplyDeleteநன்றி நெகமம்.
ReplyDeleteநெருப்பில்லாமல் புகையாது..பார்ப்போம்
ஐயா ரஜனி ரசிகனே, ரஜினிக்கு துணிவு இருக்கோ இலையோ, முதலில் உங்களுக்கு துணிவிருந்தால் என்னுடைய
ReplyDeleteபின்னூட்டத்தை முதலில் வெளிபடையாக பதியும் பார்க்கலாம்.
உங்கள் பின்னூட்டத்தை பதிவிலிட எதற்க்கு தைரியம், என் கருணை தான் வேண்டும்
ReplyDeleteஉங்களுக்கு எப்போ கருணை வரும் ஐயா? உங்களையும் ரஜினியையும் புளுகி எழுதினால் வருமா?
ReplyDeleteசரி எழுதுகிறேன், வருங்கால முதல்வர் ரஜினி வாழ்க !!
"ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம். வேறு என்ன சொல்ல. இதுவரை எதுவும் சொல்லிகொள்கிற அளவிற்கு சாதிக்கவில்லை. பார்ப்போம் எதுவரையோ.."
ரஜினி சினிமா உலகிலாவது சாதித்தார், ஆனால் எதுவுமே சாதிக்காது ரஜினி எதாவது அரசியலில் சாதிப்பார் என்று பகல் கனவு காணும் ரஜினி ரசிகன் ஜீவன்சிவம் வாழ்க.
வெட்கமாக இலையா ஐயா உங்களுக்கு 6 கோடி தமிழன் உள்ள தமிழ்நாட்டில் உங்களை ஆள்வதற்கு ஒரு தமிழன் இல்லை.
நீங்கள் தமிழரா என்று எனக்கு தெரியாது. நீங்கள் சாதித்த விவரங்களும் எனக்கு google search - ல் கிடைக்கவில்லை. தெரியபடுத்தினால் உங்களை பற்றியும் ஒரு பதிவை போட்டு அழகு பார்ப்பேன்.
ReplyDeleteமற்றபடி நான் எதுவும் சாதிக்கவில்லை என்ற உங்கள் கவலை எனக்கு புரிகிறது. என்ன செய்ய...6 கோடி தமிழரில் எதுவே சாதிக்கத என்னை போன்ற ஒரு சிலரை உங்களை போன்ற பெரியவர்கள் பொருத்து கொள்ள தான் வேண்டும்.
எம்ஜியார் வந்தது அந்த காலம். தமிழன் உலகம் அப்போது மிக சிறியது. இன்றோ தமிழன் இனையதள உலகில் நீச்சலடிபவன், உலக அறிவு பெற்றவன். ரஜினி எம்ஜியார் போல் வரமுடியாது. He has to prove himself before public then only he could succeed in politics at TN. MGR is an accident to Tamilnadu Politics, Accidents never happens everytime.
ReplyDeleteஎம் ஜி ஆர் அரசியலுக்கு வந்தது விபத்து என்றால் பத்து வருடங்கள் தொடர்ந்து அவர் ஆட்சி செய்திருக்க முடியாது. தமிழனின் இனைய அறிவு நடிகைகளின் தொடைகளுக்குள் மறைந்து கிடப்பதை தான் இன்றைய பதிவுகள் சொல்லுகின்றன..மற்றபடி அவன் அதே அறிவுஜீவி தான்.
ReplyDelete