அமெரிக்க அராய்ச்சிகுழு (47 நாட்டின் விஞ்ஞானிகளை கொண்ட ஒரு பெரிய குழு) அவர்களின் பத்தாண்டு கால ஆராய்ச்சி குறிப்புகளை வெளியிட்டிருகிறது. ஆதாவது மனிதனின் மிக தொன்மையான உடற்பாகங்களை (எலும்புக்கூடுகள்) தேடி செல்லும் அவர்களின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக எதியோப்பவின் கடுமையான பாலைவன பரப்பில் 44 லட்சம் வருடங்களுக்கு முந்தய மனித உடற் படிமங்களை கண்டு பிடித்திருகிறது. மனித வரலாற்று பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான சான்றாக இது கருதபடுகிறது. ஆர்டிபெதகிஸ் என்று இந்த மனிதனுக்கு பெயரிட்டிருகிறார்கள்.

மனித குரங்குகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையாதாக இந்த மனித உடற் படிமங்களின் அமைப்பு தெளிவுபடுத்தி உள்ளது. இன்றைய விஞ்ஞானிகளின் மத்தியில் மட்டுமல்ல, பொதுவாக நம் எல்லோருக்கும் இருக்ககூடிய ஒரு கேள்வி மனித குரங்கிலிருந்து தான் மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றான் என்றால் இன்னும் மனித குரங்குகள் இருப்பது ஏன்..? எந்த ஒரு மனித குரங்கும் நம் காலத்தில் மனிதனாக பரிணாம வளர்ச்சி பெறாதது ஏன்..?
முக்கியமான இந்த கேள்விகளுக்கு ஓரளவு தற்போது விடை கிடைத்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். மனித குரங்குகளுக்கும், அதன் மிக நெருங்கிய தொடர்புடைய ஆர்டிபெதகிஸ் மனிதனுக்கும் இருக்க கூடிய வித்தியாசங்களை இந்த உடற் படிமங்களை வைத்து ஓரளவு கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. அதாவது நாலு காலில் நடந்து கொண்டிருந்த இந்த விலங்குகள் இரண்டு காலில் நடக்க தொடங்கியதின் விளைவு தான் எல்லாவற்றிற்கும் மூல காரணம் என்கிறார்கள். (அதாவது இன்றைய அனைத்து விஞ்ஞான வளர்ச்சிக்கும் அடிப்படை) அப்படி என்றால் அவை நான்கு காலிலிருந்து இரண்டு காலில் நடக்க வேண்டிய நிர்பந்தம் எதனால் ஏற்பட்டிருக்கும்...?
1 . தங்களை ஆபத்திலிருந்து காத்து கொள்ள நான்கு காலில் ஓடுவதை விட இரண்டு காலில் ஓடுவது வேகமாக இருந்திருக்கலாம். சமதளங்களை விட கரடு முரடான பாதைகளை இரண்டு காலில் கடப்பது எளிதாக இருந்திருக்க கூடும்.
2 கொஞ்சம் யோசித்து பார்த்தல் நான்கு காலில் நடக்கும் போது உங்களால் எதையாவது கொண்டு செல்ல முடியுமா (carry )..? ஆனால் இரண்டு காலால் நடக்கும் போது கையில் கொண்டு செல்ல முடியும். முக்கியமாக இரையை மிக நீண்ட தூரம் தூக்கி செல்ல இரண்டு கால்களை கையாக உபயோகபடுத்தி கொள்ளலாம்.
3 தன் இணையை கவர இரண்டு காலில் நடந்து சாகசம் செய்ய முயற்சித்திருக்கலாம், சண்டையிட்டிருக்கலாம்.
ஆர்டிபெதகிஸ் மனிதன் இரண்டு காலில் நடக்க ஆரம்பித்ததின் தொடக்ககால உருவத்திலிருந்து இரண்டு விஷயங்களை கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. ஓன்று அவைகளின் கோரை பற்கள் கூர்மயகவோ, பெரிதாகவோ இல்லாமல் மனித பற்களை போல் இருப்பது. மனித குரங்கின் பற்கள், எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள, சண்டையிட, எதிரிகளை பயமுறுத்துவது போல் மிக பெரியதாக இருக்கும். ஆனால் அவை எழுந்து நடக்க ஆரம்பித்த காலங்களில் அவை சிறியதாக மாற என்ன காரணம் இருக்க முடியும்..? மற்றொன்று கை, கால்களில் இருக்க கூடிய பெருவிரல் மிகவும் சிறியதாக இருந்து சராசரி வளர்ச்சி அடைந்துள்ளது. (இன்றைய தோற்றத்திற்கு)
இதற்க்கு காரணமாக ஆராய்ச்சியாளர்கள் கருதுவது,
தன் இணையை கவர நினைத்த ஆண் குரங்குகள், பாதுகாப்பான இடங்களில் அவர்களை, குழந்தைகளை தங்க வைத்து வேட்டைக்கு கிளம்பிருக்க வேண்டும். வேட்டை முடிந்து இரையை நீண்ட தூரத்திலிருந்து கொண்டு வந்து தன் இணைக்கும், வாரிசுகளுக்கும் கொடுத்திருக்க வேண்டும். (கையில் தான் கொண்டுவந்திருக்கு முடியும்)

பாதுகாப்பான தூரங்களில் இடம் பெயர்ந்ததன் விளைவாக தங்களின் கோரை பற்களை அவை உபயோக படுத்தவேண்டியதிற்கான காரணங்கள் குறைந்திருக்க கூடும். மேலும் நேராக நடக்க ஆரம்பித்ததன் விளைவாக அவற்றுள் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ள புதிய வழிவகைகளை அவை அறிந்து கொண்டிருக்க கூடும். அதாவது பெண் குரங்குகள் தங்கள் இணை ஆக்ரோசமான ஒன்றாக இல்லாமல் சாந்தமனதாக, அன்பை பொழியகூடியதாக அவை தேர்ந்தெடுத்திருக்க கூடும்.
காலபோக்கில் நீண்ட கோரைப்பற்களுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. இரைக்ககவோ, தங்கள் இணையை கவர்வதற்காகவோ நீண்ட தூரம் பயணப்பட்ட ஆர்டிபெதகிஸ் மனித இனம், மனித குரங்குகூட்டதுடன் இருந்த தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு தனி உயிரினமாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க கூடும். நான்கு காலில் நடக்கும் போது, மரத்தில் தாவும் போது அதற்க்கு ஒத்திசைவாக இருந்த பெருவிரல் நேராக நடக்க ஆரம்பித்ததன் விளைவாக அளவிலும் பயன்பாட்டிலும் மாற்றம் பெற்றிருக்கும்.


நடக்க ஆரம்பித்தான் விளைவாகவே மனிதனிடம் மிக பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. தரையில் பாதங்களை அழுந்த ஊன்றும் போது அவை மனித மூளையில் பல அதுவரை பயன்படுத்த படாத சிந்தனை நரம்புகளை தூண்டிவிட்டுருக்கும். அதில் முளைவிட்டு தான் இன்று அயல்கிரக உயிரனங்களை பற்றி ஆராயும் அளவிற்கு மனிதனை உந்தி தள்ளியிருக்கிறது. அதுமட்டுமில்ல பொண்டாட்டி கிட்ட அடி வாங்காம தப்பிகறது எப்படிங்கரதிலிருந்து டூ - வீலர ஓரங்கட்டி மாமுல் வாங்கற ஐடியா வரை எல்லாமே மூளை நரம்புகளுக்குள் அடக்கம்.
இப்பதான் பெரியவங்க சொந்த கால்ல நில்லுன்னு சொன்னதுக்கு அர்த்தம் புரியுது...
நன்றி: டிஸ்கவரி சேனல் Mega Monday நிகழ்ச்சி மற்றும் சில இனைய குறிப்புகள், படங்கள்