
நிகழ்வுகளின்
நெருக்குதல்களில்..
கைபிடித்த உறவும்
கைகொட்டி சிரித்தபின்
ஒளிந்துகொள்ள வழியின்றி..
தோல்வியை ஒப்புகொண்டாயிற்று
அம்மனமானபின்
கைகொண்டு எதைமூட...
சா(கு)ம் பிணங்கள்
சாவிற்கு அழும்,
பிணங்கள் அழுததுண்டா..!!
கல்வீசி சென்றவர்கள்
எல்லோருக்கும்
முகமோ முதுகோ
காட்டிவிட்டேன்.
நிராயுதபாணியின் தோல்வியில்
ஆதாயம் தேடிய முகங்களின்
கைகோர்த்து சிரித்த
பழையமுகவரிகள்
பத்திரமாகத்தான் இருக்கிறது
இலக்குகள் மிச்சமுண்டு
இதயம் சிதறியபின்னும்..!!
அம்மணத்தை தின்றவனின்
கைகொரு வைரகாப்பு
முதுகு பார்க்க
முப்பரிமான கண்ணாடி
கல்வீசிய சிநேகிதர்கெல்லாம்
என் செலவில் பரிசளிக்க
எனக்கான ஒரு நாளில்
நானே வருவேன்
மீண்டு(ம்)
பதிவர்களுக்கான மாத இதழ் வெள்ளிநிலாவில்
இக்கவிதை பிரசுரிக்கபட்டுள்ளதற்கு என் நன்றிகள்.
அடேங்கப்பா, அருமை.
ReplyDeleteநன்றி அண்ணாமலையான்
ReplyDeleteநன்றி சைவகொத்துபுரோட்டா (நன்றி சொல்வதற்காவது உங்கள் உண்மையான பெயரை தெரிந்துகொள்ள ஆசை)
??
ReplyDeleteகேள்விகுறியின் காரணம் புரியவில்லை சுரேஷ்...
ReplyDeleteஒரு நண்பனின் அனுபவம் தான் மேலுள்ள கவிதை
நண்பன் மீண்டு(ம்) வர விருப்பங்களுடன்..
ReplyDeleteநன்றி ரிஷிபன்
ReplyDeleteநல்லாருக்கு
ReplyDeleteநன்றி குமார்.
ReplyDeleteமறுபடியும் வாங்க
சார் ரொம்ப நல்லாருக்கு
ReplyDeleteகாயங்கள் படபட
நெஞ்ஜமும் உறுதியாகும்
நெஞ்ஜம் உறுதியானால்
உலகம் நம்கையில்
(சார் எனக்கு தமிழ் டைபிங் ரொம்ப புதுசு மிஸ்டேக் இருந்தா சாரி)
நன்றி அமைச்சரே..
ReplyDeleteபதிவுலகிற்கு உங்களை வரவேற்கிறேன்..