
அட...!! செடிகூட
முட்டையிட்டிருகிறதே...
எந்த நாகம் தீண்டியதோ..
நுரைதள்ளும் இச்செடியை
கதிரவன் தலை தூக்க
பனியெல்லாம் கரைகிறது.
கரையாத பனியாவென்று
கதிரவன் அனல் கக்க
வானம் பார்த்து பல்லிளிக்கும்
பருத்தி பூக்கள்...!
ஊருக்கே
உடையளிக்கும் இப்பூக்கள்
வெட்டவெளியில் அம்மணமாய்
அட, நல்லா இருக்கே இது.
ReplyDeleteநன்றி சைவகொத்துபுரோட்டா
ReplyDelete