Friday, February 26, 2010

கீழ்த்தரமான மருத்துவர்கள்

சமீபத்தில் ஒரு மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது. தர்மபத்தினி படியில் கால் சறுக்கி எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. நகரின் புகழ் பெற்ற எலும்பு நிபுணர். வழக்கமான ஸ்கேன் பரிசோதனை எல்லாம் முடித்து மாவு கட்டு போட்டார்கள். வலி குறைவதற்காக மாத்திரை எழுதிகொடுத்தார். கையில் கொண்டுபோன பணம் பற்றவில்லை என்பதால் மாத்திரையை அப்புறம் வாங்கி கொள்வதாக சொல்லிவிட்டு வந்துவிட்டோம்.

வீட்டிற்கு வந்தபின் பணம் எடுத்துகொண்டு ஒவ்வொரு மருந்துகடையாக ஏறி இறங்கியும் அந்த டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரைகள் எங்கும் கிடைக்கவில்லை. கடைக்காரர்கள் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்தது.

சார்...இது எங்கே ட்ரை பண்ணாலும் கிடைக்காது. அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் அல்லது அருகில் இருக்கும் மருந்துகடையில் தான் கிடைக்கும். இவர் எழுதி இருப்பதில் Tablet - ஐ குறிக்கும் T மட்டும்தான் தெரிகிறது. மற்ற எழுத்துகள் எதுவும் புரியவில்லை. இது ஒரு வியாபார தந்திரம். சிரமம் பார்க்காமல் அங்கேயே போய் வாங்கிகொள்ளுங்கள் என்றார்.


(அந்த டாக்டர் எழுதி கொடுத்த மருந்து சீட்டு)

மருத்துவர்களின் கையெழுத்து புரியாமல் இருப்பதற்கு அவர்கள் மெத்த படித்தவர்கள் என்பது தான் காரணம் என்று நினைத்திருந்தேன். ஒரு டிவி பேட்டியில் கூட பிரபல மருத்துவர் ஒருவர், நோயாளியின் தன்மையை பொறுத்து, அவர்களை குனபடுத்த கூடிய ஒரு 100 மருந்துகளின் பெயரையாவது மனம் ஞாபகபடுத்தும். அதில் சரியானவற்றை தோன்றும் போது வேகமாக எழுதுவதால் அவ்வாறு மருத்துவர்களின் கையெழுத்து கோணலாக இருக்கிறது என்றார். வியாக்யானம் எல்லாம் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் அதற்க்கு பின்னால் இருக்கும் உள்குத்து, வியாபார புத்தி இப்போது தான் இந்த மரமண்டைக்கு எட்டியிருக்கிறது.

இதைவிட கொடுமை என்னவென்றால் ஒரு அமெரிக்க வாழ் இந்திய மருத்துவரின் அனுபவம். இவரும் ரொம்ப பிரபலமானவர் தான். இவரின் சிகிச்சைக்காக காத்திருக்கும் அமெரிக்கர்கள் ஏராளம். இவர் ஒரு நாள் விடுமுறை என்றாலும், அவர் வந்தபிறகு சிகிச்சைக்கு வருவதாக சொல்லும் அளவுக்கு அவர் கைராசிக்காரர். இந்நிலையில் அமெரிக்க வாழ்க்கை அலுப்பு தட்டவே இந்தியா வந்து செட்டிலாகும் ஆசையில் இந்தியா வந்திருக்கிறார். அவரின் பெருமையை பற்றி அறிந்திருந்த இங்குள்ள மருத்துவமனைகளின் முதலாளிகள் வழக்கம் போல், அவரை வளைத்து போட்டு கல்லா கட்ட முயற்சிதிருக்கிறார்கள்.

ஆறு இலக்க சம்பளம், கார், வீடு என்று சலுகைகளை அடுக்கி இருக்கிறார்கள். இவரும் பிரபலமான ஒரு மருத்துவமனையில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர்க்கு, மருத்துவமனை நிர்வாகம் அனுப்பிய appointment letter கண்டதும் அதிர்ந்து பின்னங்கால் பிடரியில் பட அமெரிக்காவிற்கே ஓடி விட்டாராம். அதிலிருந்த விபரம் இது தான், ஒரு நாளைக்கு அவர் பரிந்துரை செய்ய வேண்டிய
ஸ்கேன் - 15 ,
இரத்த / சிறுநீர் பரிசோதனை - 10
ECG / ECP / இருதய பரிசோதனை - 5
ஆபரேஷன் - வாரம் 2
எழுதிதரவேண்டிய மருந்துகள் மற்றும் உபகரணங்களின் விபரம்.

மக்கள் சேவை மகேசன் சேவை என்ற போர்வையில் உலாவரும் வெள்ளுடை தரித்த கருப்பாடுகளின் லட்சணம் இது தான். கேட்டால் படிப்பதற்கே 50 லட்சம் செலவாகிறது. மருத்துவமனை கட்ட கோடி கணக்கில் செலவளித்த பணத்தையெல்லாம் நங்கள் எப்படி எடுப்பது என்ற கேள்வி வேறு. சாதாரண மக்களின் உயிரைபற்றி கவலைப்பட இங்குயாரும் இல்லை. சீட்டுக்கு 40 லட்சம் வாங்கும் கல்லூரி முதலைகள் பெரும்பாலனோர் மக்கள் தேர்ந்தெடுத்த அரசியவா(ந்தி)திகள் தான். வசூல்ராஜா M B B S என்ற படத்தின் பெயர் தங்களை கேவலபடுத்துவதாக உள்ளது என்று போர் கொடி தூக்கிய மருத்துவர்கள், ரமணா படத்தில் செத்த பிணத்தை வைத்து இவர்கள் செய்யும் அட்டூழியத்தை வெளிச்சம் போட்டு காட்டிய பொழுது வாய்மூடி கொண்டுதானே இருந்தார்கள்.
முன்பெல்லாம் நடுத்தர, சாதாரண மக்கள் பல சிரமங்களுக்கிடையில் நன்கு படித்து டாக்டராக உயர்ந்தார்கள். இன்றெல்லாம் அப்படியில்லை. புறம்போக்கு, பொறுக்கி, அரசியவாதி, உஊரையடிது உலையில் போடுவனின் வாரிசுகள் தான் டாக்டருக்கு படிக்க முடிகிறது. பின் எங்கிருந்து இவர்களிடம் சேவையை எதிர்பார்க்க முடியும்.

தங்கள் மகனையோ, மகளையோ டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்ற கனவோடு அரைவயிறு கஞ்சி குடித்து பணம் சேர்க்கும் வெகு சாதாரண மக்களே உங்களக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் நினைப்பது போல் டாக்டர் தொழில் ஒன்றும் அத்தனை புனிதமான நிலையில் இன்று இல்லை. அறைவயிரோடு நீங்கள் காணும் கனவெல்லாம் கோடி கொட்டி கட்டிய பணமுதலாளியின் மருத்துவமனை சுவர்களில் சிமெண்டிற்கு பதிலாக பூசப்படும். உங்கள் வாரிசு எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யட்டும். அதற்கும் அரைவயிறு கஞ்சி என்றாலும் பரவாயில்லை. பணத்திற்காக நாளை அவனும் நம் போன்றோரின் இரத்தத்தை குடிக்கும் பணவெறி பிடித்த இரத்த காட்டேரியாக மாறாமல் இருந்தால் போதும்.

11 comments:

 1. இந்த நிகழ்வு ரொம்பவே, உங்களை பாதித்திருக்கிறது, சம்பந்த பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 2. நன்றி சைவகொத்துபரோட்டா,
  உங்களின் (வி)வேகமான பின்னூட்டத்திற்கு

  ReplyDelete
 3. முக்கியத்துவம் வாய்ந்த விசயம்..

  எழுதப்படவேண்டிய விசயமும் கூட..

  வாழ்த்துகள்

  ReplyDelete
 4. நமது பாரம்பரிய மருத்துவமான இயற்கை மருத்துவத்தினை தமிழ் மக்கள் தேட ஆரம்பித்தால் இந்த காசு பிடுங்கும் மருத்துவமனைகள் ஆள் காலியாக கிடக்கும்.
  இப்போதெல்லாம் நமது பாரம்பரிய மருத்துவம் கேலிக்குரியதாக பார்க்கபடுவதுதான் வேதனை

  ReplyDelete
 5. மிகவும் சரியாக சொல்லி விட்டீர்கள். சமிபத்தில் வந்த காய்ச்சலால், நம் டாக்டர்கள் காட்டில் சரியான மழை. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. டாக்டராய் பார்த்து தான் திருந்த வேண்டும்

  ReplyDelete
 6. வைத்தியரே இப்படியெண்டால்,மற்றவர்களைக் கேட்கவும் வேண்டுமா?

  ReplyDelete
 7. டாக்டர்களாய்ப் பார்த்து நம்மைக் காப்பாற்றினால்தான் உண்டு..

  ReplyDelete
 8. நன்றி நிகழ்காலத்தில்
  நன்றி பதஞ்சலி யோக கேந்திரம்
  நன்றி தமிழ் உதயம்
  நன்றி உருத்திர
  நன்றி ரிஷிபன்
  மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க

  ReplyDelete
 9. It is again business. Doctor profession has become a business than a service. Why? we should think, private colleges charge a donation of minmum of 30 lacs for MBBS admission and around Crore for MD seat. then how u expect a doctor tobe a service oriented man than a business man. It is a problem with our society and Doctors alone could not be blamed.

  ReplyDelete
 10. எழுதி ஒருவருடத்திற்கு பின் பின்னூட்டம் வருவது சந்தோசம். எழுத்தில் மட்டும் அல்ல அதன் கருத்திலும் உயிர் இருக்கிறது.
  Thanks Dr.Ravikumar.

  ReplyDelete
 11. ஜீவன் சிவம் அவர்களே உங்கள் உடன் பதிலுக்கு நன்றி. For your information I am not a doctor

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...