Tuesday, February 8, 2011

ராமதாசும் கங்குலியும்...!!

மீண்டும் ஒரு மக மெகா ஊழல் குறித்து செய்திகள் அடிபடுகிறது. ராசாவிற்கு இப்போது புது தெம்பு வந்திருக்கும். கல்மாடிக்கு வந்தது போல..

அரசியல் நாகரீகம் குறித்து பேச கலைஞருக்கு எந்த அருகதையும் இல்லை. முரசொலி கட்டுரைகளே அதற்க்கு சாட்சி. இப்போதெல்லாம் நிருபர்கள் மீது எரிந்து விழுவது போல் பேசுவது எந்த வகை நாகரீகம் என்று தெரியவில்லை. அம்மையாரை குறித்த விமர்சனங்கள் எல்லாம் எந்த மாதிரி நாகரீகம். இன்றைய தினசரியில் கூட அம்மையாரை "வெத்துவேட்டு" என்று செல்லமாகத்தான் அழைத்திருக்கிறார்

தலித்தியம் பேசுவது என்பது பிராமணர்களை எதிர்ப்பது மட்டும் தானா....? ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருக்கு..?

தாவுவதில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையும் ராமதாசிற்கு அத்துபடி போல...அ தி மு காவிற்கு கெட்ட நேரம் வந்தால் பா ம க கூட்டு சேருவதை தடுக்க முடியாது. கங்குலியும் நம்ம ராமதாஸ் ரேஞ்சிற்கு இறங்கி வந்துவிட்டார். யாரவது கவனிங்கப்பா.. இருந்த இருப்பென்ன...வாழ்ந்த வாழ்க்கையென்ன

சுப்பிரமணியம் சாமி மீது நடவடிக்கை என்பதெல்லாம் சும்மா பேத்தல்..சாமியிடம் இருக்கும் ஆதாரங்கள் அப்படி..

வெளியுறவு துறை அமைச்சராவது ரொம்ப எளிது போல...கண்டனம் தெரிவிக்கவும், வருத்தம் தெரிவிக்கவும் தெரிந்தால் போதும். கிருஷ்ண வேறு என்ன செய்கிறார்.

கூகிள் செய்திகள் - பொழுது போக்கு தலைப்பின் கீழ் வரும் செய்தி - ராசாவிற்க்கு மேலும் இரண்டு நாட்கள் காவல் நீட்டிப்பு - என்னடா கொடுமை சார் இது. கூகுளுக்கு கூட தெரிந்திருகிறது தமிழர்களின் ஒரே பொழுதுபோக்கு ஊழல் விசாரணைகள் தான் என்று.


யோகா என்பது - Its tool of reducing or increasing our body weight. ஒரு இளைஞர்கள் கூட்டத்தில் ஒட்டு கேட்டது. நல்லவேளை பதஞ்சலி இன்று உயிருடன் இல்லை.
யோகா பிறந்த தேசம் இது என்று "சொல்லிகொல்லவே" வெட்கபடுகிறேன்.

அவ்வளவு தான்..மறுபடியும் சந்திப்போமா..வந்தது வந்தீங்க எதாவது சொல்லிட்டு போங்க...

5 comments:

 1. உள்ளூர்க்காரர்களை கட்டாயம் ஆதரிக்கவேண்டுமே!
  எங்க இருக்கீங்க?

  ReplyDelete
 2. //யோகா என்பது - Its tool of reducing or increasing our body weight. ஒரு இளைஞர்கள் கூட்டத்தில் ஒட்டு கேட்டது. நல்லவேளை பதஞ்சலி இன்று உயிருடன் இல்லை.
  யோகா பிறந்த தேசம் இது என்று "சொல்லிகொல்லவே" வெட்கபடுகிறேன்//

  :)

  ReplyDelete
 3. வருகைக்கு நன்றி மருத்துவரே...பிறந்தது கோவை என்றாலும் தற்போது வசிப்பது சிங்கார சென்னையில் தான்.

  ReplyDelete
 4. இப்படி சொல்லி சொல்லி தான இந்த மஞ்சத்துண்டு நம்மள கொலையா கொன்னுட்டு இருக்கு!

  அத்தனை விஷயங்களும் தூள் நல்ல சொல்லிருக்கீங்க

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி விக்கி

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...