Monday, August 26, 2013

பிரதமர் வாய்ப்பை தவறவிடும் பி‌ஜெ‌பி

திரு பொன். ராதாகிருஷ்ணன் சொல்வது போல் நாடு முழுவதும் மோடி ஆதரவு அலை பெருகி இருப்பது  உண்மை தான். ஆனால் அயோத்தியில் யாத்திரை என்ற பெயரில் இவர்களே தங்கள் தலையில் மண் வாரி போட்டுக்கொள்வார்களோ என்று தோன்றுகிறது.

வெற்றி பெறுவது முக்கியம் அல்ல. திரு.மோடி அவர்கள் சொல்வது போல் பெரும்பான்மையோடு வெற்றி பெறுவது ரொம்ப முக்கியம். மைனாரிட்டி அரசாக காங்கிரஸ் படும் பாடு  எல்லோருக்கும் தெரிந்தது தானே.

பி‌ஜெ‌பி யின் வாக்குறுதிகள், மோடி வந்தால் வல்லரசாக்கிவிடுவோம் என்ற பிரசாரங்கள்  எல்லாம் பெரும்பான்மை இல்லாமல் போனால் கானல்  நீராய் போகும்.

சமூக தளங்களில் மோடிக்கான பிராசரம் வலுத்து வருகிறது. இளைஞர்கள் மோடியை ஆதர்ச புருஷனாக நினைக்க தொடங்கிவிட்டார்கள். ஒரு கோழையான திருடனிடம் அகப்பட்டுக்கிடப்பதை விட, ஒரு வீரனிடம் அடிமையாக கூட இருக்கலாம்.

பி‌ஜெ‌பி என்பது பெரும்பான்மை இந்துகளுக்கான கட்சியே தவிர, இவர்கள் ஓட்டு மொத்த இந்துக்களின் பிரநிதிகள் அல்ல. அயோத்தியில் கோவில் வேண்டுமா என்பதை மக்கள் வாக்கெடுப்பிற்கு விட இவர்கள் தயாரா.. அதனால் அயோத்தி விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது.

காங்கிரஸ் நினைப்பது போல உணவு பாதுகாப்பு மசோதா இவர்களின் சாதனையாக சொல்லிக்கொள்ளலாமே தவிர வோட்டாக மாறும் என்று சொல்ல முடியாது.  மாநில கட்சிகளின் அரசியலை,  இமஜை தாண்டி இவர்களால் இதை ஓட்டுக்களாக மாற்ற முடியாது. இலங்கை விஷயத்தில் இவர்களின் நிலைப்பாடு ஒன்று போதும் தமிழகத்தில் மண்ணை  கவ்வ. இரண்டு லட்சம் தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்சே அரசுக்கு விளக்கு பிடித்தவர்கள் என்ற கரை இனி எப்போதும் போகபோவதில்லை.

பி‌ஜெ‌பி வெற்றி பெற செய்ய வேண்டியதெல்லாம், மிக தெளிவான திட்டமிடல். நாட்டின் கடைசி குடிமகனுக்கும் சென்று சேர வேண்டிய பிரசாரம்.

1. ஊழல் மலிந்த காங்கிரஸ் அரசின் அவலங்களை பிராந்திய மொழிகளில், மாநிலத்தில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் அல்லது கலைஞர்கள் மூலமாக எடுத்து சொல்வது
2. இந்தியா எல்லைகளில் அந்நிய நாடுகளின் அச்சுறுத்தல் மற்றும் காங்கிரஸின் கையாலாகாதனதை பிரசங்கிப்பது
3. குடும்ப அரசியலும் அதனால் ஏற்பட்ட பொருளாதார தேக்கமும்.
4. ரூபாயின் மதிப்பு வீழிச்சி மற்றும் கட்டுபடுத்த முடியாத விலைவாசி
5. தோல்வியடைந்து விட்ட பொருளாதார கொள்கைகள்
6. செயலற்ற பிரதமர்
7. நிலம், நீர், ஆகாயம் என பரந்துபட்ட ஊழல் அமைச்சர்கள், அவர்களை அரவனைக்கும்  அரசு  என
மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய விஷயங்கள் ஏராளம்.கோஷ்டி பூசலாலும், தேவையற்ற ஈகோ பிரச்சனையாளும் அருமையான வாய்ப்பை தவறவிடாமல் இருந்தால் சரி. 

8 comments:

 1. Exactly. Im also in the same thought.

  ReplyDelete
 2. nice post..i have also the same view..

  ReplyDelete
 3. வருகைக்கு நன்றி ரமா

  ReplyDelete
 4. //ஒரு கோழையான திருடனிடம் அகப்பட்டுக்கிடப்பதை விட, ஒரு வீரனிடம் அடிமையாக கூட இருக்கலாம்.//

  வீரன் விளம்பர வீரனாக இல்லாமல் இருந்தால் சரி .

  நல்ல பார்வை .

  ReplyDelete
 5. நம்புகிறோம் ஜீவன், கார்கில் போரை முன்னெடுத்தது பி‌ஜெ‌பி தானே..

  பார்ப்போம் எவ்வளவோ பார்த்துவிட்டோம்.

  ReplyDelete
 6. பார்க்கலாம் மோடி வித்தை ஜெயிக்குமா, என்று

  ReplyDelete
 7. இது மோடி வித்தையா இல்லை மோடி வைத்தியமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

  வருகைக்கு நன்றி சங்கர்

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...