சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Saturday, August 17, 2013
ஏற்றுமதியாளர்களையும் தற்கொலையை நோக்கித் தள்ளும் மத்தியரசின் சாதனைகள்
சமீபத்தில் முகநூலில் வாசிக்க நேர்ந்ததை, அதிகம் பேரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் என் பிளாகில் பதிவு செய்கிறேன். சம்பந்த்தபட்டவர்கள் அனுமதிப்பார்கள் என்று நம்புகிறேன்.
மத்தியரசின் தோல்விடைந்து விட்ட பொருளாதார கொள்கைகள், நாட்டின் நான்கு திசைகளிலிருந்தும் விமர்சனங்களையும், அதிருப்திகளையும் கிளப்பி இருக்கிறது. இந்தியா பங்கு சந்தைகள் ஒரே நாளில் இரண்டு லட்சம் கோடி அளவிற்கு முதலீட்டாளர்களுக்கு நாட்டதை ஏற்படுத்திருக்கிறது.
இன்றைய பொருளாதார சூழல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி திருப்பூரில் செவ்வாயன்று நடைபெற்றது. கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற்ற கருத்தரங்கில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகர், பொருளா தாரப் பேரறிஞர் டாக் டர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறுகையில் " மத்திய அரசு பின்பற்றும் தாராளமயக் கொள்கைகளால் நம் நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைப்போல, ஏற்றுமதியாளர்களையும் தற்கொலையை நோக்கித் தள்ளும் அபாயம் ஏற்பட் டுள்ளது என்று கூறினார். இந்த கலந்துரையாடல் நிக ழ்ச்சிக்கு முற்போக்கு வாச கர் வட்டத்தின் அமைப் புக்குழு உறுப்பினர் வே.தூய வன் தலைமை தாங்கி னார். அமைப்பாளர் எஸ். பொன் ராம் வரவேற்றார். இதில் பங்கேற்று, "இன்றைய பொருளாதார சூழல்" குறித்து டாக்டர் ஆத்ரேயா உரையாற்றினார்.
அப் போது அவர் கூறியதாவது: 1991ம் ஆண்டு, "நாடு கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வெளிநாட்டு கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை" என்று சொ ல்லித்தான் புதிய பொரு ளாதாரக் கொள்கையை ஆட்சியாளர்கள் அமல் படுத்தினர். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் அந்த கொள் கைகள் பின்பற்றப்படும் நிலையில், 20 ஆண்டுகளுக் குப் பிறகு இப்போதும் அதே நெருக்கடி நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. 1991ம் ஆண்டு பாடிய அதே பாட்டைத்தான் இப்போ தும் மத்திய ஆட்சியாளர்கள் பாடிக் கொண்டிருக்கின் றனர். உற்பத்தி செய்த சரக் குகளை ஏற்றுமதி செய்வ தன் மூலம் நம் நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்தை விட பொருட்களை இறக் குமதி செய்யும் செலவு அதி கமாக இருக்கிறது. அந்நியச் செலாவணி இருப்பு குறைந் துள்ளது. நிதி நெருக்கடியும் கடுமையடைந்திருக்கிறது. இந்தகாரணங்களால்தான் நமக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.இதனால் நாட்டின் வரவு செலவு இடிக்கிறது. வளர்ச்சிப் பணிகளுக்குக் காசில்லை என்று அரசு கையை விரிக்கிறது. இந்த பற்றாக்குறை என்பது நம் நாட்டு மொத்த உற்பத்தியில்4.8சதவிகிதமாகவரலாறு காணாத அளவுக்கு உயர்ந் திருக்கிறது. பற்றாக்குறை யின் உண்மையான அளவு நம் மொத்த உற்பத்தியில் 11.8 சதவிகிதமாகும்.ஆனால்வெளி நாட்டிற்குச்சென்று கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் நம் உழைப்பாளர்கள் இந்தியா விற்கு பணம்அனுப்புவதால் தான் இந்த பற்றாக்குறை 4.8 சதவிகிதமாக உள்ளது.இந்தி யாவிற்கு அந்நியச் செல வாணி கொடுக்கக்கூடிய நம் நாட்டு உழைப்பாளிகளுக்கு மத்திய அரசு எந்த விருதும் தருவதில்லை. ஆனால் ஒரு பைசா கூட அந்நியச் செலா வணி தராத, பெப்ஸி நிறு வனத்தின் தலைமை அதிகா ரியாக பணியாற்றும் இந் திரா நூயிக்கு மத்திய அரசு விருது வழங்குகிறது.பற்றாக்குறையை சமாளிக்க அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்கிறது அரசு.
ஆனால் பல்வேறு வரியினங்கள் மூலம் இந்நாட்டின் பெரும் பணக்கார நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.5 லட்சத்து 22 ஆயிரம் கோடி யை வசூலிக்காமல் கடந்த பட்ஜெட்டில் சலுகையாக அவர்களுக்கு வழங்கிவிட் டனர். அதேசமயம் பொதுத் துறை நிறுவனங்களை விற் பனை செய்து பணம் பெறு வதற்கு முயற்சிக்கின்றனர். எப்போது பார்த்தாலும், நம் நாட்டின் வளர்ச்சி விகிதத் தை அதிகரிக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். 2012 - 13ல் 8.5 சதவிகிதமாக ஜிடிபி உயரும் என்று ஆரம்பத்தில் சொன்னார்கள்,ஆனால் அது படிப்படியாகத் தேய் ந்து 5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை யைச் சமாளிக்க எப்பாடு பட்டாவது அந்நியச் செலாவணியை அதிகரிக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது. வெளிநாட்டுக் கம்பெனிகளின் காலில் விழுந்தாவது, பட்டுக்கம்பளம் விரித்து நம் ஊருக்கு வரச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்நிய நேரடி மூலதனம் நம் நாட்டுப் பங்குச் சந்தைக்கு வர வேண்டும் என்று கண் மூடித்தனமாக ஆட்சியா ளர்கள் செயல்படுகின்றனர். அப்படி வரும் வெளிநாட் டுப் பணம் நம் உற்பத்தித் துறையில் ஈடுபடப் போவ தில்லை. லாபம் ஈட்டுவதை மட்டுமே குறியாகக் கொ ண்ட அந்நிய நேரடி மூல தனம் பங்கு சந்தையில் லாபம் கிடைத்தால் இருக் கும், இல்லாவிட்டால் வெளியேறிவிடும். இதனால் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடையாது.
உள்நாட்டுச் சந்தையை பலப்படுத்தி விவசாயம், தொழில் ஆகியவற்றுக்கு ஊக்கம் கொடுத்தால் நம் பொருளாதாரம் ஆரோக்கியமாக வளரும். ஆனால் ஆட்சியாளர்கள் முழுக்க முழுக்க அந்நிய நேரடி மூலதனத்தை இங்கு வரவைப்பதை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படுகின்றனர். விவசாயத்திற்கோ, தொழிலுக்கோ எந்த உதவியும் செய்வதில்லை. தாராளமயம் என்பது ஒரு நல்ல சொல். தா ராள மனம் என்பதைக் குறிக்கும். ஆனால் தாராளமயக் கொள்கை என்பது அப்படியல்ல, அதை "நெறி முறை நீக்கம்" என்று சொல் வதே பொருத்தமாக இருக்கும்.இதனால் தான் நாட்டில் விவசாயிகள் தற்கொ லை செய்யும் நிலை ஏற்பட் டுள்ளது. ஏற்றுமதியாளர் களுக்கும் அரசு எந்த உதவி யும் செய்வதில்லை. அவர் களையும் தற்கொலையை நோக்கித் தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் யாரும் அத்தகைய முடிவுக் குப் போகக்கூடாது, ஆட் சியாளர்களின் கொள்கை களை மாற்றுவதற்குப் போ ராட வேண்டும்.திருப்பூரைப் பொறுத்தவரை பின்னலாடை ஏற்றுமதி ஒன்றை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது. பன்முகமான தொழில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் திருப்பூரைப் பாதுகாக்க வேண்டும் என்று டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறினார்.இதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் ஊராட்சித் தலைவர் வே.முத்துராமலிங்கம், பேராசிரியர் சுந்தரம், பார்க் கல்லூரி முதல்வர் திருமாறன், கவிஞர் சுப்ரபாரதிமணியன், ஆர்.ஏ.ஜெயபால், டிரிபிள் எக்ஸ் குப்புசாமி, பேண்டம் நடராஜன், எம்எல்எப் சம்பத், ஹரிஹரன் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் இதில் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் நிசார் அகமது, கே.காமராஜ், கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜகோபால் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆர்.ஈஸ்வரன் நன்றி கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
-
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் திருவிழா குறித்த செய்திகள் வர ஆரம்பித்து சாமான்யனின் பொழுது போக்கிற்கு தினம் தினம் புது புது அற...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
-
தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்ட...
No comments:
Post a Comment
உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.