Thursday, August 29, 2013

கள்ளகாதல் தவறென்றால் கள்ள திருமணம் சரியா..

முக நூலில் காங்கிரஸை போட்டு கிழி கிழியென்று கிழிக்கிறார்கள். மானமுள்ளவன் தூக்கில் தான் தொங்கவேண்டும். அது இருந்தான் ஏன் அரசியலுக்கு வரபோகிறார்கள்.

முகநூலில் மோடிக்கான பிரசாரம் வெளுத்து வாங்குகிறது. தெரியாத்தனமாக லிங்க் கொடுக்க போக போட்டு தாளிக்கிறார்கள். எப்படி (Delink)
செய்வதென்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

முஸ்லிம் சகோதரர்களை மிக கேவலபடுத்தி கமெண்ட் போடுகிறார்கள், பதிவிடுகிறார்கள். எங்கே இவர்கள் பிரசாரம் நெகட்டிவ் - ஆக போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரசிர்க்கு மாற்று அவசியம். அது மூன்றாவது அணியாக இருந்தால் இன்னும் பிரச்சனை தான். மோடி தான் சரியான தேர்வு என்று நினைக்கிறேன்.

மோடிக்கான பிராசார உத்தி மற்றும் மோடியை பிரோமோட் செய்யும் பொறுப்பு ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்க பட்டிருக்கிறதாம். உண்மையா..? எது எப்படியோ இது வெறும் மோடி வித்தையா இல்லை மோடி வைத்தியமா என்று இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து விடும்.


இன்னும் சில சுவாரசியமான பதிவுகள்..

*********
வெங்காயத்திற்கு ஏன் இந்த நிலை வந்ததென்று
விவசாயத் துறை அமைச்சருக்குத் தெரியாது.

நீர்மூழ்கி கப்பலுக்கு ஏன் இந்த நிலை என்று
பாதுக்காப்புத் துறை அமைச்சருக்குத் தெரியாது.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நம்மகூட
என்ன தான் பிரச்சனைன்னு வெளியுறவுத் துறை அமைச்சருக்குத் தெரியாது

ஆந்திராவில் ஏன் இத்தனை குண்டுவெடிப்புகள், போராட்டங்கள்  என்று உள்துறை அமைச்சருக்குத் தெரியாது.

இந்திய ரூபாய்க்கு ஏன் இந்த நிலை என்று
நிதித் துறை அமைச்சருக்குத் தெரியாது.

நிலக்கரி ஒதுக்கீடு சம்மந்தமான ஒப்பந்த கோப்புகள்
(files) எங்கே சென்றன என்று நிலக்கரித்துறை அமைச்சருக்குத் தெரியாது

மேற்கண்ட எதுவுமே நம்ம பாரத பிரதமருக்குத் தெரியாது. நம் அன்றாட வாழ்வில் நாம் எப்படி சமாளிக்கறோம் என்பதும் தெரியாது .

இது தான் நம்ம இந்தியா

***************************

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைததுக் கொண்டிருப்பேன்’என்றார் அந்த வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும் போது கவலைப்படாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகப்பெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்...!

*********************

பத்து ஏக்கர் நிலத்தை வித்து படித்து பட்டம் பெற்று, அப்பறம் சம்பாதித்து பத்து சென்ட் இடம் வாங்குவது தான் இன்றைய தொழிற்கல்வியின் சாதனை.

*************************
திருமணம் முடித்த பின் அடுத்தவன் மேல் வருவது கள்ள காதல் என்றால், காதலித்தவனை மறந்து விட்டு வேறொரு திருமணம் செய்வது கள்ளதிருமணம் அல்லவா..

பத்து மணிக்கு மேல கள்ள சாவி போடறவன் எல்லாம் யோசிங்க..!

*****************

8 comments:

 1. கதம்பம் சாதம் சூப்பர்

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி ஆனந்தம்

  ReplyDelete
 3. கதம்பம் நல்லா இருந்துச்சு. முக்கியமா கள்ள திருமணமும், பாரத பிரதமரும்!!

  ReplyDelete
 4. கதம்பம் நன்றாக இருந்தது.

  ReplyDelete
 5. ellam padiththu . rasiththen. thamizil thaan vaazththu solla mudiyavillai.

  modikku eppadiyum muslimkaL ottu podamaattaarkal. piragu negative enna positive enna. ellarume dravida kattichi pola sirupaanmai ottukkaa kumbudu pottukkoNdu irukka vaipillai.

  ReplyDelete
 6. மோடி வேண்டாம்... மூன்றாவது அணியையும் பார்போமே...

  ReplyDelete
 7. வருகைக்கு நன்றி ராஜி
  வருகைக்கு நன்றி யோகன்
  நன்றி குட்டி பிசாசு. மோடி வரவேண்டும் என்பது இன்றைய அவசியம் தேவையாய்ருக்கிறது

  ReplyDelete
 8. மூன்றாவது அணி என்பது விஷபரீட்சை. வேண்டாம் அந்த ஆசை. கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஜெயலலிதா, மம்தா, மாயாவதி, முலாயம் ஒரு இடதில் அமர்ந்து ஒரு முடிவை ஒரு மனதாக எடுத்துவிடுவாராக்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதா.. வேண்டாம் நண்பரே "இன்றைய வானம்"

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...