Tuesday, October 31, 2017

கலியுகம் குறித்து கிருஷ்ணர்...!


ஒருமுறை பாண்டவர்களில் நால்வர் பகவான் கிருஷ்ணரிடம் கலியுகம் எப்படி இருக்கும் என்று கேட்டனர். சொல்வதென்ன நேரிலேயே காட்டுகிறேன் என்று சொல்லி தன் வில்லை எடுத்து திசைக்கொன்றாக நன்கு திசையிலும் எய்தான். பின் தான் எய்த அம்புகளை எடுத்துவர பணித்தான். நால்வரும் திசைக்கொருவராக சென்றனர்.



பீமன் ஒரு அம்பை எடுக்கும் பொழுது அங்கு ஐந்து கிணறுகள் இருப்பதையும் அவற்றில் நான்கில் சுவை மிகுந்த நீரும் ஓன்று மட்டும் வெற்றியிருந்ததையும் கண்டான். ஒரே இடத்தில இருக்கும் ஐந்தில் ஓன்று மட்டும் நீரின்றி இருப்பதின் விசித்திரம் என்ன என்று யோசித்து கொண்டே சென்றான்



அடுத்து அர்ஜுனன் சென்ற திசையில் குயிலின் இனிய இசை கேட்டது. இசை எங்கிருந்து வருகிறது கண்களால் தேடிய அர்ஜுனன் அங்கு கண்ட காட்சி கொடூரமாகவும் மனதை அறுப்பதாகவும் இருந்தது. ஆம் இனிய குரலை பெற்றிருந்தும் குயில் ஒரு முயலின் குடலை கிழித்து கொத்தி தின்று கொண்டிருந்தது. ஒருவித வருத்தத்தோடும் குழப்பத்தோடும் அம்பை எடுத்து சென்றான்.



நகுலன் சென்ற திசையில் ஒரு அழகான பசு ஓன்று  கன்று  ஈன்றதை கண்டான். ஈன்ற பசு கன்றை நாவல் நக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்றை சுத்தம் செய்த பின்பும் நக்குவதை நிறுத்தவில்லை. அதை பார்த்த மக்கள் பசுவையும் கன்றையும் சிரம பட்டு பிரித்தனர். அப்படியும கன்று பசு நக்கியத்தில்  காயம் அடைந்தது. ஒரு தாய் தன்னுடைய குழந்தையை எப்படி காயப்படுத்த முடியும் என்ற கேள்வியோடு சிந்தித்தவாறே நகுலன் சென்றான்



சகதேவனும் ஒரு பெரிய மலையில் கிருஷ்ணனின்  அம்பு தரித்திருப்பதை  கண்டு அதை எடுத்துக்கொண்டு திரும்பும் பொழுது ஒரு பெரிய பாறை உருண்டு வருவதை கண்டான். வரும் வழியில் எதிர்ப்பட்ட பெரிய பெரிய மரங்களையும் அடித்து சாய்த்து கொண்டு கீழே உண்டு வந்த பாறை ஒரு சிறிய செடியில் சாய்ந்து நின்றதை அதிசயமாக பார்த்தான். இது எப்படி சாத்தியம் என்று யோசித்தவாறே கண்ணனிடம் விளக்கம் கேட்க நினைத்தான்.



நான்கு பேரும் கண்ணனை அடைந்து தாங்கள் வழியில் பார்த்த விசித்தர சம்பவங்களை விவரித்து விளக்கம் அளிக்க கோரினர். கிருஷ்ணனும் தனது வழக்கமான குறுப்பு சிரிப்புடன் விளக்கம் சொல்லலானார்



அர்ஜுனா, கலியுகத்தில் பெரிய பெரிய மதகுருமார்கள்  ஞான ஆசிரியர்கள் தோன்றி இறை தொண்டு செய்வார்கள்.  தங்களின் இனிய குரலாலும் புதிய புதிய கருத்துக்களால் மக்களை கவர்வார்கள்.  இருப்பினும் பக்தர்களை பொய் ஏமாற்று வேலை கொண்டு பெரும் துன்பத்தில் தள்ளுவார்கள். இவர்களால் மக்கள் பெரும் சிரமத்திருக்கும் சொல்லெனா துன்பத்திற்கும் ஆளாவார்கள் அந்த முயலை போல என்றார். 



பீமா, வரும் காலங்களில் ஏழைகள் செல்வந்தர்கள் இணைந்தே வாழ்ந்தாலும், செல்வந்தர்களால் ஏழைகள் எந்த பயனையும் அடைய மாட்டார்கள். செல்வந்தர்கள் பேராசை கொண்டு தவறான வழிகளில் மேலும் மேலும் சொத்தை சேர்க்க நினைப்பார்கள். ஒருபோதும் ஏழைகளுக்கு கொடுத்தது உதவ மாட்டார்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் அந்த வறண்ட கிணற்றை போல.



நகுலா, கலியுகத்தில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மேல் மிகுந்த பாசம் வைத்திருப்பார்கள். இதனால்  அவர்கள்  தவறு செய்தாலும் பொருட்படுத்தாமல் நெறியற்ற செயலையும்  ஆதரிப்பார்கள்.  பல கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகுவார்கள் அதனால் தங்களின் குழந்தைகள் வாழ்வுதான் பாதிக்கும் என்பதை உணராமல் அவர்களின் அழிவுக்கு அவர்களே காரணமாக இருப்பார்கள். பிள்ளைகளும் ஊழ்வினையால் துன்பம் அனுபவிப்பார்கள் அந்த பசுவின் கன்றை போல.



அருமை சகாதேவ, கலியுகத்தில் மக்கள் தங்களின் நல்ல குணங்களையும், நல்ல சுபாவங்களையும் வேகமாக இழப்பார்கள் அந்த உருண்டு வரும் பாறை போல. யார் எடுத்து கூறினாலும் பொருட்படுத்தவும் மாட்டார்கள். இறுதியில் இறைவன் ஒருவனே இருட்டில் ஒளிரும் சிறிய வெளிச்சமாக தங்களின் துன்பத்திலிருந்து காப்பற்றுவான் என்பதை மிக சிலரே உணருவர் அந்த பாறையை தடுத்த ஒற்றை செடியை போல.



இவைகளே கலியுகத்தின் அம்சங்கள் என கூறி முடித்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

1 comment:

  1. புதிய தகவல்! நன்றிகள்!!

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...