மகாபாரத்தில் கலியுக முடிவு எப்படி இருக்கும் என்பது குறித்து சொல்லப்பட்ட தகவல்கள்.
ஆண்கள்
ஸ்திரீகளுடன் மட்டுமே நட்பு கொள்ள
விரும்புவார்கள்.
மக்கள்
ஒருவருடன் ஒருவர் அடித்து கொள்வர்.
யாருமே கடவுள் பெயரை சொல்ல
மாட்டார்கள். எல்லோருமே நாத்திகர்களாகவும் திருடர்களாகவும் மாறுவார்கள்.
பசுக்கள்
உடல் மெலிந்து காணப்படும். இறுதியில் பசுக்களை காண்பதே துர்பலமாகும்.
ஆடு மாடுகள் இல்லாமல் போவதால்
உணவு சங்கிலி அறுந்து போகும்.
உலகம் முழுவதும் சந்தோசம் இல்லாமலும், சுறுசுறுப்பு இல்லாமலும் போகும். மக்கள் ஒவ்வொருவரும்
எளியவர்கள்,
முதிய ஆதரவற்றவர்கள், விதவைகளின் சொத்துக்களை அபகரித்து கொள்வார்கள்.
ஆள்பவர்கள்
மனித இனத்திற்கே இடையூறு செய்பவர்களாகவும், கர்வம்
அகங்காரம் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள். குடிமக்களை காப்பாற்ற விட்டாலும் அவர்களிடம் இருந்து பணம் பறிப்பதிலேயே
குறியாக இருப்பார்கள்.
ராஜா என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களை
தண்டிப்பதிலேயே ஆசை கொண்டிருப்பார்கள். நல்ல
மனிதர்களை கூட இவர்கள் ஆக்ரமித்து
அவர்களின் சொத்துக்கள் மற்றும் பெண்களை அபகரித்து,
பலாத்காரம் செய்யும் கீழ்த்தரமான மனநிலை கொண்டிருப்பார்கள்.
ஒரு கை மற்றொரு கையை
கொள்ளையடிக்கும். சாப்பிட கூடாதது கூடியது
என்ற பாகுபாடின்றி எல்லோரும் எல்லாவற்றையும் சாப்பிடுவார்கள்.
கலியுக
புதல்வர்கள், ஆண்களை பெண்களும் பெண்களை
ஆண்களும் தாங்களே தேர்ந்தெடுத்து திருமணம்
செய்து கொள்வார்கள்.
ஸ்திரீகளும்
புருஷர்களும் அவரவர் இச்சை படி
நடந்து கொள்வார்கள். அவர்கள் மற்றவர்களின் எண்ணங்களையும்
செயல்களையும் பொறுத்து
கொள்ள மாட்டார்கள்.
சிரார்த்தமும்
தர்பணமும் இல்லாமல் போகும். யாரும் யாருடைய
உபதேசத்தையும் கேட்க மாட்டார்கள். ஆசான்
இருக்கமாட்டான்.
எல்லோரும்
அஞ்ஞானத்தில் மூழ்கியிருப்பார்கள். அந்த சமயம் மனிதர்களின்
ஆயுள் வெகுவாக குறைந்து போகும்.
கணவனிடம்
மனைவியும் மனைவியிடம் கணவனும் திருப்தியடைய மாட்டார்கள். இருவரும் அதிருப்தியடைந்து
அந்நிய ஸ்திரீகளை அந்நிய புருஷர்களை நாடுவார்கள்.
வியாபாரத்தில்
கொள்வினை கொடுப்பினை செய்யும் பொழுது பேராசையின் காரணமாக
ஏமாற்றுவார்கள். செய்யும் தொழிலை பற்றி ஏதும்
தெரியாமலேயே தொடர்ந்து செய்வார்கள்.
மக்கள்
தோட்டங்களையும் மரங்களையும் வெட்டிவிடுவார்கள். எல்லோரும் இயற்கையிலேயே கொடூரமனம் படைத்தவர்களாகவும் மற்றவர்கள் மேல் பழி போடுபவர்களாகவும்
இருப்பார்கள். உலக விவகாரங்கள் எல்லாம்
எதிர்மறையாகவே நடக்கும்.
எலும்பாலான இந்த
உடலையே பூசிப்பார்கள். இறைவனை
பூசிக்க மாட்டார்கள். கோவில்களே இருக்காது. இதுவே யுகம் முடிவதற்கான
அடையாளம் ஆகும். எப்போது பெரும்பான்மையான
மனிதர்கள் சுயநலவாதிகளாகவும், மது அருந்துபவர்களாகவும், மாமிசம் சாப்பிடுபவர்களாகவும்
இருக்கிறார்களோ அப்போது யுகம் முடிந்து
போகும்.
வேண்டாத
சமயத்தில் மழை பொழியும் மாணவர்கள்
ஆசிரியர்களை அவமதிப்பர்.ஆசிரியர்கள் ஏழைகளாவர். அவர்கள் மாணவர்களின் கதைகளை கேட்க நேரிடும்.
சமயத்தில்
மழை பொய்க்கும். பருவம் தவறி மழை
பெய்யும். விதைகள் முளைக்காது. பெண்கள்
எப்போதும் அழுது கொண்டே இருப்பார்கள்.
அவர்கள் கொடூர மனம் படைத்தவர்களாக
மாறுவார்கள். கணவனுக்கு கட்டுப்பட மாட்டார்கள். பிள்ளைகளை பெற்று அவர்களை கொலை
செய்வார்கள். மனைவிகள் பிள்ளைகளுடன் சேர்ந்து கணவனை கொலை செய்வார்கள்.
யாத்ரீகர்கள்,
பிச்சைக்காரர்களுக்கு ஆகாரம் தண்ணீர் தங்குமிடம்
கிடைக்காது. எல்லா இடத்திலும் இல்லை
இல்லை என்ற சொல் கேட்டு
நம்பிக்கை இழந்து வழியிலேயே இறப்பார்கள்.
யுகம் முடிவடையும் போது
எல்லா உயிரினங்களும் அழிந்து விடும். எல்லா
திசைகளும் பிரகாசிக்கும். பெரும்பாலும் குண்டு முதலிய நெருப்பு
மழைகளால் நட்சத்திரம் ஒளியிழந்து காணப்படும். நட்சத்திரங்களின் போக்கு விபரீதமாகும். மக்களை
துன்புறுத்த கூடிய பயங்கர புயல்
வீசும். மக்களுக்கு பயத்தை ஏற்படுத்த கூடிய
நட்சத்திரங்கள் வானில் திடீர் திடீரென்று
தோன்றும். மின்னல்கள் சூழும். எல்லா திசைகளிலும்
தீ எரியும். அப்போது உதயத்திலும் அஷ்தமனத்திலும்
சூரியன் ராகுவால் பீடிக்க படுவான்.
யுகம்
முடியும் தருவாயில் உலகம் இப்படித்தான் இருக்கும்.
யுகம் அழிந்து சில காலம்
கழித்து மீண்டும் உயிர்கள் துளிர்க்கும்.
நடப்பதையெல்லாம் பார்த்தால் நாம் கலியை நெருங்கிவிட்டோமோ
ReplyDeleteஉண்மை தான் நண்பரே
ReplyDelete