வார்த்தைகள் சிதறியோடுகின்றன...
பதிவில் பதிவு செய்யமுடியாத
துரோகங்கள்
தினம் தினம் அரங்கேறுகிறது வாழ்வில்.
முகம் அறியாதவனோ...
எதிரியின் துரோகமோ... ஒரு பொருட்டில்லை.
வளையவரும் சுற்றம்,
உலகை காட்டிய தகப்பன்,
கட்டிய மனைவியின்
துரோகங்கள் மீளமுடியாதவை.
எண்ணிக்கையில் அடங்கும் சில
காகிதங்களே
எண்ணங்களை கொல்கிறது.
"பசை" இல்லை என்றால்
உறவு கோட்டைகள் உதிர்த்து போய்விடுகிறது.

//வளையவரும் சுற்றம்,
ReplyDeleteஉலகை காட்டிய தகப்பன்,
கட்டிய மனைவியின்
துரோகங்கள் மீளமுடியாதவை.//
அழகான வரிகள்...
நன்றி நண்பரே
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDelete"பசை" இல்லை என்றால்
உறவு கோட்டைகள் உதிர்த்து போய்விடுகிறது". உண்மையான வரிகள்...
நன்றி மாதேவி
ReplyDelete