அழுக்குபிடித்த தேகம், பல வருடங்களாக வாரப்படவோ, எண்ணெயையோ கண்டிராத கேசம், இரண்டாம் உலகபோரை நினைவு படுத்தும் கால்சட்டையும், பூட்சும் அணிந்து யாராலும் விரும்பப்பட்ட முடியாத தோற்றம் உடையவராய் இருந்தார். எதோ ஒன்று என்னை அவர்பால்
இழுத்தது. அவரையே பார்த்து கொண்டிருந்தேன்.

அருகிலிருந்த பெட்டி கடையிலிருந்து யாரோ ஒரு புண்ணியவான் ஒரு ரொட்டியை வாங்கி அவர் இருந்த பக்கம் வீசி விட்டு போனான். அவன் போன திக்கையே பார்த்த அந்த பெரியவர் என்ன நினைத்தாரோ அந்த ரொட்டியை அவன் போன திசையை நோக்கி வீசினார். நான் ஒரு கணம் ஆடிபோனேன். ஏதோ பாவம் பிச்சைக்காரன், சாப்பிட்டு எத்தனை நாள் ஆயிற்றோ என்ற நல்ல எண்ணத்தில் ஒருவர் ரொட்டியை வாங்கி வீசினால் அவனை நோக்கி திருப்பி எறிகிறாரே, சரியான திமிர் பிடித்த பிட்சைக்கார கிழம் போலிருகிறது என்று நினைத்தேன். பிட்சைகாரர்களில் சிலர் இந்த மாதிரி போக்கிரிகளாகவும், பொறுக்கிகளாகவும் இருப்பது உண்மைதான், சில நேரங்களில் வழிபறிகளில் கூட இவர்கள் ஈடுபடுவதுண்டு. அப்படிதான் நானும் நினைத்தேன். ஆனால் அடுத்து நடந்தது மிக மிக அதிசயமான காட்சிகள்.
அதிசயம் 1
அது ஒரு 40 அடி ரோடு. ரோடின் ஒரு மூலையில் நின்று கொண்டுதான் (பேங்க் வாசலில்) எதிர் முனையில் நடப்பதை வேடிக்கை பார்த்தவாறு இருந்தேன். என்னை பார்த்து மிக நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தார். நக்கலாக என்றால் நமுட்டு சிரிப்பு அல்ல வாய் விட்டு சிரித்தார். பெரிதாக சத்தம் போட்டு சிரித்து விட்டு என்னை பார்த்தார். ஏனோ நான் தலை குனிந்து கொண்டேன். ஒருவேளை நான் மனதில் போக்கிரி, பொறுக்கி, பிட்சைக்கார கிழம் என்றெல்லாம் நினைத்தோமே அதை உணர்ந்து சிரிதாரோ...குற்ற உணர்ச்சியில் தான் தலை தானாக கவிழ்ந்துவிட்டதோ..
அதிசயம் 2
என்ன நினைத்தாரோ வீசி எறிந்த ரொட்டியை மீண்டும் நடந்து போய் எடுத்து வந்தார். "அப்படி வா வழிக்கு...பெரிய புடுங்கி மாதிரி வீசினே...இப்ப பசிக்குதோ.." நான் தான் மனதில் நினைத்துகொண்டேன். ஆனால் சாவதானமாக நடந்து வந்த அவர் ரோடை ஒட்டி இருந்த சாக்கடைக்குள் இறங்கினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை ரோட்டில் வீசியதை எடுத்து சாக்கடைக்குள் போடுகிறாரோ..நான் நின்று கொண்டிருந்த இடத்தில இருந்து அவர் என்ன செய்கிறார் என்பதை பார்க்க முடியவில்லை. அதனால் ரோடை கிராஸ் செய்து அந்த பக்கமாக போனேன். என்னை எதிர்பார்த்திருப்பார் போல. ஆனால் கண்டுகொள்ளாதது போல் வாயை குவித்து ஒரு மாதிரி சத்தத்தை எழுப்பினார். என்ன அதியசம் எங்கிருந்து தான் அத்தனை எலிகள் அந்த சாக்கடைக்குள் வந்ததென்று தெரியவில்லை. சிறிதும் பெரிதுமாக அவரை சுற்றி சுற்றி வந்தது...கையில் இருந்த ரொட்டியை பிய்த்து பிய்த்து எலிகளை நோக்கி எரிந்து கொண்டிருந்தார். ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடம் தான் அவர் கையிலும் ஒன்றும் இல்லை, அங்கு எலிகளும் இல்லை. என்னால் நம்பவே முடியவில்லை. கண்கட்டு வித்தை மாதிரி இருந்தது.
அவர் வித்தியாசமான ஒரு ஒலி எழுப்பியது, எலிகள் திரண்டு வந்தது, அவர் ஒவ்வொன்றாக ரொட்டியை பிய்த்து எரிந்தது..எல்லாம் ஞாபகம் இருக்கிறது...ஆனால் இரண்டு நிமிடத்தில் எப்படி எல்லாம் மாயமாகும்...அவரிடம் மீண்டும் அதே நக்கல் சிரிப்பு...இம்முறை எனக்கு பயம் வந்துவிட்டது. அங்கிருந்து மீண்டும் கிராஸ் செய்து பேங்கிற்குள் சென்றுவிட்டேன். ஆனால் மனம் மீண்டும் மீண்டும் அவரிடமே சென்றது. ஒருவேளை சூனியகரனாக இருப்பானோ..அப்படிஎன்றால் ஏன் பிச்சைக்கார வேஷம்..
அதிசயம் 3
பேங்க் வேலையை முடித்துவிட்டு ஒரு ஐந்து நிமிடம் கழித்து வெளியே வந்தேன்...கண் அனிச்சையாக அந்த பக்கத்தை நோட்டமிட்டது. அங்கு யாரும் இல்லை. மரத்தடியே இருந்த அந்த கிழிந்த பை, தங்கு கட்டை எதுவும் காணோம். அப்படியொரு பிச்சைகாரன் இருந்ததற்கான அடையாளத்தையே அங்கு காண முடியவில்லை. ஏதோ ஒரு உந்துதலில் அந்த மரத்தடிக்கு சென்றேன். ஒரு வித்தியாசத்தையும் என்னால் உணர முடியவில்லை. அந்த சாக்கடைக்குள் எட்டி பார்த்தேன்.. அத்தனை எலிகள் இதனுள் வசிக்கின்றதா..நம்ப முடியவில்லை. அருகில் இருந்த பெட்டி கடையில் சென்று இங்கே ஒரு பிட்சைக்கார பெரியவர் இருந்தாரே.. எங்கே போனார் தெரியுமா..? கடைக்காரன் சொன்னதை கேட்டு மயக்கம் வராத குறை தான் போங்கள்...பிச்சைகாரனா அப்படி யாரும் இங்கே இல்லையே...எப்ப பார்த்திங்க..என்றான்.
ஒரு வேளை நீ்ங்கள் கண்டன யாவும் கனவோ!!!
ReplyDeleteஇது போன்ற பல காட்சிகள் நாம் காண்பது கனவா?நனவா?
ReplyDeleteஎன்று குழம்பச்செய்துவிம் நண்பரே..
பிச்சைக்காரருக்கு தன்மானம் இருக்கிறது!!
உயிரிரக்கம் இருக்கிறது!!
ஏன் என்றால் அவருக்குள் இன்னும் மனிதம் மிச்சமிருக்கிறது!!
பித்தன் வாக்கு பதிவில் குரங்கு என்றால் இங்கு எலியா?
ReplyDeleteநடந்தது நிஜமா? இல்லை கதை எழுதிப்பார்க்கனும் என்ற ஆவலில் எழுதியுள்ளீர்களா?
பார்பவை அனைத்துக்கும் விளக்கம் கிடைப்பதில்லை.
போன இடத்துல தூங்கிடிங்களா பாஸ் ??
ReplyDeleteம்..........,
ReplyDeleteபின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteவங்கி வாசலில் ஒரு நம்பிக்கை துரோகிக்காக
காத்திருந்த பொழுது, மனிதன் மனிதத்தன்மை குறித்து எழுந்த கேள்விகளின் விளைவால் மனதில் ஓடிய சித்திரம் தான் மேலுள்ள பதிவு. இது உண்மையல்ல...மனிதர்கள் தேசத்தில் இது
சாத்தியமும் அல்ல.
சார் எனக்கு ஏதோ புரிந்த மாதிரி தெரியுது, புரியாத மாதிரியும் தெரியுது...
ReplyDeleteநல்ல கற்பனை.
ReplyDeleteநன்றி உருத்திரா
ReplyDelete