ஏறாத மலையில்லை. போகாத கோவில் இல்லை. வணங்காத தெய்வமில்லை. ஆனால் எங்கும் மனம் ஒட்டவில்லை. "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்பது போல் அவனே மனமிரங்கி தன்னை காட்டி நின்றான். என்னுடனே பிறந்து என்னுடனே வளர்த்த அவனை நான் கண்டுகொண்டேன். அவனே எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதையும் கண்டேன்.
நம்முள் அவனை காணமல் வேறு எங்கும் அவனை கண்டடைய முடியாது என்பதுவும் புரிந்தது.
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.
- திருமந்திரம்
உங்களுக்குள் இருக்கும் ஒரு விளக்கை ஏற்றி, வெட்டவெளியின் மகத்துவம் அறியலாம்.
அந்த விளக்கின் முன் நின்றால் வேதனை மாறும். நம் உடலில் அந்த விளக்கு எங்கிருக்கிறது
என்பதை அறிந்து கொண்டால் நீங்களே அந்த விளக்காக விளங்குவீர்கள்.
சித்தர்கள் பாடல்கள் எல்லாமே, பெரும்பாலும் எளிய தமிழில் இருந்தாலும் ஒரு மறைபொருளாகவே சொல்ல வந்த விஷயங்களை சொல்லி சென்றிருக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயம் மட்டும் விளங்குகிறது நாம் எங்கோ வெளியின் தேடிகொண்டிருக்கும் ஒரு விஷயம் நம்முள் தான் இருக்கிறது என்பது. அது எங்கேயென்று தேடி கண்டடைவது தான் உண்மையான ஆன்மிகம். இதே செய்தியை இன்னுமொரு பாடல் நன்கு உறைக்கும்படி
நமக்கு சொல்கிறது.
வானுக்குள் ஈசனைத் தேடும் மருளர்கள்
தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ
தேனுக்குள் இன்பம் சிறந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே.
- திருமந்திரம்
எவ்வளவு எளிமையான பாடல் பாருங்கள். நம்முள் ஒளிந்திருக்கும் ஈசனை எங்கோ வானில்
வாழ்ந்து கொண்டிருப்பதாய் நம்புகிறோம். தேனின் சுவை எத்தகையது அது சிவப்பென்றோ கறுப்பென்றோ நம்மால் வகைபடுத்த முடியுமா..? தேனின் சுவை எவ்வளவு நிஜமோ, எவ்வளவு இயற்கையான விஷயமோ அவ்வளவு உண்மை நம்முள் ஈசன் வாழ்ந்து கொண்டிருப்பது.
அவர் எங்கிருக்கிறார்..? எப்படி அறிந்து கொள்வது..? எப்படி உணர்வது...?
(தொடரும்)
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
-
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் திருவிழா குறித்த செய்திகள் வர ஆரம்பித்து சாமான்யனின் பொழுது போக்கிற்கு தினம் தினம் புது புது அற...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
-
தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்ட...
அருமை
ReplyDelete