ஒதுங்க இடம் தேடி தலை தூக்க
அதே நிலையில் நீயும்...
கண்கள் சந்தித்த அந்த நொடியில்
நீயும் நானும் ஓன்று தான்
நிலைமையில்....
சாலையோர டீக்கடையில்
பத்தோடு பதினொன்றாய் நானொதுங்க...
பேன்சி ஸ்டோர் வாசலில்
உனக்கு ஒரு இடம்...
உள்ளே வந்து நில்லம்மா...
கூடவே கரிசன வார்த்தைகள்..
சார்...சூடா..டீ வடை, போண்டா சார்..
அரை டிரவுசர் பையனின்
அன்பு தொல்லை...
தலை நரைத்த பெருசு
விட்ட பீடி புகை...
ஒதுங்கி நின்ற போதும்
பான்டை நனைத்த சாரல்...
இத்தனை கொடுமையிலும்
இனிமையாய் கழிந்தது பொழுது..
நொடிகொரு முறை
எனை நோக்கிய
உன் விழியின் சிரிப்பும்...
இதழின் சுழிப்பும்...
மழை நின்றது...
மின்னலென மறைந்தாய்..
மீண்டும் ஒரு
பெரு மழைக்காய் காத்திருக்கிறேன்....
உன் பெயர் கூட தெரியாது..
i liked it. keep it up
ReplyDeleteநன்றி ராஜசேகர்
ReplyDeleteமழையில் தோன்றிய தேவதையிடம் மனதைப் பறிகொடுத்த காதலனின் மன உணர்வை அழகிய கவிதைவரிகளில் தந்த உங்களுக்குப் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....
ReplyDelete