Tuesday, March 8, 2011

டெல்லியில் கிண்டப்பட்ட இருட்டுக்கடை அல்வா

அவசர அவசரமாக ராஜினாமா கடிதத்தை தூக்கிக்கொண்டு டெல்லி சென்ற மந்திரிகள் வெற்றி கொடி நாட்டிவிட்ட மகிழ்ச்சியில் வாய் நிறைய புன்னகையோடும் கைநிறைய அல்வாவோடும் வந்து கொண்டிருகிறார்கள். தமிழக மக்களுக்கும் குறிப்பாக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அல்வா பொட்டனங்கள் விரைந்து வந்து கொண்டிருக்கிறது.வேண்டா விருந்தாளியாக இருக்க எங்களுக்கு விருப்பமில்லை, காங்கிரஸ் எங்கள் கூட்டணியை விரும்பவில்லை என்று தி மு காவும், விட்டது ஏழரை நாட்டு சனி என்று இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரசாரும் முகத்தை எங்கே கொண்டு வைப்பார்கள் என்று தெரியவில்லை. இதெல்லாம் ஒரு பொழப்பு என்று சத்தம் வர்ற பக்கமெல்லாம் சிரிக்கிறான் தமிழன். குலாம் நபி சாரின் கடைசி வார்த்தை தான் உலக மகா காமெடி...இந்த கூட்டணி 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுமாம்.

இந்த நாடகத்தை இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு, சவத்தை கூட விட்டு வைக்காமல் வன்புணர்ச்சி செய்த சிங்கலனையும், அவனுக்கு துணை போன மத்திய அரசையும் கண்டித்து நடத்தியிருந்தால் காங்கிரஸ் கூட்டணிக்காக கைகட்டி காத்திருக்க தேவை இல்லையே இன்று. தலை நிமிர்ந்து தனித்து நிற்கலாமே அய்யா. தமிழன் மானத்தோடு கைகோர்த்திருப்பன் உங்களோடு. மானம் விட்டு, ஆடிய ஆட்டத்திற்கெல்லாம் ஆடி 60 ஆண்டு கால அரசியல் வாழ்கையை இன்று அஸ்தமித்து போகும் நிலைக்கு ஆளாகிருக்கவேண்டாம்.

இருட்டடிப்பு செய்யப்பட்ட தயாநிதி மாறன், டெல்லி பக்கம் தலைவைத்து படுக்கவே அஞ்சும் அழகிரி போன்றோர் அடித்து பிடித்து கூட்டணியில் காங்கிரசை இடம் பெற செய்ய பேச்சு நடத்தபோகிறார்கள். எங்கே ஒரு 30 தொகுதி கூட வெற்றிபெறாமல் போய்விடுமோ என்றஞ்சி ஓடினார்கள் என்றா நினைக்கிறீர்கள் இல்லை ஒருவேளை கூட்டணி நிரந்தராமாக முறிந்தால் குடும்பமே திகாருக்கும் சென்னைக்கும் அலையவேண்டி வருமோ என்றஞ்சி ஓடுகிறார்கள். சி பி ஐ கொடுத்த 63 பேர் பட்டியலில் விசாரணைக்கு உட்படவேண்டியவர்கள் தி மு காவில் இன்னமும் இருக்கிறார்கள். அந்த பயம் தான். என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள் காங்கிரஸ் கேட்பதும் 63 , சி பி ஐ விசாரணைக்கு அனுமதி கேட்பதும் 63 .

அடுத்த ஜோக் நமது பிரதமர் வாயிலிருந்து பொன் எழுத்துகளாக உதிர்ந்திருக்கிறது. தாமஸ் மீதான ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பது அவருக்கு தெரியாதாம். அச்சாபீஸ் குமாஸ்தா ரேஞ்சிற்கு தவறு நடந்துவிட்டது, தவறுக்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன் என்கிறார். தாமசை அந்த பொறுப்பிற்கு நியமித்ததில் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை கண்டுகொள்ளாமல் செய்வதும் ஓன்று தான். ஆனால் அதற்குள் காட்சிகள் மாறிவிட்டன. அவரை நியமிப்பதற்கு முன்னாள் சுஷ்மா சுவராஜ் ஆட்சேபம் தெரிவிக்கும் போதெல்லாம் பிரதமர் எந்த உலகில் இருந்தார் என்று தெரியவில்லை. உச்ச நீதிமன்றம் கேள்வி கேக்கும் வரை மௌனம் காத்துவிட்டு இப்போது எனக்கு தெரியவில்லை என்பதெல்லாம் உங்கள் பதவிக்கு அழகில்லை. வேற என்னத்த சொல்றது..

9 comments:

 1. முடிவில் அல்வா எல்லாம் நமக்குத் தானே தரப் போகிறார்கள்.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. நாம் இப்போதே விளித்து கொள்வோம் அம்பிகா

  ReplyDelete
 4. அய்யோ இதற்கே கூறினால் எப்படி... இன்னும் வருகிறது கேசரி, முந்தரி பருப்பு உடன் அல்வா தயாரகிறது............. தேர்தல் நெருங்க நெருங்க என்ன என்ன மாயங்கள் நடக்குமோ........ எல்லாம் பொருத்து இருந்து பார்போம்....... நமக்கு வேடிக்கை பார்க்க மட்டும் தானே முடியும்........ பொருத்து இருந்து பார்போம் ஐயா........

  ReplyDelete
 5. உங்களில் ஒருவனுக்கு நன்றி,
  சர்புதீன் வருவது முக்கியமல்ல...ஏதாவது சொல்லிவிட்டு போங்கள்
  வாங்க ராஜ நடராஜன், வருகைக்கு நன்றி

  ReplyDelete
 6. "இந்த நாடகத்தை இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு, சவத்தை கூட விட்டு வைக்காமல் வன்புணர்ச்சி செய்த சிங்கலனையும், அவனுக்கு துணை போன மத்திய அரசையும் கண்டித்து நடத்தியிருந்தால் காங்கிரஸ் கூட்டணிக்காக கைகட்டி காத்திருக்க தேவை இல்லையே இன்று."

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...