இந்த முறை அ தி மு க கூட்டணி வெற்றி பெற பெரிதாக எதுவும் செய்துவிட வேண்டாம், தி மு காவின் தோல்வியை அவர்களே உறுதி செய்து விட்டார்கள் என்ற நிலையில் கடந்த ஆட்சியின் அவலங்களை மேடை தோறும் பட்டியலிட்டாலே போதும் என்ற நிலை இருந்தது நேற்று வரை. ஆனால் அ தி மு காவின் அண்மைய செயல்பாடுகள் தோல்வி பாதையை நோக்கி செல்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
கம்யுனிஸ்டுகளின் தொகுதி பங்கீடு காலதாமத படுத்தியது, வை கோவுடன் இன்னுமும் தொகுதி பங்கீடு முடிவடையாதது, முதன் முதல் அ தி மு காவுடன் கூட்டணி என்று பகிரங்கமாக அறிவித்த கார்த்திக்கிற்கு இன்னுமும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்காதது, மிக தாமதாமான தொகுதி முடிவுகள் அ தி மு க தொண்டர்களை மட்டுமல்ல நடுநிலையாளர்கள் மத்தியிலும் வெறுப்பையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து, இத்தனை வருடங்களாக கூட்டணியில் இருக்கும் வை கோவை கழட்டி விடும் முடிவில் இருப்பதாக தெரிகிறது. பெரும் பாரம் என கட்சிகள் நினைக்கும் பா ம க கூட 30 தொகுதிகளை பெற்று விட்ட நிலையில் வை கோவிற்கு வெறும் 7 அல்லது 8 தொகுதிகளை தான் ஒதுக்க முடியும் என்பது முதுகில் குத்தும் செயல். ஈழ தமிழர்கள் விஷயத்திலும், பிரபாகரன் விஷயத்திலும் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் கூட்டணி தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவின் கருத்துகளை நாகரீமாக எதிர்க்காமல் இருந்தவர் வை கோ. அதே சமயத்தில் ஈழ ஆதரவு என்ற தன கொள்கையிலும் விட்டுதராமல் போராட்டங்களை நடத்தினார்.
ஜனவரி 19ம் தேதி கார்த்திக் தனது ஆதரவை அதிமுகவுக்கு தெரிவித்தும் இதுவரை பேச்சுவார்த்தைக்கோ, தொகுதி பங்கீடு குறித்து பேசவோ அழைக்கவில்லை. 3 தொகுதிகள் கேட்டோம். இரண்டு தொகுதிகளாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதற்குகூட அழைப்பு இல்லை. எனவே அக்கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். என கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.
கடந்த தேர்தல் வாக்கு விகிதாசாரப்படி தே தி மு க மட்டுமே போதும் என்ற நிலைப்பாடு ஒரு வகையில் சரிதான். குறைந்தது 150 தொகுதியில் போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களை (118 ) பிடித்து விட்டால் எல்லா கட்சிகளின் நிலையும் படு கேவலத்தை சந்திக்க வேண்டிவரும். ஏற்கனவே பா ம க மற்றும் பா ஜா க கட்சிகள் அம்மாவின் நம்பிக்கை துரோகத்திற்கு சாட்சியான வரலாறு இருக்கிறது. இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் கேப்டன் அவர்களே உஷார். எந்த நிமிடம் உங்கள் நிலையும் கறிவேப்பிலை ஆவது நிச்சயம்.
சினிமா உலகம் ஒட்டு மொத்தமாக தி மு காவின் மேல் மனகசப்பில் இருப்பது அவர்களுக்கு தெரியாமல் இல்லை. உடனடியாக மருந்து போடும் வேலை நடந்தாக வேண்டும். இல்லையெனில் தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொருவராக அ தி மு காவின் பக்கம் வரலாம். சினிமா கவர்ச்சி எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்திவிடும் என்பதை கலைஞர் அறியாதவரல்ல.
ஒரு முறை துக்ளக் ஆசிரியர் சோவிடம், தேர்தலில் நிற்பவர்கள் எல்லாம் ரவுடிகளாகவும், திருடர்களாகவும் இருந்தால் எப்படி நாம் நல்லவர்களை நம் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க முடியும் என்று கேட்கப்பட்ட போது அவர் சொன்னது போட்டி இடுவதிலேய மிக சின்ன ரவுடி, மிக சின்ன திருடனை தேர்ந்தெடுக்க வேண்டியது தான் வேறு வழியில்லை என்றார். நான் சொல்கிறேன் திருடனை கூட மன்னிக்கலாம் நம்பிக்கை துரோகியை மன்னிக்கவே கூடாது.
கோவை, மதுரை என அடுத்தடுத்து மாநாடுகளை நடத்தி தேர்தல் வலைகளை ஜரூராக ஆரம்பித்த அ தி மு க,
இப்போது அமைதியாக கைகளை நகர்த்துவது பதுங்கி பாய்வதற்கு என்று நினைத்தேன். ஆனால் அது எதிர்கட்சிகளின் மீதல்ல தோழமை கட்சிகளின் மீதே என்று இப்போது தான் தெரிகிறது.
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
-
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் திருவிழா குறித்த செய்திகள் வர ஆரம்பித்து சாமான்யனின் பொழுது போக்கிற்கு தினம் தினம் புது புது அற...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
-
தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்ட...
Nice.,
ReplyDeleteகூட இருந்து குழி பறிப்பது தான்.
ReplyDeleteநன்றி கருண்
ReplyDeleteநன்றி புலி
நம்ம பக்கம் வந்து பாருங்க.....
ReplyDeleteஎனது வலைப்பதிவில் இன்றைய பதிவு விஜயகாந்த் + அண்ணா தி.மு.க-கூட்டணி= பலமா? பலவீனமா? (நேற்றைய தொடர்ச்சி)...
உங்கள் வருகைக்கு நன்றி ரஹீம்
ReplyDeleteபெரியவர் உங்கள் வருகையால் பிரபல பதிவர்கள் வருவதில்லை என்ற என் குறை தீர்ந்தது
அதிமுக சரியான பாதையில் செல்வதாகவே எனக்குப்படுகிறது..
ReplyDeleteதிமுகவிற்கு நம்பிக்கை துரோகம் செய்த, விடுதலைபுலிகளின் கைக்கூலி மதிமுகவுக்குக்கு இந்தியாவில் என்ன வேலை? அவன் யாழ்பாணத்தில் போய் எலெக்ஷனில் நிற்கட்டும்.
அப்புறம் தினமும் தூங்கிக்கொண்டே இருக்கும் கார்த்திக்கால் எந்த பிரயோஜனமும் இல்லை..
வாங்க மர்ம யோகி,
ReplyDeleteவருகைக்கு நன்றி,
விடுதலை புலிகளுக்கு கைகூலியாய் இருப்பது தவறில்லை, அமெரிக்கனுக்கு கைகூலியாய் இருப்பது தான் தவறு. கார்த்திக் பற்றி நான் ஒன்றும் சொல்ல போவதில்லை, ஆனால் நன்றி மறப்பது நல்ல தமிழர்க்கு அடையாளம் அல்ல
அரசியல் கணக்கு என்பது தனி. நமது மனக் கணக்கில் அது படியாது..
ReplyDeleteநன்றி ரிஷபன்,
ReplyDeleteஅரசியல் கணக்கில் நம்பிக்கை துரோகம் தானே அரிசுவடி