Tuesday, March 15, 2011

கமலின் புதிய ஜோடி, தட்டி பறித்த சூர்யா

செல்வராகவன் டைரக்சனில் கமல் அடுத்த படத்தில் நடிக்கிறார். இதுவும் பீரியட் படம் போல் தெரிகிறது இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தேடி பிடித்து செல்வராகவனால் அழைத்து வரப்பட்டவர் தான் சோனாக்சி. இவர் வேறு யாருமல்ல பா ஜா கா கட்சியில் அமைச்சராக பதவி வகித்த சத்ருகன் சின்ஹாவின் மகள். மாடலாக வந்து கலக்கிய இவர் சல்மானுக்கு ஜோடியாக டபாங் படத்தில் நடித்தார், படம் சக்கை போடு போட்டதில் அம்மணியின் மார்கெட் சிகரத்தில் நிற்கிறது. பாலிவுடில் இருந்து கோலிவுட் வரை காத்திருகிறார்கள் தயாரிப்பாளர்கள். கமலின் ஜோடி என்றதும் மறு பேச்சில்லாமல் சம்மதம் சொல்லியிருகிறார்.

கேள்விப்பட்ட சூர்யாவும் தனது அடுத்த படத்திற்கு இவரையே நாயகி ஆக்கிகொண்டார். பொதுவாக செல்வராகவன் படம் நீண்ட நாட்கள் படபிடிப்பில் இருக்கும் அதுவும் கமலுடன் என்பதால் எப்போது சூட்டிங் ஆரம்பித்து முடிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏழாம் அறிவு முடிந்தவுடன் சூர்யாவின் படம் தொடங்கிவிடும் என்பதால் சோனாக்சியை விரைவில் சூர்யாவுடன் பார்த்துவிடலாம்.

8 comments:

  1. Nice news.,

    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_16.html

    ReplyDelete
  2. நன்றி மீண்டும் வருக
    வேடந்தாங்கல் கருண்

    ReplyDelete
  3. சினிமா தகவல் என்பதால் விமர்சிக்க முடியவில்லை. சினிமா தகவல்களை விடுத்து உங்களின் தனித் திறமைகள், இதர அனுபவப் பகிர்வுகளைப் பதிவாகப் போடலாமே?

    ReplyDelete
  4. நன்றி நிருபன்

    இதற்கு முந்தைய பதிவிற்கு நீங்கள் வரவில்லையே..
    கலையில் பதிவிட்டது ஜெ ஜெ அ தி மு காவா.. ச்சே ச்சே அ தி மு காவா..
    http://nanbansuresh.blogspot.com/2011/03/blog-post_15.html

    ReplyDelete
  5. ஹி ஹி நல்லா ஜோடி தான்

    ReplyDelete
  6. சோனாக்சியை பார்த்தாச்சு..

    ReplyDelete
  7. நீண்ட நாட்களுக்கு பிறகு எனது பதிவிற்கு வந்ததற்கு நன்றி ரிஷிபன்

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...