மூன்றாம் அணிக்கு தமிழகத்தில் ஒரு போதும் வாய்ப்பில்லை என்ற நிலைதான் இருந்தது. பா ஜா க எவ்வளோவோ முயற்சி எடுத்தும் இதுவரை முடிந்ததில்லை. அடுத்து கேப்டனும் தன் பங்கிற்கு வலை விரித்து பார்த்தார். சிறிய கட்சிகள் கூட மடியவில்லை. ஆனால் இன்றைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மூன்றாம் அணிக்கு வாய்பிருப்பதாகவே தெரிகிறது. தேர்தல் தேதி அறிவித்ததில் தொடக்கி இன்று வரை பரபரப்புக்கு பஞ்சமில்லை. கூட்டணி அலைகழிப்புகள், தொகுதி பங்கீடு இழுபறி என தினம் தினம் அரசியல்வாதிகளின் இரத்த அழுத்தம் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது.
அடிமேல் அடியாக தி மு காவிற்கு சி பி ஐ நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் சாதிக் பாட்சாவின் மரணமும் பெருத்த சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கோடு தற்கொலை வழக்கும் சி பி ஐ கையிலெடுக்கும் பட்சத்தில் பரபரப்பான, கசப்பான உண்மைகள் வெளிவரக்கூடும். இங்கு விழும் ஒவ்வொரு அடியும் தனக்கு பெரும் ஆதாயத்தை தரக்கூடும் என்ற தலைகனத்தில் தான் அ தி மு க தலை விரித்து ஆடுகிறது.
போதாகுறைக்கு தேர்தல் கமிஷனின் கிடுக்கி பிடி வேறு அரசியல்வாதிகளின் வயிறில் புளியை கரைக்கிறது. போராடி வாதாடி தொகுதியை பெற்றாலும் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகம் பெரியகட்சிகளின் வேட்பாளர்களுக்கு தூக்கம் தொலைத்த இரவுகளாகி வருகிறது. இந்நிலையில் மூன்றாம் அணிக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்கள் அ தி மு காவினர்.
அ தி மு காவா என்று குழம்ப வேண்டாம். அ தி மு காவின் முதுகில் குத்தும் அரசியல் சூழ்ச்சியால் தான் மூன்றாம் அணி குறித்து சில கட்சிகள் யோசித்து வருகின்றன. எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம் என்று கடையை விரித்து காத்திருக்கும் பா ஜா கவிற்கு இது சரியான சந்தர்ப்பம்.
நாடாளும் மக்கள் கட்சி கார்த்திக் பொதுவாக எதை பேசினாலும் புரியாது, ஆனால் அ தி மு காவின் நம்பிக்கை துரோகத்தை மட்டும் சேனல் சேனலாக பொளந்து கட்டுகிறார். இன்றைய தினசரியிலும் இவரின் அனுதாப குரல் ஓங்கி ஒலித்தது. அதுமட்டுமல்ல தன்மானத்துடன் வெளியே வாருங்கள் நாம் சேர்ந்து அ தி மு காவிற்கு பாடம் புகட்டுவோம் என்று வை கோவிற்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். ஒருவகையில் காமெடியாக இருந்தாலும்
வை கோவிற்கு வேறு என்ன வழி.
1 . மானம் விட்டு கொடுப்பதை வாங்கிகொள்வதா, அப்படிஎன்றால் வெறும் 8 தொகுதி வைத்துகொண்டு 20 பேருக்கு எப்படி பங்கு வைப்பது..?
2 . முழுதாக ஐந்து வருடங்கள் கூட இருந்தும், அதிகாரத்தில் இல்லாத அம்மையார் இப்போதே இந்த பாடு படுத்தினால் அதிகாரத்திற்கு வந்த பின் நிலைமை என்ன ஆகும்..?
3 . 8 - ல் ஒரு இரண்டோ மூன்றோ வெற்றிபெற்றாலும் அதை வைத்து என்ன பெரிதாக சாதித்து விட முடியும். வெற்றி பெற்றவர்களுக்கு தான் என்ன மரியாதை கிடைத்துவிடும்..?
4 . மாநில கட்சியாக அங்கீகாரம் கிடைக்கவில்லைஎன்றால் ஒட்டு மொத்த எதிர்காலமும் கேள்விகுறியாகிவிடுமே..?
5 . பா ஜா காவுடன் கூட்டணி என்றால் உடனடி நன்மை என்ன..? அதிக தொகுதிகள் கிடைக்கும், இரண்டில் வெற்றி பெறுவது கடினமல்ல...அத்துடன் அங்கீகாரத்திற்கு தேவையான 6 % வாக்குகளையும் பெறமுடியும்.
மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொகுதி பங்கீடு விஷயத்தில் ஜெயலலிதாவின் தன்னிச்சையான முடிவால் விரக்தியில் தள்ளபட்டிருக்கிறது. அவர்களும் தே மு தி க தலைமையில் ஓன்று திரள காத்திருக்கிறார்கள்.
கொடுத்ததே இரண்டு தொகுதி தான் என்றாலும் மனநிறைவு கொண்ட புதிய தமிழகம் வெற்றிக்கான வாய்ப்பற்ற தொகுதியை ஒதுக்கியதில் ரொம்பவே அப்செட்.
மூன்றாம் அணி அமைந்தால் கடைசி நேர அதிர்ச்சியாக கேப்டனும் வந்தாலும் வரலாம். தே தி மு க வந்தவுடன் அம்மாவின் கணக்குகள் எப்படி மாறிவிட்டன என்பது விஜயகாந்த் அறியாததல்ல. ஒருவேளை வை கோ வெளியேறி 160 தொகுதிகளில் அ தி மு க போட்டியிட்டால் வெற்றி பெற தேவையான 118 எளிதாக பெறமுடியும். கொஞ்சம் குறைந்தாலும் குட்டி கட்சிகளை பெட்டிகளையோ, பதவிகளையோ காட்டி கட்டிவைத்திருக்க முடியும். அப்போது விஜயகாந்தின் நிலைமை. ஏற்கனவே ஆட்சில் பங்கில்லை என்று சொல்லிவிட்டார். வெறும் 20 அல்லது 30 M L A வைத்து விட்டுமட்டும் என்ன செய்யமுடியும். பதவியில் இல்லாத அரசியல்வாதி பல் பிடுங்கப்பட்ட பாம்பை போல் தண்டம் தான். தொகுதிக்கு குறைந்தது 5 அல்லது 10 கோடி செலவு செய்துவிட்டு புறங்கையை நக்கி கொண்டு போகவேண்டியது தான்.
இன்னும் ஓரிரு நாளில் மூன்றாம் அணி குறித்த அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகலாம். எந்த எந்த தொகுதி என்று தே மு தி காவிற்கு ஒதுக்கும் போது பூசல்கள் பெரிதாகி பிரிவுகள் வரலாம். தே மு தி க தலைமையில் நாடாளும் மக்கள் கட்சி, ம தி மு க, பா ஜ க இணைந்து புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்று நம்புவோம். ஏற்கனவே எந்த கட்சிக்கும் வாய்ஸ் இல்லை என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். ஆனால் மூன்றாம் அணியின் தார்மீக நியாயம், வை கோ, விஜயகாந்த் மற்றும் இல.கணேஷன் போன்றவர்கள் நல்ல நண்பர்கள் என்ற முறையில் இ(ற)ரங்கி வருவதற்கும் வாய்ப்பிருகிறது.
ஒருவேளை பா ஜ க தவிர்த்து தே மு தி க தலைமையில் புதிய தமிழகம், நாடாளும் மக்கள் கட்சி, ம தி மு க, மார்க்சிஸ்ட் ,கம்யூனிஸ்ட், சரத்தின் ச ம காவும் இணைந்து கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்த கூட்டணியின் ஒரே பிரச்னை வாக்காளர்களுக்கு இவர்களால் வாக்குறுதியை கொடுக்க முடியுமே தவிர, பொன்னோ, பொருளோ, பணமோ தேறாது. சொல்வதற்கில்லை அதற்கும் ஏதாவது வழி வைத்திருப்பார்கள்.
இம்முறையும் அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது தே மு தி க. விஜயகாந்தின் முடிவை ஆவலோடு எதிர்பார்த்திருகிறார்கள் அ தி மு காவின் தோழைமை கட்சிகள். துக்ளக்கின் 40 வது ஆண்டு விழாவில் அம்மாவிற்கு இருக்கும் அரசியல் ஆளுமை வேறு யாருக்கும் இல்லைஎன்றார் ஆசிரியர் சோ. ஆளுமை என்றால் இதுதானா..? தன்னை நம்பி வீட்டிற்கு வந்தவனுக்கு வயிறார பசியாற்றுபன் தமிழன். வந்தவன் முன்னால் கட்டு கட்டென்று கட்டி விட்டு சட்டியை கவிழ்ப்பது எந்த வகை நாகரீகம் என்பதை சோ சொல்லவேண்டும் .
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
-
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் திருவிழா குறித்த செய்திகள் வர ஆரம்பித்து சாமான்யனின் பொழுது போக்கிற்கு தினம் தினம் புது புது அற...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
-
தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்ட...
விஜயகாந்த் தலமையில் அமைந்துவிடும் போலிருக்கே
ReplyDeleteஜெவின் அசட்டு தைரியம் அழிவை தான் தரும்
ReplyDeleteஇம்முறையும் அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது தே மு தி க. விஜயகாந்தின் முடிவை ஆவலோடு எதிர்பார்த்திருகிறார்கள்//
ReplyDeleteவாய்ப்புண்டு
நன்றி ஆர் கே
ReplyDeleteஉங்கள் பதிவும் அருமை,
பொதுவாக தி மு காவை எதிர்க்கும் எல்லோரின் பயமும் இதுதான்.
ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது, தேர்தல் முடிந்த பிறகும் சில குரங்குகள் அங்குமிங்கும் தாவும் என நினைக்கிறேன்