இன்று காமெடி நடிகர் வடிவேலு அறிவாலயத்திற்கு சென்று மு க ஸ்டாலின், மு க அழகிரி சந்தித்து தான் தி மு க கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவித்து மாலை, பொன்னாடை போன்ற சம்ப்ரதாய மரியாதைகளை பெற்று கொண்டார். பெட்டியை பின்னர் வாங்கிகொள்வார் என்று நினைக்கிறேன். ஒருவேளை சிங்கமுத்து மீது தன்னை ஏமாற்றி விட்டாதாக கலைஞர் காலை பிடித்து கதறிய பொழுது ஆப் தி ரெகார்ட் ஆக கைமாறிய தொகைக்கு நன்றி விசுவாசமாக இப்போது பிரச்சாரம் செய்வதாகவும் இருக்கலாம்.
அதை விட முக்கியமான விஷயம் கேப்டனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு, தகராறு காரணமாகவும் இருக்கலாம். ஒருவேளை தி மு காவோடு கேப்டன் கை கோர்திருந்தால் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பாரா...இல்லை அம்மாவோடு இணைந்து தி மு க கூட்டணியை எதிர்த்து பிரச்சாரம் செய்திருப்பார தெரியவில்லை.
பெரியார், காமராசர், அண்ணா, எம் ஜி யாரின் மொத்த உருவமாக தலைவர் கலைஞரை பார்க்கிறாராம் வடிவேல். கருமம் கருமம் இதைவிட ஒரு பெரிய அவமானத்தை இந்த மாபெரும் தலைவர்களுக்கு தந்துவிட முடியாது. வந்தமா, வாயை மூடிட்டு மாலையை, பொன்னாடையை வாங்கிவிட்டு போகவேண்டியது தானே மூதேவி.
திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என ஒட்டுமொத்த திரையுலகம் இவர்களால் படும் பாடு சொல்ல முடியாத வேதனை. இந்த நிலையில் கர்ண பிரபு, மகராசன் என் சாமி என் கலைஞரை எப்படி இவரால் புகழ முடிகிறது என தெரியவில்லை.
பிரபலம்னு எவன் வந்தாலும் சரி, அவனுக்கு பட்டுக்குஞ்சம் வைத்து, அலங்கரித்து பிரசாரத்திற்கு அனுப்பிவிட வேண்டியது. அவனுக்கு கழக வரலாறு தெரியுமா..?, தமிழக வரலாறு தெரியுமா..? குறைந்தபட்சம் இன்று மக்களின் மனோ நிலை என்ன..? கடந்த ஆட்சியில் சாதனைகள் என்ற பெயரில் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன..? மனவேதனை என்ன..? எதுவும் தெரிந்திருக்க அவசியமில்லை.
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
-
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் திருவிழா குறித்த செய்திகள் வர ஆரம்பித்து சாமான்யனின் பொழுது போக்கிற்கு தினம் தினம் புது புது அற...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
-
தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்ட...
nach......!
ReplyDeleteஅவர் காமெடியன்னு நிருபித்துவிட்டார் .
ReplyDeleteவடிவேலுக்கு தான் விரும்பும் கட்சிக்கு போகும் உரிமை கிடையாதா! என்ன கொடுமை!
ReplyDeleteboss இது குரங்குகள் கட்சி தாவும் நேரம்.... அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்திர எதிரியும் இல்லை என்பதை பறைசாற்றும் காலம்... எல்லாம் இன்னும் ஒரு மாசத்திருக்கு தான்... அதன் பிறகு எல்லா குரங்குகல்லும் அதன் அதன் வீட்டிக்கு சென்று விடும்.....
ReplyDeleteநன்றி ஒ வ நாராயணன்
ReplyDeleteமீண்டும் வருக
நன்றி கருண்,
ReplyDeleteநன்றி உங்களில் ஒருவன்
காமெடியன்களின் காமெடி ஒரு எல்லைக்குள் இருந்தால் சரி, ஆட்சி மாறினால் அப்பறம் தொழில் செய்ய முடியாது
its all inthe game of money making!
ReplyDeleteநன்றி சர்புதீன்,
ReplyDelete///அவனுக்கு கழக வரலாறு தெரியுமா..?, தமிழக வரலாறு தெரியுமா..? குறைந்தபட்சம் இன்று மக்களின் மனோ நிலை என்ன..? கடந்த ஆட்சியில் சாதனைகள் என்ற பெயரில் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன..////
ReplyDeleteஹா ஹா ஹா....
இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடிமா பாஸ்ஸூ...
முதல் முறையாக எனது வலைபதிவிற்கு வருகை புரிந்ததற்கு நன்றி ஹனிப்
ReplyDelete//கருமம் கருமம் இதைவிட ஒரு பெரிய அவமானத்தை இந்த மாபெரும் தலைவர்களுக்கு தந்துவிட முடியாது.//
ReplyDeleteஇதுதான் இன்றைய அவலம்!
வாங்க சென்னை பித்தன்
ReplyDeleteவருகைக்கு நன்றி