Saturday, March 12, 2011

சாயம் வெளுத்த கொங்கு முன்னேற்ற பேரவை..!!

தி மு காவின் கண்டுகொள்ளாமை காரணமாகத்தான் கொங்கு மண்டலத்தில் வீறுகொண்டு எழுந்தார்கள் கவுண்டர் என்றளைக்கபடும் வேளாண் சமூகத்தார்கள். கொங்கு முன்னேற்ற பேரவை உதயமானது.

விவசாயிகளை புறகணித்தது,
சாயப்பட்டறை முதலாளிகளை கட்டுபடுத்த தவறியது,
பவானி ஆற்றை நாசகேடாகியத்தை கண்டு கொள்ளாதது,
கள்ளிறக்கும் தொழிலை அழிக்க முனைந்தது,
தொழில் நகராம் திருப்புருக்கு பெருகி வரும் மக்கள் தொகையின் அடிப்படையில் எந்த வித அடிப்படை கட்டமைப்பு விஷயத்தையும் மேற்கொள்ளாதது,
ஒகேனகல் குடிநீர்த்திட்டம்,
வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தபடுவதை முறைபடுத்துவது
அ தி மு காவின் கோட்டை என்பதால் முற்றாக மக்கள் நல திட்டங்களை புறகணித்தது,
தொடர் மின்வெட்டால் சிறு குறு விவசாயிகள், நூற்பாலை தொழில்களை முற்றிலுமாக அழித்தது என மக்கள் சக்தி பொங்கி எழுந்த போது கவுண்டர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த மக்களும் அவர்களை ஆதரித்தார்கள். சாதி வேறுபாடு காட்டாமல் பாராளுமன்ற தேர்தலில் ஒரு கவுரமான ஓட்டுகளை பெற்று அவர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்பதை நிரூபித்தார்கள். கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, என சேலம் வரை சுமார் 50 லட்சத்துக்கும் மேல் வசிக்கும் பெருங்கூட்டமாக தங்களின் பலத்தை அவர்களே அப்போது தான் உணர்ந்தார்கள். விட்டுவைக்குமா கட்சிகள்...!

கட்சியை விலை பேச, முற்றாக அழித்துவிட எத்தனையோ பேரங்கள், சதி திட்டங்கள்..இறுதியில் விழுந்தே விட்டது. எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, எந்த கட்சியை எதிர்க்க உருவாகபட்டதோ அந்த கட்சியிடமே தன் மானத்தை அடகு வைத்து விட்டார்கள். மக்கள் சக்தியாக திரண்ட இயக்கம் இரு பெரும் பணக்கார வர்க்க தலைவர்களிடம் சின்னபட்டு போய் நிற்கிறது.நன்றாக ஞாபகம் இருக்கிறது. கவுண்டர் வீட்டு பெண்கள் எல்லாம் வீதியில் இறங்கி அன்று தேர்தல் வேலை செய்தார்கள். தனித்து போட்டியிட்டதால் அவர்களால் ஓட்டுகளை பிரிக்க முடிந்ததே தவிர பெரிதாக எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. நானும் கோயமுத்தூரை சேர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்..எங்கள் முதுகில் மட்டுமல்ல குத்தியது மட்டுமல்ல உங்கள் வீட்டு பெண்கள் முகத்திலும் காரி துப்பி விட்டீர்கள்.

எரிசாராய தொழிற்சாலை அனுமதி மற்றும் 100 கோடி பணத்திற்காக தி மு காவுடன் கூட்டு என்று பத்திரிகை செய்திகள் வருகின்றன. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் ஸ்பெக்ட்ரம் பூதகர ஊழல் எப்படியும் தங்களை அதல பாதாளத்திற்கு தள்ளி விடும் என்று தி மு கா தெரிந்தே கொங்கு மண்டலத்தில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் கொ மு பேரவையை விலை பேசியிருக்க கூடும். இல்லையென்றால் அ தி மு காவுடன் கூட்டணி என்ற நிலையில் திடீரென்று கட்சி மாறி கூட்டணி சேர வேண்டிய அவசரமென்னா...

தங்களை தனிமைபடுத்தி தோல்வியடைய செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்தார் என்கிறார்கள்...உங்களின் பொதுவான கோரிக்கைகளை அவர் ஏற்றுகொண்டாரா என்று பாருங்கள்...!! 10 வருடங்களாக புறக்கனிக்கப்பட்ட உங்கள் சமுதாய மக்களுக்கு, கொங்கு மண்டலத்திற்கு என்ன நல திட்டங்களை வைத்திருக்கிறார் என்று கேளுங்கள் அதைவிட்டு விட்டு சீட்டுககவோ, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதோ முக்கியமில்லை. கடந்த தேர்தலில் நீங்கள் பெற்ற ஒட்டு உங்கள் சமூகதார்து மட்டுமல்ல, இது நம்ம மண் என்று நினைத்து உங்களை ஆதரித்த கொங்கு மண்டலத்தார் அனைவரது ஓட்டும் உள்ளது. இம்முறை நீங்கள் மண்ணை கவ்வ போவது நிச்சயம் நடக்கும். மக்களை மதிக்காமல், கொண்ட கொள்கைகளையும் நினைத்து பார்க்காமல் விலை போனதற்கு இம்முறை தக்க பாடம் நம் மக்கள் கொடுப்பார்கள்.

அய்யா ஆட்சியாளர்களே, கள்ளோ, மதுவோ இரண்டுமே தடை செய்ய வேண்டிய விஷயம் தான் என்னை பொறுத்தவரை. ஆனால் மக்களை கொல்லும் மதுவை அரசின் கஜானாவை நிரப்புவதற்கும், அரசியல்வாதிகளின் மது தொழிற்சாலைகள் வருமானம் குவிப்பதற்கும் அனுமதிக்கும் போது ஒரு சாதாரண விவசாயின் கள்ளிறக்கும் கோரிக்கையை மறுதலிப்பது கண்டிக்கவேண்டிய விஷயம் தான். மதுவை முற்றிலுமாக ஒழியுங்கள் இல்லையென்றால் கள்ளிறக்குவதை முறைபடுத்தி விவசாயிகளையும் வாழ வையுங்கள்.

8 comments:

 1. நன்றாக சொன்னிர்கள்

  ReplyDelete
 2. அரசியலில் நிரந்திர நண்பனும் இல்லை..... நிரந்திர எதிரியும் இல்லை....... நண்பா .............

  ReplyDelete
 3. நன்றி உங்களில் ஒருவன்
  நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும் இல்லை உண்மைதான், ஆனால் ஐந்து வருடத்திற்கொருமுறை தண்டிக்கும் உரிமை நமக்குண்டு.

  ReplyDelete
 4. நல்ல கருத்தை உங்கள் பாணியில் அழகாக முன் வைத்து இருக்கிறீர்கள்

  ReplyDelete
 5. நன்றி ரிஷபன் வருகைக்கு,
  மீண்டும் வருக

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...