கடந்த ஞாயிறு அன்று எங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வாக்கு பிரசாரத்திற்காக வந்திருந்தார். கூடவே ஒரு கும்பல் அல்லகைகள் என்ற பெயரில். எல்லோரும் கட்சியின் தொண்டர்கள், அதில் இருந்த சில தெரிந்த முகங்களிடம் ( டாஸ்மாக்கில் சந்தித்தவர்கள் ) விசாரித்தேன். தொண்டர்கள் என்பவர் யாவர் என்ற என் நீண்ட நாள் ஐயம் தீர்ந்தது.
எவ்வளவு தான் அரசியல் பன்னாடைகளை பற்றியே எழுதுவது, ஒரு மாறுதலுக்காக அவர்களின் அல்லக்கைகளை பற்றி எழுதலாமே. இதோ உங்களுக்காக அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்.
கவுன்சிலரில் இருந்து அமைச்சர் வரை ஆளாளுக்கு வசதிக்கேற்ப அல்லக்கைகள் உண்டு. பொதுவாக கட்சிகாரர்கள், தொண்டர்கள் என்று அழைக்கபட்டாலும் இவர்களில் பெரும்பாலும் அண்ணனின் சாதிகாரர்களாகவோ, அந்த தொகுதியை சேர்ந்தவர்களாகவோ, அண்ணனால் ஆதாயம் பெற்றவர்களாகவோ இருக்கிறார்கள். இவர்களுக்கு சம்பளம் என்று எதுவும் கிடையாது. அப்பபோ செலவுக்கு பணம், கறி விருந்து, மது, (சில சமயம் மாதுவும் உண்டாம்)
சாதரணமாக ஒரு 20 பேர் எப்போதும் அண்ணனின் கூடவே இருக்கிறார்கள். தேர்தல் நேரம், கட்சி மீட்டிங், மாநாடு என்னும் போது இவர்களின் எண்ணிக்கை கூடுகிறது. போஸ்டர் அடிப்பதில் இருந்து, எதிர்கட்சி காரனின் மண்டையை பிளப்பது வரை இவர்களுக்கு கொடுக்கும் அசைன்மேண்டுகேற்ப பண பட்டுவாடா உண்டு. பண பட்டுவாடவை கவனித்து கொள்வது அண்ணனின் PA சில சமயம் விதிவிலக்காக அணிகளும் இதில் தலையிடுவதுண்டாம். பொதுவாக PA மட்டும் கொஞ்சம் படித்தவராக இருக்க கூடும்.
படிக்காமல் ஊர் சுற்றிய நாதாரிகள், பள்ளி பருவத்திலேய கஞ்சாவிற்கு அடிமையானவர்கள், மதுவுக்கு அடிமையாகி வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள், வீட்டாரால் தண்ணி தெளித்து விடப்பட்டவர்கள், பிஞ்சிலேய பழுத்து விபசாரிகளுடன் தொடர்பு வைத்திருபவர்கள், விபசார புரோக்கர்கள் இவர்கள் எல்லாம் தான் அண்ணனுக்கு இடது கை வலது கை போன்றவர்கள். இவர்களின் கடின உழைப்பு தான் கட்சியை வளர்த்து கொண்டிருக்கிறது. தப்பி தவறி கூட படித்த நாகரீகம் தெரிந்தவர்களை இவர்கள் கூட சேர்ப்பது இல்லை. காரணம் பிரச்னை என்று வரும் போது காட்டி கொடுத்துவிடுவார்களாம்.
அண்ணனின் தொடர்பில் இருப்பவர்களில் இருவர் மிக முக்கியமானவர். ஒருவர் கணக்கு வழக்குகளை பார்க்கும் ஆடிட்டர், இன்னொருவர் குடும்ப அல்லது கட்சி வக்கீல். பொதுவாக ஒவ்வொரு அரசியல் வாதிக்கும் குடும்ப வக்கீல் உண்டு. இவர்களுக்கு தெரியாமல் எந்த காரியமும் நடப்பதில்லையாம். அடிதடி வழக்கில் இருந்து ஸ்பெக்ட்ரம் வழக்கு வரை இவர்கள் மூலம் தங்களை அப்டேட் செய்து கொளிகிறார்கலாம்.
தொண்டர்களில் 100 க்கு 95 பேருக்கு சரக்கு உள்ளே இறங்காமல் பேசதெரியாது. இது தான் அண்ணன்களின் பலம். பெசதேரிந்த ஒரு சிலர் மேல் எப்போதும் ஒரு கண்ணிருக்குமாம். அவர்களை வெளியே அனுப்பவும் முடியாது. ஏனெனில் தொகுதி நிலவரம் இவர்கள் மூலமாகவே அண்ணனின் காதுக்கு எட்டுகிறது. கூடவே இருக்கும் தொண்டர்கள் கூட்டத்தை தாண்டி கொஞ்சம் விலகி இருக்கும் ரவுடிகளும் இவர்களுக்கு முக்கியமானவர்கள். மண்டை உடைக்கறது, கூட்டத்தை கலைகறது எல்லாம் தொண்டர்கள் வேலை. காரியம் கொஞ்சம் பெரிசு என்றால் தான் இவர்களுக்கு அழைப்பு வரும். பேமேண்டும் பெரிசு தான். இன்னும் சொல்ல போனால் தொண்டர்கள் நிலையில் இருந்து புரோமோட் செய்ய பட்டவர்களே "தாதா" க்கள். வளர்த்த பாசம் இவர்களுக்கும் வளர்த்துவிட்ட பாசம் அண்ணனுக்கும் எப்போதும் உண்டு.
இது எல்லாமே அவர்களிடம் இருந்து பேசி கறந்தது தான். இடைசொருகல் எதுவும் இல்லை. அவர்களின் வார்த்தை பிரயோகம் மட்டுமே வேறு. அதை பதிவில் ஏற்ற முடியாததால் கொஞ்சம் முலாம் பூசியிருக்கிறேன். இந்த கூட்டுகளவாணி, மொள்ளைமாரிகளிடம் இருந்து எதையும் பெரிசாக எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம் தான். இப்போ சொல்லுங்க நாம ஒட்டு போட்டுதான் ஆகணுமா..?
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...

-
பதிவுலகத்தின் இன்றைய நிலை பிரம்மிக்க தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணம் அதன் எளிமை தான். கேட்டதை, படித்ததை, தங்களின் அனுபவங்கள் ...
-
தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்ட...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
சொல்றதுக்கு ஒன்னுமில்லை.
ReplyDeleteநன்றி வி ஜே ஆர்
ReplyDeleteகண்டிப்பா ஒட்டு போடன்முங்க...... ரெண்டு மொள்ளமாரில எவன் கொஞ்சம் நல்ல மொள்ள மாரின்னு தேர்ந்து எடுக்கிற தலையாய கடமை நம்மக்கு இருக்குல????? என்ன நா சொல்லுறது.... ரைட் தானே????
ReplyDeleteஅப்போ இது மொள்ளைமாரி தேர்தல்னு சொல்லுங்க...!!
ReplyDeleteநன்றி உங்களில் ஒருவன்
பிறகு இல்லன்னு சொல்லுவிங்களா????
ReplyDeleteஅதெப்படி முடியும்
ReplyDelete//இந்த கூட்டுகளவாணி, மொள்ளைமாரிகளிடம் இருந்து எதையும் பெரிசாக எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம் தான்//
ReplyDeletei always told this!
இதற்கு என்ன செய்யலாம் என்று நினைகிறீர்கள் சர்புதீன்,மக்கள் புரசியை நாமே தொடங்கலாமா...?
ReplyDeleteவருகைக்கு நன்றி சர்புதீன்
மக்கள் புரட்சி ஓன்று தான் இதற்கெல்லாம் தீர்வு. ராணுவ ஆட்சி என்பது இந்தியாவில் நடக்கவே நடக்காது. காரணம் நமது முப்படைகளின் தளபதிகளும் அரசியல்வாதிகளின் ஆதரவு பெற்ற வயதான தளபதிகள்
ReplyDelete