Monday, April 4, 2011

காசு கொடுப்பவன் ஒன்றும் கக்கனோ, காமராசரோ அல்ல - தேர்தல் வியாபாரம்

தேர்தல் களம் கோடை வெயிலையும் தாண்டி சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. மானாவாரியாக போட்டு தாக்குகிறார்கள். ஒருவர் கூட கொள்கை விளக்க கூட்டமோ, தேர்தல் அறிக்கையின் சாராம்சம் குறித்தோ, அதன் எதிர்கால நலன்கள் குறித்தோ பேசுவதில்லை. இலவசங்கள் மட்டும் தான் தேர்தல் அறிக்கையா...? அது மட்டுமே ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் நலம் பயக்குமா...? பதில் சொல்லவும் ஆளில்லை, எதிர் கேள்வி கேட்கவும் இங்கு நாதியில்லை.

சாராயம் குடித்ததை பற்றியே பேசியும், தொலைகாட்சியில் ஒளிபரப்பியும் நேரத்தை விரயமாக்குகிறார்கள். சாராயம் விற்ற காசில்தானே நீ இலவசங்களை அள்ளி கொடுக்கிறாய் அப்பறம் என்ன "ம...த்துக்கு" அவன் தண்ணியை போட்டுட்டு ஒளரான்னு சொல்ற. தைரியம் இருந்தா இனி மதுக்கடைகளை திறக்க மாட்டோம் என்று சொல்லு...பிரச்சாராம் செய்வதில் எத்தனை பேர் தண்ணியடிகாமல் வருகிறார்கள் என்று எண்ணி பார்த்தால் கட்சிக்கு ரெண்டு பேர் கூட தேறமாட்டார்கள்.

அரசியல் நாகரீகம் கொஞ்சம் கூட இல்லாமல், கொத்தாவால் சாவடி மார்கெட்டில் பேசுவது போல் பேசிவிட்டு, தன் கட்சி காரர்களை பேசவிட்டு விட்டு, கலைஞர் அரசியல் நாகரீகம் செத்துவிட்டது என்று முதலை கண்ணீர் விடுவது அவரது வயதிற்கு ஏற்றதல்ல. சண் டிவியையும் உங்கள் தொலைக்காட்சியையும் கொஞ்சம் நீங்கள் பாருங்கள் அவர்களின் அத்துமீறல்கள் உங்களுக்கு புரியவில்லை என்றால் தயவு செய்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுங்கள். பொது மக்களிடம் இருந்தோ, எதிர்கட்சிகளிடம் இருந்தோ ஒரு புகார் கூட வராத நிலையில் தினம் தினம் தேர்தல் கமிசனை சாடுவதை மக்கள் பார்த்து சிரிக்கிறார்கள். பணம் பட்டுவாடா செய்து ஓட்டுகளை பெற்றுவிடலாம் என்ற கனவில் மண்ணை போட்ட தேர்தல் ஆணையத்தை எப்படியெல்லாம் கருவறுக்கலாம் என்று ஒரு கூட்டமே ஆலோசனை நடத்துகிறதாமே. அறுபதாண்டு கால அரசியல் ஒரு சாமானியனால் கேவலப்படும்படி ஆனதற்காய் வெட்கபடுங்கள் கலைஞரே.

சீமான் வேறு பணத்தை கொடுத்தால் வாங்கிகொள்ளுங்கள். அது அவர்கள் கொள்ளையடித்த உங்கள் பங்கு என்று விளக்க ஆரம்பித்துவிட்டார். அதுவும் சரிதான் கொடுக்கும் பணத்தை வாங்கி கொள்ளுங்கள். நீங்கள் வைத்துகொண்டாலும் சரி இல்லை உங்கள் அருகிலுள்ள ஏழைகளுக்கு கொடுத்துவிட்டாலும் சரி. கொடுத்ததை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். பணத்தை வாங்கிகொண்டு உங்களுக்கு நல்லவர் என்று தோன்றும் வேட்பாளர்களுக்கு ஒட்டு போடுங்கள். நியாயம், நேர்மை பார்க்க காசு கொடுப்பவன் ஒன்றும் கக்கனோ, காமராசரோ அல்ல.



எந்த தேர்தலிலும் கேவலபடாத அரசியல் கட்சிகள் இம்முறை தொடர்ந்து மாறி மாறி சேற்றை பூசிகொள்கின்றன. உபயம் ஊடக வளர்ச்சி. கலாநிதி மாறனின் வியாபார தந்திரம் உலகறிந்த விஷயம். வடிவேலுவை வைத்து இவர்கள் செய்யும் காமெடி மக்களுக்கு அதிர்ச்சி மட்டுமல்ல, சன் டிவிக்கு எதிராகவே அது திரும்புகிறது என்பதை இந்த வியாபார காந்தம் உணரவில்லை. ஒரு 500 பேருக்கு மத்தியில் பேசியதை 6 கோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது நாகரீகமான விஷயமாக இருந்தால் சரி. அவன் தண்ணி அடிச்ச என்ன, தொண்டனை அடிச்ச என்ன அதை நொடிக்கொரு தரம் போட்டு ஏன்யா உயிரை எடுக்கற..? அவ்வளவு அறிவு இருக்கறவன், கலாச்சாரத்தின் மீது மரியாதை வைக்கறவன் அய்யாவிடம் சொல்லி மதுவை ஒழிக்க வேண்டியது தானே..இது எந்த வகையில் சமூக அக்கறை என்று..? சாமான்யன் கேட்கிறான்.

சுபவீ , திருமாவளவன், ராமதாஸ் இவர்கலெலாம் 3 நிமிடம் 5 நிமிடம் பேசிவிட்டு செல்ல, 40 நிமிடம் பேசும் வடிவேலு தனி மனித தாக்குதலை தானே செய்கிறார். இதில் எங்கே உங்கள் கட்சியின் கவுரவம் காப்ற்ற படுகிறது. கூட்டணி தலைவர்களை, காலம் காலமாக கழகத்தின் பேச்சாளர்களாக இருப்பவர்களை அசிங்கபடுத்த இது போதாதாத..?

எவ்வளுதான் சேற்றை வாரி இறைத்தாலும், தன் பிரசாரத்தில் மட்டுமே முழு கவனமும் செலுத்திக்கொண்டு வலம் வரும் அம்மா அரசியல் நடுநிலையாளர்களை கவரவே செய்கிறார். தனது கூட்டணி கட்சி தலைவர்கள் பற்றி கூட சிந்திக்காமல் கிடைத்த இந்த வாய்ப்பை விட்டுவிட கூடாது என்பதில் தான் அவரது முழு கவனமும். 160 -ல் எப்படியும் 118 பெற்று விட வேண்டும் என்று ஒற்றை ஆளாய் கிளம்பிவிட்டார். தே தி மு காவின் கூட்டணி, தான் போட்டியிடும் இடங்களில் வெற்றி பெற உதவும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. பெரும்பான்மை பெற்று விட்டால் மற்ற கூட்டணி கட்சிகளின் நிலை கவலைக்கிடம் தான். இது அவர்களுக்கும் தெரியாமல் இல்லை. கட்சி சார்பாக எம் எல் ஏக்களை பெறுவது தான் அவர்களின் அதிகபட்ச ஆசை.


(இவங்க என்ன செய்ய காத்திருகாங்களோ..!!? அடுத்த ஸ்டாலினும் அழகிரியுமா...!!)

16 comments:

  1. (இவங்க என்ன செய்ய காத்திருகாங்களோ..!!? அடுத்த ஸ்டாலினும் அழகிரியுமா...!!)

    மறுபடியுமா...?

    ReplyDelete
  2. நன்றி தகரடப்பா...
    முதன் முதலாக வருகை புரிந்ததற்கு

    ReplyDelete
  3. Kamaraj is the one who started using money and muscle power in tamilnadu politics....

    ReplyDelete
  4. அதன் எதிர்கால நலன்கள் குறித்தோ பேசுவதில்லை. இலவசங்கள் மட்டும் தான் தேர்தல் அறிக்கையா...? அது மட்டுமே ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் நலம் பயக்குமா...? பதில் சொல்லவும் ஆளில்லை, எதிர் கேள்வி கேட்கவும் இங்கு நாதியில்லை.//

    தேர்தலில் இப்போது ஹொட் டொபிக் இந்த இலவசங்கள் தான். இலவசங்களைத் தவிர்த்தும் பல விடயங்கள் இருப்பதை எம்மவர்கள் கண்டு கொள்கிறார்கள் இல்லைப் போலும்.

    ReplyDelete
  5. சாராயம் குடித்ததை பற்றியே பேசியும், தொலைகாட்சியில் ஒளிபரப்பியும் நேரத்தை விரயமாக்குகிறார்கள். சாராயம் விற்ற காசில்தானே நீ இலவசங்களை அள்ளி கொடுக்கிறாய் அப்பறம் என்ன//

    சபாஷ் சகோதரம், சரியான சொல்லடி.
    தன் வீட்டு விடயங்களைத் தெரியாதோராய் பிறரைக் கேலி செய்யும் மனித மனங்கள்..

    ReplyDelete
  6. வடிவேலுவை வைத்து இவர்கள் செய்யும் காமெடி மக்களுக்கு அதிர்ச்சி மட்டுமல்ல, சன் டிவிக்கு எதிராகவே அது திரும்புகிறது என்பதை இந்த வியாபார காந்தம் உணரவில்லை//

    இப்படியும் ஒரு உள் கூத்து இருக்கிறதா? புரிஞ்சுக்கவே முடியலை சகோ.

    ReplyDelete
  7. சமகால அரசியல் பிரச்சாரங்களில் வாய் வீரம் காட்டுவோரை வாங்கு, வாங்கென்று வாங்கியிருக்கிறீர்கள் அல்லது நையாண்டி செய்திருக்கிறீர்கள். அருமையான இடுகை.

    ReplyDelete
  8. டியர் இங்கிலீஷ் anonymous ,நீங்கள் சொல்லியபடி இந்த அவலங்களை காமராஜ்தான் ஆரம்பித்தார் என்றால் அவர் தேர்தலில் தோற்று இருக்கமாட்டார்.நீங்கள் உங்கள் உயர்சாதி காமராஜ் எதிர்ப்பை மற்றும் வயிற்று எரிச்சலை கொட்டி உள்ளீர்.

    ReplyDelete
  9. காமராசர் மேல் பழி சுமத்துவதை எவனும் ஏற்கமாட்டான். முதலில் ஒரு முகவரி பெற்று கொள்ளுங்கள் பிறகு விமர்சனம் செய்யலாம்.

    ReplyDelete
  10. நன்றி நிரூபன்
    பேருக்கு பின்னூட்டம் இடாமல் முழுவதுமாக படித்து பின்னூட்டம்
    இட்டிருகிறீர்கள் என்பது புரிகிறது. மீண்டும் வருக

    ReplyDelete
  11. விடுங்கள் விஜயன்,
    புரியாதவர்களுக்கு எவ்வளவு விளக்கம் சொன்னாலும் புரியோசனமில்லை.
    உங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  12. ஒட்டு மொத்த தேசமும் ஊழலுக்கு எதிராக, கையாலாகாத அரசியல் தலைவர்களுக்கு எதிராக கைகோர்க்கும் நேரம் வந்துவிட்டது. விரைவில் மக்கள் புரட்சி வரவேண்டும் என்பது தான் இதற்கெல்லாம் தீர்வாக அமையும்

    ReplyDelete
  13. செருப்படி ....... எப்படி கேவலமாய் திட்டினாலும் உரைக்காத ஜென்மங்கள் அல்லவா அவர்கள். சோற்றில் என்னத்தைப் போட்டு திங்கிறாங்களோ ???

    //இவங்க என்ன செய்ய காத்திருகாங்களோ..!!? அடுத்த ஸ்டாலினும் அழகிரியுமா...!!) //

    செம பஞ்ச் பாஸ் !!! இல்லாத பேயை விட இருக்கும் சனியனே போதும் ....... இதுகளும் கோதாவில் இறங்கி விட்டால் தாங்காது தமிழ்நாடு ...

    ReplyDelete
  14. மாற்றத்தை கொண்டு வர கைகோர்ப்போம் நண்பரே
    வருகைக்கு நன்றி இக்பால் செல்வன்

    ReplyDelete
  15. ஊழல் பெருச்சாளிகள், கிழட்டு தவளைகளின் கையில் இருந்து இந்த நாட்டை காப்பது நமது கடமை.

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...