Tuesday, April 5, 2011

விஜயகாந்தால் டாஸ்மார்க் ஆண்டு வருமானம் 35 கோடி உயருகிறது..!!

ஆளுங்கட்சி மேடை தோறும் "ஆப்பை" பற்றி விஜயகாந்த் ஆப்படித்ததை முழங்குகிறார்கள். கலாசார சீர்கேடு என்று முழங்கும் இவர்கள் ஒரு விஷயத்தை சொன்னால் வாயை மூடிக்கொண்டு போய்விடுவார்கள். அது விஜயகாந்தால் டாஸ்மார்கிற்கு வரும் ஆண்டு வருமானம் பற்றிய கணக்கு. "ஆப்பை" பற்றி அவர் பேசியதன் மூலம் தெரிய வரும் உண்மை உங்கள் பார்வைக்கு.

ஒரு நாளைக்கு ஒரு "ஆப்பு" அடிப்பதாக வைத்து கொண்டால் அதன் விலை தோராயமாக ரூபாய் 150. வழக்கம் போல அல்லக்கைகள் இல்லாமல் தலைவர்கள் சரக்கை கையில் தொடுவதில்லை. அது நமது பண்பாடு ஆயிற்றே. அதனால் கூட ஒரு 5 பேர் வைத்து கொள்வோம். அவர்களுக்கும் சேர்த்து ரூபாய் 1000 சரக்கிற்கு மட்டும். ஊறுகாயில் இருந்து முந்திரி, ஓடறது, பறக்றது, பறக்றது போடறது என செலவு ஒரு 500 ஆக ஒரு நாளைக்கு சரக்கிற்கு 1000 , சைடு டிஷிற்கு 500

வருடத்திற்கு இரண்டும் சேர்த்து 547500. தலைவரே சொல்லிவிட்டார் என்று தே தி மு க தொண்டர்களும், கூட்டணி கட்சியில் உள்ளவர்களும் "ஆப்படிக்க, குவாட்டர் அடிக்க ஆரம்பித்தால் தோரயமாக அவர்களுக்கு இருக்கும் ஓட்டு வங்கியின் சதவிகித அடிப்படையில் (32 % + 8.5 %) இவர்களில் இருந்து ஒரு 10 % சதவிகிதத்தை எடுத்து கொண்டால் 3500000 பேர். சராசரியாக ஒரு நாளைக்கு ஒருவர் 100 செலவு செய்தால் கூட 35 கோடி வருகிறது. டாச்மார்கின் ஆண்டு வருமானம் 40 ஆயிரம் கோடியை நெருங்குகிறது என்று அறிகிறோம். கிட்டத்தட்ட 10 % ஆண்டு வருமானம் கேப்டனால் உயர போகிறது.



இலவசங்களை மாறி மாறி அறிவித்தால் போதுமா..? இதை என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தில் இருந்தா கொடுக்க போகிறீர்கள். டாஸ்மார்க் வருமானத்தை நம்பிதானே ஆட்டு புளுக்கையில் இருந்து அம்மிக்கல் வரை தரபோகிறீர்கள். எந்த வித மார்கெட்டிங் செலவும் இல்லமால் கேப்டனால் ஏற்பட்டிருக்கும் நன்மைகளை உணராமல் அவரை மேடை தோறும் வதைப்பது எந்த வகையில் நியாயம். போதாதற்கு எச்சி சோறு வடிவேலு வேறு, ஒரு நாளாவது வடிவேலு தன்னியடிகாமல் செட்டிற்கு வந்ததுண்டா...? என்ன தகுதி அய்யா இருக்கு புறமுதுகில் ஓடும் சாக்கடையை முதலில் கழுவுமையா... அப்பறம் வரலாம் சபைக்கு.

எனது வலைபதிவிற்கு வரும் நண்பர்களுக்கு நன்றி. கிடைக்கும் மிக குறுகிய நேரத்தில் என்னால் முடிந்ததை எழுதுகிறேன். பிற நண்பர்களின் பதிவுகளையும் மிக குறைந்த அளவே என்னால் படிக்க முடிகிறது. என்னை பின் தொடர்பவர்களுக்கு கூட என்னால் ஒரு நன்றியை சொல்ல முடிவதில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. விரைவில் எனக்கான நேரத்தை அதிகபடுத்தி கொள்ள முயற்சிக்கிறேன். உங்களின் அன்பிற்கு நன்றி.

11 comments:

  1. நன்றி வேடந்தாங்கல் கருண்

    ReplyDelete
  2. எப்படியெல்லாம் யோசிக்கறீங்க....!!!

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி தகரடப்ப....

    ReplyDelete
  4. ஆஹா.. ஆஹா.. கப்டனை வைத்து ஒரு தண்ணீர் திருவிழாவே நடக்கிற மாதிரி சிந்திக்கிறீங்க...

    ReplyDelete
  5. எனது வலைபதிவிற்கு வரும் நண்பர்களுக்கு நன்றி. கிடைக்கும் மிக குறுகிய நேரத்தில் என்னால் முடிந்ததை எழுதுகிறேன். பிற நண்பர்களின் பதிவுகளையும் மிக குறைந்த அளவே என்னால் படிக்க முடிகிறது. என்னை பின் தொடர்பவர்களுக்கு கூட என்னால் ஒரு நன்றியை சொல்ல முடிவதில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. விரைவில் எனக்கான நேரத்தை அதிகபடுத்தி கொள்ள முயற்சிக்கிறேன். உங்களின் அன்பிற்கு நன்றி.//

    இதற்கெல்லாம் ஏன் சகோ நன்றி சொல்ல வேண்டும், எங்களுக்கு உங்கள் பதிவுகளைப் படிக்கப் பிடிக்கும் என்பதால் தானே பின் தொடருகிறோம். தொடர்ந்தும் எழுதுங்கள். நாம் கூடவே இருப்போம்.

    ReplyDelete
  6. ரூம் போட்டு யோசிபிங்கலோ????

    ReplyDelete
  7. உங்கள் புரிதலுக்கும் வருகைக்கும்
    நன்றி நிரூபன்

    ReplyDelete
  8. நன்றி உங்களில் ஒருவன்

    ReplyDelete
  9. நம்ம ஊரில் ஒரு பழக்கம், எல்லோரும் செய்வதை ஒருவன் ஊர் அறீய செய்தால் அதை விமர்சிப்பது. தமிழ் நாட்டில் குறைந்தபட்சம் 30% பேராவது குடிக்கிறார்கள் அப்படி இருக்க ஏன் விஜயகாந்த் குடிப்பதை பெரிதாக பேசுகிறார்கள். பொது வாழ்விற்க்கு வருபவர்கள் என்பதால் என்றால், குடிப்பதை விட மிக மோசமான 3 மனைவி மற்றும் பாலியல், கிரிமினல் குற்றங்களை செய்த மற்றும் செய்கின்ற அரசியல் வாதிகள் இல்லயா? என்னை பொருத்தவரை விஜயகாந்த் குடிப்பது அவர் விருப்பம், அவர் நல்ல அரசியல்வாதியா இல்லயா என்றுதான் எதிர்காலத்தில் கவனிக்கவேண்டும். என்ன சொல்லறீங்க ஜீவன் சார்.

    ReplyDelete
  10. நீங்கள் சொல்வது உண்மை தான். தலைவர் என்ற முறையில் பொது இடத்தில் நடந்து கொள்ளவேண்டிய அடிப்படை நாகரீகமான விஷயங்கள் என்று சில உண்டு. தனது கட்சி வேட்பாளரையே பொது மக்கள் மத்தியில் அடிப்பது, குடித்து விட்டு பேசுவது (குடியை ஆதரிப்பது போன்றது தான்)
    ஒருமையில் கட்சி தலைவர்களை, உறுபினர்களை விமர்சிப்பது என்பவனவற்றை கைவிட வேண்டும் என்பது எனது எண்ணம்

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...