Thursday, April 7, 2011

பொங்கி எழும் இந்தியா ஊழலுக்கெதிராக வெடிக்கும் அமைதி புரட்சி இளைஞர்களே அணி திரளுங்கள்

அக்கினி குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கோர்
காட்டிடை பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்தில்
குஞ்சென்றும் மூபென்றும் உண்டோ....?

பாரதியின் வீர வரிகள் உயிர்பெற்று வந்தது போல் இருக்கிறது. அன்னா ஹசரேவை பார்க்கும் போது. இந்த தழல் குஞ்சல்ல பழுத்த மூத்த அனல். 42 ஆண்டுகளாக சலிக்காமல் போராடும் இவரின் போராட்டம் இன்று வீதிக்கு வந்திருக்கிறது முதல் முறையாக. (வாழ்க ஊடகங்கள்). தென்னிந்திய ஊடகங்கள் முற்றிலுமாக குறிப்பாக தமிழகத்தில் இது குறித்து பெட்டிசெய்தி கூட காணோம். ஆனால் வடக்கில் கிழிகிறது கிழட்டு அரசியல் வாந்திகளின் முகத்திரை.



வந்து குவியும் இளைஞர் ஆதரவு அந்த முதியவரே எதிர்பாராதது. மத்திய கிழக்கு நாடுகளை மையம் கொண்ட ஊழலுக்கு அடக்குமுறை ஆட்சிகெதிரான புயல் முதல் முறையாக தெற்கத்திய நாடுகளில் மையம் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவும் இப்போது அன்னா ஹசரவை மற்றொரு மகாத்மாவாக பார்க்கிறது. 16 வயது பெண் டெல்லி இந்திய கேட்டிலிருந்து பேசுகிறார் " காந்தியை நாங்கள் பார்த்ததில்லை. அன்னாவை நான் காந்தியாகவே உணர்கிறேன்."

என் அன்பு இளைஞர்களே இதை விட்டால் இன்னொமொரு சந்தர்ப்பம் கிடைப்பதரிது. கைகோர்ப்போம் வாருங்கள். ஊழலுக்கு எதிராய் கிளர்திருக்கும் இந்த புரசியை நாம் தவறவிட்டால் வருங்கால சந்ததிக்கும் நாம் மிகபெரும் பாவம் இளைத்தவர்கள் ஆவோம். வாயிற்று பசிக்கு 10 ரூபாய் திருடியவனை ஆசனவாயில் குச்சியை சொருகும் அதிகாரம் கோடிகணக்கில் கொள்ளையடிபவனுக்கு சலாம் போடுகிறது. ஊழல் செய்தது உறுதிபடுத்தவே 20 வருடங்களாகும், தண்டனையோ மிக சொற்பம் தான். கொள்ளையடித்தை மிக விமரிசையாய் அனுபவித்து சந்தோசமாய் செத்து போவான். நாமோ தினம் தினம் சாகிறோம்.

ஊழலுக்கு எதிரான லோக் பில் கமிசனை அமுல் செய்ய 42 ஆண்டுகள் கிட்டத்தட்ட 10 அரசாங்கங்களிடம் தணியாம மல்லு கட்டிவரும் இவரை நாம் ஆதரிக்கவேண்டியது காலத்தின் கடமை. தவிர்க்க படகூடாத நமது உரிமை. இத்தனை வருடங்கள் கழிந்தும் வழக்கம் போல் ஒரு குழுவை அமைத்து லோக் பில் கமிசனை ஆய்வுக்கு உட்படுத்த முயற்சிகள் எடுத்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிரான இந்த சட்ட முன்வடிவை ஆய்வுக்கு உட்படுத்துவபர்கள் யார் தெரியுமா..? ஊழலின் மொத்த வடிவமான சரத்பவார் & கோ. மொத்த உறுப்பினர்களும் ஊழல் பெருச்சாளிகள்.

இதை எதிர்த்து தான் சாகும்வரை உண்ணாவிரத்தை தொடர்ந்தார் அன்னா. மொத்த உறுபினர்களின் 50 % பேர் மக்கள் பிரதிநிதிகளாகும், கண்ணியமான அரசு நிர்வாகிகளும் இடம் பெற வேண்டும் என்கிறார். ஊழல் செய்தவனுக்கு என்ன தண்டனை என்பதை ஊழல் செய்தவனே நிர்ணயிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் மத்திய அரசிற்கு இருக்கும் வரை இந்தியாவில் ஊழலை ஒழித்து விடுவோம், கருப்பு பணத்தை மீட்டு விடுவோம் என்பதெல்லாம் வீண் பேச்சு தான். இந்த சந்தர்பத்தில் நாம் கர்கொர்க்க தவறினால் வரலாறு நம்மை மன்னிக்காது மட்டுமல்ல இனி எந்த தெய்வம் வந்தாலும் இவர்களிடம் இருந்து நம்மை காக்க முடியாது.


இந்திய இளைஞர்கள் சோம்பேறிகள், குறிப்பாக தமிழக இளைஞர்கள் தொடைநடுங்கிகள் அவர்களுக்கு சினிமாவையும், கிரிகெட்டையும் விட்டால் வேறு எதுவும் தெரியாது என்றொரு அவப்பெயர் நமக்குண்டு. அதை களைய இதுதான் சரியான சந்தர்ப்பம். நடிகர் ஆமிர்கான் கூட அன்னா ஹசரேவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். உலககோப்பையின் இக்கட்டான தருணத்தில் இந்தியா வெற்றி பெற நாம் பிரார்த்தித்தோம், நமது ஆதரவை அவர்களுக்கு தெரிவித்தோம், இது அதைவிட முக்கியமான பிரச்னை. நாம் அன்னாவுடன் கைகோர்த்து போராடுவது மிக மிக அவசியம் என்று தனது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை மெரீனாவில் அன்னாவிற்கு ஆதரவு தரும் பொருட்டு உண்ணாவிரதம் கடைபிடிக்க படுகிறது. நீங்கள் உண்ணாவிரதம் இருக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒருமுறையாவது போய் உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.



கதறும் வரை கதறிவிட்டேன். அப்பறம் என்ன படிச்சிட்டு இவனுக்கு வேற வேலை இல்லைன்னு சொல்லிட்டு போங்க...அதைதானே காலம் காலமா பண்ணிட்டு இருக்கோம். கொஞ்சம் Times Now சேனலை பாருங்க சார். டெல்லியில் திரண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தை பார்த்த பிறகாவது நமக்கு உரைக்கட்டும்

16 comments:

  1. நீங்கள் உண்ணாவிரதம் இருக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒருமுறையாவது போய் உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.//
    நல்ல விஷயம்

    ReplyDelete
  2. நன்றி சர்புதீன்
    நன்றி ஆர் கே
    உங்கள் ஆதரவு எனது பதிவிற்கு மட்டுமல்ல விஷயத்திற்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  3. தமிழ் பதிவிற்கு தமிழில் பின்னூட்டம் இடுவது தான் அழகு. எனது ஒட்டுபட்டை அங்கே தான் இருக்கிறது.

    ReplyDelete
  4. //இந்திய இளைஞர்கள் சோம்பேறிகள், குறிப்பாக தமிழக இளைஞர்கள் தொடைநடுங்கிகள் அவர்களுக்கு சினிமாவையும், கிரிகெட்டையும் விட்டால் வேறு எதுவும் தெரியாது என்றொரு அவப்பெயர் நமக்குண்டு. அதை களைய இதுதான் சரியான சந்தர்ப்பம்.//

    மாற்ற இது தான் சந்தர்ப்பம்

    ஆனால் இப்படிச் சொல்லிவிட்டு அமீர்கான் ஆதரவு தெரிவித்துள்ளாஅர் என சொல்லிவிட்டீர்களே !!! அவர்கள் ( சினிமாக்காரர்கள் ) சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ........ நாம் இதனை செய்து தான் ஆக வேண்டும். ட்விட்டர், பேஸ்புக்கையும் தாண்டி நாம் எதாவது செய்ய வேண்டும் ................

    ReplyDelete
  5. கண்டிப்பாக ஏதாவது செய்தாக வேண்டும்.
    ஆமிர் கானை இழுத்தது கூட சினிமா வெறியர்கள் ஒன்றிரண்டு பேராவது
    அதனால் கவரப்பட்ட வேண்டும் என்பதற்காகத்தான்.

    ReplyDelete
  6. குறைந்தபட்சம் சென்னை வாசிகளாவது இதில் பங்கெடுக்கலாம். நாளை உங்களை அங்கே சந்திக்கிறேன்

    ReplyDelete
  7. டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை மெரீனாவில் அன்னாவிற்கு ஆதரவு தரும் பொருட்டு உண்ணாவிரதம் கடைபிடிக்க படுகிறது. நீங்கள் உண்ணாவிரதம் இருக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒருமுறையாவது போய் உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள். --- கன்டிப்பாக..

    ReplyDelete
  8. நன்றி கருண்,
    நண்பர்களுக்கு தெரியபடுத்துவது மட்டுமல்ல, முடிந்தால் பங்கேடுத்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  9. எதை எதையோ காட்டும் தமிழக சேனல்கள் அன்னா ஹசாரே பற்றி மூச்சு கூட விடவில்லை... தமிழனை ஏமாற்ற தமிழ் சேனல்களே போதும் போலும்... வாருங்கள் நண்பர்களே ஊழல் இல்லாத பாரதத்தை படைப்போம்.. அன்னா ஹசாரே-வுக்கு தோள் கொடுப்போம்.....

    ReplyDelete
  10. மிக்க நன்றி பொன்சந்தர்,
    உங்களால் முடிந்த வரை தகவலை பரப்புங்கள்,
    நமது சேனல்களின் லட்சணம் தெரிந்தது தானே..
    பெண்களின் தொடைகளுக்கு நடுவில் கேமரா வைத்து லைவ் டெலிகாஸ்ட் செய்வதற்கு தான் அவர்கள் ரெடி

    ReplyDelete
  11. ஏங்க, உலகம் புரியாத ஆளாக இருங்கீங்களே- தமிழனுக்கு எவ்வளவு வேலை, அம்மா தரும் இலவசங்களை வாங்குவதா, அய்யா தரும் இலவசங்களை வாங்குவதா என்று சிந்திக்கும் நேரத்தில, சிந்தனை முற்றிப் போய் தலை சுழன்று போய் ஒரு கட்டிங் போட வேண்டாமா- நிலைமை இப்படி இருக்க பொழப்பு கெட்டு இந்த கிழவர் இப்படி ஒரு வேலைய செய்யலாமா? இன்று அரசியலுக்கு வர கோடி இல்லாமல் வழி இல்லை என்ற எதார்த்தம் புரியாத கிழவர் சொல்வதை காது கொடுத்து கேட்க தமிழனுக்கு என்ன பைத்தியமா? ---- இதுதான் இன்றய தமிழன்

    ReplyDelete
  12. oic ரவி இந்த எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். இன்று என்ன நடந்து விட்டது பார்த்தீர்களா..? மக்கள் கொந்தளித்தால் இந்த மானங்கெட்ட அரசியல்வாதிகள் இருந்த இடத்திலேய "கழிந்து" விடுவார்கள்.

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  13. பாரதியின் வீர வரிகள் உயிர்பெற்று வந்தது போல் இருக்கிறது. அன்னா ஹசரேவை பார்க்கும் போது.

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...