Friday, May 13, 2011

அம்மா உங்களுக்கு பதிவுலகத்தின் சார்பில் வாழ்த்துகள்..!!

தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்டும் உங்களோடு ஐக்கியமாக வந்துவிட்டேன் ( சும்மா..ஒரு விளம்பரம்....)
மார்ச் 4 - ல் நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். மே-15 - ல் ஜெயலலிதா முதல்வர் பதவியேற்கிறார் என்பது தான் அது. இதோ அதன் லிங்க்

அ தி மு க வெற்றி பெற்றது முதல் ஒரே போன்கால்களாக வந்து கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு பெரிய முனிவர் ரேஞ்சிற்கு மாலை மரியாதைகள், தாரை தப்பட்டை முழங்க வாழ்த்து மழையில் திக்குமுக்காடி போய்விட்டேன். நன்றி அ தி மு க தொண்டர்கள். (இன்னைக்கு ஒன்னும் ஏப்ரல்-1 இல்லையே என்று நாட்காட்டியை பார்க்காதீர்கள்)

பா ம காவிற்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் சம்மட்டி அடி கொடுத்த அனைத்து வாக்களா உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. சாதியை சொல்லி வயிறு வளர்ப்பவர்களை ஒருக்காலும் மன்னிக்கவே முடியாது.

அம்மா உங்களுக்கு பதிவுலகத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். வெற்றி பெற்றதும் உங்கள் வாயிலிருந்து வந்த வார்த்தை. வீழ்ந்துபட்டு கிடக்கும் தமிழகத்தின், தமிழர்களின் பொருளாதார நிலையை மீடேடுப்பது தான் முதல்பணி என்றீர்கள். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும், அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றீர்கள். இதை எப்போதும் மறவாதிர்கள். உங்களை நம்புகிறோம்.

இத்தனை காலாமாக பதிவர்களின் கருத்து பொருளாய், காட்சிபொருளாய் இருந்த அனைத்து தி மு க கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவிப்போம். உங்களுக்கு நிறைய வேலைகள் இருப்பதால் கொஞ்ச நாளைக்கு விட்டுவிடுகிறோம். அடிச்ச பணத்தை மறைக்கணும், போலி கணக்குகள், ஆவணங்கள் தயார் செய்யணும், நல்ல வக்கீலை பார்த்து முன்ஜாமீன், பின்ஜாமீன் ஏற்பாடு செய்யணும்.. பாவம் சார் போங்க... போங்க...

19 comments:

 1. இதை எப்போதும் மறவாதிர்கள்.//

  ஆம் . மக்கள் மனதில் நிற்பார் என நம்புவோம்..

  வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. நன்றி எண்ணங்கள்

  ReplyDelete
 3. அன்பு செய்வோம்.. நன்றாக இருக்கு தலைப்பு.

  நாட்டிற்க்கு நல்லது நடந்தால் நன்மையே! அது நமக்கும் நன்மையே..

  ReplyDelete
 4. jeevan sivan

  Please dont encourage 'amma' kalaachaaram. It is humiliating for all Tamils. World outside laugh at us.

  Please call her a leader Thalavi. U can add any words along with that: like puratchi thalaivi.

  Such words as amma or ayyaa for politicians, spoil the minds of future generations. We all feel like slaves.

  Cant u consider my request ?

  ReplyDelete
 5. அம்மாவுக்கு பதிவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ... பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. நன்றி சர்புதீன்,
  முதன் முறையாக எனது இணையத்திற்கு வருகை தரும் மலிக்கா, மதுரை சரவணன் அவர்களுக்கு நன்றி...மீண்டும் வருக

  ReplyDelete
 7. வாழ்த்துகள் கருண்

  ReplyDelete
 8. நண்பர் சிம்மக்கல் அவர்களே..

  உங்களின் கருத்தோட்டம் எனக்கு புரிகிறது.

  என்னை பெற்றவளின் வாஞ்சையும், பாசத்தையும் எதிர்ப்பார்த்து இவர்களை பார்த்து அம்மா என்றோ, அய்யா என்றோ அழைக்கவில்லை. இங்கு அம்மா என்று அய்யா என்று நாம் அழைப்பது, ஒரு மரியாதை கருதிதானே தவிர, அவர்களின் காலடியில் மண்டியிட்டு நாம் பிச்சை கேட்கபோவதில்லை. உண்மையிலேய கேட்கின்ற நிலையில் இருக்க கூடிய சாதாரண வறுமை கோட்டின்கீழ் வாழ்கின்றவர்களுக்கு உங்களின் கோரிக்கையில் அக்கறை இருக்க போவதில்லை.

  உலகம் நம்மை பார்த்து சிரிக்கிறது என்கிறீர்கள். அது எதற்கு தான் சிரிக்கவில்லை. தன் இனமக்கள் குற்றுயிரும் குலையிருமாக, வாழ வழியின்றி அந்நியன் குண்டுக்கு இரையான போதும் பார்த்து சிரித்து கொண்டுதானே இருந்தது.

  ReplyDelete
 9. அம்மா உங்களுக்கு பதிவுலகத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.//
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. முதன் முறையாக வருகிறீர்கள் நன்றி ராஜராஜேஸ்வரி

  ReplyDelete
 11. ஃஃஃஃவீழ்ந்துபட்டு கிடக்கும் தமிழகத்தின், தமிழர்களின் பொருளாதார நிலையை மீடேடுப்பது தான் முதல்பணி என்றீர்கள்ஃஃஃஃஃ

  நல்லது நடந்தால் மிக்க சந்தோசமே...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  என் மலர் விழியை கண்டிங்களா ?

  ReplyDelete
 12. உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..
  நேரம் இருந்தால் பார்க்கவும்..


  என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2

  ReplyDelete
 13. உங்கள் பதிவில் கண்டேன். இந்த எளியோனை சபையோர் முன் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 14. இவுங்களாவது எதாவது பண்ணுறங்களான்னு பாப்போம்...

  ReplyDelete
 15. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  எனது ப்ளாக்கில்:
  பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
  புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
  A2ZTV ASIA விடம் இருந்து.

  ReplyDelete
 16. hii.. Nice Post

  Thanks for sharing

  Celeb Saree

  For latest stills videos visit ..

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...