Friday, March 4, 2011

மே - 15 ல் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பார் - முக்கிய பிரமுகர் தகவல்

மே - 15 ல் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பார் என்று இன்று அதிகாலை கடற்கரையில் நடை பயிற்சியில் இருந்த ஒரு முக்கிய பிரமுகர் தெரிவித்தார். யார் அவர் என்பது பின்னால் சொல்கிறேன். அவர் சொன்ன இன்னும் சில தகவல்கள் உங்களுக்காக....

தற்போதைய சூழ்நிலையில் அ தி மு காவின் வெற்றி உறுதி படுத்தப்பட்டு விட்டாதகவே தெரிகிறது. 2006 - ல் பெற்ற ஓட்டு சதவிகிதம் படி இவர்களின் ஓங்கி இருப்பதாக தெரிகிறது. இருந்தாலும் இன்று இருக்கும் சமூக சூழ்நிலை, பொருளாதார நிலை, மலைக்க வைத்த ஊழல் புகார்கள், இலங்கை தமிழர்களின் கண்ணீர், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் நசுக்கபடுவது என இந்த கூட்டணி ஓட்டு சதவிகதங்களை இன்னும் கொஞ்சம் அதிகம் பெறுவதற்கும், மாபெரும் வெற்றி பெறுவதற்கும் கூட வாய்ப்பு இருக்கிறது.

அ தி மு க வெற்றி பெற எப்படி தே மு தி க காரணமாக போகிறதோ அதே போல் தி மு க தோல்விக்கு பா ம க காரணமாக போகிறது. அதெல்லாம் என்ன கட்சி என்று இவர்கள் கூட்டணியில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. பக்கா சுயநலவியாதி "ராமதாஸ் அய்யாவின்" அந்திம காலம் நெருங்கி விட்டதாகவே எனக்கு தெரிகிறது. வெட்டி பந்தாவிற்கு மதுக்கடை ஒழிப்போம், வீண் விளம்பரத்திற்கு ஏதோ ஒரு இளிச்சவாய நடிகையையோ, நடிகனையோ பயமுறுத்தி அழவைப்பது, ஆதாயம் பெருமிடம் கட்சியை அடகு வைப்பது என்று இவர்கள் கட்சி நடத்தும் விதம் தமிழக மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு, அவ்வளுவுதான். மற்றபடி தமிழகத்தை இவர்கள் தலை நிமிர வைக்கவேண்டாம், தலை குனிய வைக்காமல் இருந்தால் போதும். இவர்கள் வண்டாவலத்தை வெளியே கொண்டுவர அன்புமணி அமைச்சராக இருந்த காலத்தில் அனுமதி பெற்ற அணைத்து மருத்துவ கல்லூரிகளையும் நோண்டினால் போதும்.

புழுத்து போன ஒரு ரூபாய் அரிசி, உபயோக படவேண்டியவர்களுக்கு உபயோக படாத இலவச தொலைகாட்சி,
திண்ணை கட்ட கூட பத்தாத இலவச வீடு கட்ட உதவி என மக்கள் நல திட்டம் எல்லாவற்றிலும் சொதப்பல். ஆனால் அதே சமயம், செம்மொழி மாநாடு என்ற பெயரில் கொள்ளை, இலவச காப்பிடு என்ற பெயரில் பகல் கொள்ளை, மணல் கொள்ளை, ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் என மக்களை மிரள வைக்கிறது தி மு காவின் கடந்த கால சாதனைகள் . இவர்கள் எப்படி மக்கள் முன்னாள் ஓட்டு கேட்க செல்வார்கள் என தெரியவில்லை.

காங்கிரஸ், ராசாவை வைத்து இன்னுமும் தி மு காவை மிரட்டி கொண்டிருப்பது வெட்டி வேலை. தனித்து போட்டியிட மூத்த தலைவர்கள் கிட்டத்தட்ட முடிவு எடுத்துவிட்ட மாதிரி தான் தெரிகிறது. தனித்து விடபட்டால் தி மு க கூட ஒரு கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை பெற வாய்ப்பிருகிறது. ஆனால் காங்கிரசின் நிலைமை பீகாரையும் விட மோசமாகிவிடும். ஐவர குழுவுக்கு இது தெரியுமா...இளைஞர் காங்கிரசாற்கு முதலில் இதை உணர்த்தவேண்டும். ராகுல் என்ற கவர்ச்சி இங்கும் எடுபடாது. ஆமாம் அப்படி அவர் என்னதான்ய செய்துவிட்டார்..?
இந்தியாவின் தலைஎழுத்தை மற்ற கூடிய ஒரு சக்தி வாய்ந்தவரின் பிள்ளை.. எதிர்கால இந்தியாவின் பிரதமராக வாய்பிருக்க கூடிய ஒரு சில தலைவர்களில் அவரும் ஒருவர்...அப்படி இருந்தும் சும்மா குடிசையில போய் உட்கார்ந்திட்டு கஞ்சி குடிப்பதை விட்டுவிட்டு குடிசைகளே இல்லாத நாடாக்க வழியை யோசிக்க சொல்லுமையா...
எதை செய்தாலும் அப்பாவி மன்மோகன் சிங் போன்றவர்களை பலிகடா ஆக்காமல் தானே முன்னின்று செய்யட்டும்.
அப்பறம் யோசிக்கலாம் தனித்து போட்டியிடுவதை.

சாதிக்கட்சிகளின் பலம் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் சம அளவிலேயே இருக்கிறது. என்னை பொறுத்தவரை சாதி கட்சிகளை ஓன்று விடாமல் கலைத்துவிட வேண்டும் என்பது தான் விருப்பம். சாதியின் பெயரால் ஒதுக்கீடு என்பதே நம்மை நாம் இன்னும் நாகரீகம் பெற்றவர்கள் என்பதை ஒப்புகொள்ள மறுக்கிறது. எல்லோரும் சமம், எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எல்லாவற்றிலும். ஆனால் இந்த ஒழுங்கற்ற ஜனநாயக நாட்டில் இதை எல்லோரும் முன்னெடுத்து செல்ல பல நூற்றண்டுகள் ஆகலாம். அதுவரை இந்த அரசியல்வியாதிகளின் ஆட்டங்களை சகித்து தான் ஆகவேண்டும்.

எனகென்னவோ மே - 15 ல் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பார் என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். அந்த முக்கிய பிரமுகர் வேறு யாருமல்ல அடியேன் தான்.........(ஐயோ..அம்மா..என்னை கொல்றாங்களே...காப்பாத்துங்க...) என்ன நடுநிசியில் கைது ஞாபகம் வருதா....!!!

8 comments:

 1. பிரமுகர் வேறு யாருமல்ல அடியேன் தான்.........(ஐயோ..அம்மா..என்னை கொல்றாங்களே...காப்பாத்துங்க...)

  nalla vishiyam sonnathunale polachipo

  ReplyDelete
 2. ..(ஐயோ..அம்மா..என்னை கொல்றாங்களே...காப்பாத்துங்க...) என்ன நடுநிசியில் கைது ஞாபகம் வருதா....
  அதெல்லாம் இப்பவும் இருக்குமுங்க. நீங்க பயப்படாதீங்க. கொஞ்சம் குப்பைகளை நீக்கும்போது சப்தங்கள் வரத்தான் செய்யும்.

  ReplyDelete
 3. எனகென்னவோ மே - 15 ல் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பார் என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். நாங்களும் இதேயே எதிர்ப்பார்க்கிறோம் நண்பரே, நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. நன்றி சதிஸ்,
  நன்றி கே ஆர் விஜயன்
  குப்பைகளை அகற்றும் பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது

  ReplyDelete
 5. நன்றி ரேவா,
  நன்றி சர்புதீன்,
  எல்லாம் உங்களிடம் கற்று கொண்டது தான்

  ReplyDelete
 6. வவுதேரிச்சல்.. கலைஞ்சர் மீண்டும் முதல்வர்.. இப்போ இந்த பதிவை அப்படியே நம்புறீங்கள .. ஐ மீன் உங்க மேதாவி கணக்கை

  ReplyDelete
 7. தி மு க காங்கிரசுடன் நடத்திய நாடகத்திற்கும்,
  அ தி மு க தனது கூட்டணி கட்சிகளுடன் நடத்திய நாடகத்திற்கும் பாதிப்பு ஒன்றுதான். அதனால் மீண்டும் சொல்கிறேன் ஜெயா தான் அடுத்த முதல்வர்

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

LinkWithin

Related Posts with Thumbnails