சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Monday, August 27, 2012
ஆணியே புடுங்க வேண்டாம்..!! தமிழனை வாழ விடுங்கள்..!!
சிங்கள ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதால் தமிழனுக்கு புதிதாக என்ன இழப்பு வந்துவிட போகிறது. அவர்கள் பயிற்சி கொடுத்துவிட்டு போகட்டுமே. ஏன் தேவை இல்லாத ஒரு பிரச்சினையை எழுப்பி அங்கிருக்கும் தமிழர்களுக்கு தொல்லை தருகிறார்கள். ஏற்கனவே சிங்களன் செம கடுப்பில இருக்கான். ஒட்டுமொத்த இனத்தையும் அழிக்க முடியவில்லையே என்று அவன் கவலை.
எப்பவெல்லாம் இவர்கள் எதிர்கிரார்களோ அப்பவெல்லாம் அடிபடுவது இலங்கை தமிழன் மட்டுமல்ல இங்கிருக்கும் மீனவனும் தான். இவர்கள் அறிக்கை, போராட்டம் எதுவும் அவனை கட்டுபடுத்தவும் இல்லை, பயபடவைக்கவும் இல்லை. மாறாக நம் அழுகையில் சந்தோசப்படும் ஒரு சாடிஸ்ட் ஆகத்தான் அவன் செயல்களாகத்தான் இருக்கின்றன.
நாம் சத்திரியர்களாக அல்ல சானக்கியர்களாக இருக்க வேண்டிய நேரம் இது. முதலில் அவர்களுக்கு பசிக்கு உணவும், இருக்க இடமும், மனதோடு வாழ வழி செய்து கொடுப்போம். அவர்கள் மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு தேவை. அவர்களின் இருப்பு மட்டுமே நமக்கு இப்போது முக்கியம்.
இன்றைய நிலைமையில் இவனை எதிர்ப்பதை விட அவன் போக்கில் விட்டு விடுவது தான் தமிழனுக்கு நல்லது. காலம் இப்படியே போகபோவதில்லை. இந்தியாவின் ஆளும் உரிமை எப்போதும் கையலாகதவர்களிடமே இருந்துவிட போவதில்லை. பொறுப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
-
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் திருவிழா குறித்த செய்திகள் வர ஆரம்பித்து சாமான்யனின் பொழுது போக்கிற்கு தினம் தினம் புது புது அற...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
-
தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்ட...
அது எப்படி ஐயா முடியும்.... எனது தந்தையும், தாயையும், சகோதரே, சகோதிரிகளையும்... கொன்றவன்னை... நடு விட்டில் உக்காரவைத்து விருந்து கோடு என்றால் அது முடியுமா???
ReplyDeleteஅவனை நடு வீட்டில் உட்கார வைத்து விருந்து கொடுக்க சொல்ல வில்லை. அவனை புறந்தள்ளி விட்டு நம்மை அவதானித்து கொள்ளுங்கள். யாரையும் நம்பி புண்ணியம் இல்லை. திராணியற்று அவனோடு போராடி சாவதை விட, நம்மை வலுவேற்றி பதுங்கி பாய்வோம் என்கிறேன்.
ReplyDelete