Monday, March 28, 2011

கடமை கண்ணியம் தவறினால் தப்பில்லை - கலைஞர்

இன்று ஒரு உருக்கமான வேண்டுகோளை விட்டிருந்தார் கலைஞர். படித்துவிட்டு உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது. போட்டி வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் கழக கண்மணிகளுக்கு தான் வேண்டுகோள். கடமை, கண்ணியம் தவறினால் கட்சிக்குள் சிறு சலசலப்பு தான் ஏற்படும், ஆனால் கட்டுப்பாடு தவறினால் ஒட்டுமொத்த கட்சியே கலகலத்து விடும். எனவே போட்டி வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டு கட்சி அங்கீகரித்த வேட்பாளர்களுக்கு உங்கள் ஆதரவை தரவேண்டுமென்று உருக்கமுடன் வேண்டுகிறேன் என்கிறார்.

அதாவது ஊழல் செய்தாலும், பொது சொத்தை கொள்ளையடித்தாலும், பதவி ஏற்றுக்கொண்டு மக்கள் பனி செய்யாமல் சொந்த வணிகத்தை மேற்கொண்டாலும் சரி, வீட்டில் படித்து தூங்கினாலும் சரி கட்சிக்கு எந்த பாதகமும் இல்லை ஆனால் கட்சி கட்டுப்பாடு தான் முக்கியம். என்ன ஒரு கொடுமை அய்யா இது. 60 வருட அரசியல் பாரம்பரியம் உள்ள உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. ஊருக்கே பாடம் சொல்லும் வாத்தியார் , தன் பிள்ளையை முட்டாளாக, ஊதாரியாக வளர்த்தெடுப்பதை போலிருக்கிறது உங்களின் வார்த்தைகள்.

"இந்த தேர்தலில் ஓரிரு இடங்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், கழகத்தின் மீது சேற்றை வாரி இறைப்பதைப் போல் இத்தனை ஆண்டு காலமாக தன்னை வளர்த்து சமுதாயத்துக்கு அடையாளம் காட்டிய கழகத்தின் கழுத்தையே அறுப்பதைப்போல்; பதவிப் பொறுப்பு கிட்டவில்லை என்றதும் கழகக் கட்டுப்பாட்டை துச்சமெனக் கருதி சுயேச்சைகளாகவோ அல்லது விலகி நின்றோ தேர்தலில் போட்டியிடும் கழகத்தினர் சிலரின் போக்கு கண்டு கண்கலங்குகின்றேன்" என்கிறார், குடும்பத்தில் ஒருவருக்கு பதவி கிடைக்கவில்லை என்றதும் ஓடோடி டெல்லி சென்றதை நீங்கள் மறந்துவிட்டீர்களா...?
காங்கிரஸ் தொகுதி அதிகம் கேட்டதற்காக, ராஜினமா கடிதத்தை தூக்கி கொண்டு ஓடியதை மறந்துவிட்டீர்களா..? உங்களுக்கு விட்டு கொடுக்கவும் தெரியாது, பகுத்து கொடுக்கவும் தெரியாது என்பதை நிரூபித்து விட்டீர்கள். கட்சியில் உங்களுக்கு ஒரு நியாயம், தொண்டனுக்கு ஒரு நியாயமா பெரியவரே..?வயதால் மட்டுமே நீர் பெரியவர் மற்றபடி...?

என்வீட்டு பிள்ளைகள் சினமா தொழிலில் இருப்பது தவறா என்கிறார். அது தவறில்லை அய்யா உங்கள் வீட்டு பிள்ளைகள் மட்டும் தானே இருக்கிறார்கள் அது தான் தவறு. ஒட்டு மொத்த தியேடர்களையும் குத்தகைக்கு எடுத்துகொண்டு அடுத்தவன் எடுத்த படத்தை திரையிட விடாமல் செய்கிறார்களே அது தான் தவறு. உப்பை தின்றவன் தண்ணியை குடித்துதான் ஆகவேண்டும். உங்கள் குடும்பத்தின் ஒட்டு மொத்த அராஜகத்திற்கு பயனை அறுவடை செய்யும் நேரம் வந்துவிட்டது.

வேட்பாளர்களின் லட்சணம் கட்சி பாகுபாடு பாராமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு என ஊழல்களின் மொத்த உருவமாகத்தான் கட்சி தருகிறார்கள். எவனும் சொல்லிகொள்ளும்படி இல்லை. 10 முதல் 20 கோடி செலவு செய்பவனுக்கு தான் சீட்டே கொடுகிறார்கள். செலவு செய்துவிட்டு கையை நக்கிகொண்டா போவான்.
கிடைப்பதை சுருட்டத்தன் செய்வான். தலைவன் உருப்படியா இருந்தா தானே தொண்டனும் உருப்படியா இருப்பான்.

சாகும் தருவாயில் காமராசரின் கையிருப்பு வெறும் 63 ரூபாய்தானாம். தனது மாத சம்பளத்தில் தனது மனைவி 5 ரூபாய் மிச்சம் பிடித்துவிட்டார் என்பதற்காக ஓடோடி சென்று தனது சம்பளத்தில் உபரியான 5 ரூபாய் குறைக்க சொன்ன லால் பகதூர் சாஸ்திரி, விருந்தினர் வருகைக்காக 1 ரூபாய் அதிகம் செலவனாதற்காக ஆசிரம நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டு கிடைக்காமல் நண்பரிடம் கடன் வாங்கினார் காந்தி.

இதெல்லாம் கூட நடந்தது நம் நாட்டினில் தான் என்று சொன்னால் எதிர் வரும் சந்ததிகள் நம்புவார்களா..? கொள்கைக்காக முரண்பட்ட உத்தம தலைவர்கள் பொதுநலத்தில் ஒன்றுபட்டு நின்றார்கள். ஆனால் கொள்கை என்றால் கொள்ளையடிப்பது, பொதுநலம் என்றால் பெரிய வீடு, சின்ன வீடு பாகுபாடு பாராமல் அரசு சொத்தை கொள்ளையடிப்பது என்று மாறிப்போனது காலத்தின் கோலம். இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அரசியல் பன்னாடைகள் திருந்த போவதில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சி இங்கு ஏற்பட்டால் தான் உண்டு. அப்போதும் கூட தலைமை ஏற்க ஒரு நல்லவன் கிடைக்க போவதில்லை.

11 comments:

  1. சாகும் தருவாயில் காமராசரின் கையிருப்பு வெறும் 63 ரூபாய்தானாம். தனது மாத சம்பளத்தில் தனது மனைவி 5 ரூபாய் மிச்சம் பிடித்துவிட்டார் என்பதற்காக ஓடோடி சென்று தனது சம்பளத்தில் உபரியான 5 ரூபாய் குறைக்க சொன்ன லால் பகதூர் சாஸ்திரி, விருந்தினர் வருகைக்காக 1 ரூபாய் அதிகம் செலவனாதற்காக ஆசிரம நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டு கிடைக்காமல் நண்பரிடம் கடன் வாங்கினார் காந்தி...>>>>>>>> நல்லா கதைவிடுறீங்கஃ... தமிழர்களுக்குகாகவே எங்கள் தலைவர் மட்டும் லேசபட்டவர் இல்லை.. குடும்பம் செழிக்க தன் வாழ்நாளையே அதற்காக செலவிட்டவர்...எந்த குடும்பமும்னு கேக்காதீங்க.... பல கூத்தியார் இருக்காங்க.. ஆராய்ச்சி பன்னிட்டு வந்து சொல்றேன்

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  3. என்னத்த சொல்றது? எல்லாம் நம்ம தலையெழுத்து!!!

    எனது வலைப்பூவில்: விஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ

    ReplyDelete
  4. இவர் போட்டோவும் சட்டசபையில் அவர்கள் போட்டோவுக்கு மத்தியில் தொங்கப் போவதை நினைத்தால் கொடுமையாக இருக்கிறது.

    ReplyDelete
  5. நன்றி கமா,
    இதில் அராய்ச்சி செய்வதற்கு ஒன்றும் இல்லை. ஊரறிந்த ரகசியம் தான்

    ReplyDelete
  6. நன்றி விக்கி,
    நன்றி தமிழ்வாசி

    ReplyDelete
  7. //இவர் போட்டோவும் சட்டசபையில் அவர்கள் போட்டோவுக்கு மத்தியில் தொங்கப் போவதை நினைத்தால் கொடுமையாக இருக்கிறது.//

    உண்மைதான் நண்பரே..!!
    ஏசுவை சிலுவையில் அறைந்தபோது இரண்டு கள்வர்களையும் அருகருகே சிலுவையில் அறைந்தார்களாம்.

    ReplyDelete
  8. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...