Friday, February 12, 2010

நான் தான்டா செங்கிஸ்கான்..!! (இது தமிழ்படம் பாகம் - 2 அல்ல)

செங்கிஸ்கானுக்கு இருப்பே கொள்ளவில்லை. ஒரே படபடப்பாக இருந்தது..இதுவரை இரண்டுமுறை பேச்சுவார்த்தை நடத்தியாகி விட்டது. ஒன்றும் முடிவாகவில்லை. ரிலீஸ் தேதி வேறு நெருங்கிவிட்டது. இன்று கடைசிகட்ட பேச்சவார்த்தை என்று சொல்லிவிட்டார்கள். எப்படியாவது டீல் ஓகே ஆக வேண்டும்.

செங்கிஸ்கானின் உண்மையான பெயர் நமக்கு தேவையில்லை. அகில உலக, அண்ட பேரண்ட, பிரபஞ்ச நாயகன் ஒருவர் உண்டென்றால் அது செங்கிஸ்கான் தான் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை. ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் புது புது பட்டங்கள் சூட்டி அழகு பார்ப்பது ரசிகர்களின் வழக்கம்...இதில் போட்டி வேறு யாரின் பட்டம் மிக உயர்ந்தது என்று. தேர்வு பெரும் பட்டதை சூட்டியவருக்கு நடிகரின் கையால் மோதிரமோ செயினோ நிச்சயம்..

பட்டங்களையும், கோடிகளையும் அள்ளியவர் அடுத்தடுத்த இரண்டு படங்களின் தோல்வியால் மிகவும் தடுமாறி போய்விட்டார். ஜால்ரா கூட்டம் வேறு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது...புது புது சுள்ளான்கள் எல்லாம் கூட்டம் சேர்த்து கொண்டு, தனக்கு பின்புறத்தை காண்பிப்பது போல் அடிக்கடி கனவு வேறு..

மிகப்பெரிய பட்ஜெட்டில் தானே ஒரு படத்தை தயாரித்து இழந்த இடத்தை பெறுவது என்று முடிவெடுத்து களத்தில் இறங்கிவிட்டார். கதைகென்று ஒரு 100 பேர் அடங்கிய குழு ஓன்று... உலகின் எல்லா திசைக்கும் பறந்தது. இறுதியில் ஒரு சீனா படத்திலிருந்து கதையின் ஒன் லைனையும், ஆப்ரிக்கா படத்திலிருந்து காமெடி காட்சிகளையும், ரஷ்ய படத்திலிருந்து சண்டை காட்சிகளையும், அமெரிக்க படத்தின் பிரம்மாண்டத்தையும் சுடுவதென தீர்மானிக்கப்பட்டு பூசையும் போடப்பட்டது. படத்தின் பேரில் ஒரு பயர் வேண்டுமென்றும், இன்றைய சுள்ளான்களுக்குகெல்லாம் ஒரு பாடமாக இருக்க வேண்டுமென்றும் முடிவெடுத்து " நான் தாண்டா செங்கிஸ்கான் " என்று நாமகரணம் சூட்டப்பட்டது. சூட்டிங் மிக மிக ரகசியமாக நடத்தப்பட்டு காட்சிகள் வேக வேகமாக எடுக்கப்பட்டதற்கு ஏதோ ஏதோ காரணங்கள் வெளியே கசிந்தது. அதில் ஓன்று எந்தெந்த படத்திலிருந்து காட்சிகள் சுடப்பட்டது தெரிந்து விடக்கூடாது என்பது. மற்றொன்று இந்த படம் வெளிவருவதற்குள் திருட்டு DVD வந்து காரியத்தை கெடுத்து விடகூடாது. இந்த படம் புட்டுகிச்சுன்னா " அண்ணாதே கதி அதோ கதி தான்..."

எல்லாம் முடிந்து ரிலீஸ் தேதியும் குறித்தாகி விட்டது..ஆனாலும் ரஷ் பார்த்த நடிகர் திருப்தி படவில்லை. ஏதாவது செய்தாக வேண்டும் என்று யோசித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார்...தனக்கு இனிமேல் எந்த பட்டமும் தேவியில்லை என்றும், பட்டங்களை இனி என் ரசிகர்கள் சூட்டவேண்டாமென்றும்.

உடனே நெருப்பு பத்திகொண்டது. கோடம்பாக்கம் முதல் ஹாலிவூட் வரை இதே பேச்சாக இருந்தது...பட்டம் இல்லாத கோலிவூத் நடிகரா..அதிசயம் என்று எல்லா தமிழ், தெலுங்கு, ஆங்கில, ஹிந்தி சேனல்கள் அலறின...ஆனால் எல்லாம் ஒரு இரண்டு நாள் தான். பின் அதை எல்லோரும் மறந்து விட்டார்கள். ரிலீஸ் இன்னும் ஒரு வாரம் இருந்தது...ஏதாவது செய்தாக வேண்டும்...?

அப்போது தான் எதிர்க்கட்சி தலைவரின் கைதடி ஓன்று தன்னை வந்து சந்தித்து ஒரு அருமையான திட்டம் சொன்னது...தனக்கும் சரி என்று படவே ஓவர் போனிலேயே டீல் நடந்தது...ஒரே இழுபறியாக இருக்கவே இன்று ரகசிய சந்திப்பிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செங்கிஸ்கானுக்கு அது தான் ஒரே டென்ஷன்..இன்று எப்படியாவது டீல் முடியவேண்டும்...சரியாக 11 .00 மணிக்கு தலைவர் வந்துவிட்டார். ஒருமணி நேர பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டது..அட்வான்ஸ் தொகையாக 5 கோடி கைமாறியது..

அதன்படி அமெரிக்க அதிபர் பற்றி காரசாரமாக பேட்டி கொடுக்கவேண்டுமென்றும், தமிழ் நடிகைகளுடன் அவர்க்கு இருக்கும் தொடர்பு பற்றி அம்பலபடுத்த போவதாகவும் ஒரு பேட்டியில் செங்கிஸ்கான் கருத்து தெரிவித்தார். உடனே அமெரிக்கா முதல் அமைஞ்சிகரை வரை பற்றிகொண்டது...எதிர்க்கட்சி தலைவர் இதை ஒரு பெரிய தன்மான பிரச்சனையாக எடுத்துகொண்டார். எம் தமிழ் நடிகைகள் என்ன கற்பு இல்லாதவர்களா..ஒரு அமெரிக்கனின் ஆசைநாயகிகளா..ஐயகோ என் இரத்தம் கொதிக்கிறது...? எப்படி சொல்லலாம் அவர்...?

ஹாலிவூட் நடிகர்கள் வேறு வெள்ளைமாளிகை நோக்கி பேரணி நடத்தி மனு கொடுத்தார்கள். அமெரிக்கா இதில் மூக்கை நுழைத்து, ஆளுங்கட்சிக்கு பெரும் தொல்லை கொடுத்தது..... எதிர்பார்த்த மாதிரி படம் ரிலீஸ் ஆனது...கூட்டம் அலைமோதியது.. இரண்டொரு வசனங்கள் வேறு தீபொறி பறப்பதாக இருந்தது..ரசிகர்கள் உயிரை கொடுத்து படத்தை பார்த்தார்கள். செங்கிஸ்கானின் வசனங்கள் டீக்கடை முதல் சட்டசபை வரை எதிரொலித்தது..."செங்கிஸ்கான் மீண்டும் சிம்மாசனத்தில்" என்று எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள்...

எதிர்கட்சி தலைவர் தன்னை அவசரமாக பார்க்க வந்திருப்பதாக தகவல் வந்தது. படத்தின் வெற்றியை கொண்டாடவும், அடுத்த படத்திற்கு மனதை பிரெஷ்ஷாக்கவும் ஆல்ப்ஸ் மலை புறப்பட விருந்த நடிகர் உடனே திரும்பினார். தலைவர் சொன்னதைகேட்டு மயக்கம் வராத குறைதான். 10 கோடி பேசி 5 கோடி அட்வான்ஸ் வாங்கிவிட்டு இப்போது மேலும் 10 கோடி வேண்டுமென்று அடம்பிடித்தார். ஆளும்கட்சிக்கு நம் விஷயம் தெரிந்து விட்டதென்றும் அவர்கள் தங்கள் பங்காக 10 கோடி கேட்கிறார்கள் என்றும் காரணம் சொன்னார். இல்லையென்றால் வருமான வரி சோதனை வந்து மொத்தமும் அள்ளிவிடுவார்கள். வேறு வழியில்லாமல் அழுது தொலைத்தார்.

சர்ச்சை ஒருவழியாக ஓய்ந்தது. அடுத்த படத்திற்கு தயாரிப்பாளர்கள் வரிசைகட்ட தொடங்கினார்கள். நடிகர் எல்லாத்தையும் ஓரங்கட்டி மீண்டும் ஆல்ப்ஸ் மலைக்கு
பயணபட்டார். ஏர்போர்டில் விமானத்திற்கு காத்துகொண்டிருக்கும் பொழுது அல்லக்கை ஓடிவந்தார். சார் வீட்டிலிருந்து போன். அவசரமாம் சார்.

போனை வாங்கி "ஹல்லோ" என்றவர் விஷயத்தை கேட்டதும் மயங்கி விழுந்தார்.

தண்ணீர் தெளித்து எழுப்பினர். அரக்க பரக்க வெளியே வந்து வண்டி எடுத்தார். வருமான வரி சோதனைக்காக அதிகாரிகள் வந்திருப்பதாக வந்த போன் தான் அது. யோசித்து கொண்டே வந்தவர் சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார். ஏதோ யோசித்தவர்
"அது தான் சரி" முடிவுக்கு வந்தவராய் அவரின் ஆஸ்தான கவர்ச்சி நாயகி போர்ஷாவிற்கு போன் செய்தார்.

"ஆமாம்"
"அதனால் தான்"
"நான் பார்த்துகிறேன், தெரியாது என்று சொல்"
ஓக்கேவா...ஓகே ஓகே.."

மறுநாள் செய்திதாளில் ரசிகர்களின் இதய தெய்வம் செங்கிஸ்கான் வீட்டில் வருமான வரி சோதனை கோடிகணக்கான பணம், சொத்துக்கான ஆவணங்கள் மீட்பு - தலைப்பு செய்தியாக இடம் பெற்றது.

இரண்டாம் பக்கம் " நடிகர் கண்ணீர் பேட்டி - நான் அப்பாவி, அவை என் சொத்துகளல்ல நடிகை போர்ஷாவினுடையது. நானும் அவரும் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருப்பதாகவும் அவர் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும்.....

(மீதி வெள்ளித்திரையில்)

டிஸ்கி :
இந்த படத்தில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் கற்பனையே. யாரையும் தனிப்பட்ட விதத்தில் குறிப்பிடுவன அல்ல.

7 comments:

  1. ஆஹா, நம்புகிறோம் டிஸ்கியை :))

    ReplyDelete
  2. நல்லாயிருக்குங்க...

    ReplyDelete
  3. நன்றி சங்கவி
    நன்றி சைவகொத்துபுரோட்டா

    ReplyDelete
  4. பாஸ் தமிழ்படம் 2 , சொல்லி இந்திய அரசியல்படத்தை நோண்டறீங்க
    என்னமோபோங்க .,

    ReplyDelete
  5. அரசியலா அது நமக்கு ரொம்ப தூரங்கோ....

    ReplyDelete
  6. தமிழ்படம் இரண்டாம் பாகமா? நன்றாக இருக்கிறது நண்பரே...
    இன்றைய நடிகர்கள் சினிமாவில் நடிக்கிறார்களோ இல்லையோ...அவரகளது நிஜ வாழ்க்கையும் நடிப்பாகவே ஆகிவிட்டது...

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...