Sunday, November 5, 2017

பட்டினத்தாரின் மிக அருமையான எளிய பாடல்

எத்தனையோ பாடல்களை பதிவுகளை படிக்கிறோம் கேட்கிறோம். ஆனால், பட்டினத்தாரின் இந்த பாடல் படித்ததும் பகிர தோன்றியது. "நாம் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம்" தமிழுக்கும் தமிழனுக்கு மட்டுமே கிடைக்கும் இத்தகைய பெறற்கரிய இன்பம்.
இதோ அந்த பாடல்.
இது வரைக்கும் செய்ததெல்லாம் போகட்டும். இப்பொழுதேனும் இறைவனை நினையுங்கள். நம் எல்லாம் பிழையும் அவன் பொருத்தருள்வான்.  பட்டினத்தாரின் மிக அருமையான எளிய பாடல்.


கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்து உருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொருத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே.

1 comment:

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...