Sunday, November 5, 2017

அரசியலில் கமலின் ஆளுமை...!


கமலுக்கு எதிராக வைக்க கூடிய முழக்கங்கள் எல்லாம் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரித்து கொண்டே இருப்பதை ஆளுபவர்கள் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை.


மெர்சலுக்கு அவர்கள் ஆற்றிய எதிர்வினையும் அதன் விளைவால் தேசிய அளவில் நடிகர் விஜய்க்கு மட்டுமில்லாமல் GST க்கு எதிரான கட்சிகளையும் மக்களையும் ஒரு புள்ளியில் இணைத்தது.




கமல் மாதிரியான பரந்துபட்ட ஒரு ப(டி)டைப்பாளியை, வலிமையான வாத திறமையுள்ள ஒரு ஆளுமையை வெல்லும் ஒரு வலிமையான எதிர்வாதிகள் அங்கு குறைவு. குறிப்பாக தமிழகத்தில் அப்படியான ஒரு ஆளுமையான வாத திறமை தேடினாலும் கிடைக்காது.



கமல் சொன்னதை அவர்கள் உண்மை என்று நிரூபித்து கொண்டே அதை இல்லையென்று நிரூபிக்க முனைவது வேடிக்கையாக இருக்கிறது. கமல் என்ன சொன்னார்  என்றோ அவருக்கு எதிராக என்ன சொன்னார்கள் என்றோ கூட நான் குறிப்பிடாமல் தான் என் கருத்தை பதிவு செய்கிறேன். கருத்து சுதந்திரம் என்ன நிலையில் இருக்கிறது என்பதற்கு நேற்றே ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. கூடிய விரைவில் இந்த நிலைகள் எல்லாம் மாறும் என்று நம்புவோம்.




கமல் விரைவில் வெளிப்படையான அரசியலுக்கு வருவது அவருக்கும் தமிழகத்திற்கும் நலம் பயக்கும்.
அவரின் அரசியல் வருகை என்பது வழ வழ கொழ கொழ என்றில்லாமல் அதிரடியாகவும் தெளிவான தமிழ் தமிழகத்தை முன்னிலை படுத்தும் படியான கொள்கைகளோடும் இருக்குமானால் இவரால் ஓட்டை பிரிக்க மட்டுமே முடியும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பவர்களுக்கு சம்மட்டி அடியாக இருக்கும். ஒரு வெற்றிடம் இருக்கிறது என்று கட்சிகளும், ஒரு மாற்றம் தேவை என்ற மனநிலையில் மக்களும் இருக்கின்ற இன்றைய நிலையில் அவரின் வருகை ஒரு மாற்றத்தை கொடுக்குமா... இல்லை ஓட்டை பிரித்து மீண்டும் கழகங்களின் கை பலம் பெறுமா..? பொறுத்திருந்து பார்ப்போம்.



























பின்குறிப்பு : உன்னால் முடியும் தம்பி புகைப்படத்தை உபயோகித்தது யதேட்சையானதல்ல


8 comments:

  1. இவனுகளுக்கெல்லாம் வயசான காலத்தில வேற வேலை இல்லை

    ReplyDelete
  2. கமல் இந்துத்துவாவை எதிர்ப்பதும் , காவிகள்தான் கமலை எதிர்ப்பதும் , திட்ட மிட்ட நாடகங்கள்.
    இரு தரப்பும் ஒருவரை ஒருவர் புரமோட் செய்கிறார்களாம்.
    தமிழ் நாட்டிற்கு வேறு பிரச்சனைகள் ஆயிரம் இருக்கின்றன.
    இந்துத்துவ பிரச்சனை தமிழ் நாட்டிற்கு தேவையற்ற பிரச்சனை.
    கமல் வேண்டுமானால் தமிழ் நாட்டிற்கு வெளியே போயிருந்தது கொண்டு இந்துத்துவ பிரச்சனையை பஞ்சாயத்து பண்ணி கொள்ளட்டும்.
    தமிழர்கள் ஏமாளிகள் அல்ல.

    ReplyDelete
  3. கமல் அரசியலில் ஜெயிப்பாரா? எனக்குத் தோன்றவில்லை!

    ReplyDelete
  4. Mr. Bala Kumar comments is correct, Kamal not a honest man,

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி திரு.ராம். திரு.ஆதி

    ReplyDelete
  6. ஜல்லிக்கட்டு ஆதரவாவாளரான கமல்ஹாசனை நீங்க ஆதரிப்பீர்கள் என்று நானும் நினைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பதிவிட்டமைக்கும் நன்றி வேகநரி

      Delete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...