Wednesday, November 1, 2017

ஏன்டா..! அங்கும் இங்கும் தேடி செத்து தொலைகிறீர்கள்...



ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உள்ளே கலந்து சோதியாக உலாவுவதைக் காணாது, பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது.
அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை அறியாது , மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி.
பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற... இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ?
சிவவாக்கியரின் என்ன ஒரு எளிய அற்புதமான பாடல்.
சிவாயநம...!!

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே..!
----------------------
அது மட்டுமா..? பிறக்கும் போதே சிவா சிவா என்ற மந்திர சொல்லுடன் பிறந்த சிவவாக்கியர் இன்னும் சொல்வதை கேளுங்கள். வெறும் கல்லை சுற்றி வந்து, மாலை சாற்றி  மந்திர ஒத்துவதினால் மட்டும் அவனின் அன்பை பெற்று விட முடியாது.அவனின் இருப்பை தன்னுள் உணர்வதே சிறப்பு. உன்னுள் இருந்து அவன் பேச கேட்பதே பேரின்பம்.

சமையல் செய்யும் பாத்திரமா அதன் சுவையை அறியமுடியும் ....? என்று கேட்கிறார். இதோ அந்த எளிய இனிமையான பாடல்

“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே;
சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா!
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!
நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்"









5 comments:

  1. உண்மை தன்னை உணர்ந்து கடவுளை உணரலாம் கடவுளை பார்க்க இயலாது அது தேவையும் இல்லை காரணம் பார்த்து விடடால் உடன் செல்ஃபி எடுத்து விடுவான்

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி பாரதி

    ReplyDelete
  3. 'நாதன் உள்ளிருக்கையில்' என்பது முக்கியமான ஆய்வு. இதையே ரமணரும் 'நான் யார்' என்று சிந்திக்கச் சொல்கிறார். இரண்டு அழகிய பாடல்களை மேற்கோள் காட்டி நீங்கள் எழுதியது இளைய தலைமுறைக்கு மிகவும் பயன்படும்.

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து

    ReplyDelete
  4. நன்றி செல்லப்பா அவர்களே...! இளைய தலைமுறையை சென்று சேர வேண்டிய செய்தி இது.

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...