காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். பிரதமர் மோடி பயணத்தை யாராலும் மேம்போக்காக எடுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் மிக எளிது.
1. சரிந்து வரும் ப ஜ காவின் செல்வாக்கு
2. தங்களுக்கு ஒரு பஞ்ச கல்யாணியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சவாரி செய்தவர்கள் இது ஒரு நொண்டி குதிரை என்பதை மிக தாமதாக புரிந்து கொண்டது.
3. சமீபத்திய உளவுத்துறை அறிக்கை சொன்ன செய்தி
4. கமலின் வருகை, ரஜினியின் அமைதி
5. தொடர்ந்து வரும் மக்களின் எதிர்ப்பு.
வலிமையான ஆளும் கட்சியாக இருந்தும் தமிழகத்தில் தங்களின் இருப்பை வலிமையை நிலை நிறுத்தி கொள்ள முடியாமல் தவிப்பது, எந்த ஒரு வழியும் புலப்படாமல் இருப்பது, தமிழக தலைமையில் இருக்கும் குழப்பங்கள், மக்களை விட்டு விலகியே இருப்பது போன்ற காரணங்களால் அதிரடியான ஒரு செயல் தம்மிடம் இருந்தோ அல்லது டெல்லியிடமிருந்தோ வந்தாலொழிய நாம் பேசுபொருளாக கூட இருக்க மாட்டோம் என்பதை உணர்ந்தே கடைசி நிமிடத்தில் பிரதமரின் பயண திட்டத்தில் கலைஞர் சந்திப்பு இடம் பெற்றிருக்கலாம்.
தங்களின் கருத்தையொத்த தங்களின் கொள்கைகளுக்கு மிக நெருக்கமான கட்சியென்று சொல்லிக்கொள்பவர்கள் அந்த கட்சியின் ஆக பெரும் ஆளுமையாக இருந்த அம்மாவை கூட சிகிச்சையில் இருந்த பொழுது பார்க்க வராதவர், கலைஞரை, அதுவும் ஸ்டாலின் அவர்களின் சமீபத்திய கடுமையான ப ஜ கா எதிர்ப்பு நிலைப்பாட்டையும் கருத்தில் கொள்ளாமல் சந்திக்கிறார் என்பது நெருடலான ஒரு விஷயம் தான். ஆனால் எதை எதிர்பார்த்தார்களோ அது நடந்து விட்டது. பிரதமரின் பயண திட்டம் ஒரு வகையில் அவர்களுக்கு வெற்றி தான். தமிழகம் மட்டுமில்லாமல் தேசிய ஊடகங்களிலும் இது பேசுபொருளாக இருந்தது என்பது வெற்றியல்லாமல் வேறு என்ன.
தி மு காவின் நிலைப்பாடு என்ன என்பது அடுத்தடுத்தது வரும் நாட்களின் அரசியல் நகர்வுகளில் இருந்து தெரியவரும். ப ஜ காவுடன் கூட்டு என்பது தற்கொலை தான் என்பதை புரியாதவர் அல்ல தளபதி. இருந்தாலும் கடைசி நிமிட கூட்டல் கழித்தல் கணக்குகள் எந்த பக்கமும் வெற்றியை பறிக்கவும் செய்யும் வாரி கொடுக்கவும் செய்யும். மக்கள் செல்வாக்கு இருந்தும், வலிமையான கூட்டணி இருந்தும், மக்களின் விருப்பத்திற்கு மாறான கூட்டணங்கள் எப்போதும் வெற்றி பெற்றதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. தி மு க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பதற்றம் ஒரு வகையில் நியாயமானது. அவர்களிடம் இருந்து விலகி போவது என்பது மிகப்பெரிய வீழ்ச்சியாக கூட முடிந்து விடும். கவனம் தேவை.

No comments:
Post a Comment
உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.