Tuesday, January 18, 2011

கலைஞரையும் மிஞ்சிய சாதனை...!!!

கலைஞர் சாதனையாக சொல்லப்படும் ஒரு ருபாய் அரிசி திட்டத்தையும் மிஞ்சிய ஒரு சாதனையை அண்மையில் ஒரு நண்பர் மின்னஞ்சல் செய்திருந்தார். ஒரு ரூபாய்க்கு நீங்கள் அரிசி தானே போடுகிறீர்கள் இங்கே இரண்டு ரூபாய்க்கு சாப்பாடே கிடைகிறது தெரியுமா... ஏதோ வெளிநாட்டு சமாசாரம் என்று நினைக்காதீர்கள், அதுவும் இங்கே தான் நமது இந்தியாவில் தான்.

ஏழைகள் இருக்கும் வரைக்கும் இலவசங்கள் தொடரும் என்று கலைஞர் சொன்னது போல, இந்த ஏழைகளின் கடும் உழைப்பை மனதில் கொண்டு எந்த நல்லவர் இந்த திட்டத்தை கொண்டு வந்தார் என்ற விபரம் தெரியவில்லை.

இந்தியாவிலேயே ( ஆசியாவிலேயே) இங்கு தான் உணவு பொருட்களின் விலை மிக மிக குறைவு என்று வேறு சொல்கிறார்கள்... இதோ அந்த பட்டியல்...
டீ - 1 ருபாய்
சூப் - 5 ருபாய்
தால் (பருப்பு கூட்டு) - 1 .50 ருபாய்
சாப்பாடு - 2 ருபாய்
சப்பாத்தி - 1 ருபாய்
சிக்கன் - 24 ருபாய்
தோசை - 4 ருபாய்
மீன் - 13 ருபாய்
வெஜ் பிரியாணி - 8 ருபாய்

அவர்களின் மாத சம்பளத்தை கேட்டால் இரத்த கண்ணீரே வரும் போல் இருக்கிறது. ஐயோ பாவம்...!!! வெறும் 1,20,000 (ஒரு லட்சத்து இருபதனாயிரம்)ருபாய் தான். இந்த சம்பளத்தை வைத்து எப்படித்தான் குடுப்பம் நடத்துகிறார்களோ..

இது எங்கு தெரியுமா.....இந்தியாவின் மிகப்பெரிய பாழுங்கிணறு பார்லிமெண்டின் காண்டீனில் தான். கொடுத்து வைத்த ஏழைகள் தான்.

7 comments:

  1. http://rasekan.blogspot.com/2011/01/blog-post_1218.html

    ReplyDelete
  2. // இது எங்கு தெரியுமா.....இந்தியாவின் மிகப்பெரிய பாழுங்கிணறு பார்லிமெண்டின் காண்டீனில் //

    முன்னமே அதற்கு இந்தியாவின் எலி பொந்து என்ற பெயர் உண்டு. :))

    ReplyDelete
  3. நன்றி சர்புதீன்
    நன்றி மாணிக்கம்
    அது கேவலமானவர்களின் கோவில்
    இந்தியாவின் பெரிய சாக்கடை...
    இன்னும் என்னவெல்லாம் சொல்லவேண்டுமோ...சொல்லியாகிட்டது..
    திருந்தவோ..சுத்தபடுத்தவோ யாரும் இல்லை.

    ReplyDelete
  4. அவர்கள் கொடுத்து வைத்த ஏழைகள் இல்லை,
    பணம் கொழுத்து ஏழைகள் !

    unmaivrumbi.
    Mumbai.

    ReplyDelete
  5. இதை ஓரிரு நாட்கள் முன்பு இன்னொரு பிளாக்கில் படித்த ஞாபகம். ஒரு ரூபாய் அரிசி போட்டது சாதனை அல்ல வேதனை, தமிழன் வயிற்றை கழுவ அதை நம்பி இருக்க வேண்டியிருக்கிறதே என்பது வெட்கக் கேடான விடயம்.

    ReplyDelete
  6. உண்மைவிரும்பி, ஜெயதேவின்
    வரவிற்கு நன்றி...

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...