Sunday, January 23, 2011

கேப்டனிடம் ஒரு வேண்டுகோள்...!!

இன்றைய நிலையில் தே மு தி க தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்திருப்பதை அரசியல் நோக்கர்கள் யாரும் மறுக்க முடியாது. கட்சி ஆரம்பித்த நாள் முதல் இந்த நாள் வரையில் எத்தனை விமர்சனங்கள், தோல்விகள் ஆனால் இன்று, அதுவும் சேலம் மாநாட்டிருக்கு பிறகு மூத்த கட்சிகளுக்கே கிலி பிடித்து விட்டது. கருப்பன் என்றும், சினிமாக்காரன் என்றும், குடிகாரன் என்றும் வாய்கிழிய பேசியவர்கள் எல்லாம், நான் அப்பவே நினைச்சேன் யா..அவரு யாரு..அடுத்த முதல்வருய்யா..என்று தட்டை திருப்பி போட்டு கொண்டிருக்கிறார்கள்..

எது எப்படியோ..இந்த கொடுங்கோல் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டிய பொறுப்பு இன்று கேப்டன் கையில். அ தி மு க உடன் கூட்டணி என்ற முடிவு தான் இன்றைய நிலையில் ஒரு சரியான தீர்வாக இருக்கும். ஆனால் கடந்த கால கூட்டணி தலைவர்களின் நிலை கேப்டனுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் யோசித்து தான் முடிவெடுக்க வேண்டும்..

தொண்டர்கள் சோர்ந்து போய்விடாதபடிக்கும், கட்சியின் வளர்ச்சிக்கும், நிர்வாகிகளின் திறமைகளை அறிந்து கொள்ளும் வகையிலும் கேப்டனின் முடிவு இருக்க வேண்டும். 2016 - உங்களுக்கான ஆண்டு தான். பொறுமையாக இருங்கள். அதே சமயம் உங்களை வளர்த்து கொள்ளும் வழிவகைகளையும் அறிந்து கொள்ளுங்கள். உங்கள் கட்சிக்கு திறமையான பேச்சாளர்களை உருவாக்குங்கள். நீங்களும் உங்கள் மனைவி மட்டுமே கட்சியல்ல என்பதை மக்களுக்கும் தெரிய வேண்டும்.

தேனை எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டன் என்றொரு பழமொழி உண்டு. ஊழல் இல்லாத ஆட்சி என்பதெல்லாம் இனி பாழாய்ப்போன பழங்கனவு தான். முடிந்தவரை நல்லது செய்யுங்கள். இயற்கையை சுரண்டி சுரண்டி அவளை நிர்வானபடுத்தியது போதும், எதிகால மக்கள் தொகைக்கு உணவு தயாரிப்பு என்பது மிகபெரும் சவால், என் வேண்டுகோளெல்லாம் விரிவான, திடமான, ஆரோகியமான ஒரு விவசாயகொள்கை வேண்டும் என்பது தான். விவசாயத்தை காக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு இலவசங்களே வேண்டாம், சொந்தமாக வாங்கிக்கொள்ள வசதியை ஏற்படுத்தி கொடுங்கள்.

வாழ்வதற்கு ஆரோக்கியமான சூழல் வேண்டும். அமைதி பூங்காவாக இருந்த தமிழ் நாட்டில் தான் தினம் தினம் எத்தனை கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்பு, சிறுவர்களை கூட விட்டு வைக்க மாட்டேன் என்கிறார்கள். சட்ட ஒழுங்கை மீட்டெடுத்தாலே போதுமய்யா..

5 comments:

  1. எங்களுக்கு இலவசங்களே வேண்டாம், சொந்தமாக வாங்கிக்கொள்ள வசதியை ஏற்படுத்தி கொடுங்கள்.///

    சரியா சொன்னிங்க சார் ............ எந்த பன்னாடைகளும் இலவசம் தரவேண்டியது இல்லை .........அதுவும் என்னமோ அவனுக சொந்த காசுல குடுக்கிறது மாதிரி ஒரு பில்ட் அப் வேற .......... இந்த பாலா போன மக்களுக்கும் அது புரிய மாட்டேங்குது .........

    ReplyDelete
  2. அறியாமை தான் காரணம் அமைச்சரே...அதை விளக்கி சொல்ல வேண்டிய பொறுப்பு எதிர்கட்சிகளிடம் தான் இருக்கிறது. நம்மிடமும் கூட..

    ReplyDelete
  3. கலந்து கட்டி அடிங்க sir! இடுகைகளில்

    ReplyDelete
  4. மங்குனி அமைச்சர் said...

    எங்களுக்கு இலவசங்களே வேண்டாம், சொந்தமாக வாங்கிக்கொள்ள வசதியை ஏற்படுத்தி கொடுங்கள்.///

    சரியா சொன்னிங்க சார் ............ எந்த பன்னாடைகளும் இலவசம் தரவேண்டியது இல்லை .........அதுவும் என்னமோ அவனுக சொந்த காசுல குடுக்கிறது மாதிரி ஒரு பில்ட் அப் வேற .......... இந்த பாலா போன மக்களுக்கும் அது புரிய மாட்டேங்குது .........


    very good

    http://usetamil.net

    ReplyDelete
  5. நன்றி யோக மீண்டும் வருக

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...