அதில் இடம் பெற்றிருந்த ரமணரை பற்றிய செய்தியை அறிந்ததும் மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். you too ...? என்று காத்த வேண்டும் போல் இருந்தது. இந்தியாவின் ஆன்மீக அடையாளங்களுள் அவரும் அவரது ஆசிரமும் தவிர்க்க முடியாதது. அவரை பற்றி தெரிந்த நிமிடம் முதல் நேற்று வரை அவரை மனதுள் இறைவனாகவே வைத்து போற்றி வந்தவன் நான். விமர்சனகளுக்கு அப்பாற்பட்டவர் என்றே இதுவரை எண்ணியிருந்தேன்.
எனக்கு தெரிந்த வரையில் மஹான்கள், சித்தர்கள் இருக்கும் வரை அவர்கள் சார்ந்த ஆசிரமங்கள் எல்லாம் ஒழுங்காகவே நடக்கும். அவர்கள் மறைந்த பின் தான் பொதுவாக சொத்து உரிமை பிரச்னையும், யார் நிர்வகிப்பது போன்ற பிரச்சனைகளும் வரும். ஆனால் ரமணர் உயிரோடு இருக்கும் போதே இங்கு சொத்து பிரச்னையும், அதற்க்கு அவரால் முன் வைக்கப்பட்ட வாதத்தையும் பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. இவர் ஒரு சாதாரண தனி மனிதர் என்பதற்காக பொது மக்களால் கொடுக்கப்பட்டதல்ல அவரது சொத்தும், பணமும். இறைவனின் அவதாரமாகவே எண்ணி அவருக்கு பின்னும் அவரின் கருத்துகள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தினால் தான் மக்களிடம் இருந்து பெற்ற சொத்துகளாகவே அது இருக்கும். ரமணரின் மரண தருவாயில் அவரின் விருப்பமின்றி சில விஷயங்கள் நடந்ததாக படித்த ஞாபகம். அவரது அறுவைசிகிச்சை உட்பட. ஒருவேளை அவர் சொத்துகள் தனது உறவினர்களின் பெயரில் எழுதி வைக்க நிர்பந்திக்க பட்டிருக்கலாமோ... உயில் எழுதிய பின் மறுக்க வழியில்லாமல் அந்த மாதிரி வார்த்தைகளை சொல்லியிருக்கலமோ..இதற்க்கு யாரால் விளக்கம் சொல்ல முடியும் தற்போது

ஏனோ தெரியவில்லை அவரின் முகத்தை பார்த்தால் - அவரின் இறைதன்மை குறித்து கேள்வி எழுப்ப தோன்றவில்லை. அந்தளவிற்கு நான் பெரியவனாகவும் நினைக்கவில்லை. உண்மை தெரிந்த பெரியோர்கள் இது குறித்து விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும். பிராமண எதிர்ப்பு என்பது வேறு..ஆன்மீக பெரியோர்களை இழிவுபடுத்துவது என்பது வேறு என்னை போன்ற எத்தனையோ ஆன்மீக தாகம் கொண்ட இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும்.நல்லவர்கள் எங்கிருந்தாலும் நல்லவர்கள் தான். கெட்டவர்கள் எங்கிருந்தாலும் நல்லவிதமாக சிந்திக்க முடியாது.
No comments:
Post a Comment
உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.